தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

லாவண்யா

போன வார இறுதியில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன்.

அதாகப்பட்டது, புதன் கிழமை அந்தி சாயும் வேலையில் ஒரு பெரிய வேலையை என் தலையில் கட்டி, அதை வியாழக்கிழமைக்குள் முடிக்கவேண்டும் என்று கர்ஜனையிட்டார், மன்னிக்க – கட்டளையிட்டார் என் மேனேஜர்.

வியாழக்கிழமை காலையிலேயே அந்த வேலையை தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒரு வழி பண்ணிவிட்டேன், அதுவும் ‘ஐயா, சாமி, இனிமேல் உன் வழியிலேயே வரமாட்டேன் ‘ என்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு மெயில்வழியே ஓடிப்போனது மும்பைக்கு.

சரி, மதியம் முழுக்க தூங்கலாம், அல்லது ரெண்டு நாள் முன்பு தேர்வு செய்துவைத்த தளத்திலிருந்து ராம சரித மானஸ் படிக்கலாம் என்று திட்டமிட்டபடி மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு வந்தால், மீண்டும் மேனேஜர். கேபின் பிரிவினை செய்யும் பிளாஸ்டிக் வரப்புக்குமேல் தாடையைவைத்து அழுத்தியபடி, ‘உன் மெயில் பார்த்தேன், வெரிகுட் ‘ என்றார். நான் நன்றி சொல்வதற்குள், ‘இன்னொரு வேலை இருக்கு, இதையும் பண்ணி ஈவினிங் எனக்கு ரிப்போர்ட் அனுப்பிடுவியாம் ‘ என்று ஒரு கத்தை காகிதங்களை என் மேல் வீசிவிட்டுப்போனார்.

ஏப்பம், கொட்டாவி, சோம்பல், ஆயாசம் – இன்னும் என்னென்ன கெட்ட சகுனங்கள் உண்டோ எல்லாம் என்னை ஆக்கிரமித்துக்கொள்ள, எங்கள் ஆரக்கிள் மெஷினின்முன் போய் உட்கார்ந்தேன், ஹோட்டல்காரப் புண்ணியவான்கள் மதியம் சாப்பிட்ட வெஜிட்டபிள் பிரியாணியில் என்ன கலந்தார்களோ, கொட்டாவியும் தூக்கமும் கிறங்கடித்தது.

ஆனாலும் வேறு வழியில்லாமல் வேலையைத் தொடர்ந்து பண்ணினேன், சரியாய் வரவில்லை, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு வந்து தொடரலாம் என்று மெஷினை இழுத்துப் பூட்டிவிட்டு தூக்கத்தில் நடக்கிறவன்போல் மேலறைக்குப்போனேன். ஆறிப்போன காஃபியை குறைசொல்லிக்கொண்டே குடித்துவிட்டு கீழே வந்தால், ஆஃபீசில் பூகம்பம் வந்த பரபரப்பு … எல்லாரும் வானத்துக்கும் பூமிக்கும் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பட்ட முதலாமவனை நிறுத்தி, ‘என்னய்யா ஆச்சு ? ‘ என்றேன்.

அவன் போன வாரம்தான் சேர்ந்திருந்த புதிய பையன், எனக்கு மரியாதை செய்வதாய் நினைத்துக்கொண்டு என் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘குட் ஆஃப்டர்நூன் சார் ‘ என்றான்.

‘உன் ஆஃப்டர்நூனில் இடிவிழ, என்ன ஆச்சு சொல்லையா, ஏன் இப்படி எல்லாரும் கம்ப்யூட்டர்ல உட்காராம கட்டறுந்து திரியறீங்க ? ‘

‘மெயின் சிஸ்டத்தில யாரும் நுழைய முடியலை சார், யார் கிட்டேபோனாலும் புதுசா குட்டிபோட்ட பூனை மாதிரி விரட்டுது ‘

‘ஹ ‘ என்றேன் அலட்சிய நக்கலாய். ‘அதெப்படி விரட்டும் ? நல்ல பிள்ளையாச்சேப்பா அந்த சிஸ்டம், நீங்க எதுனா வம்பு பண்ணியிருப்பீங்க ! ‘

‘இல்லை சார், நம்ம எம். டி கூட லாகின் பண்ணமுடியலைன்னு அலறிட்டிருக்கார் ‘ என்றான் அவன் பரிதாபமாய்.

அப்போதும் எனக்குப் பொறி தட்டவில்லை. மெல்லமாய் எம். டி ரூமுக்குப்போனால் அவர் ருத்ரமூர்த்தியாய் இருந்தார், ‘என்னாச்சுய்யா உன் மெஷினுக்கு ? எந்த லாகினும் வொர்க் ஆகலை ‘. எங்கள் மையக் கணினியில் அவருக்கு மட்டும் மூன்று லாகின்கள் – தொழிலாளி, மேனேஜர், எம். டி. என்று பதவிக்கு ஒரு லாகின் (நல்ல வேளை இன்னும் அம்மா கண்ணில் இவர் படவில்லை !)

இதுபோல் பல நூறு ‘எஸ். ஓ. எஸ் ‘கள் பார்த்துவிட்டதால், எனக்கென்னவோ பதட்டமே வரவில்லை. ‘பொறுமை சார், ஒவ்வொண்ணா செக் பண்ணலாம் ‘ என்று ஆரக்கிளினுள் நுழைந்து தேடினால், அவருடைய பெயரைக் காணோம், என் பெயர் ? அதுவும் காணோம் ? பக்கத்து சீட் மேனேஜர் பெயர் ? ம்ஹும், டாக்டர் மாத்ருபூதம், ஊர்வசி, ரம்பா, மேனகா, பால் தாக்கரே, மும்தாஜ், வாஜ்பாய், அப்துல் கலாம் .. எந்த பெயரைக் கேட்டாலும் கைவிரித்தது கம்ப்யூட்டர்.

எனக்கு முதல் தடவையாய் சந்தேகம் வந்தது. ஆரக்கிள் டேபிள்களின் பட்டியல் இருக்கும் இடத்துக்குப்போய் தேடினால் … எங்கள் மென்பொருளின் உபயோகிப்பாளர்(Users) பெயர்களைச் சேமித்துவைக்கும் முக்கியமான டேபிளையே காணோம் !

என்ன ஆச்சு ? குழந்தை அழவில்லை … நான்தான் தூக்கக் கலக்கத்தில் அரக்கனின் உயிர்போன்ற அந்த டேபிளைப் பிய்த்து வீசியிருக்கிறேன். இப்போது எங்கள் மென்பொருள் ஒழுங்காகவே இயங்கும் – ஆனால் யாரும் உள்ளேபோய் பார்க்கமுடியாது. ‘நடுக்காட்டில் பெய்த மழை ‘ என்று பாரதிதாசன்(தானே ?) எழுதியது நினைவுக்கு வந்தது.

என்ன பண்ணுவது ?

மேனேஜரிடம் பெருந்தன்மையாய் உண்மையை ஒப்புக்கொள்ளலாம் என்று பார்த்தால், அவர் எனக்கு முன்பே முறைப்போடு காத்திருந்தார், ‘கோடாரிக் காம்பே ‘ என்பதைப்போல் அற்பனாய் என்னைப்பார்த்து, ‘வழக்கமா யூசர்ஸ் டேபிளை அழிச்சுடாதீங்க-ன்னு நாம கஸ்டமர்களுக்கு படிச்சுப்படிச்சு அறிவுரை சொல்வோம், இப்போ நாமே இப்படி செஞ்சா எப்படிப்பா ? ‘ என்று தப்பில் பாதியை தன் தலையில் போட்டுக்கொண்டார். எனக்கு சற்றே நிம்மதி. ஆனால் அவருக்குப் பக்கத்திலிருந்த எல்லோரும் என்னை வேடிக்கை பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது. அதில் ஒருவன் நேரம் தெரியாமல், மர்ஃபி விதிகளைச் சொல்லி, ‘தப்பாப் போறது தப்பாப் போகாம இருக்காது ‘ என்றான் கீதாசாரம்போல். அவனை ஒருமுறை முறைத்துவிட்டு, அடுத்த கதையில் வில்லனுக்கு அவன் பெயரை வைக்கலாம் என்று தீர்மானித்தேன்.

இன்னொரு கதை எழுதுவதற்கு எத்தனை நாளாகுமோ, அதற்குள் இந்த மெஷினை சரி பண்ணியாகவேண்டும். ‘என்ன பண்ணப்போறே இப்போ ? ‘ என்று பரிதாபத்தோடு கேட்ட மேனேஜரிடம் கொஞ்சம் நேரம் கேட்டேன். ‘எவ்வளவு நேரம் வேணுமோ, எடுத்துக்கோ, ஆனா சீக்கிரம் முடிச்சுடு ‘ என்று விநோதமாய் சொல்லிவிட்டுப்போனார் அவர்.

நான் கெடுத்துவைத்திருப்பது புத்தம்புதிய மெஷின். வழக்கமாய் தகவல்களை ராத்திரியோடு ராத்திரியாய் பிரதியெடுத்து வைப்பார்கள், இது புது மெஷின் என்பதால், டேட்டா போதாது என்று பிரதியெடுக்கவில்லை – போதாது என்று எவன் முடிவு செய்தானோ தெரியவில்லை, எல்லாம் அழிந்துபோனபிறகுதானே போதுமா, போதாதா என்று தெரிகிறது. இப்போது நான் காணாமல்போன டேட்டாவுக்கு என்ன செய்வேன் ?

கூகில், யாஹு, எம்மெஸ்ஸென் ஆகிய தேவதைகளிடம் அரை மணி நேரத்துக்கும் மேலாக, வெவ்வேறு மந்திரங்களை உபயோகித்துப் பிரார்த்தித்தேன் – ம்ஹும், ஒரு பயனும் இல்லை. உலகம் முழுவதும் உள்ள எல்லா ஆரக்கிள் வல்லுநர்களும் சேர்ந்து, ‘ம்ஹும், உன் சிஸ்டம் தேறாதுப்பா ‘ என்று தண்ணீர் தெளித்துவிட்டார்கள்.

இந்தக் கொடுமை போதாது என்று, என் உடன்பணியாளன் (கலீக்) ஒருவன் ஆரக்கிளை மேய்ந்து பார்த்துவிட்டு, ‘சான்ஸே இல்லைப்பா, எல்லாத்தையும் மறுபடி ஆரம்பிக்க வேண்டியதுதான் ‘ என்று சொல்லிவிட்டான். கூடவே கொசுறாய், ‘எப்படியாவது இதை சால்வ் பண்ணிடுப்பா, இப்படிதான் தெருமுனை கம்பெனியில ஒருத்தன் டேட்டாவை கரெப்ட் பண்ணிட்டான்னு சொல்லி வேலையைவிட்டு தூக்கிட்டாங்க ‘ என்று பயம்காட்டிவிட்டுப் போனான். நாட்டை கண்டபடி கரெப்ட் பண்ணுகிற அரசியல்வாதிகளையெல்லாம் விட்டுவிட்டு கடையேனாகிய என்னை வேலை நீக்குவதா ? இந்த அநீதியைக் கண்டித்து உடனடியாய் ஒரு கவிதை எழுதவேண்டும் என்று தோன்றியது. பேனாவில் சிவப்பு மை இல்லாததால் அதை ஒத்திவைத்தேன்.

வியாழக்கிழமை ராத்திரி வெகுநேரம் வரையில் ஏதேதோ செய்துபார்த்தேன் -ஒன்றும் சரியாய் வரவில்லை. எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு மறுபடி இன்ஸ்டால் பண்ணலாம் என்றால், இதுவரை செய்த வேலை முழுக்க வீணாய்ப் போகும் – மறுபடி ஆரம்பத்திலிருந்து செய்ய யாருக்கும் விருப்பம் இல்லை, நேரமும் இல்லை. ஆகவே இதை அப்படியே வைத்துக்கொண்டு காணாமல் போன யூசர்ஸ் டேபிளை மட்டும் மறுஉயிர்ப்பிக்க வேண்டும். எப்படி ?

இதுமாதிரி விஷயங்களில் எங்கள் மேனேஜர் ரொம்ப நல்லமாதிரி – பெங்களூரில் வெவ்வேறு மூலைகளில் வேலையிலிருந்த அவருடைய நண்பர்களுக்கெல்லாம் தொலைபேசி, நான் செய்த மகாபாதகத்தைச் சரி செய்வது சாத்தியமே இல்லை என்கிற செய்தியை உறுதிசெய்தார். இதற்கு ஒரே பரிகாரம், மும்பையில் ஒழுங்காய் ஓடிக்கொண்டிருக்கிற எங்கள் சர்வரின் உபயோகிப்பாளர் பட்டியலை ஒரு பிரதி எடுத்து – அதை இங்கே ஏற்றிவிடுவதுதான். டேபிள் உருவாகிவிடும், அதன்பிறகு அதிலிருக்கிர அன்ஷுபான் முகர்ஜி ரக பெயர்களையெல்லாம் நீக்கிவிட்டு நம்மூர் குப்புசாமி, கருப்பாயி பெயர்களை ஏற்றவேண்டும் – எல்ல்ல்ல்ல்லாவற்றையும் மறுபடி செய்வதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

மும்பையிலிருக்கிற மகானுபாவர்களுக்கு ஃபோனைப்போட்டால், அவர்களெல்லாம் பொறுப்பாய் ஐந்து மணிக்கே வீட்டுக்குப் போய்விட்டதாய் தகவல் வந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் என் மேனேஜர்கள் இருவரும் ஜதை போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்கள், ‘எப்ப்ப்ப்படியாவது சால்வ் பண்ணிடு நாகாஸ், உன்னைத்தான் நம்பியிருக்கோம் ‘ – வார்த்தைகளில் தேனுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. கல்யாணமான மேனேஜர்கள் ஐந்தரை மணிக்கு வீட்டுக்குப் போய்விடுவதும், எங்களைப்போல் தன்னந்தனி பேச்சிலர்கள் ராத்திரி பகலாய் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்வதும் இன்னும் எத்தனை யுகங்களுக்கோ தெரியவில்லை ! பழந்தமிழ் நடையில் இன்னும் என்னென்னவோ கோபமாய்ப் பேசவேண்டும்போலிருந்தது – தப்பு என்னுடையது என்பதால் வாயை மூடிக்கொண்டேன், ‘போய்ட்டு வாங்கோ சார், எல்லாம் நான் பார்த்துக்கறேன் ‘, என்னத்தைப் பார்ப்பது, த்ரிஷா என்று புதிதாய் ஒரு நடிகை வந்திருக்கிறதாம் – அதை வேண்டுமானால் கொஞ்சநேரம் பார்க்கலாம் – ஒரு ரிலாக்ஸேஷனுக்காக. பார்த்தேன்.

எட்டரை மணிவரை யார் யாருக்கோ மெயிலனுப்பிப் பார்த்தேன், ஒன்றும் பதிலில்லை. கடைசியாய் மும்பைக் காரர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டுக் கிளம்பினேன் – ‘நாளை காலை ஆஃபீஸ் வந்ததும், காபி குடிப்பதையும், ‘ய்யார், ய்யார் ‘ என்று விடாமல் ஜெபம் பண்ணிக்கொண்டு பக்கத்து ஆஃபீஸ் (மலையாளிப்) பெண்களுடன் வெற்று அரட்டை அடிப்பதையும் சற்றே தள்ளிப்போட்டுவிட்டு, தயவுசெய்து எனக்கு இந்த டேபிளைப் பிரதியெடுத்து அனுப்பி வையுங்கள். உங்கள் பாதங்களைப் பிடித்து மன்றாடிக் கேட்கிறேன், பெங்களூர் ஆஃபீஸின் தலைவிதியே உங்கள் கையில்தான் இருக்கிறது, மன்னிக்க – காலில் கிடக்கிறது – இப்படிக்கு, உங்கள் உண்மையுள்ளவன் ‘

மறுநாள் வெள்ளிக்கிழமை ஊருக்கெல்லாம் புனிதமாகவும், எனக்கு சற்றே திகில் கலந்த சுவாரஸ்யமாகவும் விடிந்தது. ஆஃபீசினுள் நுழையும் முன்பே கண்ணில் பட்டவர்களெல்லாம் விசாரித்தார்கள், ‘சர்வர் ரெடியா ? ‘ – ‘ரெடி, அவர் கையாலதான் மசால் தோசை சாப்பிட்டுட்டு வரேன் என்று பதில் சொல்லும் ஆர்வத்தை சி

ரமப்பட்டு கட்டுப்படுத்தி, அசட்டுச்சிரிக்க வேண்டியிருந்தது. மேனேஜர்கள் இருவரும் கார்சாவியைச் சுழற்றிக்கொண்டு கையில் பிஸினஸ் இந்தியா இதழுடன் உள்ளே நுழைந்தார்கள், என்னைப் பார்த்ததும் விழிபிதுங்க விசாரித்தார்கள், ‘எவ்ரிதிங் ஓகே ? ‘

நான் அசராமல், ‘ஓகே சார் … மும்பைல இருந்து பேக்-அப் வந்ததும் ஆரம்பிச்சுட வேண்டியதுதான் ‘, அவர்கள் ‘ஙே ‘ என விழித்தபடி கேபினுக்குப் போனார்கள்.

பிரதான கணினி செயலிழந்துவிட்டதால், எங்கள் ஆஃபீசுக்கு அறிவிக்கப்படாத விடுமுறை. எல்லாரும் சீட்டில் சாய்ந்தபடி மனதுக்குள் எனக்கு நன்றி சொல்லியிருப்பார்கள் – ஆனால், மேனேஜர்கள் இருவரின் வயிற்றெரிச்சல் அதைச் சமன்செய்து எனக்கு ஒரு புண்ணியமும் கிடைக்காதபடி பண்ணியிருக்கும்.

மும்பைக்கு மூன்று நினைவுறுத்தல் கடிதங்(கெஞ்சல்)கள் அனுப்பியபின்னர், பதினொன்றரைக்கு மனமே இல்லாமல் பேக்-அப்பை அனுப்பினார்கள். சற்றே பெரிய கோப்பாதலால், எங்களின் மெதுவான இணைய இணைப்பில் அது மெல்ல பதவிசாய் இறங்கி வருவதற்கு பலயுகங்கள் ஆனது. சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தபோது பதினேழரை எம். பி. அளவில் ஒரு கோப்பு இறங்கி சமத்தாய் உட்கார்ந்திருந்தது. லட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் தூக்கிவந்த உயிர்காக்கும் மலையைப்போல அதைப்பார்த்து ஒரு கும்பிடு போட்டேன். அந்த மலையின் பெயர்தான் மறந்துவிட்டது, மருத மலையா ?

ராமாயண ஆராய்ச்சியை சற்றே ஒதுக்கிவைத்து வேலையில் இறங்கினேன். ஆரக்கிளைக் கூப்பிட்டு பதினேழரை எம். பி. யை ரவாலட்டுபோல் உருட்டி உள்ளே திணித்தால், ‘வாண்டாம் போ ‘ என்று குழந்தையைப்போல் அடம்பிடித்தது. ‘என்னப்பா ஆச்சு ? ‘ என்று முதுகில் தடவிக்கொடுத்து விசாரித்தால், அது பழைய ஆரக்கிளில் எடுத்த பிரதியாம், எனக்குச் சேராது என்று சொல்லிவிட்டது. தோசையில்லாத ஊரில் பீட்ஸாவே மேல் என்று கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளத் தெரியாமல் என்னதான் மெஷின்களோ !

இட்லி பிடிக்காத குழந்தைக்கு அதை உதிர்த்து உப்புமாவாக்கும் தாயார்போல (என்ன இன்றைக்கு எல்லாம் சாப்பாட்டு உதாரணங்களாய் வருகிறது ?), அந்த ‘பழைய ‘ ஆரக்கிள் பிரதியை, புதியதாய் ஆக்குவதற்கு மெனக்கெட்டேன். இதற்கென்றே யாரோ ஒரு புண்ணியவான் பண்ணிவைத்த கருவியை இணையத்திலிருந்து இறக்கி, பழைய உருண்டையைப் புதியதாக்கி ஆரக்கிளுக்குத் தந்ததும், ஆசையாய் வாங்கி சாப்பிட்டுவிட்டது. ‘ஏவ் ‘ என்று ஏப்பம்கூட வந்ததாய் ஒரு பிரம்மை.

என்ன ஆகுமோ என்கிற துடிப்புடன், ‘Administrator ‘ என்ற பெயரில் எங்கள் மென்பொருளினுள் நுழையப் பார்த்தேன், ‘வாய்யா ஜேம்ஸூஊஊஊஊ ‘ என்று வரவேற்றது. ‘ஆஹா, எமது இன்னல்கள் இன்றோடு ஒழிந்தன ‘ என்று வசனம் பேசியபடி வெளியேவந்து என் சொந்தப் பெயரை இட்டால், ‘யாருய்யா நீ ? ‘ என்றது. மும்பைக் காரர்கள் தந்திருந்த பெயர்களை தட்டிப்பார்த்தால், அவையும் பல்லிளித்தபடி வாசலோடு நின்றுவிட்டன.

என்ன பண்ணுவது ? ஐந்தாம் வேதமாகிய லாக் ஃபைல்களை(Log files) நாடினேன். கண்ணுக்குமுன் எழுத்துக்களாய் ஓட, தேடிப்பார்த்தபோது, ‘நீ கொடுத்த புது டேட்டாவுக்கும், உள்ளே ஏற்கெனவே இருக்கிற டேட்டாவுக்கும் சம்பந்தமே இல்லையேய்யா, உன்னை எப்படி நான் உள்ளே அனுமதிக்கிறது ? ‘ என்றது வளர்த்த கம்ப்யூட்டர். பேசாமல் காவி கட்டிக்கொண்டு துறவியாய்ப் போய்விடலாமா என்றிருந்தது எனக்கு.

இருக்கிற தொல்லைகள் போதாது என்று இன்னொன்று – வார இறுதியில் ஊருக்குப் போவதற்காக ரயில் டிக்கெட்கள் பதிவுசெய்து வைத்திருந்தேன், ஆறு நாற்பதுக்கு ரயில் … நான் செய்த தப்பால் விளைந்த இந்த (வெட்டி) வேலை முடியாமல் போவதா வேண்டாமா ? போனால் அது நியாயமாய் இருக்குமா ? மேனேஜர்களிடம் கேட்பதற்கு ரொம்பவும் தயக்கமாய் இருந்தது.

என் நல்லநேரம், நான் வெள்ளிக்கிழமை ஊருக்குப் போவதாய்ச் சொல்லியிருந்தது ஒரு மேனேஜருக்கு நினைவிருந்தது, ‘உனக்கு லேட்டாச்சு, நீ கிளம்பு, பட் மண்டே மார்னிங் முதல் வேலையா இதை சரிபண்ணிடணும் ‘ என்றார். (சாதாரணமாய் அவர் அப்படிச் சொல்கிறவரே இல்லை, எவ்வளவு நேரமானாலும் இருந்து முடிச்சுட்டுப்போ – என்பதுதான் அவருடைய வழக்கமான வாசகம், ஏனோ சென்ற வெள்ளிக்கிழமை அவர் நல்ல மூடில் இருந்திருக்கிறார், அல்லது குருப்பெயர்ச்சியின்போது ஏதோ ஒரு நல்ல தேவதை என்னைப்பார்த்து லேசாய்ச் சிரித்திருக்கிறது !)

அடித்துப் பிடித்துக்கொண்டு கிளம்பினேன். வீட்டுக்குப்போய் பையை எடுத்துக்கொண்டு, ஆட்டோவில் விரைந்து சரியான நேரத்தில் ரயிலைப் பிடித்ததும், இரண்டாவது விநாடியில் அது நகர ஆரம்பித்தது. காதில் இளையராஜாவை மாட்டிக்கொண்டு, விகடன் படித்தபடி சந்தோஷமாகதான் ஊருக்குப்போனேன் என்றாலும் – ஊரில் இருந்த இரண்டு நாட்களும் இந்தப் பிரச்சனை உறுத்தலாகவே இருந்தது. யாரிடமும் சொல்லவில்லை, என்றாலும் இத்தனை பெரிய சொதப்பலுக்கு என்னை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்களோ என்கிற சந்தேகம் இருந்ததுதான்.

ஊரிலிருந்து திரும்பி வரும்போது என்ன செய்வது என்று திட்டம் போட்டுக்கொண்டுதான் வந்தேன் – திங்கட்கிழமை காலை சீக்கிரமே ஆஃபீசுக்குப்போய், ஒவ்வொரு ப்ரொக்ராமாய் பிரித்து வைத்துக்கொண்டு, இந்த யூசர்களின் டேபிளோடு அது பேசும் இடத்திலெல்லாம் என்ன பிரச்சனை என்று பார்த்து சரிசெய்ய வேண்டும். தமிழ்நாட்டு வாக்காளர்பட்டியல் நேர்பண்ணுவதுபோல் மிகச் சிரமமான வேலைதான் – ஆனால் நான் செய்த தப்புக்கு இதைவிட வேறு தண்டனையில்லை. எல்லாம் சரியானால் பிள்ளையாருக்கு ஆன்லைனாய் flash உபயத்தில் ரெண்டு தேங்காய் உடைக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

நானும், இன்னொரு பையனும் சேர்ந்து உட்கார்ந்து திங்கட்கிழமை காலை பத்தரை மணிக்கு மேய ஆரம்பித்தோம், ஒவ்வொரு களையாய்ப் பார்த்து சரிபண்ணிக்கொண்டே வந்தோம் – சரிசெய்த எதையும் சோதித்துப் பார்க்கவில்லை – பயம்தான் காரணம் – கடைசியில் ஒன்றாய் பார்த்துக்கொண்டால் போகிறது !

இரவு ஒன்பதரைக்கு எல்லாம் முடிந்தது – புதிய யூசர்களையும் தயார் பண்ணி உள்நுழைத்தோம். நினைவில்பட்ட எல்லா கடவுள்களையும் பிரார்த்தித்துக்கொண்டு என் பெயரைத் தந்தபோது, சொர்க்கவாசல் சத்தமில்லாமல் திறந்தது. நானும், அந்தப் பையனும் சாஷ்டாங்கமாய் கம்ப்யூட்டரை விழுந்து வணங்காத குறைதான் !

வீட்டுப் பக்கத்தில் (ஹோம்பேஜ்) இருந்து இன்னும் சில இணைப்புகளை சொடுக்கிப் பார்த்தபோது அவற்றில் சிலது ஒழுங்காய் வேலை செய்தது, சிலது டிவியில் வருவதுபோல் காணாமல் போனவர்கள் அறிவிப்பு செய்து தொலைத்ததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. முற்றிலும் சரியாகவில்லை, இன்னும் ஓரிரு முடுக்கல்கள் அவசியப்படுகிறது. ஆனால் அதெல்லாம் நாளைக்குச் செய்யலாம், பத்து மணிக்கு ஹோட்டல் மூடிவிடுவார்கள்.

இருவரும் வெளியே வந்து ராஜஸ்தானி பால் ஸ்வீட் சாப்பிட்டு எங்கள் வெற்றியைக் கொண்டாடினோம். இரண்டு நாள் முழுசாய் வேலையைக் கெடுத்த (என்) அசட்டுத்தனம், ‘பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிட்டது, இனி மீதமிருப்பதெல்லாம் சும்மா பிசாத்து சமாச்சாரங்கள், நாளைக்கு ஊதித் தள்ளிவிடுவோம் ‘ என்று மேனேஜருக்கு ஃபோன் செய்து சொன்னேன்.

அப்போது மனசெல்லாம் நிறைந்திருந்த நிம்மதியை வர்ணிப்பது சிரமம். தத்துவார்த்தமாய்ப் பார்த்தால், வியாழக்கிழமை காலையில் கணினி எப்படி இருந்ததோ, அப்படியேதான் இப்போது திங்கட்கிழமை மாலையிலும் இருக்கிறது. ஆனாலும் நடுவில் கிட்டத்தட்ட செத்துப் பிழைத்ததுபோல் ஒரு இலக்கற்ற சந்தோஷ உணர்வு !

மீதமுள்ள கதை சுவாரஸ்யமற்றது – இன்று காலையில் ஒரு மணி நேரத்துக்குள் தேவையான கோப்புகளையெல்லாம் சரியாக வழிகாட்டி சேகரித்துவைத்தபிறகு, பழகின நாய்க்குட்டிபோல் கணினி நாங்கள் சொன்னதைக் கேட்டது. ‘ஆர்டர் தயார் பண்ணு பார்க்கலாம் ‘ என்று சோதித்ததும் அமெரிக்காவிலிருந்து அமிஞ்சிக்கரைவரை கணினியில் சேகரித்துவைத்த எல்லா விநியோகஸ்தர்களுக்கு சகட்டுமேனிக்கு பர்ச்சேஸ் ஆர்டர்கள் சுட்டுப் போட்டது, அவர்களுக்கு (பொய்) ஈமெயில்களும் அனுப்பியது – எல்லாம் சோதித்துப் பார்த்தபோது மிகச்சரியாய் இருந்தது. கணினி செளக்யம், தப்புச் செய்தவன் செளக்யம், அதைத் திருத்தியவனும் செளக்யம், உலகமே சுபிட்சமயம்.

***

lavanya_baan@rediffmail.com

Series Navigation