தோத்தப்பல் (TOTFL)

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

Test of Tamil as a Foreign Language


ஜூ…ட்

கேள்விகள்

1) குஜிலியோடு பண்ணும் விஷயம் எது ?
அ) குஜல்ஸ்
ஆ) கில்மா
இ) கில்பன்ஸ்
ஈ) கலீஜ்

2) ஜுஜூபி என்பது என்ன ?
அ) இனிப்பான ஒரு சமாச்சாரம்
ஆ) எளிய விஷயம்
இ) கடினமான விஷயம்
ஈ) அல்வா

3) அல்வா என்பது என்ன ?
அ) திருநெல்வேலியில் கிடைப்பது
ஆ) உங்கள் காதலி இன்னொருவரை திருமணம் செய்யும்போது உங்களுக்குக் கொடுப்பது
இ) லட்டு
ஈ) ஜுஜூபி

4) ஒரு நபரை மரியாதையுடன் அழைப்பது எப்படி ?
அ) மாம்ஸ்
ஆ) ஸார்
இ) பெயர் சொல்லி
ஈ) ஐயா

5) ஃப்ரூட்டி என்பது யார் ?
அ) படித்துக்கொண்டே இருக்கும் பையன்
ஆ) விளையாட்டு வீரன்
இ) பேராசிரியர்
ஈ) ஒரு இனிப்பான பானம்

6) ஒருவர் ‘நம்பிட்டேன் ‘ என்று சொன்னால் என்ன அர்த்தம் ?
அ) உன்னை நம்பவில்லை
ஆ) நிச்சயமாக உன்னை நம்புகிறேன்
இ) நீ என்ன கிறுக்கனா ?
ஈ) நான் பஸ்ஸை பிடிக்கப்போகவேண்டும்

7) கீழ்க்கண்டவர்களில் பீட்டர் என்பது யார் ?
அ) டூரிஸ்ட்
ஆ) ஆங்கிலத்திலேயே பேசுபவன்
இ) பீட்டர் ஜோன்ஸ்
ஈ) உங்கள் ஆசிரியர்

8) கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளில் எதற்காக ‘கும்பலோட கோவிந்தா ‘ என்று சொல்வீர்கள் ?
அ) திருப்பதிக்கு கூட்டமாக செல்லும்போது
ஆ) மேட்டர் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எல்லோரும் பிடிபடும்போது
இ) குரூப் ஸ்டடி பண்ணும்போது
ஈ) இந்தி நடிகரைப் பார்க்கும்போது

9) ரப்சர் என்பது என்ன ?
அ) கடி
ஆ) திராபை
இ) தொந்தரவு
ஈ) ஆபத்து

10) ‘மானே தேனே பொன்மானே போட்டுக்கோ ‘ என்றால் என்ன பொருள் ?
அ) பாட்டுப்பாடு
ஆ) காதல் வெற்றி பெற பிள்ளையாரிடம் கன்னத்தில் போட்டுக்கொள்
இ) இதர சமாச்சாரங்களை இட்டு நிரப்பு
ஈ) கமலஹாசன் படம் பார்க்கப்போ

***

பதில்களைச் சரிபாருங்கள்
(ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் கொடுத்துக்கொள்ளுங்கள்)

சரியான விடைகள்
1 – அ
2 -ஆ
3 -ஆ
4 -அ
5 -அ
6 -அ
7 -ஆ
8 -ஆ
9. இ
10. இ

8க்கு மேல் இருந்தால்

கிளப்பிட்டாங்க மாமோ

Series Navigation

Test of Tamil as a Foreign Language

Test of Tamil as a Foreign Language