1984ம் ஆண்டு ஜூன் மங்கை மாத இதழில் வெளியான ஆலோசனைகள்

This entry is part [part not set] of 12 in the series 20010108_Issue

கோமதி நடராஜன்


*அன்பு என்ற ஆயுதம் கொண்டு அனைவரையும் வென்று விடலாம் என்ற எண்ணத்தோடு,புகுந்தவீட்டில் காலெடுத்து வையுங்கள்.

*பணிந்து செல்வதுக் கெளரவக்குறைச்சல் என்று எண்ணாதீர்கள்.அழகான மாளிகை ஒன்று இருக்கிறது,அதன் நுழைவாயிலோ மிகவும் சிறியது,கொஞ்சம் குனிந்து உள்ளே நுழைந்து விட்டால்,அங்கே ஆட்சி செய்யப்போவது நீங்கள்தான்.நிமிர்ந்துதான் போவேன் என்றால் இடி படுவதும் நீங்கள்தான்.

*அனுசாித்துப் போவது கேவலம் இல்லை.அடர்ந்த காடு ,அதனை அடுத்து அற்புதமான பூங்கா.கொஞ்சம் குனிந்தும் வளைந்தும் ,நிமிர்ந்தும் குறுக்கியும் காட்டைக் கடந்து விட்டார்களேயானால் அடுத்து வரும் பூங்காவுக்கு நீங்கள்தான் அதிபதி.

*உடன் பிறந்தவர்களுக்குள்ளேயே கருத்தும் மனப்போக்கும் வேறுபடும் போது,புகுந்தவீட்டில் உள்ளவர்கள்,உங்கள் கருத்தோடு ஒத்துப்போகவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தும்.நிதானிக்கவும்.

*கருத்தும் சிந்தனையும் மனிதனுக்கு மனிதன் மாறுபடக்கூடியவை.ஆனானப்பட்ட மகாத்மாவுக்கே ஒரு கோட்சே இருந்திருக்கிறான் என்றால் யோசியுங்கள்.

*கருத்து வேற்றுமைகள் எத்தனை இருந்தாலும்,பிறாிடம் பேசும் பொழுது வேற்றுமைகளை மறந்து மனம் திறந்து பேசுங்கள்.

*நீங்கள் குடும்பத்துக்கு மூத்தவரா ?குடும்பத்தை அரவணைத்துச் சென்று ,அனைவரையும் அன்புப் பிடிக்குள் வைத்திருக்கிறீர்களா ?பாராட்டுக்கள் அனைத்தும் உங்களுக்குத்தான்.குடும்பத்தைத் திசைக்கு ஒன்றாகச் சிதற விட்டிருந்தீர்களானால்,பழி எல்லாம் உங்கள் தலையில்தான். முன்னெச்சொிக்கை தேவை.

*மழையில் நனைகிறேன்,வெயிலில் காய்கிறேன்,எல்லாவற்றிற்கும் நான்தானா அகப்பட்டேன் என்று,குடையும்,குளிர் நிழல் தரும் ஆலமரமும் நினைத்தால் அது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியவர்களின் சலிப்பும் முணுமுணுப்பும்.

*பிறர் மனதை மென்மையான கண்ணாடியாக நினைத்து வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து உரையாடுங்கள்.அதில் ஒரு சிறு கீறல் விழுந்தால்கூட ஆயுளுக்கும் ஆறவழியில்லை!மறந்துவிடாதீர்கள்.

*சிலருக்கு எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் தவறுகள் மட்டுமே கண்களுக்குப் புலப்படும்,நல்ல விஷயங்களைப் பாராட்டுவோம் என்றஎண்ணமே அவர்களுக்குத் தோன்றாது.அது அவரது குறுகிய மனதைக்காட்டுகிறது.அதனால் எத்தனை நல்ல விஷயங்களை,எத்தனை நல்ல நண்பர்களை இழக்கிறோம் என்பதை அறியாமல் வாழ்கிறார்கள்.அது போல் குணம் படைத்தவர்களை நாம் எப்படி சமாளிப்பது ?நம் காாியங்கள் எதையும் அவர்கள் பார்வைக்கு வைக்குமுன்,அதில் காணும் தவறுகளைச் சுட்டிக் காட்டும்படி நாமே முந்திக் கொள்ளலாம்,அதைவிடச் சிறந்தவழி வேறு இல்லை.

*குடும்ப அங்கத்தினாிடையே பூசல் கிளம்பும்படி இங்கும் அங்கும் பேசாதீர்கள்.சச்சரவு நிகழும் நேரத்தில்,நடுவராக நிற்க வழி இல்லையென்றால் இடத்தைவிட்டு அகன்று விடுவது நல்லது.

*எத்தனையோ ஒற்றுமையானக் குடும்பங்களில் கூட, சமயங்களில், கள்ளமில்லாக் குழந்தைகள் காரணமாகச் சச்சரவு ஏற்பட்டுவிடும். குழந்தைகள் சண்டையில் தலையிடாதீர்கள். குழந்தைகள் மனம் சின்ன நீரோடைபோன்றது அதில் எந்தக் கசடும் தேங்கி நிற்காது. அது என்றுமே தெளிந்த நீரோடையாகத்தான் ஓடும் என்பதைப் புாிந்து கொண்டு அவர்கள் பிரச்சனைகளை அணுகுங்கள்.

*சாியாகப் புாிந்து கொள்ளாமல் சில தெளிவில்லாதக் குற்றச்சாட்டுக்கள் உங்களை அடைகிறது, அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஜீரணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,உண்மைக்குப் புறம்பானதாக இருக்குமேயானால்,விழுங்கப் பழகிக் கொள்ளுங்கள்.

*தவறு உங்களிடமிருந்து,சில சமயங்களில் மனதைப் புண்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழுமேயானால்,சாற்றை எடுத்துக் கொண்டு சக்கையை எறிந்து விடுவதுபோல்,சம்பவத்தை மறந்து விட்டு நீதியை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

*தகுந்த காரணத்தோடு வந்த கோபமாக இருந்தாலும்,உருக்கி ஊற்றியத் தங்கம் ஒரு நொடியில் குளிர்ந்து விடுவது போல் கோபத்தை வினாடியில் மாற்றி சகஜ நிலைக்கு வர முயலுங்கள். மேனியில் தங்கம் பதியவேண்டும் என்று ஆசைப்படும் நாம் அகத்தில் அதன் நல்ல குணத்தைப் பதியவைத்துக் கொள்ளவேண்டாமா ?

*உாிமை இருக்கிறது என்ற தைாியத்தில்,யாருக்கும் எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு அறிவுரை சொல்ல முயலாதீர்கள்.அறிவுரை கூறும் விஷயத்தில்,உாிமையை விடத் தகுதிதான் ரொம்பவும் அவசியம்.இனிப்பு அதிகம் சாப்பிடக்கூடாது என்று ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறுவதற்காகத் தான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தித் தன்னை அடுத்தவருக்கு அறிவுரை கூறும் தகுதிக்குத் தயார் படுத்திய பின்னரே மகாத்மா காந்தி சிறுவனை அழைத்து அதிக இனிப்பு உடலுக்கு நல்லதல்ல என்று எடுத்து கூறினாறாம்.

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்