எத்தனை முறை படித்தாலும் தமிழர்களுக்கு அலுக்காத தமிழ் ஜோக்குகள்

This entry is part [part not set] of 7 in the series 20000917_Issue



ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது
மாணவன் : தெரியாது சார்
ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்.

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க
நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு ?

சோ, லல்லு பிரசாத் யாதவ், சுப்ரமணிய சாமி இவர்களை வீரப்பன் கொண்டு போனால் யார் காப்பற்றபடுவார்கள்.

இந்த நாடு காப்பாற்றப்படும்

ஸ்பின் பெளலருக்கு பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பார் ?
பால திருப்புற சுந்தரி

கடவுள் காளிக்கும் குத்துச் சண்டைக்கும் என்ன ஒற்றுமை ?
நாக் அவுட்

எல்.ஐ.ஸி மாடியிலிருந்து லட்டைப் போட்டால் என்னவாகும் ?
பூந்தியாகும்.

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளையை கொடைக்கானலா வளர்க்கும்.

பிரசவ ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
கர்ப்பமா போவணும்

லீப் வருடத்தில் எந்த மாதத்தில் இருபத்தி ஒன்பது நாட்கள் ?
எல்லா மாதத்திலும்
(30 – 31 நாட்களுக்குள் 29 நாட்களும் அடக்கம் )

(இந்த கேள்வி அமிதாப்பச்சன் வழங்கும் ‘கெளன் பனேகா க்ரோர்பதி ‘ (யார் ஆவார் கோடாஸ்வரர் ?)ல் கேட்கப்பட்டது. இது போட்டியாளருக்கு முதல் கேள்வியாக வந்தது, (போட்டியாளர் அளித்த பதில் ஒன்று), அமிதாப்பே கொஞ்சம் சீரியஸ் ஆகி பிப்ரவரி மாதத்தில் மட்டும்தானே 29 நாட்கள் வரும், என்றார் குழப்பத்தினூடே.) பாவம் போட்டியாளர்

கேள்வி : உலகத்திலேயே பெரிய மிருகம் எது ?
பதில் : யானை
கேள்வி :அதை விட பெரிய மிருகம்
பதில் : இன்னொரு யானை

Series Navigation

செய்தி

செய்தி