“பழமொழிகளில் வேளாண்மைச் செய்திகள்“

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

முனைவர்,சி,சேதுராமன்



முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

உலகோர் அனைவருக்கும் உயிர்; கொடுக்கும் தொழில் வேளாண்மை என்ற உழவுத் தொழில் ஆகும். அதனால்தான், அனைத்து இலக்கியங்களும், பெரியோர;களும் உழவின் மேன்மையைப் பற்றி காலந்தோறும் உயர்;வாகக் கூறிவருகின்றனர்;. உலகப்பொதுமறையாம் திருக்குறள்,
‘‘சுழன்றும் ஏர்;பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’’
என்று வேளாண்மைத் தொழிலின் மேன்மையைப் பறைசாற்றுகிறது. மேலும் வேளாண்மை செய்வது குறித்த பல்வேறு தொழில் நுட்பச் செய்திகளையும் வள்ளுவர்; பெருமான் தமது நூலில் குறிப்பிடுகின்றார்;. அதுபோன்றே நமது முன்னோர்;களும் வேளாண்மைத் தொழிலின் தொழில் நுட்பத்தை பழமொழிகளில் கூறியுள்ளனர்;.
பழமொழிகள் என்பது பெரியோர்;கள் தமது வாழ்க்கையில் பெற்ற அனுபவ மொழிகள் ஆகும். இப்பழமொழியை, ‘பழஞ்சொல், முதுசொல், முதுமொழி, சொலவடை, சுலோகம் (சொலகம் என்று நாட்டுப்புறங்களில் வழங்குவர்;)’ என்றும் கூறுவர்;. இப்பழமொழிகள் நமது முன்னோர்;களின் வாழ்வில் கண்ட மெய்மைகள் ஆகும். அவ்வாழ்வியல் மெய்மைகளில், உழுதல், நடவு உள்ளிட்ட வேளாண்மைத் தொழில் நுட்பக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

உழவு செய்யும் முறை
நிலத்தில் விதைவிதைக்கும் முன்னர்; அதனை நன்கு உழுது விதை விதைப்பதற்கேற்ப நிலத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அந்நிலத்தில் பயிர்;கள் நன்கு வளரும். நிலத்தை நன்கு உழுதால் ஒரு பிடி எரு கூட இடவேண்டம் என்பதை வள்ளுவர்;,
‘‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டற் சாலப்பாற் றன்று’’
என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார்;. நமது முன்னோர்;கள் தமது அனுபவத்தால் எப்படி நிலத்தில் உழவு செய்ய வேண்டும் என்பதை,
‘‘ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்’’
என்று பழமொழியாகக் கூறுகின்றனர்;. நிலத்தில் அகலமாக உழுதால் மழைநீர்; நிலத்தில் தேங்கும்; மண்ணரிப்பும் நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின் தொழில் நுட்பத்தை இப்பழமொழியில் எடுத்துரைக்கின்றனர்;. தற்போது வேளாண் விஞ்ஞானிகள் சரிவுக்குக் குறுக்கே உழவேண்டும் என்று கூறுவது அகல உழுவதையே என்பது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
மேலும் நிலத்தில் மாட்டை ஏரில் பூட்டி உழும்போது ஒன்றன் பின் ஒன்றாகவே உழுதல் வேண்டும். அதனைவிட்டுவிட்டு நான்கு ஏர்;கள் உழுகின்றதெனில் வரிசையாக உழுதல் கூடாது என்ற முறைமையை,
‘‘முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்’’
என்ற பழமொழி விளக்குகின்றது. நெல், கரும்பு, சோளம் என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உழுதல் வேண்டும். எள் விதைப்பதற்கு முன்னர்; நிலத்தை ஏழு முறை உழுதல் வேண்டும். அப்போதுதான் எள் நன்கு முளைத்து வளர்;ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்;ச்சி குன்றி விளைச்சலும் குறையும். இத்தொழில் நுட்பக் கருத்தினை,
‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழிகள் நமது முன்னோர்;களின் உழவுத் தொழில் நுட்ப அறிவை புலப்படுத்துவதாக அமைந்துள்ளன.
விதைத்தல்
காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்;களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிரிட்டால் தான் நன்கு விளைச்சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்;பார்;த்த விளைச்சலைப் பெற முடியாது. இதனை,
‘‘பருவத்தே பயிர்; செய்’’
‘‘ஆடிப்பட்டம் தேடி விதை’’
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. ஆடி மாதத்தில் விதைப்பதே விதைப்பதற்குச் சரியான காலகட்டமாகும். மேலும், விவசாயம் செய்கின்றபோது விவசாயம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது பலனை மட்டும் எதிர;பார்;த்தல் கூடாது. இக்கருத்தை,
‘‘உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்’’
அனைவரும் வயலில் பயிரிடுகின்றபோது நாமும் பயிரிடவேண்டும். அப்போதுதான் அது விளையும். இல்லையெனில் அஃது பாழ்பட்டுப் போய்விடும். மேலும் உழவுத் தொழிலில் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பதையும் இப்பழமொழி நன்கு விளக்குகின்றது.
பயிர்; நடவு செய்தல்
ஒவ்வொரு பயிரையும் அதற்குரிய தொழில் நுட்பத்திற்குத் தகுந்தாற்போல் நடவு செய்தால் அப்பயிர்; நன்கு விளைச்சலைத் தரும். அவ்வாறு செய்யவில்லையெனில் விளைச்சல் குறையும். பயிர்; நடவு செய்யும் இத்தொழில் நுட்பத்தை,
‘‘நெல்லுக்கு நண்டோ; வாழைக்கு வண்டியோட
தென்னைக்குத் திருவாரூர;த் தேரோட’’
எனத் அனுபவ மொழியாகக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் ஒரு நண்டு போகும் அளவிற்கு இடைவெளிவிட்டு நடவேண்டும் என்று இப்பழமொழி குறிப்பிடுகின்றது. இதனை இன்று ஒரு மிதிவண்டியின் டயருக்குள் 17 குத்துக்கள் இருப்பதைப் போல் நெற்பயிரை நடவு செய்தல் வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்;. மேலும் இன்று இதனை செம்மை நெல் சாகுபடி என்றும் குறிப்பிடுகின்றனர்;.
வாழைக் கன்றை நடவு செய்கின்றபோது ஒரு மாட்டு வண்டி போகுமளவு இடைவெளிவிட்டு நட வேண்டும். தென்னைக்கு ஒரு தேர்; ஓடுமளவிற்கு இடைவெளி விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பயிரையும் எவ்வாறு நட்டால் பயிர்; அதிக விளைச்சலைத் தரும் என்பதை பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்; நமக்குக் கூறியுள்ளனர்;.
யார்; யார்; எத்தகைய பயிர்;களைப் பயிரிடுதல் வேண்டும் என்பதையும் பழமொழிகளில் நமது முன்னோர்;கள் குறிப்பிட்டுள்ளனர்;. நீர்;ப் பாசன வசதி, பிற செலவுகள் செய்வதற்குரிய பணம் ஆகியவற் வாய்ப்பிருப்போர்; வாழையைப் பயிரிடலாம். நீர்; வசதி பிறவோ இல்லாதவர்;கள் எள்ளைப் பயிரிட்டுப் பயன் பெறலாம் இதனை,
‘‘வலுத்தவனுக்கு வாழை; இளைச்சவனுக்கு எள்ளு’’
என்ற பழமொழி மொழிகின்றது. வாழை பயிரிடுவோர்; காற்றினால் மரம் சாய்ந்து விடுகின்றபோது அதனால் பாதிப்படையாமல் அவ்விழப்பைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி இருக்க வேண்டும். மேலும், எள்ளிற்கு அதிக அளவு நீர்; தேவைப்படாது. சிறிதளவே நீர; தேவைப்படாது காற்றடித்தாலும் எள் செடியானது பாதிப்படையாது. இதனால் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பழமொழி குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

உரமிடல்
பயிர்; நடவு செய்துவிட்டால் மட்டும் பயிர்; விளைச்சலைத் தராது. அதற்குத் தேவையான உரமிடுவது அவசியமானதாகும். நமது முன்னோர்;கள் இயற்கை உரத்தையே பயன்படுத்தினர்;. செயற்கை உரத்தைப் பயன்படுத்தினால் உணவுப்பொருளில் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனை உண்ணும் மனிதர்;களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் பெரும்பாலும் இயற்கை சார;ந்த வேளாண்மையையே அதிகம் செய்தனர்;. தற்போது போல் அதிகமாக செயற்கை உரத்தைப் பயன்படுத்தவில்லை. தொழு எரு போட்டு பயிர்;களின் விளைச்சலைப் பெருக்கினர்;. இன்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்; குறிப்பிடுவது போன்று இயற்கை சார்;ந்த உரங்களை அதிகம் பயன்படுத்தினர்;.
எருப் போடாது, மற்றவருடைய வயலைப் பார்;த்து பொறாமைப் படுவதால்; எதுவும் விளையாது. மேலும் நடமாடும் வங்கியான ஆட்டின் புழுக்கை அன்றைக்கே உரமாகப் பயன்படும்; மாட்டுச் சாணம் மட்க வேண்டும். அப்போதுதான் அது நன்கு பயனைத் தரும். மேலும் மாட்டிலிருந்து பெறப்படும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை ‘பஞ்சகவ்வியம்’ என்பர்;. இத்தகைய இயற்கையான உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை,
‘‘எருப்போட்டவன் காடுதான் விளையும்;
குண்டி காய்ஞ்சவன் காடு விளையாது’’
(குண்டி காய்ஞ்சவன்-பொறாமைப்படுபவன்)
‘‘ஆட்டுப் புழுக்கை அன்றைக்கே!
மாட்டுச் சாணம் மக்குனாத்தான்!’’
என்ற பழமொழிகள் விளக்குகின்றன.
மர வளர்;ப்பு முறை
ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு முறையில் வளர்;க்கவேண்டும். அவ்வாறு வளர்;த்தால் அம்மரம் நமக்கு அதிகம் பலனைத் தரும். மர வளர்;ப்பு முறையில் கவ்வாத்து செய்தல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முருங்கை, கொய்யா போன்ற மரங்களை ஆண்டிற்கு ஒரு முறை கவ்வாத்து செய்தால் புதிய கிளைகள் வந்து அதிக பலன்களைத் தரும். இத்தகைய கவ்வாத்து முறையை,
‘‘முருங்கையை ஒடிச்சு வளர்;க்கணும்;
பிள்ளையை அடிச்சு வளர்;க்கணும்’’
‘‘ஒடிச்சு வளர்;க்காத முருங்கையும்
அடிச்சு வளர்;க்காத பிள்ளையும் உருப்படாது’’
என்ற பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்;கள் குறிப்பிடுகின்றனர்;.
கொடி வளரும் முறை
ஒவ்வொரு செடியும், கொடியும் வெவ்வேறு நிலைகளில் வளரும் தன்மை கொண்டன. சில தரையிலும், சில மேலேயும் படரும் தன்மை கொண்டன. அவரை வளராதது போன்று தெரிந்தாலும், விரைவாக வளரும் தன்மை கொண்டது. அதுபோன்று பீர்;க்கங்கொடி வேகமாக வளரும் தன்மை கொண்டது. இவ்விரண்டு கொடியையும் பெண், ஆண் குழந்தைகளின் வளர்;ச்சியுடன் ஒப்பிடுவர்;. இதனை,
‘‘அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணு;
பீர்;க்கங்கொடியும் பையனும் ஒண்ணு’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இவ்வாறு இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த நமது முன்னோர்;கள் தமது அனுபவ அறிவால் பெற்ற கருத்துக்களை பழமொழிகள் வாயிலாகத் தொழில் நுட்பக் கருத்துக்களை உணர்;த்தியுள்ளனர்;. இவை நமக்கு நலமுடனும், வளமுடனும் வாழ்வதற்கு வகைசெய்பவையாக அமைந்துள்ளன.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.