உவமையும் பொருளும் – 1

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E.Mail: Malar.sethu@gmail.com
பொருள்களை எளிமையாக பிறருக்கு விளக்குவதற்கும் பிறர் அறிந்து கொள்ளும் வண்ணம் கருத்துக்களைப் புலப்படுத்துவதற்கும் புலவர்களுக்கு உவமைகள் பயன்படுகின்றன. உவமையை விளக்கத் தொல்காப்பியர் உவம இயல் என்ற ஒன்றைப் பொருளதிகாரத்தில் வைத்திருப்பதில் இருந்தே அதன் சிறப்பினை நன்கு உணரலாம். இவ்வுவமையை அணிகளின் தாய் என்று கூறுவர். தொல்காப்பியர் மொழிந்த உவமை பின்னாளில் பல்வேறு வகையான அணிகளாக மாற்றம் பெற்று இலக்கண உலகில் உலா வந்தன. உவமைகள் பொருளோடு பொருந்தி இருத்தல் வேண்டும்; அவ்வாறு பொருந்தி இருக்கும் உவமையே சிறப்பானதாகும்.

சங்கப் புலவர்கள் படைத்த உவமைகள் உயர்ந்ததாகவும், இயல்பானதாகவும் இருந்தன. ஏனெனில் சங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் பாடலில் பயன்படுத்திய உவமைகள் அவர்களின் வாழ்க்கையிலிருந்து முகிழ்த்தவையாக அமைந்துள்ளன. வறுமையின் காரணமாக வள்ளல்களைப் பார்க்கப் போகும்போது தாங்கள் வழியில் கண்ட கட்சிகளை மற்ற காட்சிகளுடன் ஒப்பிட்டு மகிழ்ந்தனர். தாங்கள் உருவாக்கிய அதனை அமைத்து, அதனைக் கேட்போரையும் மகிழவைத்தனர். அவர்களது உவமைகள் பிற புலவர்கள் கூறிய உவமைகளிலிருந்து மாறுபட்டு புதியனவாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.புறநானூறு போர் பற்றிய செய்திகள் பலவற்றை உவமை நயத்துடன் மொழிகின்றது. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள உவமைகள் கற்பனைத்திறன் மிகுந்தவையாகவும், புலவர்களின் மொழித்திறனைப் புலப்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன.
கிழிந்த ஆடையும் – கிணற்று நீர்ப் பாசியும்
துணியோ கிழிந்து தொங்கும் நிலையிலுள்ளது. கிணற்று நீ¡¢லே படர்ந்துள்ள பாசியின் வேரையும் துணியின் தன்மையையும் நோக்கிய ஒளவையார்,
“ஊருண் கேணிப் பகட்டிலைப் பாச
வேர்புரை சிதாஅர்” (புறம்.392)
“முதுநீர்ப் பாசியன்ன வுடை” (புறம்.390)
என அதனைக் கந்தல் துணிக்குஉவமையாகக் கூறுகின்றார். வன்பரணர்,
“கூதிர்ப் பருந்தி னிருஞ்சிற கன்ன
பாறிய சிதார்” (393)
என சிதைந்த ஆடைக்குக் கூதிர்காலத்துப் பருந்தின் சிறகினை உவமையாகக் கூறியுள்ளார். பாம்பின் நாக்கு பிளவு பட்டிருக்கும். பல பகுதிகளாக நைந்து கந்தலாகிக் கிழிந்போன ஆடையானது பாம்பின் நாக்குப்போல் இருக்கும். இதனை, நல்லிறையனார் என்ற புலவர்,
“ஈன்ன வரவி னாவுருக் கடுக்குமென்
தொன்றுபடு சிதாஅர்” (புறம். 393)
என்று காட்சிப் படுத்துகின்றார். தனக்குக் கிடைத்த புதிய ஆடையினைக் கண்ட ஒளவையார் அதனை,
“திருமல ரன்ன புதுமடி” (390)
எனப் பகன்றை மலருடன் ஒப்புமைப்படுத்தி மகிழ்கிறார். எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பூவேலைகள் செய்யப்பெற்ற மெல்லிய ஆடையினை,
“பாம்பு¡¢த் தன்ன வான்பூங் கலிங்கம்” (புறம்.397)
எனப் பாம்புத் தோல்போன்று மென்மையாக உள்ளதாகக் கூறுகின்றார். கந்தலாடையை சிதாஅர் என்றும், புத்தாடையை மடி , கலிங்கம் எனவும் பழந்தமிழ் மக்கள் வழங்கினர் என்பது இப்புறநானூற்று வா¢களால் அறியமுடிகின்றது.
சேவல் கொண்டையும் – முள்முருங்கைப் பூவும்
சேவல் கோழியின் நெற்றிச்சூடு(கொண்டை) முள்முருங்கைப் பூப்போல் சிவந்து காணப்படுவதாக தண்காற்பூட்கோல்லனார்,
“கவிர்ப்பூ நெற்றிச் சேவல்” (புறம்.)
என்று உவமித்துக் கூறுகிறார்.
முயலும் – சம்பங்கோரையின் கதிரும்
குட்டையான கால்களையும் நீண்ட செவிகளையும் உடைய குறுமுயல்கள் சம்பங்கோரையின் கதிர் போல இருக்கும் என்கின்றார் மதுரைத் தமிழ்க் கூத்தனார். இதனை,
“காமரு கழனக் கண்பி னன்ன
“தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக் குறுமுயல்” (புறம். 334)
என்ற புறநானூற்றின் வா¢கள் புலப்படுத்துகின்றன. மற்றொரு கவிஞர் முயலின் கண்களைப் பார்க்கின்றார்.
“நீருட் பட்ட மா¡¢ப் பேருறை
மொக்கு ளன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்” (புறம். 333)
என அவருக்கு முயலின் விழிகள் மழைத் துளியின் காரணமாகச் சேற்றில் எழுந்த கொப்புளம்போல் தோன்றுகின்றது.
எருமைக் கொம்பும் – உளுத்தம் பயறு, பாசிப்பயறு நெற்றுக்களும்
எருமையின் கொம்பு உளுந்தம்பயறு, பாசிப்பயறு ஆகியவற்றின் நெற்றைப் போல் சொர சொரப்பாகவும் கருமையாகவும் உள்ளது என்பதை,
“பெருநீர் மேவற் றண்ணடை யேருமை
இருமருப் புறழு நெடுமா ணெற்றின்
பைம் பயறுதிர்த்த கோதின் கோலணை” (புறம். 297)
என்று குறிப்பிடுகின்றார். இவ்வுவமையைக் கூறிய புலவா¢ன் பெயர் தொ¢யவில்லையாயினும் இப்புலவர் மருத நிலத்தின் மாண்பினை நன்கறிந்தவராதலால் எவரும் கூறாத சிறப்பான உவமையைக் கூறியுள்ளார் எனலாம்.

குதிரையின் வேகம் – காற்றின் வேகம்

காற்றின் வேகமாக வீசும். அக்காற்றையும் குதிரையின் வேகம் தோற்கச் செய்கின்றதாம். ஆவூர் மூலங்கிழார், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார், அ¡¢சில் கிழார், பரணர் ஆகியோர், குதிரையின் வேகத்திற்கு காற்றை உவமையாகக் கூறுகின்றனர். குதிரையானது,
“காலியற் புரவியர்லும்” (புறம்.178)
“வளி நடந்தன்ன வாச்செல லிவுளி” (புறம். 197)
“வளி தொழிலொழிக்கும் வண்பா¢ப்புரவி” (புறம். 304)
” வெவ்விசைப் புரவி வீசு வளியாக” (புறம். 369)
எனக் காற்றைப் போன்று விரைந்து செல்வதாகப் புலவர்கள் மொழிகின்றனர்.

கிணைப் பறையும் – ஆண் யானையின் அடியும்

மன்னனின் ஆணையை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஒரு கண்ணை உடைய கிணைப் பறையைத் தட்டி ஒலியெழுப்பி மக்கள் அறியும் வண்ணம் செய்தனர், ஒரு கண்ணை உடைய கிணைப் பறையானது பொ¢ய ஆண் யானையின் அடிபோலத் தோன்றுவதை,
” பெருங் களிற்றடியிற் றோன்றும் ஒருகண்
இரும்பறை” (புறம்.,263)
என்ற பாடல் வா¢கள் எடுத்தியம்புகின்றன, இத்தகைய உவமையை,
” பொருகளிற் றடிவழியன்ன வென்கை
ஒரு கண் மாக்கிணை” (புறம்., 392)
ஒளவையார் என்று குறிப்பிடுகிறார். கழாத்தலையார் என்னும் புலவரோ மதங் கொண்ட யானையின் அடிச்சுவடு போன்றுள்ளது என்கிறார்.
“கடாஅயானைக் கால்வழியன்னவென்
தெடா¡¢” (புறம்., 368)
இப்புலவர்கள் கூறியது போலல்லாது, குண்டுகட்பாலியாதன் என்னும்புலவர் வேறுபட்டுடூ
“வள்ளுகிர வயலாமை
வெள்ளகடு கண்டன்ன
வீங்குவிசிப் புதுப்போர்வைத்
தெண்கண் மாக்கிணை” (புறம்., 387)
என கூர்மையான நகங்களை உடைய வயலாமையினது அடிவயிற்றைப் போன்று தடா¡¢ப் பறை உள்ளது என்று மொழிகிறார்.

உடுக்கையும் – ஆமையும்

பொ¢ய நுட்பமான கோலில் பிணிக்கப்பட்ட பொ¢ய உடுக்கையானது தண்ணீ¡¢ல் வாழும் ஆமையை அம்பில் கோர்த்ததைப் போல் காணப்பட்டதை,
“கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை” (புறம்., 70)
என்று கோவூர்க்கிழார் குறிப்பிடுகிறார்.

அரசனும் – உழவனும்

நாட்டை ஆளும் மன்னன் உழவனைப் போல் இருத்தல் வேண்டும் என்று கழாத்தலையார் அரசனை உழவனுக்கு உவமை கூறுகிறார். மழைபொழிந்து வயலில் நன்கு உழுவதற்குப் பக்குவமாக ஈரப்பதம் உள்ளபோது உடிவன் நல்ல எருதுகளைத் தேர்ந்தெடுத்து உழுவான், அதுபோலஅரசன் தனக்கு¡¢ய பணியாளர்களையும், வீரர்களையும் தனது குடியில் உள்ளோருள் நல்லோராகப் பார்த்துத் தேர்ந்தேடுத்துக் கொள்ளல்வேண்டும், இது அரசனது கடமையாகும். இதனை,
“ஈரச் செவ்வி யுதவிள வாயினும்
பல்லெருத் துள்ளு நல்லெருது நோக்கி
வீறுவீறாயு முழவன் போலப்
பீடுபெறு தோல்கு¦ப் பாடுபல தாங்கிய
மூதிலாள ருள்ளுங் காதலிற்
றனக்கு முகந்தேந்திய பசும்பொன் மண்டை
இவற்கீ கென்னு மதுவு மன்றிசினே” (புறம்., 289)
என்ற பாடலில் விளக்குகிறார்.

உழவனும் – எமனும்

உலகிற்கு உணவளிக்கும் உழவன் எங்ஙனம் உயிரை எடுக்கும் எமனாவான்? பு¡¢யாத புதிராக அல்லவா இருக்கிறது. விதைப்பதற்கு வைத்திருக்கும் விதையை உண்ணும் உழவன் எமன் போன்றவன். நல்ல காளை மாடுகளைத் தேர்ந்தெடுத்து நாளேர் பூட்டி மகிழும் உழவன் விதையை நன்கு பக்குவப்படுததி நல்ல முறையில் பாதுகாத்து வைப்பான், வறுமை வந்தபோதும் விதைக்கென்று வைத்த தானியத்தைச் சமைத்து உண்ணமாட்டான்.
அவ்வாறு உண்ணபவன் எமனைப் போன்றவன் ஆவான். இதனை,
“வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான்
வீழ்குடி யுழவன் வித்துண்டா அங்
கொருவ னாயி ருண்ணாயாயின்
நேரார் பல்லுயிர் பருகி
ஆர்குவை மன்னோவ வனமரடுகளத்தே” (புறம்., 230)
என அ¡¢சில்கிழார் குறிப்பிடுகிறார்.

செந்நெல் -வேங்கைப் பூ

வயலில் செந்நெல்விளைந்திருக்கிறது. அது பார்ப்பதற்கு நனைந்த வேங்கைமரத்துப் பூவைப் போன்றிருப்பதை ஒளவையார்,
“அகடுநனை வேங்கை வீகண்டன்ன
பகடுதரு செந்நேல்” (புறம்., 390)
என உவமிக்கிறார். இயற்கையை மற்றோர் இயற்கையுடன் ஒப்பிட்டுக் காட்டுவது இனிமைபயப்பதாக அமைந்துள்ளது.

வரகு அ¡¢சி – புறாவின் கரு

வரகு புன்செய் நிலத்தில் விளையும் உணவு தானியமாகும். அதனைக் குத்தி அ¡¢சியை எடுத்து சமைத்து முல்லை நிலத்து மக்கள் உண்பர், உரலில் குத்தப்பட்டு சமைப்பதற்கு வைத்திருப்பதைப் பார்த்த ஆலந்தூர்க்கிழாருக்கு அந்த அ¡¢சியின் தோற்றம் புறாவினது கருப் போன்றிருப்பதை,
“புறவுக் கருவன்ன புன்புல வரகு”(புறம்., 34)
என ஒப்பிட்டுக் கூறுகிறார். புறாவின் முட்டையின் உள்ளே இருக்கும் கருவின் நிறம் வரகா¢சியின் நிறத்திற்குப் புலவரால் ஒப்பிட்டுக் காட்டப்பட்டிருப்பது இயல்பாக உள்ளது.

நிலமகள் – விலைமகள்

மண், பொன் உள்ளிட்ட செல்வங்கள் அனைத்தும் பிறா¢ன் கைகளில் மாறி மாறிச் சென்ற வண்ணம் இருக்கும். விலைமகள் பொருளை விரும்பி ஆடவர் பலரைச் சேர்ந்து கொண்டே இருப்பாள். விலைமகள் பொருளுடையா¡¢டத்தில் தொடர்பு கோள்ளுதல்போல நிலமகள வலிமையும் சூழ்ச்சியும் உடைய மன்னர்களிடத்தில் தங்குவாள். எனவே நிலமகள் விலைமகளைப் போன்றவள் என்ற உவமையினை,
“முன்பின்
முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும்
விலைநலப் பெண்டி¡¢ற் பலர்மீக் கூற
உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண்
நிலமக எழுத காஞ்சியும்
உண்டென வுரைப்பரா லுணர்ந்திசினோரே” (புறம்., 365)
என மார்க்கண்டேயனார் என்ற புலவர் உவமிக்கிறார். புலவர் ‘உவமையை உயர்ந்ததாகத் தானே கூறவேண்டும்’ மாறாக இழிவானதாகக் கூறியிருக்கின்றாரே என்ற ஐயம் எழலாம். அவர் இங்கு நிலத்தைச் செலவத்தில் ஒன்றாகக் கருதியே மொழிந்துள்ளார் என்று கொள்வது மிகப் பொருத்தமானதாக அமையும்.யாருக்கும் எதுவும் நிலையானதல்ல என்ற நிலையாமைக் கருத்தினைப் புலப்படுத்த இத்தகு உவமையைப் புலவர் கையாண்டுள்ளார் எனலாம்.

நிலமகள் – பொறுமை

பொறைஉடைமைக்கு நிலமகளை உவமை கூறுவர். நிலமானது தன்னை அகழ்பவரைப் பொறத்தல் போன்று, ஒருவன் தன்னைத் தூற்றுவா¡¢டத்தும் பொறுமை காட்ட வேண்டும் என்பதை,
“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீருனெமறாங்
கைம்பெரும் பூதத்தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தல்” (புறம்., 2)
என முரஞ்சியூர் முடிநாகராயர் பொறுமைக்கு நிலத்தை உவமை கூறுகிறார்.

குளமும் – கூத்தர் ஆடுகளமும் – மனித வாழ்வும்

கரும்புத் தோட்டத்தின் உள்ளிருப்போ¡¢டத்து வெளியில் இருப்பவர்கள் கரும்பினைக் கேட்க அவர்கள் கரும்பினைப் பிடுங்கி எறிந்தனர். அவ்வாறு பிடுங்கி எறிந்த கரும்பானது குளத்தில் உள்ள தாமரைப் பூவில் சென்று வீழ்ந்து அதில் உள்ள மகரந்தத் துகள்களை உதிர்க்கின்றன. அதனால் குளத்தில் சிற்றலைகள் எழுந்து அடங்குகின்றன. அந்நிலையில் உறையூர் முதுகண்ணன் சாத்தனாருக்குக் குளமானது ஆடுகளம் போன்று தோன்றுகின்றது. இதனை,
” விழவிற்
புய்த்தேறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழந்தெனக் கூத்தர்
ஆடுகளங் கடுக்கு மகநாட்டையே” (புறம்., 28)
என்ற பாடல் வா¢கள் எடுத்தியம்புகின்றன. மேலும் அவர் விழவில் ஆடும் கூத்தரது வேறுவேறுபட்ட கோலம் போல் முறைமுறையாக ஆடிக் கழிவது தான்இவ்வுலக வாழ்வு என்பதை,
“விழவிற்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியுமிவ் வுலகத்து” (புறம்., 29)
என மனித வாழ்வை கூத்தரது வேறுபட்ட வேடத்திற்கு உவமை கூறியிருப்பது பொருத்தமுற அமைந்துள்ளது.

நாட்டைப் பாதுகாத்தல் – புலி தன் குட்டிகளைப் பாதுகாத்தல்

மன்னன் தனது நாட்டைப் பாதுகாத்தல் வேண்டும். அது அவனது தலையாய கடமைகளுள் ஒன்றாகும். நாட்டைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து மன்னன் தவறுதல் கூடாது, இதனை,
“புலிபுறங் காக்குங் குருளைபோல
மெலிவில் செங்கோ னீபுறங் காப்ப” (புறம்., 42)
புலி தன் குட்டிகளைப் பிறா¢டமிருந்து எவ்வாறு பாதுகாக்கின்றதோ அதுபோன்று தனது நாட்டையும் மன்னன் பாதுகாக்க வேண்டும் என்ற உவமைகூறி மன்னனுக்கு அறிவுறுத்துகிறார் கோவூர்க்கிழார்.

மன்னனுடைய ஆட்சிச்சுமை – எருதுகளின் வண்டிச்சுமை

உப்பு மூட்டைகள் அடுக்கப்பட்ட பாரம் மிகுந்த வண்டிகளை அதில்பூட்டப்பெற்ற எருதுகள் எவ்வாறு மலைநாட்டை நோக்கி இழுத்துச் செல்கின்றனவோ அதனைப் போன்று அரசனும் ஆட்சிச்சுமையைத் தாங்கி நடத்திச் செல்லவேண்டும் (புறம்., 60) என்பதை மருத்துவன் தாமோதரனார் என்ற புலவர் குறிப்பிடுவது நோக்கத் தக்கது. அரசனின் ஆட்சிச் சுமை எருதுகளின் சுமைக்கு உவமை கூறப்பட்டது நோக்கத்தக்கது. ஆண்மகனை வீரமுடைய காளைக்கு ஒப்பிடுவர். அதனைப் போன்றே புலவரும் வீரம் மிகுந்த எருதிற்கு அரசனை ஒப்பிடுகின்றார். இவ்வுவமை வினை உவமையாக அமைந்திருக்கிறது.

பகைவர் நாடும் – தாயில்லாக் குழந்தையும்

தாயில்லாத குழந்தை பசியால் ஓயாது ஓலமிட்டு அழும். அதனைப்போன்று வெற்றி பெற்ற மன்னர்களைப் பகைத்த பகைவர் நாடு துயரமுற்று புலம்பும் நிலையை எய்தும் என்பதைப் பரணர்,
“தாயி றூவாக் குழவிபோல
ஓவாது கூஉநின் னுடற்றியோர் நாடே” (புறம்.,4)
எனச் சுட்டுகிறார்.

நாட்டைப் பாதுகாத்தல் – குழந்தையைப் பேணுதல்

நாட்டை ஒரு மன்னன் எவ்வாறு பாதுகாத்தல் வேண்டும்? இதனை மன்னனுக்குஒரு உவமையின் வாயிலாக புலவர் நா¢வெரூஉத்தலையார்,
“காவல்
குழவி கொள்பவா¢ னோம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே” (புறம்., 5)
எனப் புலப்படுத்துகிறார். தாய் தனது குழந்தையைப் பேணுவதைப் போன்று அரசனும் நாட்டைப் பாதுகாத்தல் வேண்டும். அது போற்றுதற்கு¡¢ அ¡¢ய செயலாகும். இவ்வுவமை அரசனின் கடமையை வலியுறுத்தும் வினை உவமையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல அரசனின் முகமும் – முழுநிலாவும்

நாட்டை நல்ல முறையில் பாதுகாத்து நிற்கும் நல்ல அரசனின் முகம் முழு நிலவைப் போன்று விளங்கும் என்பதைப் பிசிராந்தையார்,
“நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக்
கோடுகூடு மதியமுகிழ்நிலா விளங்கும்” (புறம்.,67)
என்ற பாடலில் விளக்குகிறார். நல்லவற்றைச் செய்யும் போது ஒருவரது முகம் ஒளிபொருந்தியதாக மாறும் என்பதை இவ்வுரு உவமை நமக்குத் தெளிவுறுத்துவது நோக்குதற்கு¡¢யது.

வீரனும் – படகும்

பகைவரது படை எதிர்த்து வருகிறது. அதனைக் கண்ட படைவீரன் மகிழச்சியுடன் அப்படையைப் பிளந்து கொண்டு செல்கிறான். அப்படை நடுவே இருக்கும் ஆண்யானைகளைக் கொன்று குவிக்கின்றான். அவன் பகைவர் படையைப் பிளந்துகொண்டு செல்வது கரையை வந்து அலைக்கும் கடலைப் பிளந்து செல்லும் படகினைப் போன்று இருப்பதாகப் புலவர் எருமை வெளியனார்,
“கரைபொரு முந்நீர்த்திமிலிற் போழ்ந்தவர்
தயந்தலை மடப்பி¦ புலம்ப
இலங்குமருப் பியானை யேறிந்த வெற்கே” (புறம்., 303)
என்று தெளிவுறுத்துகிறார்.

மரக்கலம் – களிறு

ஆழ்கடலின் நடுவில் காற்றினால் அலைக்கழிக்கப்பட்ட மரக்கலம் நீரைக் கிழித்துச் செல்லுவதைப்போன்று பகைவர் படை நடுவே ஆண் யானைகள் ஊடறுத்துச் சென்று பகைவர் படையை அழிக்கும் தன்மையை மாங்குடிக்கிழார் எனும் புலவரும்,
“நளிகட லிருங் குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்” (புறம்., 26)
என்று காட்சிப்படுத்துகிறார்.

அரசனின் வலிமையும் – யானையின் வலிமையும்

யானை தன் கதுப்பில் அடக்கி மறைத்து வைத்துப் பகைவரைக் கண்டவிடத்து எறியும் கல்லைப் போன்று தன் வலிமையைப் பிறர்க்கு வெளிக்காட்டாது உள்ளேயே அடக்கி வாழும் வலிமைஉடையவன் என அரசனின் வலிமையை,
“களிறுகவு ளடுத்த வெறிகற் போல
ஒளித்த துப்பினை” (புறம்., 30)
என யானையின் வலிமைக்கு முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் உவமிக்கின்றார்.

பறவையின் வேகம் – அம்புகளின் வேகம்

மலையில் காற்றைக் கிழித்துச் செல்லும் பறவையினம்போன்று பகைவர் விடுத்த அம்புகள் வேகமாகச் சென்று களிறகளின் தும்பிக்கைகளைது துளைக்கின்றன. இதனை,
“குன்றத்திறுத்த கு¡£இ யினம்போல்
அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத்
தூம்புடைத் தடக்கை” (புறம்., 19)
எனக் குடபுலவியனார் எடுத்துரைக்கின்றார்.

வண்டியின் ஆரக்கால்கள் – மறவர் மார்பில் உள்ள வேல்கள்

வண்டிக் குடத்தின் ஆரக்கால்கள் சூழப் புதைந்து தோன்று சக்கரம் போன்று மறவன் மார்பிலும் வேல்கள் பாய்ந்திருக்கின்றன. மறவன் மார்பிடத்துள்ள வேல்களுக்கு வண்¦க் குடத்திடத்துள்ள ஆரக்கால்களை,
“கார்சூழ் குறட்டின் வேனிறத் திங்க
உயிர்புறப் படாஅ வளவை” (புறம்., 283)
என அடைநெடுங்கல்வியார் என்ற புலவர் உவமை கூறுகிறார்.

மின்னல் ஒளியும் – வேலும்

யானைகள் மலைபோல் தோற்றமளிக்கின்றன. படைகள்கடல் போன்று ஆராவா¡¢க்கின்றன. வேலின் நுனி மின்னலைப் போன்று விட்டுவிட்டு ஒளிவீசுகின்றது என்பதை,
“யானையு மலையிற் றோன்றும் பெருமநின்
தானையுங் கடவெனமுழங்குங் கூர்நனை
வேலு மின்னின் விளங்கும்” (புறம்., 42)
என்ற பாடலில் கோவூர்கிழார் மொழிகிறார்.
மின்னலின் தன்மைன விட்டு விட்டுப் பளீரென ஒளிவீசும். வேலும் திரும்பத்திரும்ப ஒளிவீசும். இதனை இணைத்து,
“மின்னு நிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்” (புறம்., 57)
என்று ஒப்பிடுகிறார் காவி¡¢ப்பூம்பட்டினத்துக் கா¡¢க்கண்ணனார்.

படைவீரன் – உறைமோரும் – எருமைக் கடாவும்

ஒரு வீரன் பகைவர் படைக்குத் தான் ஒருவனே எமனாக விளங்குகின்றான். அவனின் ஆண்மையை ஒரு சிறுதுளி உறைமோ¡¢ன் வாயிலாய் மதுரைப் பூதனிளநாகனார் குறிப்பிடுகின்றார். நிறைகுடப் பாலிலே இடைச்சி தன் நகத்தால் தெறிக்கும் ஒரு சிறுதுளி உறைமோர் அக்குடத்தின் பால் முழுவதையும் கலக்கிக் கெடுப்பதைப் போன்று பகைவர் தம் பெரும் படைக்கு அவ்வீரன் ஒருவனாக நின்று அப்படைக்கு நோயாகத் தோன்றுகின்றான் என்பதை,
“மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பாற் சில்லுறை போலப்
படைக்குநோ யெல்லாந் தானா யினனே” (புறம்., 276)

என உவமையாக்கி புறப்பொருளுக்கு¡¢ய தன்மையில் கூறியிருப்பது சிறப்பிற்கு¡¢யதாக அமைந்துள்ளது.

புல்லும் நீரும் உணவாக அளிக்கப் பெறாமல் உமணர்களால் கைவிடப்பட்ட முடமாகிப் போய்க் கீழே விழுந்து கிடக்கும் எருமைக்கடாவானது பசியால் வாடுகிறது. உண்பதற்கு எதுவும் கிடைக்காக நிலையில் தான் படுத்துக் கிடக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிடக்கும் அனைத்தையும் தின்று தன் பசியைத் தீர்த்துக் கொள்கிறது. அந்த எருமைக்கடாவைப் போன்று வீரன் ஒருவன் தான் போ¡¢டுகின்ற இடத்திலேயே நின்று கொண்டு விலகாமல் தன்னை எதிர்த்து வரும் பகைவர்களையேல்லாம் அழித்து ஒழிக்கின்றான். இவ்வாறு முடமாகிப் போன எருமைக்கடாவை வீரனுக்கு உவமையாக,
“நீரும் புல்லு மீயா துமணர்
யாருமி லொருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பக டேய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளு மாதோ” (புறம்., 307)
என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.

வீரனும் – தீக்கடைக்கோலும்

வீட்டின் இறைப்பில் செருகிற தீக்கடைக்கோல் சும்மாஇருப்பதைப் போன்று வீரனும் தனது வீரத்தை வெளியில் காட்டாமல் அமைதியாக அருளுடன் இருந்தான். அவ்வாறிருந்தவன் போர்மூண்டவுன் போர்க்களம் சென்றான். அங்கு தீக்கடைக் கோலிலிருந்து புறப்பட்டு வரும் தீயைப் போன்று அவனது வீரம் வெளிப்பட்டு பகைவரை மாய்க்கின்றான். இத்தகைய அ¡¢ய உவமையை ஒளவையார்,
“இல்லிறைச் சொ£இய ஞெலிகோல் போலத்
தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்
கான்றுபடு கனையொ¢ போலத்
தோன்றவும் வல்லன்றான் றோன்றுங்காலே” (புறம்., 21)
என்ற பாடலில் எடுத்துரைக்கின்றார். பண்டைக் காலத் தமிழர் தம் வீடுகளில் தீக்கடைக்கோல் தேவையற்றபோது வீட்டின் இறைப்பிலே செருகியிருக்கும். தேவையான போது அதனை மக்கள் எடுத்துப் பயன்படுத்துவர். தீக்கடைக்கோலைப் போன்று அமைதியாகத் திகழ்ந்த அவ்வீரனே பகைவர் அஞ்சும் வண்ணம் போர்பு¡¢கின்றான் என இவ்வுவமை வாயிலாக வீரனின் போர்த்திறத்தை ஒளவையார் புலப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரும்பு உண்ட நீரும் – வழுதி வென்ற அரணும்
வன்மையான கைகளை உடைய கொல்லனின் உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பானது தான் உண்ட நீரை மீண்டும் வெளியில் விடாது. அதுபோன்று வழுதி கைப்பற்றிய கானப்பேர் என்னும் அரணை மீட்பது இயலாது என ஐயூர்மூலங்கிழார் என்ற புலவர் நயமுடன்,
” அருங்குறும் புடுத்த கானப்பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்பு ணீ¡¢னு மீட்டற் கா¢து” (புறம்., 315)
என்ற பாடலில் எடுத்தியம்புகின்றார்.

புலியும் – ஆட்டு மந்தைகளும்

புலி படுத்திருக்கும் இடத்தை நோக்கி, இடையன் வலிந்து தனது ஆட்டு மந்தைகளை ஓட்டிச் சென்று அதன் அழிவுக்குக் காரணமாவதைப் போன்று தலைவன் ஊ¡¢னுள் புக முயன்ற பகைவர் நிலையும், அவர்தம் படையும் அழிவுறும் என படைகளை ஆட்டுமந்தையுடனும், மன்னர்களுக்கு இடையரையும், கோதை நாட்டிற்குப் புலி படுத்திருக்கும்இடமும் உவமையாகக் கூறப்பட்டிருப்பது சிறப்பிற்கு¡¢யதாகும். இத்தகைய உவமையினை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன்மதுரைக் குமரனார்,
“மசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே” (புறம்., 54)
என்ற பாடடலில் கையாண்டுள்ளமை நோக்கத்தக்கதாகும். (தொடரும்….)

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.