‘‘பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள்’’

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.



E.Mail. sethumalar68 yahoo.com
பழமொழிகள் பெரியோர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவத்தில் கண்ட மெய்மைகள் ஆகும். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறுவிதமான வாழ்க்கைப் பாடங்களில் இருந்து தாங்கள் பெற்ற அனுபவ மொழிகளை பழமொழிகளாகக் கூறிப் போந்தனர். சித்தர்கள் எவ்வாறு மருத்துவக் குறிப்புகளையும், தத்துவங்களையும் குறிப்பால் உணர்த்தினரோ அதுபோன்று இப்பழமொழிகளில் நமது முன்னோர்கள் மூலிகை மருத்துவக் குறிப்புகளை நேரிடையாகவும், குறிப்பாகவும் எடுத்துரைத்துள்ளனர;.
நோய் இன்றி மகிழ்வாக வாழ்வதே உண்மையான செல்வமாகும். நோயுடன் நீண்ட நாள் செல்வராக வாழ்வதைக் காட்டிலும், நோயின்றி உடல் நவமுடன் வாழ்வதே ஒருவர; பெற்ற உண்மையான செல்வமாகும். இத்தகைய வாழ்க்கைக் குறிப்பை, ‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’’ என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
உணவை அளவோடு உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் நோயின்றி வாழலாம். அளவுக்கு மீறி உண்டால் உடலில் உணவு(கழழன pயளைழைn) நஞ்சாக மாறி உடலுக்குத் தீங்கினைத் தரும். இதனை வாழ்க்கைச் சித்தராகிய வள்ளுவர்,
‘‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’’ என்று குறள்வழி குறிப்பிடுகிறார். எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என மக்களுக்கு இதன் வழி வலியுறுத்தியிருப்பது நோக்கத்தக்கது. இக்கருத்தை, ‘‘அளவுக்கு மிஞ்சினால் அமிர;தமும் நஞ்சாகும்’’ என்ற பழமொழி தெளிவாக எடுத்துரைக்கிறது.
‘‘வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு’’ என்ற பழமொழி வழங்கப்படுவதை நாம் பலரும் அறிந்துள்ளோம். நல்ல தரமான உணவுப் பொருள்களை வாங்கி உண்பதற்குப் பயன்படுத்த வேண்டும். கலப்பட உணவால் தான் பெரும்பாலான நோய்கள் உருவாகின்றன. விலை மலிவாகக் கொடுத்தோ அல்லது தரமற்ற உணவுப் பொருளை வாங்கிப் பயன்படுத்தினால் நோய் உடலில் ஏற்படும். அதனை மக்கள் தவிர;த்தல் வேண்டும். இக்கருத்தை மேற்கூறிய பழமொழி நன்கு புலப்படுத்துகிறது. உணவு சரிவர உண்ணாதிருந்தாலும் உடலுக்குத் தீங்கு நேரிடும். கருமித்தனத்துடன் சிலர் பட்டினியாக இருப்பர். அவ்வாறு உணவினைச் சரியான நேரத்திற்கு உண்ணாதிருந்தால் வயிற்றில் புண்(அல்சர்) ஏற்பட்டு மருத்துவரை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனைத் தவிர;க்கவே மருத்துவத்திற்குச் செலவு செய்வதைவிட அதிக விலையாக இருப்பினும் தரமான உணவுப் பொருள்களை வணிகரிடம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் இப்பழமொழி விளக்கிநிற்கிறது.
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இந்நோயால் பலர் இறக்கின்றனர். இந்நோயை ஆவாரையின் பூ கட்டுப்படுத்தும். இத்தகைய மருத்துவக் குறிப்பினை,‘‘ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதில்லை’’ என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. சர்க்கரை நோயினைக் குணப்படுத்தும் மருத்துவக் குறிப்பு இப்பழமொழியில்; இடம்பெற்றுள்ளது. இப் பழமொழிகள் மருத்துவப் பெட்டகங்களாகும்.
‘‘ஒரு நாளுக்கு இரண்டு, மாதத்திற்கு இரண்டு , வருடத்திற்கு இரண்டு ’’ என்ற பழமொழி நோய் ஏற்படாது வாழ்வதற்குரிய மருத்துவக் குறிப்பை அறிவுறுத்துகிறது. நாள்தோறும் இருவேளை மலம் கழித்தல் வேண்டும் என்பதையும், மாதத்திற்கு இரு முறையே மனைவியுடன் உடலுறவு கொள்ளல் வேண்டும் என்பதையும், ஆண்டிற்கு இரு முறை பேதி மருந்து தின்ன வேண்டும் என்றும் இப்பழமொழி தெளிவுறுத்துகிறது. இவ்வாறு செய்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம். உடலில் தேவையற்ற கழிவுகள் சேராது, உடல் வளம் பெறும் எனலாம்.
‘‘தின்ன மண்ணுக்குச் சோகை’’ மண்ணைத் தின்னல் கூடாது. ஏனெனில் சிறு குழந்தைகள் விளையாடும்போது தங்களது வாயில் மண்ணை அள்ளிப்போட்டுத் தின்று கொண்டே இருக்கும். அவ்வாறு தின்றால் இரத்தம் தனது தன்மையை இழந்து குழந்தைகள் நிறம் மாறி வெளிறிக் காணப்படுவர;. இதனை இரத்த சோகை என்றும் குறிப்பிடுவர். அதனையே இப்பழமொழி இவ்வாறு எடுத்துரைக்கிறது.
‘‘வெட்டை முத்தினாக் கட்டை’’ என்ற பழமொழி மக்களிடத்தில் வழக்கில் உள்ளது. ஆண், பெண் பிறப்புறுப்பில் வௌ்ளை போன்ற திரவம் வெளிவருவதனையே வௌ;ளைப்படுதல் என்றும் வெட்டை நோய் என்றும் கூறுவர;. இந்நோயானது முற்றிவிட்டால் உயிருக்கு ஊறுநேரிடும். இந்நோய் அறிகுறியானது தெரிந்தவுடன் முறையான மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். கவனிக்காது விட்டுவிட்டால் கட்டை(உடல்)யாக உயிரிழக்க வேண்டிய சூழல் ஏற்படும். இம்மருத்துவக் குறிப்பையே இப்பழமொழி எடுத்துரைக்கிறது.
இஞ்சியைக் காயவைத்து அதனை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துவர். பித்தம், வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற நோய்களை முற்றிலும் விரட்டும் தன்மை கொண்டது சுக்கு. இதனை உணவில் சேர;த்துக் கொண்டு வந்தால் நோய்வருவதில்லை. இந்நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பிற நோய்கள் உடலில் ஏற்படாத வண்ணம் நோய்எதிர;ப்பு சக்தியையும் உடலுக்கு அளிக்கும் குணம் சுக்கிற்கு உண்டு. அதனை உணர;ந்து நமது பெரியோர;கள் ‘‘சுக்கிற்கு மிஞய்சின மருந்துமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை’’ எனப் பழமொழியில் இம்மருத்துவக் குறிப்பை எடுத்துரைத்துள்ளனர;.
மிளகு எந்த விடத்தையும் உடன் முறிக்கக் கூடிய ஓர் அரிய மருந்தாகும். தேள், பாம்பு, பூரான், பிற தெரியாத பூச்சிகடிகளுக்கு மிளகையும், ஒரு வெற்றிலையையும் வைத்துத் தின்று உள் முழுங்கினால் விடம் உடலில் உடனே பரவாது. நமக்குத் தெரியாமல் பிறர; உணவில் விடம் வைத்திருந்தாலும் அதனை உண்டால் மிளகு அதனை முறித்துவிடும். மிளகிற்கு விடத்தை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது. இம்மருத்துவக் குறிப்பு, ‘‘நான்கு மிளகும் ஒரு வெத்திலையும் இருந்தா பகைவன் வீட்டில் கூட உணவருந்தலாம்’’ என்ற பழமொழியில் இடம்பெற்றுள்ளது. அதனாலதான் நமது முன்னோர்கள் மிளகை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டனர். மேலும் காரத்திற்கு மிளகையே அதிகம் பயன்படுத்தினர். இன்று மிளகிற்குப் பதில் மிளகாயைப் பயன்படுத்துகின்றனர். அதனால் பல்வேறு வயிற்று நோய்களுக்கு இன்று மக்கள் ஆளாகின்றனர் எனலாம்.
தூய தண்ணீர் ஓர் அரிய மருந்தாகும். இதனைத் தண்ணீர் மருத்துவம் என்று கூறுவர். இந்நீரின் மருத்துவ குணத்தையும், அது போக்கும் நோயையும், ‘‘ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்’’ என்ற பழமொழி நவில்கிறது. ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள்(minarals)மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் (mineral water) என்றும் கூறலாம் .பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ்வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும் எனப் பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புகளை இப்பழமொழி எடுத்துரைக்கிறது.(அறிவியல் கலைக்களஞ்சியம் ப.,110)
உடல் நலத்திற்கு வெங்காயம் தேவை. வெங்காயம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மிக்க மருந்தாகவும் விளங்குகின்றது. இதனால் வெங்காயத்தை, ‘‘காய்களின் இளவரசன்’’ என்பர். அனைத்து உணவு வகைகளைச் செய்கின்றபோதும் இவ்வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. வெங்காயத்திற்கு நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் ஆற்றல் அதிகம் உண்டு. சிறிய வெங்காயத்தைப் பச்சையாக உண்டு வர பல்வேறு நோய்கள் குணமாகும். இதனை, ‘‘வெங்காயம் உண்போர்க்குத் தன்காயம்; பழுதில்லை; தன் காயம் காக்க வெங்காயம் வேண்டும்’’ என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.
பெண்களுக்குக் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாக அரச மரக்காற்று பயன்படுகிறது. ஏனெனில் இந்த மரத்தின் அடியில் ஆக்ஸிஜன் அதிகம் நிலவுகிறது. அதிகாலையில் அரசமரத்தின் கீழ் சுற்றி நடந்தால் அம்மரத்தின் அடியில் உள்ள ஓசோன் படலம் உடலில் பட்டு பல்வேறு விதமான நோய்களைப் போக்குகிறது. ஆரசமரத்தின் காற்று,இலை, கொழுந்து போன்றவை கருப்பையில் உண்டாகும் கோளாறுகளைப் போக்கிக் கருவுறச் செய்யும் ;ஆற்றலுடையது. இத்தகைய சித்த மருத்துவக் குறிப்புகளை,‘‘அரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்’’, ‘‘அரசை(னை) நம்பி புருஷனைக் கைவிட்டதுபோல்’’ போன்ற பழமொழிகள் எடுத்து விளக்குகின்றன.
முருங்கைக் கீரை பயன் மிகுந்த சித்த மருந்தாக விளங்குகிறது. இதில் வைட்டமின் சத்துக்கள், உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி உள்ளன. இதனை சரியாக வேகவைத்து உண்டால் நரம்புத் தளர;ச்சி, நீங்கி விந்து விருத்தி ஏற்படும். அதே போன்று அகத்திக் கீரை பலசத்துக்களை உள்ளடக்கியது. பெண்களின் கருப்பைத் தொடர்பான நோய்களுக்கு இக்கீரையை வேக வைத்து உண்ண வேண்டும். இவ்விரண்டு கீரைகளையும் பக்குவமாக வேகவைத்து உண்ண வேண்டும் என்பதனை, ‘‘வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி’’ என்ற பழமொழி உணர்த்துகிறது. முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது. இக்கீரைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பழமொழிகள் மொழிவது குறிப்பிடத்தக்கது.
இங்ஙனம் பல்வேறு பழமொழிகள் சித்த மருத்துவக் குறிப்புகள் அடங்கிய களஞ்சியங்களாகத் திகழ்கின்றன. இப்பழமொழிகள் நமது முன்னோர;களின் அனுவப மருத்துவத்தை எடுத்துரைக்கின்றன எனலாம். இதனை கைவைத்தியம் என்றும், பாட்டி வைத்தியம் என்றும் கூறுவர். இப்பழமொழிகளில் பொதிந்துள்ள அனுபவ மருத்துவக் குறிப்புகளை நன்கு மேலும் ஆராய்ந்தால் பல்வேறு சித்த மருத்துவ நுட்பங்களை புலப்படுத்தலாம்.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.