முறிந்த பனை: சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

டி ஜி கே


நுழைவு வாயிலில். அப்படி ஒரு இடுக்கலான நிலை உள் செல்ல.

முதல் நாள் கலைஞர் , முத்தாக பேசி விட்டு போன மேடையில், வைகோ உட்கார்ந்து இருக்க, ராஜேஷ் ( நடிகர் ) பேசிக் கொண்டிருந்தார். நாம் உள் சென்றோம்.

இரு நுழைவு வாயில், எதில் உள் போக…?, முறைப்பான தமிழ் பாரம்பரிய இளைஞர்கள் இறுக்கமான முகமுடன் கையை காண்பித்த திசையில் டிக்கெட் வாங்கி, உள் சென்றோம்.
கூட்டம் கூட்டம் அப்படியொரு கூட்டம்.
காற்றோட்டம் இல்லா கூடாரம். வெந்து வேகும் சூழல். புத்தகம் அறிவு சம்பந்தப்பட்டது. இது பற்றி யாரும் சிந்திக்கவில்லையா…? அது தாங்க வென்டிலேஷன் பற்றி…
நிறைய தமிழ் புத்தக நிலையங்கள், அதில் கூட்டம், நல்ல விற்பனை. சந்தோஷம் தான்.
கிழக்கு, இனி இண்டியன் தவிர “எப்போதும் தமிழன்” வகையறா கடைகளும் அடக்கம்.
சில எழுத்தாளார்கள் கட் அவுட்டுகளில் இளித்த படி.. நிறைய உபதேச புத்தகங்கள்.
கடப்பா முகஞ்சோதாரா நிலையில் தொலைந்து போன தமிழ்கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க துடிக்கும் சில எழுத்தாளர்களின் புத்தக விளம்பரங்கள்.
வழக்கம் போல், சே, ஏங்கல்ஸ் வகையறா புத்தக நடுவில் புதிதாய் ஒரு முகம் இரு ஸ்டாலில் புத்தகமாய், புரட்சிக்காரனுக்கான லுக்குடன்.
நான் தேடி வந்தது, a boy in striped pyjamas புத்தகத்தை வாங்க வேண்டும் என்று.
பல இலக்கிய புத்தக கடைகளில் இருந்த தாடி வளர்த்த (அ) சே டி ஷேர்ட் போட்டவர்களுக்கு தெரியும் என்று கேட்டுப்பார்த்தேன்… தெரியலை, முழித்தார்கள். ஓரிருவருக்கு அது சினிமாக வந்தது தெரிந்திருந்தது.
கூடிய சீக்கிரம், “ஞானபாலகன்” என்ற பெயரில் அது தமிழ்படமாக வரலாம்.
அப்புறம் ஹிக்கின்பாத்ம்ஸ் சென்று கேட்டேன். உதட்டை பிதுக்கினார்கள்.
இடையில், சிலர் சிறுவர்களின் அறிவித்திறன் வள்ர்ப்பதற்கான யுக்தியை நன்றாக மார்கெட் செய்து கொண்டிருந்தார்கள்.
என் கூட வந்த ஒரு கிராமத்து சீரியலின் ஆக்கப்பூர்வ தலை ( கிரியேடிவ் ஹெட் ) புத்தகங்கள் வாங்க நிதி தட்டுப்பாட்டுடன் வந்தார்.
ஏதோவொரு கவிதைப் புத்தகத்தை வாங்கினார். ரூ.55 க்கு. பார்த்த நான் “யோவ், ஏன் துட்ட வேஸ்ட் பண்ணுற.. வேணும்னா எடைக்கு எடை இது மாதிரி கவிதை எழுதித் தருகிறேன்” என்று அதை பிடுங்கிப் போட்டு விட்டு அதே கடையில் இருந்த ஒரு புத்தகத்தை வாங்கச் சொன்னேன்.
எந்தப் பக்க சாய்தலும் இன்றி, பிரச்சார நெடியன்றி… எழுதப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையை சில பக்கங்கள் புரட்டியதில் தெரிந்தது… விலையோ ரூ.450/- புத்தகக் கண்காட்சிக்குரிய தள்ளுபடியும் கிடைத்தது.
அங்கொருத்தர், யோ சி மின் டி சர்ட் போட்டு நிற்பவர் தான் பதிப்பகத்தார் என்று சொன்னார். சற்று பேசினேன், பெயர் விஜய் ஆனந்த் – உலக சினிமா பற்றி மக்கள் டிவியில் தொடர் செய்கிறாராம்.

புத்தகம்: முறிந்த பனை ( இலங்கையில் தமிழர் பிரச்சனை – உள்ளிருந்து ஓரு ஆய்வு )
இது ஆங்கிலத்தில் எழுதி பின் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாம்.
அதில் முன் அட்டையில், இவர்கள் யார் என்று இருந்தது,
ராஜனி திராணகம – > உடற் கூற்றியல் துறை
,ராஜன் ஹீல், -> கணிதவியல் துறை
தயா சோமசுந்தரம், -> உளநோய்க்கூற்றுத் துறை
கே.ஸ்ரீதரன் – கணிதவியல் துறை..

இது, வியாபாரத் தந்திரத்தைக் க்ற்று தேர்ந்து வாந்தியெடுக்கும் வகையறா போலன்றி,
வாழ்வின் வலியை அனுபவித்து, தூரத்து நம்பிக்கையை மட்டும் பிடித்து வாழ்ந்தழிந்தவர்கள் எழுதிய உண்மை வரலாறு என்று படித்த போது புரிந்தது.

புத்தகம் சமர்ப்பணம் வரிகள்:,
மறைந்த ராஜனி திராணகமவின் இலட்சியத்தை மனதிற்கொண்டு, எமது இந்த முடிவுறாத போராட்டத்தில் எவ்வித அர்த்தமின்றி வாழ்வைப் பறிகொடுத்த இளைஞர்கள், யுவதிகள், மௌனியாக்கப்பட்ட சாதாரண மக்கள் அனைவருக்கும் இந்நூல் சமர்ப்பணம்

இதற்கு முன்னுரை அ.மார்க்ஸ் “முறிந்த பனைகள் முறிந்த படியே.. “ என்று எழுதியுள்ளார்..
அதில் ஒரு பத்தி,
“….. இந் நூலை வாசிப்பவர்கள் மூன்று அம்சங்களை மனங்கொள்ளல் அவசியம்.
1.இது ஒரு மொழி பெயர்ப்பு நூல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின் மொழியாக்கப்பட்டது.
2. இந்நூல் காட்டும் வரலாறு 1989 உடன் முடிந்து விடுகிறது. 1983- 1989 என்கிற ஒரு 6 ஆணுகால வரலாற்றை மட்டுமே இது விவரிக்கிறது.
3.இந்நூல் எழுதப்பட்டு சுமார் 22 ஆண்டுகள் கடந்து விட்டன…… இன்று கிடைக்கக்கூடிய தெளிகளுக்கும் பார்வைக் கோணங்களுக்கும் வாய்ப்பில்லாத காலகட்டத்தில் எழுதப்பட்ட நூலிது…

புத்தகம் காசு கொடுத்து வாங்கிய என் இயக்குன நண்பருக்கு தொலை பேசியில் அடுத்த நாளே அழைத்து நான் படித்தேன். அற்புதம்.

அவசியம் படிக்கப்பட வேண்டிய நூல்.

விவரங்களுக்கு:
முறிந்தபனை
பயணி வெளியீடு
செல்பேசி: +91 94451 245 76 (&) 95001 54052
இ மெயில்: vijai1975@gmail.com

பிகு: நான் தேடிய பாய் இன் த …. புத்தகம் அடுத்த நாள் லேண்ட் மார்க்கில் வாங்கினேன். அந்த புத்தகத்தையும், படத்தையும் அவசியம் பாருங்கள்.

Agnikunju.blogspot.com

Series Navigation

டி ஜி கே

டி ஜி கே