“தமிழ் நாடகத்தந்தை பம்மல் சம்பந்தமுதலியார்”

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

முனைவர் சி.சேதுராமன்


தமிழ் நாடகத்தின் மேன்மைக்கு வழி வகுத்த பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார், நலிந்தும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் நாடகச் செல்வத்தை அனைவரும் கண்டு மகிழும்வண்ணம் வேளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் பம்மல் சம்பந்த முதலயாராவார், நாடகத்துடன் தொடர்புடையவர்கள் எனில் நல்லொழுக்கத்திற்கு மாறுபட்டவர்கள் என்ற எண்ணம் அக்காலத்தில் மக்களிடையே நிலவி வந்தது. அவ்வெண்ணத்தை அறவே மாற்றிய பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவராகவும் பம்மலார் விளங்கினார். இத்தகைய சிறப்புகளை உடைய பம்மல் சம்பந்தமுதலியார் சென்னையில் 1.2.1873-ஆம் ஆண்டு விஜயரங்க முதலியாருக்கு மகனாகப் பிறந்தார்.

1873 முதல் 1891 வரையில் அவர் உள்ளத்தில் நாடகத்தின் மீது எந்த ஈடுபாடும் ஏற்படவில்லை. மாறாக வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இதனை, “என்னுடைய பதினெட்டாவது வயதுக்கு முன் யாராவது ஒரு ஜோஸ்யன், நீ தமிடி நாடக ஆசி¡¢யனாகப் போகிறாய் என்று கூறியிருப்பானாயின், அதை நானும் நம்பியிருக்க மாட்டேன். என்னை ந்னறாயறிந்த எனது வா¡¢ நண்பர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. நான் பிறந்து வளர்ந்து வீட்டிற்கு மிகவும் அருகாமையில் பல வருடங்களுக்கு முன் ஒரு கூத்துக் கொட்டகை இருந்த போதிலும் சென்னைப் பட்டணத்தில் அடிக்கடி பல இடங்களிலும் தமிழ் நாடகங்கள் போடப்பட்ட போதிலும், அது வரையில் ஒரு தமிழ் நாடகத்தையாவது நான் ஐந்து நிமிஷம் பார்த்வனன்று” என்று தம்முடைய இளமைக் காலத்தில் நாடகத்தின் மீது தமக்கிருந்த ஆர்வமின்மையைப் பற்றித் தம் ‘நாடக மேடை நினைவுகளில்’ பம்மல் சம்பந்த முதலியார் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தமக்கு வெறுப்புணர்வு தமிழ் நாடககங்களின் மீது அவருக்கு இருந்ததற்குக் காரணம், அந்தக்கால நாடகக் கலைஞர்கள் நெறியில்லா வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதையும்தமது நூலில் பம்மலார் தெளிவுறுத்தியுள்ளார்.ஆனால் அந்தப் பதினெட்டு ஆண்டுகளில் அவருடைய உள்ளத்தில் பதிந்துவிட்ட பலதிறப்பட்ட கதைகள் தாம் அவர்தம் வாழ்வில் பல நாடங்களைப் படைத்து சாதனை பு¡¢யவைத்தன எனலாம். இளமைப் பருவத்தில் அவருடைய அன்னையார் கூறிய இராமாயண, மகாபாரதக் கதைகளெல்லாம் அவர் உள்ளத்தில் நன்கு பதிந்துவிட்டிருந்தன.

அன்னையார் அவருக்குப் பல கதைகளைச் சொல்லி சம்பந்தமுதலியாரின் உள்ளத்தைக் கதைகளின் கருவூலகமாக மாற்றினார் எனலாம். அவரது தந்தையாரோ அவருக்குப் பல அருமை¨யான ‘ஆங்கில’ நூல்களையும் தமிழ் நூல்களையும் வாங்கிச் சேகா¢த்து வைத்து, அவா¢ன்அறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார். பம்மலாருக்கு 1891-ஆம் ஆண்டில் அவரது பதினெட்டாம் வயதில் தான் நாடகம் படைக்கும் எண்ணம் உருவானது. இதனை,”தமிழ் நாடகங்களின் மீது இருந்த இந்த வெறுப்பு மாறி, தமிழ் நாடகங்களை நான் எழுதவேண்டுமேன்றும், அவைகளில் நடிக்க வேண்டுமென்றும் எனக்குப் பெரும் பி¡£தி உண்டானதற்கு முக்கிய காரணம், என்னுடைய பதினெட்டாம் வயதில் சென்னையில், பல்லா¡¢யிலிருந்து காலஞ்சென்ற மகாராஜராஜஸ்ரீ கிருஷ்ணமாச்சார்லு என்பவர் ‘சரச வினோதினி சபா’ என்னும் தனது நாடகக் கம்பெனியாருடன் வந்து, விக்டோ¡¢யா பப்ளிக் ஹாலில் அவ்வருஷம் நான்கைந்து நாடகங்கள் தெலுங்கு பாஷையில் நடத்தியதேயாம்”என்று குறிப்பிடுகிறார்.

மேலும், “ஹாலில் நுழைந்தது முதல்நாடகம் முடியும் வரையில் சற்றேறக்குறைய ஐந்து மணிநேரமான போதிலும், நாடக மேடையைவிட்டு என் கண்களை எடுத்தவனன்று. அரங்கத்தின் முன்னதாகக் கட்டப்பட்டிருந்த திரையானது மேலே சென்றது முதல், கடைசியில் நாடகம் முற்றிய பொழுது, அது மறுபடியும் விடப்பட்டது வரையில் நான் கண்ட காட்சிகள் பெரும்பாலும் என் ஞாபகத்தில் இன்றும் மறையாதபடி இருக்கின்றன. நாடகமானது தெலுங்கு பா¨க்ஷயில் நடத்தப்பட்ட போதிலும் அக்காலம் இப்போழுது அப்பாஷையிலிருக்கும் கொஞ்சம் பயிற்சியும் இல்லாதவராயினும், சற்றேறக் குறைய நடிக்கப்பட்டதையெல்லாம் கதையின் வரலாற்றைக் கொண்டு ஆவலுடன் கிரஹித்து வந்தேன்” என்று கிருஷ்ணமாச்சார்லு நாடகம் தம்மீது கொண்ட தாக்கத்தை வெளிப்படுத்துவதோடு, அந்நாடகக் கலைஞர்களின் வேடப் பொருத்தமும் பாடல் இனிமையும் தன் மனத்தை ஈர்த்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்த முதலியார் பட்ட வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே 1891-இல் தமது நண்பர்களுடன் சேர்ந்து ‘சுகுண விலாச சபை’ என்ற நாடக சபையை உருவாக்கினார். அப்போது அவருடைய வயது பதினெட்டாகும். இந்த நாடகக் குழுவே முதன் முதலாகப் பயின்முறை நாடகக் குழுக்களுக்கு வித்திட்டது எனலாம். குணம் குன்றியவர்கள் நாடகக் கலைஞர்கள் என்ற பொதுக்கருத்து விளங்கியதால் தம் குழுவிற்குப் பெயா¢டும்பொழுது ‘சுகுண’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார் எனலாம்.

தமது நாடகக் குழுவிற்காகச் சம்பந்த முதலியார் எழுதிய முதல் நாடகம் ‘புஷ்பவல்லி’ எனும் நாடகமாகும். இந் நாடகம் 1893-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் அரங்கேற்றப்பட்டது. அன்றிலிருந்து அவரது நாடகப்பணி வாழ்நாள் இறுதி வரைத் தொடர்ந்தது எனலாம்.

மனோகரா, சபாபதி, சதிசுலோசனா, காலவா¢ஷி, யயாதி, கலையோ காதலோ, குறமகள், தாசிப்பெண், இருநண்பர்கள், கள்வர் தலைவன், ஏமாந்த இரு திருடர்கள், வள்ளித்திருமணம், சிறுத்தொண்டன், சகாதேவன் சூழ்ச்சி, நல்லதங்காள், மார்க்கண்டேயன், இரு சகோதா¢கள், உத்தமபத்தினி, வேதாள உலகம், விஜயரங்கம் முதலிய நாடகங்கள் பம்மல் சம்பந்த முதலியா¡¢ன் சிறந்த நாடகங்களுள் குறிப்பிடத்தக்கவையாகும். இவரது நாடகங்களுள் பதின்மூன்று நாடகங்கள் புராண நாடகங்களாகும்.

சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர்.சி.பி. இராமசாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, நீதிபதி வி.வி.சீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம், டாக்கடர் வி.இராமமூர்த்தி முதலான அறிஞர் பெருமக்கள் பம்மல் சம்பந்த முதலியா¡¢ன் நாடகங்களில் நடித்துள்ளனர் என்பது நோக்குதற்கு¡¢யதாகும்.

சம்பந்த முதலியார் இன்பியல் நாடகங்கள், துன்பியல் நாடகங்கள், அங்கதச்சுவை நாடகங்கள் என்று பல்வேறு வகையான நாடகங்களை எழுதியுள்ளார். மேலும் பிறமொழி நாடகங்களை மொழிபெயர்த்துத் தமிழ் மேடைக்கு வழங்கியுள்ளார். வடமொழி, ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பிறமொழி நாடகங்கள் அவரால் தமிழ் வடிவம் பெற்றன.

பம்மலார் தமது நாடகங்கள் பலவற்றில் தாமே 500 முறைக்குமேல் பல்வேறு வேடமேற்று நடித்துள்ளார். நாடக ஆசி¡¢யர், நாடக இயக்குநர், நாடக நடிகர் எனப் பன்முகத்திறன் பெற்றவராகப் பம்மலார் விளங்கினார். சம்பந்த முதலியா¡¢ன் நாடகங்கள் அவருடைய சுகுண விலாச சபையில் நடிக்கப்பெற்றதோடு மட்டுமல்லாது பல்வேறு நாடகக் குழுவினராலும் நடிக்கப்பெற்றன. இவருடைய மனோகரா எனும் நாடகம் அக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல குழுக்களாலும் விரும்பி நடிக்கப் பெற்றது என்பது சிறப்பிற்கு¡¢யதாகும்.

பம்மல் சம்பந்த முதலியா¡¢ன் நாடகப் பணியை ரசிகமணி டி.கே.சிதம்பரநாதமுதலியார், “ராவ்பகதூர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தமிழ்ப் பண்பு கொண்டதான நாடகங்களை எழுதினார்கள். அப்படிக் கவர்ந்த காரணத்தினாலேயே நாடக சபாக்கள் பல இடங்களிலும் உண்டாயின. நாடகங்களை நடித்தார்கள். தமிழர்களுக்கு என்றுமில்லாத விருந்தாய் இருந்தன. பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைத் தொ¢யாத தமிழன் இல்லை என்று ஆகிவிட்டது.தமிழ் நாட்டில் நாடக யுகத்தை ஸ்தாபித்தவர் ராவ்பகதூர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள்தான்” என்று பாராட்டியுள்ளார்.

பம்மலாரின் நாடக வெற்றியை கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், “மிகவுயர்ந்த கல்வி கற்றுப் பட்டம் பெற்று, மேன்மையுறு நீதிபதி பதவியேற்று சுகுணவிலாச சபையெனும் ஓர் அமைப்பைக் கண்டு, தூய்மைமிகு படித்தவர்கள் பலரைக் கொண்டு வகைவகையாய் நாடகங்கள் வடித்தெடுத்து, வாகைபல சூடியெங்கும் நடித்துக் காட்டிப் புகழ் மலையின் மீதுயர்ந்து நடிகர்க்குற்ற புன்மையெலாம் போக்கிய சம்பந்தர் வாழ்க” எனக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார்.

அவ்வை தி.க. சண்முகம், “நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாத அமெச்சூர் நாடக உலகில் புதுமை தோற்றுவித்த பெருமை நாடகப் பேராசிரியர் ராவ்பகதூர் சம்பந்த முதலியார் அவர்களுக்கே உரியது” என்று பாராட்டிக் கூறுகிறார்.

நாரண துரைக்கண்ணன், “சம்பந்த முதலியார் ஒரு பொ¢ய லட்சியத்தோடு தமிழ் நாடக உலகில் துணிந்து அடியெடுத்து வைத்து நாடக ஆசிரியராகவும் நடிகராகவும் பெரும்பங்கு ஏற்றுத் தமிழ்நாடகக் கலைக்கு எழிலும் ஏற்றமும் தந்த பின்னர் தான், இராமநுஜ அய்யங்கார், ஜகந்நாதாச்சாரி போன்ற அராசாங்க உயர் உத்தியோகஸ்தரகள்களெல்லாம் கவர்ன்மெண்ட் அபிஸியல் பார்ட்டி, செக்ரடோ¢யட் பார்ட்டி போன்ற பயில்முறை நாடகக் குழுக்களையேற்படுத்தித் தமிழ் நாடகங்களை ஆர்வத்துடன் நடத்தலாயினர்” என பம்மலா¡¢ன் நாடகப் பணியினால் விளைந்த நற்பயன்களை எடுத்துரைக்கின்றார்.

தமிழ் நாடகத்திற்கு உரைநடை வடிவம் மிகவும் பொருந்தும் என்பதைப் புலப்படுத்துவதற்காகத் தமது அனைத்து நாடகங்களையும் உரைநடையிலேயே எழுதினார்.இவரது நாடகங்களில் பாடல்கள் பல இடமபெற்றன. அப்பாடல்களை, சங்கரதாஸ் சுவாமிகள், மதுரை பாஸ்கரதாஸ போன்றவர்கள் எழுதினர். சில நாடகங்களில் சம்பந்த முதலியா¡¢ன் பாடல்களும் இடம்பெறும். சம்பந்த முதலியார் இசைப் பாடல்களை எழுதும் திறம் பெற்றிருந்தார் என்பது இதனால் தெளிவாகிறது. மேடைகளில் அவர் பாடுவதில்லை.

பம்மலார் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார. நாடகத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு உறுதுணையாக நாடகமேடை நினைவுகள், நான்கண்ட நாடகக் கலைஞர்கள், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?, நாடகத் தமிழ், நடிப்புக்கலை முதலய பல நூல்களையும் பம்மலார் அவர்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாடகக் கலைஞர்களிடம் ஒழுக்கமும் நெறியான வாழ்வும் இல்லை என்ற காரணத்திற்காகவே தமிழ்நாடகத்தை வெறுத்து வந்த சூழலில் இவர் தமது நாடகக் குழுவில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தார். அதனாலேயே நாடகக் கலைஞர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு சீரிய இடம் கிட்டும் என்பதைச் செயற்படுத்தியும் காட்டினார். பம்மல் சம்பந்த முதலியார்ன் இப்பண்பினைப் பாராட்டி எஸ்.டி,சுந்தரம்,

“நாடகத்தின் பெருமைதனைக் காத்த மேலோன்

நாடறிய வாழ்வாங்கு வாழ்ந்த சீலன்”

என்று பாடுகின்றார்.

நாடகத்துறையினாரால் பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத் தந்தை, நாடகப் பேராசிரியர் எனப் பாராட்டப்பெற்றார். இவரது நாடகப் பணியைப் பாராட்டி அரசு 1916-ஆம் ஆண்டு இராவ் பகதூர் என்ற பட்டத்தையும்,1958-ஆம் ஆண்டு பத்மபூஷண் என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தது. பிற்காலத்தில் பல்வேறு தொழில்முறை நாடக சபைகளை நடத்தியும், பிற நாடக சபைகளில் ஆசி¡¢யர்களாகப் பணியாற்றியும், நூற்றுக்கணக்கான இணையற்ற நாடக நடிக மணிகளை உருவாக்கியும் தந்த சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர், நாடக மறுமலர்ச்சித் தந்தை எம்.கந்தசாமி முதலியார், நடிகர் நாடகாசிரியர் வழக்கறிஞர் வி.சி. கோபாலரத்தினம்ஆகியோரைக் கலை உலகிற்குத் தந்த பெருமை பம்மல் சம்பந்த முதலியாரையே சாரும்.

இவர் 94 நாடகங்களை எழுதினார். மேலும் இவர் எழுதிய நாடகங்களில் ‘மனைவியைத் தேர்ந்தெடுத்தல்’ என்ற நாடகத்தைத் தவிர, ஏனையவை அனைத்தும் அச்சு வடிவம் பெற்றுவிட்டன. இது மிகப்பொ¢ய சாதனையாகும்.

இவ்வாறு நாடகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து நாடகப் பணியை ஆற்றுவதற்குப் பல நல்ல ஆற்றல் மிக்கவர்கள் உருவாகக் காரணமாகவும் இருந்த பம்மலார் தமது 94-ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். பம்மல் சம்பந்த முதலியார் இறந்தாலும் தமிழ் நாடகத்துறை உள்ளளவும் அவரது புகழ் நின்று நிலைத்து வாழும்; நாடகக் கலைஞர்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடம்பெற்று பம்மலார் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் எனலாம்.


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,

E.Mail. sethumalar68 yahoo.com

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.