” புறத்தில் பெருந்திணை “

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.


தொல்காப்பியர் கூறும் அகத்திணையினுள் ஒன்றாக இருப்பது பெருந்திணையாகும். “கைக்கிளை முதலா பெருந்திணை இறுவாய்” என்று அகத்திணையியலில் குறிப்பிடும் அவர் பெருந்திணைக்கு,

“ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொனைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (தொல். 996)

என்று இலக்கணம் வகுக்கிறார்.

பெருந்திணை என்பதற்கு உரையாசி¡¢யர்கள் இதுகாறும்,

“பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் ஆகும். ஒருவன் ஒருத்தியிடம் மிகுதியாகக் காமம் கொள்ளுதல்; அவளை அடையப் பெறாது மடலேறுதல்; தனக்கு இளைய பருவத்தாளைக் கூடுதல் நெறியாகும்; அவ்வாறின்றி ஒப்பும் மூப்பும் உடைய பருவத்தாளைக் கூடி நுகர்தல். தலைவியின் இளமைக்கு பொருந்தாது ஆடவன் மிகவும் வயது முதிர்ந்திருத்தல். இளமை தீர்ந்து முதிர்ந்த வயதில் துறவுகொள்ளுதல் நெறி; அவ்வாறின்றி இருவரும் காமம் நுகர்தல். தேறுதல் அடையாது அறிவழிக்கும் மிகுதியான காமம் கொள்ளுதல். கரைகடந்த காமத்தால் விரும்பாதவரை வலிதிற் புணர்தல் “, எனப் பல்வேறு வகையில் பொருள் கூறி வந்துள்ளனர்.

ஐந்திணை என்பது ஒத்த அன்பால் உண்டாகும் இன்ப ஒழுக்கங்கள் எனவும், கைக்கிளையாவது ஒருபக்க அன்பால் உண்டாகும் தாழ்ந்த இன்பவொழுக்கம் எனவும் பெருந்திணை என்பது ஏற்றத்தாழ்வான இருபக்க அன்பால் உண்டாகும், மற்றொரு வகையான தாழ்ந்த இன்பவொழுக்கம் எனவும் அறிஞர் இளவழகனார் உரைப்பர். பெருந்திணைக்கண் எவ்வகையானும் வலிந்த காமத்துக்கு இடனில்லை என்பதும்,உள்ளப்புணர்ச்சி என்னும் அகத்திணைப் பண்பிற்கு ஒத்ததுவே பெருந்திணை என்பதும், தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் பெருந்திணையை அன்புக் காமமாகவே வகுத்துப் பாடியுள்ளனர் என்பதும் அறிஞர் வ,சுப. மாணிக்கனா¡¢ன் கருத்தாக அமைந்துள்ளது.

அன்பின் ஐந்திணை பல துறைகளைக் கொண்டது. ஆனால் பெருந்திணை மிகச்சில துறைகளே உடையது. அதனை வி¡¢வாக்க இயலாது. இதனைத் தொல்காப்பியர், “செப்பிய நான்கே”என்று குறிப்பிட்டு துறை வரம்பினையும், “பெருந்திணைக் குறிப்பே” எனக் குறிப்பிட்டு வி¡¢வுக்கு இடமின்மையையும் தெளிவுறுத்துகிறார். தலைவன் த¨வியர் சில காதல்களை உள்ளத்தளவிலும் சொல்லளவிலும் காத்தோம்பிக் கொள்ளும்போது, அக்காதற் பாங்குகள் ஐந்திணையின் பாற்படுகின்றன. அவ்வளவுகளுள் காத்தோம்பமாட்டாது சிலர் காதல் மிகுவர்; மிகுதியால் சில காதற் செயல்களை மேற்கொள்வர். அதனால் ஊரறியும் நிலைமை ஏற்படும் இக்காதல் மிகைகளே பெருந்திணைப் பொருள்களாயின. ஐந்திணை என்பது அளவான காதல்; பெருந்திணையாவது மிகுதியான காதல். பெருந்திணை என்பதில், ‘பெரும்’ என்பது பண்படை. இப்பண்படை அளவினும் மிகுதிப்பாட்டை, அதிகமான அளவைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று, பெரும்போக்க, பெருங்காஞ்சி என்ற தொடர்களைப் போன்றே பெருந்திணை என்பதும் அளக்கு அதிகமான, அதாவது மிகுதியானதைக் குறிப்பதாக வந்தது என்பது நோக்கத்தக்கது.

பெருந்திணைப் பாடல்களாகப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வைந்தும் வள்ளல் பேகனைக் கபிலர், பரணர், அ¡¢சில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகிய நான்கு புலவர்கள் பாடிய பாடல்களாக அமைந்துள்ளன. அன்பு நெறியினின்று வழுவிய மிகுதியான காமம் பற்றியமைந்ததால் இப்பாடல்களைப் பெருந்திணையில் சேர்த்தனர்.

ஐயனா¡¢தனார் இவற்றை அகப்புறமாக அமைத்துள்ளார். பேகன் தனது மனைவி கண்ணகியைப் பி¡¢ந்து நல்லூர்ப் பரத்தையை நாடி அவளில்லத்திலேயே தங்கிவிடுகின்றான். இதனால் பேனின் மனைவி வருந்துகிறாள். கண்ணகி இங்ஙனம் வருந்துகின்றாள் என்று புலவர்கள் கூறுகின்றார்கள். பிறர்க்கும் தொ¢ந்துவிட்ட காரணத்தால் இது பெருந்திணையாயிற்று. மேலும் இப்பாடல்கள் குறுங்கலித் துறையின்பால் சேர்க்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. கலி எனில் தீங்கு, கேடு என்று பொருள்படும். பரத்தை இடத்துக் கொண்ட சிறுமையையுடைய காமம் கெட, புலவர்கள் எடுத்துரைத்தமையின் இப்பாடல்களின் துறை, குறுங்கலி ஆயிற்று எனலாம்.

இதனை,

“நாறிருங் கூந்தல் மகளிரை நயப்ப

வேறுபடு வேட்கை வீயக்கூறின்று”

என்று புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு தெளிவுறுத்துகின்றது. இல்லறக் கடமை மறந்த பேகனிடம் அவன் பரத்தை மீது கொண்ட காமம் கெடும் வண்ணம் நான்கு புலவர்கள் சென்று அறிவுறுத்துகின்றனர். மயிலுக்குப் போர்வை நல்கிய பேகன் இன்பத்துறையில் எளியனாகித் தன் மனையகம் மறந்து பரத்தை மாட்டு தங்கிவிட்டான். பரணர் அவனது கொடையைப் பாராட்டி அக்கொடையைக் கண்டித்தார்க்கு,

“கொடைமடம் படுதலல்லது

படைமடம் படான்பிறர் படைமயக்குறினே” (142)

என்று கூறி அவன் போர் வன்மையினைத் தெற்றெனப் புலப்படுத்துகிறார்.

கண்ணகியின் கடுந்துயா¢னைச் செவியுற்று உளம் வருந்திய கபிலர் பேகனிடம் சென்று, பேகனே! நேற்று பாலை வழி நடந்து வருந்திய என் சுற்றம் பசியால் வாட முரசுபோல் ஒலிக்கும் அருவிகள் பல வீழும் மலைச்சாரலின்கண் விளங்கும் சிற்றூ¡¢லேயுள்ள ஒரு வாயிலிலே சென்று வாழ்த்தி நின்று உன்னையும் உன் மலையையும் பாட அப்பொழுது வருந்திச் சொ¡¢ந்த கண்ணீர் இடையறாது வீழக் குழல் இணைவது போல அழுது நின்றனளே! அந்த இரங்கத் தக்கவள் யார் வள்ளலே? என அந்த வள்ளளிடத்திலேயே வினவுகின்றார். இதனை,

“கைவள் ளீகைக் கடுமான்பேக

யார்கொல ளியடா னேநெருநற்

……………………………………..

திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்

முலையக நனைப்ப விம்மிக்

குழலினைவதுபோல ழுதனள் பொ¢தே” (143)

என்ற கபிலா¢ன் பாடல் எடுத்துரைக்கிறது. பேகன் அவனது மனைவியைத் துறந்து பரத்தையிடம் வாழ்வதை நன்கறிந்தும் அதனை நோ¢டையாகக் கூறாது, அந்தப் பெண்மணியின் நிலை இரங்கத்தக்கதாக இருக்கின்றதே! அவளுக்காக நின் உள்ளம் சற்றும் இரங்கவில்லையா? நின் நாட்டகத்து வாழ்வார் வருந்தி அழுவது உனக்குத்தான் நன்மை பயக்குமோ? அவளின் துயர்துடைத்து, அவளுக்கு இன்பம் கொடுக்க வேண்டாமா? என நயத்தக்க நாகா¢கத்துடன் பேகனைப் பார்த்து வினவுகிறார்,

மன்னவனே! மாலைக்காலத்தில் உனது வாயிலின்கண் நின்று சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழிப் பண்ணிலே வைத்துப் பாடினோம். அப்போது கண்கள் கலங்கி விழுந்த கண்ணீர் பூணணிந்த மார்பகம் நனைய, வருந்தும் இள மங்கையைக் கண்டு, இளையவளே! எம் நட்பு விரும்புவோனுக்கு நீவிர் உறவோ என வணங்கிக் கேட்டோம். அவள் தனது கைவிரல்களால் கண்ணீரைத் துடைத்து நின்று இல்லையென்று கூறினாள். மேலும் என்போன்ற ஒருத்தியின் அழகை விரும்பிய பேகன் நாளும் தேருடனே நல்லூ¡¢ன்கண் என்று பலரும் கூறுவார்கள் என்று சொன்னாள் என்று,

“அருளா யாகலோ கொடிதே யிருள்வரச்

………………………………பேகன்

ஒல்லென வொலிக்குந் தேரொடு

முல்லை வேலி நல்லூரானே” (புறம். 144)

எனப் பரணர் எடுத்துரைக்கின்றார்.

காதல் ஒழுக்கத்தைப் பிறர் அறியக் கூறின் அது அகத்திற்கு இழுக்காகும். இங்கு பரணர் பாடலில் பேகனின் மனைவியோ அவளும் ஆயத்தாரும் மன்னனின் புறத்தொழுக்கத்தை எடுத்துக் கூறுவதோடு எம் போன்ற பொது மகள் ஒருத்தியிடத்துப் பொருந்தியுள்ளான் எனவும் கூறியுள்ளவிடத்துத் தன்னை இழித்துக் கூறியதாலும் இப்பாடல் பெருந்திணை ஆயிற்று என்று மொழியலாம். கணவனிடம் ஊடல் கொண்டுள்ள நிலையில் அவ்வாறு கண்ணகி கூறினாள் எனலாம். கற்பின் வழியிலே நின்ற தலைவி பரத்தையைப் புகழ்ந்து கூறினாளாயினும் உள்ளத்தினுள்ளே ஊடின தன்மை உண்டென்று புலவர் மொழிவர். இதனை,

“கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும்

உள்ளகத்து ஊடல் எண்டென மொழிப”

என்ற தொல்காப்பியர் நூற்பாவால் நன்கு உணரலாம்.

அழகு மயில் குளிரால் நடுங்கும் என்றஞ்சி அதற்கு பட்டாடை கொடுத்த பேகனே! எம்மால் பாதுகாக்கப்படும் சுற்றமும் இல்லை. யாம் பசித்த காரணத்தாலும் நின்னை நாடி வரவில்லை. களாப்பழம் போன்ற சிறிய யாழை இனிதாக இசைத்த காரணத்தால் அருளை விரும்பிப் பரிசில் நல்குவாய். அருளை விரும்புவோனே! அறத்தைச் செய்வாயாக! இன்றிரவே தேரேறிச் சென்று நின் மனைவியின் பொருத்தற்கா¢ய நோயைத் தீர்ப்பாயாக. இதுவே நின்னிடம் யாம் வேண்டும் பா¢சில் ஆகும்.

“மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப்

…………………………….

இனமணி நெடுந்தேரேறி

இன்னா துறைவி யரும்படர் களைமே” (புறம். 145)

எனப் பரணர் வேண்டுகிறார்.

இப்பாடலின் இறுதி வா¢யாக, பரணர் ‘இன்னாது உறைவி அரும் படர் களைமே’ எனக் குறிப்பிடுவதன் மூலம் பி¡¢விடை அரற்றுகின்றாள் என்பதை எடுத்துக்காட்டுகின்றார். பி¡¢விடை அரற்றல் பெருந்திணைப் பாற்படுமென்பதை,

“இறைவளை நெகிழ வின்னா திரங்கிப்

பிறைநுதன் மடந்தை பி¡¢விடை யாற்றின்று” (பு.வெ.மா. )

என வரும் புறப்பொருள் வெண்பா மாலையின் கொளு வாயிலாய் உணரலாம்.

அ¡¢சில்கிழார் எனும் புலவர் பேகனிடத்துச் சென்று, பேகனே! நீ தந்த பெறுதற்கா¢ய அணியும் செல்வமும் நின்னிடத்திலேயே இருக்கட்டும். செவ்வழிப் பண்ணிலே சீ¡¢ய யாழை இசைத்து நின் குன்றைப் பாட என்னை விரும்பிப் பா¢சில் நல்குவாயாயின் தலைவனே! நீ அருளாமையால் கண்டவர் இரங்க, மெலிந்து, போ¢தும் துயருற்று வருந்தும் நின் மனைவியின் கூந்தலிலே மணம் கமழும் புகையூட்டி அவளித்துச் செலுத்துவாயாக. இவ்வாறு அருளுதலே நீ எனக்கு நல்கும் பா¢சில் ஆகும் என எடுத்துரைத்து நல்வழிப்படுத்துவதை,

“அருந்துய ருழக்குநின் றிருந்திழை யா¢வை

கலிமயிற் கலாவங் கால்குவித் தன்ன

ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளீஇத்

தண்கமழ் கோதை புனைய

வண்பா¢ நெடுந்தேர் பூண்க நின் மாவே” ( புறம். 146)

என வரும் பாடலால் உணரலாம். ஒப்பனை ஒழித்து, பொலிவிழந்து விளங்குகின்றாளே உன் இல்லாள். அவளுக்கு உருளாதிருத்தல் கொடிது. மன்னவனே! தேரேறி விரைந்து சென்று உன் மனைவியோடிருப்பதே யாம் வேண்டும் பா¢சில் என்று எடுத்துரைத்துள்ளார்.

பெருங்குன்றூர்கி¡ர் பேகனிடத்துச் சென்று ஆவியர் வேந்தே! அருவிகளை உடைய பல மலைகளைக் கடந்து சீ¡¢ய யாழைச் செவ்வழிப்பண்ணிலே இசைத்து வந்ததற்கு நீ பா¢சிலி நல்குவாயாயின் மன்னவ! கார்காலத்து மழையினது இனிய துளி வீழ்கின்ற ஓசையைத் தனியொருத்தியாகக் கேட்டு நேற்று ஒருபுறம் தனிமையில் வாடிய குளிர்ச்சி பொருந்திய கண்ணினையும், அழகிய மாமை நிறத்தினையுமுடைய அந்த அ¡¢வையின் மையிருங் கூந்தலில் நீலமணியிலும் மாசறக் கழுவி செவ்விய மலர் சூடி மகிழ இன்றே எழுந்தனையாயின் அதுவே யாம் உன்னிடம் வேண்டும் பா¢சிலாகும்.

“கன்முழை யருவிப் பன்மலை நீந்திச்

சீறியாழ் செவ்வழிப் பண்ணி வந்ததைக்

கார்வா னின்னுறை தமியள் கேளா

நெருந லொருசிறைப் புலம்புகொண் டுறையும்

அ¡¢மதர் மழைக்க ணம்மா வா¢வை

நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்

மண்ணுறு மணியின் மாசற மண்ணிப்

புதுமலர் கஞல வின்று பெயா¢ன்

அதுமனெம் பா¢சி லாவியர் கோவே” (புறம்.147)

என்று பாடிய பின் பேகனால் போகாதிருக்க இயலுமா? பேகன் தன்மனைவியிடம் சென்று அவள் துயரோட்டி மகிழ்வுடன் இருந்தான்.

மனைவியைத் துறந்து பரத்தையைக் கண்டு ஆடவன் மதிமயங்கிய நிலையில் சமுதாயம் அவனைத் திருத்த முற்படுகின்றது. பரத்தையே கதி என்று கிடக்கும் நிலையில் அதனை அகத்திணையிலிருந்து மாற்றிப் புறததிணைக்குக் கொணர்ந்து பெருந்திணையின்பாற் வைத்தனர். காமமிகுதியால் இல்லற எல்லை கடந்தமையால் அ·து பெருந்திணையாயிற்று. ஏனெனில் பரத்தைமை பண்டைக் காலத்தில் விலக்கப்படவில்லை. அளவுக்குட்பட்ட நிலையில் அ·து அகப்பொருளாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அளவுக்குட்பட்ட பரத்தமை அகப்பொருளாகும். பேகனின் பரத்தைமை அளவுகு அதிகமாகி ஊரார் அறிந்ததினால் இவ்வைந்து பாடல்கள் புறத்தில் பெருந்திணையில் நம்முன்னோர் வைத்தனர்.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்’ என்பதுபோல பரத்தமை மிகுதியாயின் அ·து புறப்பொருளாகும். அளவுக்குட்பட்ட பரத்தைமையைப் புறப்பொருளாகக் கருதமாட்டார். அகப்பொருளாகவே கருதுவர். சமுதாயமும் அதனைப் பொருட்படுத்தாது விட்டுவிடும். ஆனால் பேகன் இல்லற எல்லை கடந்து பரத்தைமையில் எல்லை மீறிநடந்து கொண்டமையால் புலவர்கள் அறிவுரை கூறினர். அப்பாடல்களைப் புறப்பொருளில் பெருந்திணையில் வைத்தனர். மனைவியை மதித்து அவளுடன் ஒத்த கருத்துடன் வாழ்தல் வேண்டும்.

பரத்தைமையுடன் வழ நேர்ந்தாலும் எக்காரணங் கொண்டும் மனைவியை அடியோடு பி¡¢தல் கூடாது.அது பெண்மைக்கு இழைக்கும் பெரும்பிழையாம். இப்பெரும்பிழையை ஆடவர் ஒருபோதும் செய்தல் கூடாது என்ற வாழ்வியல் அறத்தை இப்புறத்திணையிலிடம்பெறும் பெருந்திணை நமக்கு அறிவுறுத்துகின்றது. இ·து அனைவருக்கும் ஏற்ற வாழ்க்கை நெறியாகவும் அமைகின்றது.

__

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.