எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி

This entry is part of 52 in the series 20081120_Issue

வே.சபாநாயகம்1. வெறும் பேனா மட்டும் பேசினால் போதாது. ஒருவனுடய உள்ளம், உயிர் யாவும் பேனா முனையில் வந்து கூத்தாடினால், அப்பொழுது அவ்வார்த்தைகளுக்கு உள்ள வீரியத்தை யாதொன்றாலும் அசைக்க முடியாது.

2. வாழ்க்கையின் பலவிதமான ரகங்களும் கலைஞனுக்குத் தலைகீழ்ப்பாடமாகத் தெரிய வேண்டும். அப்போதுதான் அவனுக்கு வாழ்க்கையின் பூர்ணத்வம் விளங்கும். ஆனால் அந்த ரகங்களைக் கற்பனை செய்து, கலையோ கவிதையோ சிருஷ்டிக்க வேண்டும்.

3. வெறுமனே ஏதோ எழுதித் தொலைக்க வேண்டுமே என்று எழுதுவதில் பயனில்லை. உண்மையான இலக்கியம் உள்ளத்தின் அடியிலிருந்து அறிவின் போர்வையோடு வெளிக் கொட்ட வேண்டும்.

4. வாள் ஜடசக்தியின் அறிகுறி. பேனாவோ உயிர்சக்தியின் உண்மை வீறு. வாள் பெரும்பாலும் பெரிய பெரிய நாகரீகத்தினை உடைத்துத் தள்ள மட்டுமே பயன்படும். பேனா என்பது தன் பழைய நாகரீகத்தை உடைப்பதென்றாலும் சரி, புது நாகரீகத்தை சிருஷ்டிப்பதாயினும் சரி, எதுவானாலும் செய்ய வல்லது. பல்லவர்களின் ஆட்சியின் கீழ் பதுங்கிக் கிடந்த தமிழர்களை ஒரேயொரு நூற்றாண்டுக்குள், கம்பனது ராமாயணம்
தட்டி எழுப்பி தலைநிமிரச் செய்துவிட்டது. அமெரிக்காவின் அடிமை வர்த்தகத்தை ஒழிப்பதற்கு ‘அங்கிள்ஸ் டாம்ஸ் கேபின்’ எனும் ஒரே நாவல்தான் விதைபோட்டது. ஜெர்மானிய தத்துவ சாஸ்திரி நெயட்சின் நெருப்பு வார்த்தைகளே சென்ற மகாயுத்தத் திற்கு அடிகோலியது என்று கூறலாம்.

5. கலைஞர்களெல்லாம் பேனா பிடித்தவர்கள். ஆனால் பேனா பிடித்தவர் களெல்லாம் கலைஞர்கள் அல்ல.

(இன்னும் வரும்)
E-mail:
Blog :

Series Navigation

வே.சபாநாயகம்