‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
வே. சபாநாயகம்
1. எழுதுவது நீந்துகிறமாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குதி. குதித்துவிடு.
2.கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கருப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச்சூடு இவை எல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறென்ன?
3. ஒரு கதையில் உள்ள ஓர் அம்சம் அதற்குப் பலமா, பலவீனமா என்று நிர்ணயிக்கச் சோதனை அதைப் படிப்பதில் உள்ள சுவாரஸ்யத்தின் அளவுதான்.
4. கதைகளையெல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம்.; மற்றது அமானுஷ்யக் கற்பனை. மேதைகள்தாம் சுவைக்குறைவு இல்லாத அமானுஷ்யக் கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றவர்களுக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்கநளைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்தப் போட்டோ வுக்கு மெருகு கொடுத்திருக்கும். எங்களுக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் அவற்றில் ‘மண்’ வாசனை வீசும்; சுகந்தமான வாசனைதான். அஜந்தா ஓவியங்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள், போட்டோ ப் படங்கள ல் கலைச் சுவையைக் காண முடியாது என்று நினைப்பது சகஜம். மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு – தண்ணீர். அதில் வியப்பென்ன? போட்டோ ப் படங்களிலும் ஒருவிதக் கலைச் சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். எனவே, என் கதைகள் அத்தனையும் பெரும்பாலும், முழுவதுமோ அல்லது பெரும் பகுதியோ பிரத்தியட்ச நிகழ்ச்சிகள்.
5. கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப் படுத்தியும் விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள்; அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.
6. கலையிலே பிரச்சாரம் இருக்கலாமா கூடாதா? இதைப் பற்றி ஒரு பெரிய விவகாரம்! இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.; இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலை கலையாகவே இருப்பது மாத்திரம் அவசியம்.
7. நாம் எழுதும் கதை, கதையாயிருக்க வேண்டும்; அதாவது சுவாரஸ்யம் நிறைந்திருக்க வேண்டும். இப்படி எழுதப் படாததால்தான், அநேகம் கதைகளை, ஜனங்கள் ரசிக்காமல் தள்ளுகிறார்கள். கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க ரசமாக இருந்ததா என்ற ஒரே பரீட்சைதான், நல்ல கதைக்கு முக்கியமாகும். மற்ற லட்சணங்கள் எல்லாம், அதற்கு உதவுபவையே ஆகும்.
8. கதையின் ஒவ்வோர் அம்சமும், ஆரம்பம் நடு முடிவு ஒவ்வொர் அமைப்பும் , ஒவ்வொரு சொல்லும், கதையிந் சுவாரஸ்யத்துக்கு, திட்டத்துக்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்த பின், ‘பூ! இவ்வளவுதானா? இதை ஏன் படித்தோம்?’ என்ற உணர்ச்சி, படிப்பவருக்கு ஏற்படக் கூடாது. கதையின் முடிவு ஏமாற்றமாயிருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாயிருக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
(இன்னும் வரும்)
E mail ID : < v.sabanayagam@gmail.com >
Website: < http://www.ninaivu.blogspot.com >
- பனிக்கரடி முழுக்கு
- ஒரு ராஜா ஒரு ராணி
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ராட்டடூயி
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- மூடு மணல்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- யார் இவர்கள்?
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வேட்டை நாய்
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- வருவதுதான் வாழ்க்கை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கிளைதாவி வரும் மின்னல்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- பெண்புத்தி, பின்புத்தி!
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- கத்தி குத்திய இடம்…
- அன்புள்ள கிரிதரன்
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- 27வது பெண்கள் சந்திப்பு
- கவிதைகள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- கடிதம்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கவிதைகள்
- நண்பன்
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- “மலர்கொடி”
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- “அலமாரி”