புரட்சியும், சிதைவும்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

சுப்ரபாரதிமணியன்


இயக்குனர் கென்லோச் இங்கிலாந்து தொழிற்கட்சியின் உறுப்பினராகவும், தீவிர விமர்சகராகவும் இருப்பவர். இருபதற்கும் மேற்பட்ட படங்களை எடுத்தவர். 70 வயதாகிறது. அவரின் சமீபத்திய படம் “தி விண்ட் தட் ஷேக்ஸ் தி பேர்லி ” என்ற படம் அயர்லாந்து சுதந்திரப் போராட்டம் குறித்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசுபெற்றது.

இவரின் முந்தய “லேண்ட் அண்ட் ப்ரிடம் ” குறிப்பிடத் தக்கபடமாகும். அதில் கென்லோச் ஸ்டாலினியத்தின் அதிகாரத்துவம் பற்றியக் கேள்வியையும், விடுதலை வேட்கை கொண்ட மனிதனை நசுக்கினத் தன்மையையும் விமர்சனத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். சென்றாண்டில் கென்லோச், ஈரானின் இயக்குனர் அப்பாஸ் கியரஸ்டமி, இத்தாலி இயக்குனர் ஏல்மியுடன் இணைந்து “டிக்கெட்ஸ்” என்றப்படத்தை இயக்கி இருந்தார். மத்திய அய்ரோப்பாவிலிருந்து ரோமிற்கு செல்லும் ஒரு புகைவண்டிப் பயணம் பற்றியது அது. டிக்கெட் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. பேராசிரியர் ஒருவர் பயணச்�ட்டு கிடைக்காமல் அவதியுறுகிறார். உதவும் பெண் குறித்த நினைவுகளில் ஆழ்ந்து போகிறார். சாவொன்றுக்கு கறுப்பு உடையுடன் போகும் பெண் இருக்கை மாறி உட்காருவதால் குழப்பம் ஏற்படுகிறது. பாப் இசையைக் கேட்பவள் பார்க்கும் இளைஞனை வோறொருவனாக எண்ணிப் பழகுகிறாள். இந்தச் சம்பவங்களூடே மூன்று ஸ்காட்லாந்து இளைஞர்கள் ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்கு பயணமாகிறார்கள். இவர்களுடன் பயணம் செய்யும் அகதிகள் நான்குபேர் கையிலிருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு மூன்று பயணச்�ட்டுகளை எடுக்கிறார்கள். கால்பந்தாட்ட வீரர்களிடமிருந்து ஒரு பயணச்�ட்டு திருடப்படுகிறது. திருடியது தெரிந்து விடுகிறது. ஆனால் அவர்கள் காவல்துறையினரிடமகப்பட்டுக் கொண்டால் சிரமம். எனவே கால்பந்தாட்ட வீரர்கள் அகதிகளுக்கு பயணச்�ட்டை கொடுத்து மனிதாபிமான அடிப்படையில் உதவமுன் வருகிறார்கள். மூன்று வெவ்வேறு வகையான கதைகளின் கதாபாத்திரங்களின் செயல்களால் புகைவண்டிப் பயணப் அமைகிறது.
கொலோச் இந்தமுறை ஜயர்லாந்து விடுதலைப் போராட்டத்தையும், அதன் தொடர்ச்சியாகன ஜயர்லாந்து உள்நாட்டு யுத்தத்தையும் மையமாகக் கொண்டு சமீபத்தியப் படத்தை எடுத்திருக்கிறார். ஜயர்லாந்து விடுதலைப்படையினர் குழுவொன்றையும், அதில் முக்யமாக இடம் பெற்றிருக்கும் இரண்டு சகோதரர்களையும் கென்லோச் மையமாகக் கொண்டிருக்கிறார். மருத்துவப் பணியில் இருக்கும் ஒருவர் தன் பணியை விட்டுவிட்டு தன் சகோதரன் இருக்கும் விடுதலைப் படையில் சேருகிறான். பிரிட்டிஷ் படையினர் ரத்தக்கிளறியைக் குறைக்க ஒப்பந்தம் செய்கிறார்கள். அதன் பின் எழும் உள்நாட்டு யுத்தம் அவர்களைப் பிரித்துவிடுகிறது. குடும்ப சிதைவும், உயிரிழப்பும் சாதாரணமாகிவிடுகிறது. ” இனி போர் தேவையில்லை; போர் விரும்புகிறவனுக்கு பாவமன்னிப்பை தேவாலயம் வழங்காது. நீக்கப்படுவார்கள்” என்று தேவாலயம் எச்சரிக்கிறது. தேவாலயத்தின் செயல்பாடுகள் பற்றிய காலகட்டத்தில் போராளிகளின் அரசியல் நிலையும் பங்களிப்பும் நீண்ட விவாதங்களாகத் தரப்பட்டிருக்கிறது.( ‘லேண்ட் அண்ட் பிரிடம்’ படத்தில் இடம்பெறும் நிலை கூட்டுறவு பற்றின நீண்ட விவாதத்தை இது ஞாபகப்படுத்துகிறது.) கேகொரில்லா யுத்தமுறைகளும் அவர்களின் வாழ்க்கையும் இதில் உள்ளடங்கியது. இது பிரிட்டிஷ் எதிர்ப்புப்படமல்ல என்கிறார் கென்லோச்.
“பாரடைஸ் நவ்” என்ற பாலதீனப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ‘தற்கொலை வெடிகுண்டுகளாக’ மாறி உலவும் அவலம் பற்றியது. அவர்கள் இருவரும் சிறுவயது முதய் பழகி வந்தவர்கள். பாலஸ்தீன் பகுதியில் தங்களின் வாழ்க்கையைக் கழிப்பவன் ஒருவன்.’கார்’ போன்ற வாகனங்களின் குறைபாட்டைச் சரிசெய்வதில் நிபுணன். இருவருக்குள்ளும் இருக்கும் கலக உணர்வு அவர்களை தற்கொலை வெடிகுண்டுகளாக தேர்வு பெறச் செய்கிறது. உடம்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு அனுப்பப்படுகிறார்கள். நிச்சயம் இறந்து போவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அவர்களின் புகைப்படங்கள், மாவீரர் உரைகளின் வீடியோ பதிவு , தலைவருடன் உணவருந்துதல் ஆகியவையும் நிகழ்கின்றன. ஆனால் அவர்கள் டெலிவிஷன் குறிப்பிட்டப் பகுதிக்குள் நுழைய முடியாத போதும், ராணுவத்தின் துரத்தலிலும் பிரிகிறார்கள். ஒருவன் முகாமிற்கு வருகிறான். அவனின் உடம்பு குண்டு அகற்றப்படுகிறது. அதை செயலிழக்கச் செய்ய குண்டை மாட்டிவிடுபவனால் மட்டுமே முடியும். இன்னொருவன் வழிதவறி அலைகிறான். தேடப்படுகிறான். அவனைக் கண்டுபிடித்து உடம்பில் கட்டியிருக்கும் குண்டை செயலிழக்கச் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் கண்டு பிடிக்கப்படுகிறபோது அவன் தன் தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறான். தன்னால் எதிரிகளுக்கு சாவு ஏற்பட வேண்டும். தன் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறான். அதற்கு வாய்ப்பை தேடுகிறான்.உடம்புகள் தங்கள் வசம் இல்லாமல் போகிற இளைஞர்கள் அவர்கள் புரட்சிபற்றியும் கலகம் பற்றியும் கனவுகளைச் சுமந்து கொண்டு திரிகிறவர்கள் ஆகிறார்கள்.
‘வயலின்’ படத்தில் வருகிற குடும்பத்தினர் அனைவரும் இது போறக் கனவுகளை சுமந்து திரிகிறவர்கள். இந்த மெக்சிகோ படம் கறுப்பு வெள்ளைப்படமாய் அமைந்து இப்படத்திற்கு இன்னும் வலுவூட்டுகிறது. உலகின் எந்தப் பகுதியிலும் நிகழும் விடயமாக இருக்கிறது. குறிப்பிட்ட பிரதேசம், தேசிய இனக்குழு, புரட்சியாளர்கள் என அடையாளப்படுத்தப்படுவதில்லை இது. எனவே புரட்சிகர எண்ணங்களைக் கொண்ட போராளிகளின் களமாக உலகின் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளலாம் என்பது போல இப்படம் அமைந்திருக்கிறது. மலைப்பிரதேசத்திலிருந்து கீழிறங்கி வந்து தெருவில் வயலின் வாசித்து பிச்சையெடுக்கும் தாத்தா, மகன், பேரன் என தாத்தாவிறிகு வயலினைஇயக்க விரல்கள் இல்லை. வலது கை நுனியில் வயலின் கட்டப்பட்டு இயங்கும் மலைப்பிரதேசம் ராணுவத்தினரால் சூறையாடப்பட்டு துரத்தப்படுகிறார்கள். தாத்தா கழுதை ஒன்றை பெரும் கடனாகப் பெற்று பழைய கிராமத்திற்கு செல்கிறார்.ராணுவத்தினரிடம் விளைச்சல் வீணாகக்கூடாது என்பதை கவனிப்பதற்காக அனுமதிக்கச் சொல்கிறார். ஒவ்வொருமிறையும் விளை நிலத்தில் புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களை கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து வருகிறார். ராணுவ அதிகாரி வயலின் வாசிக்க சொல்லி கேட்கிறான். இச்சலுகையினால் கழுதையுடன் சுலபமாக நடமாட முடிகிறது தாத்தாவால் ஆனால் மகனும் குடும்பத்தினரும் பிடிபட்டுப் போக சித்ரவதை செய்யப்படுகிறார்கள். புரட்சி எண்ணங்களை மீதான ஆக்கிரமுப்பும், வன்முறையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
பிரேசிலின் அரசியல் நிலைமைகள் பற்றின அக்கறையை வெளிப்படுத்துபவை கிளொபர் ரோச்சாவின் அரசியல்தன்மை மிகுந்த படங்கள். அறுபதுகளில் பிரேசிலில் நிகழ்ந்த அரசியல் பிரச்சனைகள் இவ்வகையான அரசியல் படங்களை எடுக்க அவரைத் தூண்டியிருக்கிறது. இந்திய, லத்தின் அமெரிக்கப் பகுதிகளுக்கு இடையே தென்படும் அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் ஏறத்தாழ ஒத்தவையாக இருக்கின்றன. அவரின் மகன் எரிக்ரோச்சா இயக்கியிருக்கும் “ஸ்லோன்ஸ் இன் தி ஸ்கை” என்ற படம் அமைப்பு சார்ந்த பொதுவுடைமைக் கட்சியினரை நிலைகுலையச் செய்யும் படம். இப்படம் கிளைபர் ரோச்சா கியூபாவில் தலைமறைவு வாழ்க்கையை நடத்திய காலத்தில் அவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருக்கிறது. மூன்றாம் உலகநாடுகள் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த சமூக, அரசியல் புரட்சி சட்டங்களில் கலைஇலக்கியவாதிகளின் பங்கு பற்றின விவாதங்களில் பங்கு பெறுவதாக இருக்கிறது. க்யூபாவின் பொதுவுடைமைகட்சி சார்ந்தவர்கள் அரசியல், கலாச்சார மாற்றங்களை எழுபதின் காலகட்டத்தில் எதிர்கொள்வதை பல சாட்சிகள் மூலம் விளக்குகிறது. பொதுவுடைமை கட்சியினரின் பங்கு, சித்தாந்த ரீதியான உடன்பாடுகள், மறுப்புகள்; மற்றும் காலனிய ஆதிக்கத்தின் விளைவுகளை சம்பிரதாயமற்ற திரைப்பட மொழியில் முன் வைக்கிறது. வீடியோ காட்சிகள், பேச்சுகள், விவரணைகள், விபரங்கள் ஒன்றின் மீது ஒன்றாக முறையற்று அடுக்கப்பட்ட விவரிப்பை இது கொண்டிருக்கிறது. சமூக பொறுப்புணர்வு கூடிய படைப்பாளிகயின் செயல்பாட்டுத் தன்மை பற்றிய நோக்கத்தையும், விடுதலை குறித்த அக்கறை உணர்வையும் முன் வைக்கிறது. குறிப்பாக திரைப்படத் துறையிலும், கலை இலக்கியத் துறையிலும் அறிவார்ந்த செயல்பாடுகளை வலியுறுத்துகிறது. இவை சாத்தியமாகிறபோது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை என்பது சாதகமானதே என்பதை கிளொபர் ரோச்சாவின் திரைப்பட முயற்சிகள், அரசியல் செயல்பாடுகளை முன்னிருத்தி விளக்குகிற பணியை இப்படம் செய்கிறது. பொதுவுடைமை இயக்கம் சார்ந்த நெருக்கடி தரும் அரசியல் அனுபவங்களாகவும் இது வெளிப்பட்டிருக்கிறது.


subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்