கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

பிரியங்கா


மனித உரிமைச் செயற்பாட்டாளரும் கலை இலக்கிய அரசியல் மாற்றுச் சஞ்சிகையான உயிர் நிழலில் ஸ்தாபகருமான நண்பன் கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு பாரிசில் 15.07.2007 நடைபெற்றது. தோழரும் கவிஞருமான அருந்ததி அவர்களின் ஆரம்ப உரையோடும் நெறிப்படுத்தலோடும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நண்பர்கள் வட்டத்தின் சார்பில் தோழர் கிருபா வரவேற்புரையை நிகழ்தினார். அவர் தன் உரையில்

கலைக்செல்வனைபிரிந்து இன்றுடன் இரண்டு அ+ண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அ+யினும் அவனது நினைவாக அவனது பதிவுகளும் நினைவுகளும் உயிரின்நிழலும் எம்முடன் வாழ்ந்தாலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் எம்மை பிரிந்த் தோழர்களின் வெற்றிடத்தையும் வேலை பழுவையும் இன்றும் எம்மால் உணரக்கூடியதாகவே உள்ளது. சபாலிங்கம் உமாகாந்தன் கலைச்செல்வன் புஸ்பராஐh என தொடரும் புகலிடப்பட்டியல்….

உண்மையில் இந் நிகழ்வானது கடந்த ஏப்பிரல் மாதம் நடைபெற்றிருக்கவேண்டியது அ+னால் மண்டபம் கிடைக்காமை,
குறித்த திகதியில் வேறு நிகழ்ச்சி நடைபெற்றது போன்ற காரணங்களாலும் தள்ளிப்போய்விட்;டது. எது எப்படி ஆயினும் நண்பர்கள் வட்டம் என்பது அரசியல் சமூகம் சார்ந்து செயற்படும் அமைப்பு என்பதால் இவ் தாமதத்திற்கான தவறுகளையும் எமதாகவே ஏற்றுக்கொள்கிறோம்.

தூர இடங்களில் இருந்தும் குறிப்பாக நேற்றைய யேர்மன் கூட்டத்தில் கலந்துவிட்டு மிகுந்த களைப்புடனும் பொருளாதார சுமைகளுக்கும் மத்தியில் கலைச்செல்வனின் நினைவு நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என பல நண்பர்கள் வந்துள்ளனர். எனவே கலைச்செல்வனை நினைவு கூறல் என்பது அஎ+;சலி கூட்டமாகமட்டுமல்லாமல் அரசியல் சமூக பிரச்சனைகளையும் தொட்டுசெல்லும் நிகழ்வாக அமையும். குறிப்பாக இலங்கை வாழ் தமிழ் சோனக மக்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கப்பட்டு ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் நிழலாய் தொடரும் துப்பாக்கிகளால் வாய் மூடி மௌனிகளாக வறுமையிலும் பட்டிணியிலும் அகதிகளாக தெரு ஓரங்களில் மரணிக்கும் எம் மக்களின் உயிர்களை காக்க நாமும் ஏதாவது செய்தே ஆகவேண்டும்.

கலைச்செல்வனும் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூக அரசியல் பொருளாதார முரண்பாடுகளுக்கெதிராக கலை இலக்கிய தளங்களில் போராடியவன். அ+னாலும் எனக்கு என்மேல் உள்ளதுபோல் அல்லது உங்களுக்கு என் மேல்உள்ளது போல் எனக்கும் கலைச்செல்வன் மீது விமர்சனமுண்டு. அ+னால் கலைச்செல்வன் என்றைக்குமே வன்முறைக்கு ஆதரவாளனாக நின்றதில்லை மாறாக ஜனநாயகத்தை கோரியே தனது குரலை பதிவுசெய்து சென்றிருக்கிறான். ஆனாலும் ஒருசில பத்திரிகை வானொலி இணையத்தளத்தை தவிர ஏனைய ஜனநாயக மாற்று இனணயதளங்கள் என்று கூறிக்கொள்ளும் இணையதளங்கள் எதுவுமே சிறு குறிப்பாக தன்னும் இச்செய்தியை பதிவுசெய்யவில்லை. இவர்களுக்கு கலைச்செல்வன்மீது முரண்பாடா அல்லது நண்பரகள்வட்டத்தின் மீது முரண்பாடா அல்லது தமிழ்தேசியத்தின் எச்ச சொச்சங்களின் சிபார்சு கடிதங்கள் தேவைபடுகிறதா என அவர்கள்தான் கூறவேண்டும்.

எது எவ்வாறாயினும் கலைச்செல்வனின் நிகழ்ச்சியை பிரசுரித்த ஊடகங்களுக்கு எமது நன்றிகள். தோழர் கிருபாவின் இவ் உரையினைத் தொடர்ந்து கலைச்செல்வனின் நினைவுப் பேருரையான “கனவகளுக்கு நிறமிருந்தபோது” எனும் தலைப்பிலான உரையை லண்டனிலிருந்து வருகைதந்திருந்த கவிஞரும் எழுத்தாளருமான நா.சபோசன் நிகழ்தினார் புகலிட கலை இலக்கிய அரசியல் தளங்களில் கலைச்செல்வனின் ஆழுமையையும் செயற்பாட்டையும் நினைவு கூர்ந்ததோடு இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு கேள்விகளோடு தன் உரையை நிறைவு செய்தார்.

இதனைத் இதாடர்ந்து இளம் சிறார்கள் தமரா, அருணா ஆகியோர்களின் “இசையின் சுதந்திரம”; எனும் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. கலை இசை முயற்சிகள் பரத நாட்டியத்தோடும் கர்நாடக சங்கீதத்தோடும் கழிவதையே பார்த்துப் பழகிய கண்களுக்கு இச் சிறார்களின் இவ் இசை நிகழ்ச்சி வித்தியாசமாகவும் ஆர்வத்தை கொடுப்பதாகவம் அமைந்திருந்தது. இந் நிகழ்வில் நோர்வேயில் இருந்து கலந்து கொண்ட இளம் ஒளி ஓவியக் கலைஞை இலக்கியாவின் “கறுப்பு வெள்ளை” என்ற தலைப்பு இடப்பட்ட ஒளி ஓவிய கண்காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அத்தோடு இவரின் இசை இ;டப்பட்ட ஒளி ஓவியங்களும் திரையி;டப்பட்டன. ஒளி ஓவியக் கலைஞ இலக்கியாவின் இம் முயற்சியும் தேடலும் ஆர்வமும் புகலிட தமிழ் சமுகத்தின் இரண்டாம் தலைமுறையினரின் வித்தியாசமான ஆரோக்கியமான தேர்வையையும் சிந்தனையையும் கூறுவதாக இருந்தது.

அடுத்து இலங்கையின் இனப்பிரச்சினையும் நிரந்தர தீர்வுக்கான வரலாற்றுத் தடங்கல்களும் அது எதிர் கொள்ளும் சவால்களும் எனும் அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது. லண்டனிலிருந்து நிர்மலா இராஐசிங்கம, விஸ்வலிங்கம் சிவலிங்கம், முகம்மது எஸ்.ஆர்.நிஸ்தார், ராகவன, பாலா, கீரன். மற்றும் பேர்லினில் இருந்து சுசீந்திரன் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இக் கலந்துரையாடலின்போது பல்வேறு கருத்துக்களும் காரசாரமான விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்றன. இதில் பேசிய சமுகவியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான முகம்மது எஸ்.ஆர்.நிஸ்தார் அவர்கள் முஸ்லீம் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லீம்கள் சோனகர் என்ற இன அடிப்படையில் ;அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது காலத்தின் தேவை என்றும் சிங்கள பேரினவாதம் எப்படி தமிழ் தேசியத்தை அடக்கவே அழிக்கவே உரிமை அற்றதே அதேபோல் தமிழ் இனவாதம் சோனகர் இனத்தை அடக்கவும் அழிக்கவும் உரிமை அற்றது என்றார். முகம்மது எஸ்.ஆh.;;நிஸ்தார் அவர்களின் பேச்சு உணர்வுபுhர்வமாகவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட “தமிழ் தேசிய பற்றாளர்களின”; மனச் சாட்சியை கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் அமைந்திருந்தது.

இறுதியாக நண்பாகள் வட்டத்தின சாhபில் தோழர் மோகன் அவர்களின் நன்றி உரையோடு நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
கலைச்செல்வனின் இந்த 2ம் ஆண்டின் நிகழ்வில் கலந்துகொண்ட குறிப்பாக நோர்வே கொலண்ட் Nஐர்மன் லண்டன் போன்ற தூர இடங்களிலிருந்தும் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் இந் நிகழ்ச்சி சிறப்புற உதவி புரிந்த அனைவர்களுகும் நண்பர்கள் வட்டத்தின் சார்பில் தோழர் மோகன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

-பிரியங்கா-


ashokyogan@hotmail.com

Series Navigation

பிரியங்கா

பிரியங்கா