ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

வ.ஐ.ச. ஜெயபாலன்


எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி பாரதிதாசன் மட்டுமே கடைச் காலத்தில் அம்மாவுடன் இருக்கிற பாக்கியத்தைப் பெற்றான். அவன் 2001ல் அம்மா அப்பாவை (வ.ஐ.சண்முகம்பிள்ளை) பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவென்று ஜெர்மனியில் இருந்து சென்றிருந்தான். அன்றிருந்து இறுதிவரை அவர்களுடனேயே இருந்தான். அது ஒன்றுதான் கடந்த ஐந்துவருடங்களாக எமக்கிருந்த ஒரே ஆறுதல். சொந்த மகளைப்போல எங்கள் அம்மாவை நெடுங்காலமாக பராமரித்த மச்சாள் மகள் சசியின் அரவணைப்பில் எனது அம்மாவின் கண் மலர்கள் இறுதியாகக் குவிந்தன. இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பாதுகாப்புக் காரணங்களால் அம்மாவின் மரணச் சடங்கில்கூட கலந்து கொள்ள முடியவில்லை. நாம் எல்லோரும் அவளது இறுதி நாட்களில் வன்னியில் கூடி ‘தீயினை முந்தி திரு உடலில் முத்தமிட’ வாய்க்குமென நம்பியிருந்தோம். சிரமத்துகிடையே லண்டனில் இருந்து வன்னிக்கு சென்ற தங்கை லலிதாவுக்கும் இறுதித் தருணங்களில் அம்மாவின் திரு உடலைத் தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. உலகம் முழுவதும் அகதிகளாக சிதறி இருந்த நாம் எமது துணைகளோடும் பிள்ளைகளோடும் சென்னையிலும் பிராங்பேட்டிலும் ஒஸ்லோவிலும் ரொறன்ரோவிலும் கூடி அம்மாவின் பெருவாழ்வு பற்றி பேசி அழுது மனம் ஆறினோம். ஓரிரு தடவைகள் மட்டுமே அவளை சந்தித்திருந்த பேரப் பிள்ளைகள் பல்வேறு மொழிகளில் அஞ்சலிக் கவிதை எழுதினார்கள். அம்மா அன்னிய நாடுகளில் சிதறி வெவ்வேறு அன்னிய மொழிகளைப் பேசும் அவர்க¨ளை பேசும் தமிழும் உன்னுடைய நினைவும் தாயகக் கனவும்தானே அம்மா இணைத்து வைத்திருக்கிறது.

எங்கள் அம்மாவும் அப்பாவும் 1920ம் ஆண்டு பிறந்ததாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த காலத்தில் பிரிட்டிஸ் நிர்வாகம் பெண்களின் திருமண வயதை இரண்டு வருடங்களால் அதிகரித்ததாம். இதனைப் புறந்தள்ள பெரும்பாலான யாழ்ப்பாணத்துப் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் வயதை இரண்டு வருடங்களால் அதிகரித்து பதிவு செய்தார்களாம். அம்மாதான் சொன்னாள். இந்த வழக்கப் படி 1920ல் பிறந்ததாகப் பதிவுசெயப்பட்ட எனது அம்மாவின் உண்மையான பிறந்த ஆண்டு 1922 எனவும் ஒரு கருத்துள்ளது. எனினும் உறுதி செய்ய முடியவில்லை.

பெயர் அற்று மறைந்துபோன பல அறியப்படாத பெண் விடுதலைப் போராளிகளது பங்களிப்புகளிலேயே நமது பெண்கள் இன்று தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள். வாழ்விலும் கலைகளிலும் போராட்டங்களிலும் தலை பணியாத சதாரண மனிதர்களின் சரித்திரமும் சேர்ந்தது அன்றோ நம் வீர வரலாறு. அறியப் படாத பெண் விடுதலைப் போராளியான என்னருமை அம்மாவின் போராட்ட வாழ்வை பதிவு செய்ய விரும்புகிறேன். பெண் விடுதலை சாதி சமத்துவம் என்கிற இரு கனிகளின் விதைகளை அம்மா எங்கள் நெஞ்சிலும் பயிரிட்டார். அம்மா எப்பொழுதும் எங்களின் ஆதர்சமாகவும் வழி காட்டியாகவும் இருக்கிறார்.

அம்மாவின் கருத்தியலை கிறிஸ்துவ மிசனரிகளால் நடத்தப் பட்ட உடுவில் மகளிர் கல்லூரியில் கற்ப்பித்த அமரிக்க பெண்கள்து வாழ்வும் மகாத்மா காந்தியின் கொள்கைகளும் ஆழமாக பாதித்திருந்தது.
அந்நாளைய பெண் விடுதலை வாதிகளின் கோட்டையாக இருந்த உடுவில் மகளிர் கல்லூரியும் சின்னம் சிறுமியாக இருந்தபோது இடம்பெற்ற ஒரு சந்திப்புமே அம்மாவின் வாழ்க்கைகான கருத்தியலை நிர்ணயித்தது.

1927ல் உடுவில் மகளிர் கல்லூரியில் ஒரு பெருவிழா இடம்பெற்றது. பூந்தோட்டமாய் செளித்திருந்த வளாகத்துக்குள் முழு யாழ்ப்பாணக் குடா நாடுமே கூடியிருந்தது. வளமைக்கு மாறாக மண்டப முன்றில் வரை அனுமதிக்கப்பட்ட கருப்புக் காரில் இருந்து வாழ்த்துக் கோசங்கள் ஒலிக்க விழா நாயகன் மேடைக்கு அழைத்துச் செல்லப் படுகிறார். அவரோடு கூட மேடையில் பத்து பிரமுக பிரமுகிகள் இருந்தனர். இவை எல்லாம் எண்பத்தி ஐந்துவயதில் நாம் அம்மாவை உடுவில் மகளிர் கல்லூரிக்கு அழைத்த்ச் சென்ற போது அவள் சொன்ன கதைகள். அந்த விழாவின் ஆரம்பதில் அம்மாவும் ஒன்பது சிறுமிகளும் மலர் மாலை ஏந்தி நடனமாடியபடி ஐந்து ஐந்து பேரார்கொண்ட இரு அணிகளாகப் பிரிந்து இரு புறத்தில் இருந்தும் மேடை ஏறினார்களாம். வலதுபக்க அணிக்குத் தலமை தாங்கி ஆடிச் சென்ற அம்மாவிடம் நடு நாயகமாக இருக்கும் சட்டை போடாத மாமாவுக்கு மாலை போடும்படி கூறப் பட்டிருந்தது. அம்மா அந்த நிகழ்வை தனது முழு வாழ்நாளிலும் இடம்பெற்ற மிகப் பெரும் பாக்கியமாக கருதினாள். பின்னர் அம்மாவின் வாழ்நாள் முழுவதையும் அவளது வாழ்வின் கருத்தியலையும் அந்த மாலை சூடிய நிகழ்வு பாதித்தது. மகாத்மா காந்திதான் அந்த சட்டை போடாத மனிதர்.

2

அம்மா 1955ம் ஆண்டுவரை வரை உடுவில் கிராமத்திலும் அதன்பின்னர் ஒன்பது வருடங்கள் நெடுந்தீவிலும் வாழ்ந்தார். 1964ல் இருந்து இறுதிவரை வன்னி மாநிலத்தில் உள்ள வடகாட்டில் வாழ்ந்த அம்மாவும் அப்பாவும் இடையில் இரண்டு வருடங்கள் (2001 – 2003) தம்பி பாரதியுடன் தமிழகத்தில் தங்கியிருந்தனர். அவள் பெற்ற பிள்ளைகள் எல்லோருமே அகதிகளாக உலக உருண்டையில் அலைகிறோம். கடைசி ஆறு வருடங்களாக அம்மா அப்பாவைப் பராமரித்ததில் இருந்து அம்மாவின் மரணச் சடங்குவரைக்கும் எங்கள் எல்லோரது கடமைகளையும் தம்பி பாரதிதாசன்தான் நிறைவுசெய்தான்.

அம்மாவும் அப்பாவும் கவிதையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அம்மாவுக்கு தமிழ் ஆங்கிலக் கவிதைகளிலும் அப்பாவுக்கு தமிழ் கவிதைகளிலும் நல்ல புலமை இருந்தது. அப்பாவுக்கு சிங்களக் கவிதைகளிலும் நல்ல கேழ்வி ஞானம் இருந்தது. கவிதை ஒன்று மட்டுமே அவர்களின் சந்திப்பு புள்ளியாக இருந்தது.

நானும் தங்கை இராதாராணியும் உடுவிலில் பிறந்தோம். வணிதாசனை பெறுவதற்காக அம்மாவுடன் நாங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து 1949ல் நெடுந்தீவுக்கு சென்றுவந்தோம். அதுதான் எங்களது முதல் நெடுந்தீவுப் பயணம். நிறைமாதமாக இருந்தபோதும் அம்மா அயராத உழைப்பாளியாக இருந்தாள். உதவிக்கு ஆட்கள் பலர் இருந்தும் தானே எல்லாவற்ரையும் வலிந்து செய்வாள். தம்பி பிறந்த அன்று காலையில் உதவிக்கு வந்தவர்களை நிராகரித்துவிட்டு பிடிவாதமாக தனது கைகளால் கிணற்றில் இருந்து பாரத் துலா ஏற்றத்தில் நீர் இறைத்து எங்களைக் குளிப்பாட்டினாள். அந்த நாட்களில் மகப் பேறுகால மரணத்தின் விழுக்காடு அதிகமாக இருந்தது. நெடுந்தீவில் மருத்துவ வசதிகளும் இல்லை. அந்த நாள் தனது இறுதி நாளாக அமைந்துவிடக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை அவள் உணர்ந்திருந்தாள். இதனால் பிரசவத்துக்கு முந்திய தருணங்களை எங்களோடு எங்கள் பணியில் களிக்க விரும்பியிருக்கிறாள். குளிப்பாட்டும்போது எங்கள் மெய் தீண்டி மகிழவும் அறிவுரை கூறவும் விரும்பினாள். எங்களுக்கு குளிப்பாட்டி முடிந்த கையோடு அம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது இப்பவும் நினைவில் இருக்கிறது. இதுதான் எங்கள் அம்மா.

அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் DSc பட்டத்தை இலக்காக வைத்து படித்தவள். வீட்டில் அடுத்தடுத்து ஏற்ப்பட்ட மரணங்களால் கல்வி தடைப் பட்டபோது அங்கேயே ஆசிரியராக பணிபுரிகிற வாய்ப்பு அவளுக்கு கிட்டியது. அந் நாட்களின் விடுதலை அடைந்த பெண்கள் பலரைப் போலவே அம்மாவும் ஆண்களது மனிதாபிமானத்தில் அவநம்பிக்கையும் திருமணத்தில் வெறுப்பும் கொண்டவராகவும் திருமணத்துக்கு தப்பி ஓடுகிறவராகவும் இருந்தார். திருமணத்தைத் தொடர்ந்த தடைகளை மீறி அம்மா உடுவிலில் மிகவும் செல்வாக்காக இருந்தாள். என்ன கஸ்டப் பட்டாலும் எங்களை யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் கற்பிக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்கு இருந்தது.

அப்பா சிறுவயதிலேயே கல்வியை விட்டுவிட்டு வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிய தென் இலங்கைக்குச் சென்றார். அயராத உழைப்பாலும் திறமையாலும் மிகக் குறுகிய காலத்திலேயே அவர் மத்துகம நகரின் பிரபல வர்த்தகராக மேம்பட்டுவிட்டார். உடுவில் கிராமத்தில் சுருட்டுக் கைத்தொழிற்சாலை ஆரம்பித்தார். அவருக்கு அம்மாவின் சகோதரர்களின் உதவியும் நட்பும் கிடைத்தது. இப்படித்தான் அப்பாவுக்கு அம்மாவின் குடும்பதோடு தொடர்பேற்பட்டது. நிறைந்த கேழ்வி ஞானம் இருந்தபோதும் அம்மாவைப்போல முறைப்படி கற்கவில்லையே என்கிற கவலை அப்பாவை ஒரு மனச் சிக்கலாகவே பீடித்திருந்தது. ஆரம்பத்தில் இருந்தே என்னையும் தம்பிகளையும் அம்மாவின் விருப்பத்துக்கு மாறாக வர்த்தகதில் ஈடுபடுத்தவேணும் என்கிறதுதான் அப்பாவின் விருப்பமாக இருந்தது. இதன்மூலம் அம்மாவைத் தோற்கடித்து இறுதி வெற்றி பெற்றுவிடலாம் என அவர் நம்பினார். எனது சகோதரிகள் படிக்கிறதையும் அவர் விரும்பவில்லை. அம்மாவோ நாளை எனது பிள்ளைகள் பிச்சை எடுத்தாலும் பறுவாயில்லை அவர்கள் படித்து புகழுடன் வாழவேண்டும் என போராடுவாள். அதுமட்டுமே அம்மாவின் தவமாகவும் விருப்பமாகவும் இருந்தது.

சிறு பிராயத்தில் இருந்தே செல்வாக்காகவும் பலமாகவும் இருந்த உடுவில் கிராமத்தில் இருந்து அம்மாவின் வேர்களை அறுத்து 1955ல் நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்றபோது அம்மாவைத் தனிமைப் படுத்துகிறதில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக அப்பா பெருமிதம் அடைந்தார். ஆனால் நெடுந்தீவிலும் எங்கள் அம்மா ஓய்ந்திருக்கவில்லை. அப்பா வருடத்தில் பெரும்பாலான நாட்கள் வெளி ஊர்களில் இருப்பார். மோதல் வாழ்வில் அம்மாவுக்கு ஆறுதலாக இருந்த விடயம் அதுதான். அந்த காலங்களில் எங்கள் வீடு நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்களின் ஆசிரமம் போலாயிற்று. வானொலி கேட்க்க, பத்திரிகை வாசிக்க, தையல் மெசின் பழக, ஆங்கிலம் படிக்கவென்று இளம் பெண்கள் எப்பவும் அம்மாவைச் சுற்றி இருப்பார்கள். விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் பற்றியும் அறிந்துகொள்ளவென்று நெடுந்தூரத்தில் இருந்தும் பெண்கள் வருவார்கள். நெடுந்தீவில் 1950களின் நடுப்பகுதியில் இருந்து 1960பதுகளின் நடுப்பகுதி வரைக்குமான காலக் கட்டத்தில் பெண் விடுதலைக்கும் தமிழர் விடுதலைக்குமாக இளம் பெண்களை அணிதிரட்டுவதற்க்கு அம்மாவும் அவளது தோழிகளும் அயராமல் உழைத்தார்கள்.

வ.ஐ.சண்முகம் பிள்ளை சகோதரர்களுக்கு மத்துகமவிலும் (V.I.Shanmugampillai & Brothers) மன்னாரிலும் (மன்னார் ஸ்ரோஸ்) நெடுந்தீவிலும் (புதுக்கடை) கடைகள் இருந்தது. அக்கரையானிலும் மண்ணியா குளத்திலும் விவசாய பண்ணை இருந்தது. இதனால் அப்பா பெரும்பாலும் இலங்கையின் தென் நகரமான மத்துகம சென்றுவிடுவார். அல்லது அக்கரையான் பண்ணையிலோ மன்னார் கடையிலோ இருப்பார். இது வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் அம்மாவுக்கு சுதந்தரமாக செயல்படுவதற்க்குத் தேவையான வெளியை உருவாகியது. விடுமுறையில் அப்பா வீடு வருவதை நாங்கள் அஞ்சினோம். இத்தகைய மோதல் துன்புறுத்தல் பின்னணியிலும் அம்மா பணிந்துபோகாமல் தொடற்சியாக வெற்றி பெற்றாள். அயராத மாதர் இயக்க சமூக அரசியல் பணிகள்மூலம் இளம் பெண்கள் மதியிலும் ஏழைகள் மத்தியிலும் அம்மா செல்வாக்குப் பெற்றபோது அப்பா ஆடிப்போனார். எத்தனை அடித்து நொருக்கினாலும் நீ வென்றுவிடவில்லை என்றபடி மீண்டும் உயிர்த்தெழுகிற வல்லமையை அவள் மகாத்மா காந்தியிடம் இருந்து வரித்திருந்தாள். அம்மாவைத் தனிமைப் படுத்தி தோற்கடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு அவளை நெடுந்தீவுக்கு அழைத்து வந்த அப்பாதான் இறுதியில் தோற்றுப் போனார். அம்மா நெடுந்தீவிலும் ஆலமரம்போல வேரூண்றி விழுதுவிட்டாள். இதன்னால் வெறுத்துப்போய் அப்பா எங்களை வன்னியின் காட்டு பகுதியில் இருந்த வடகாட்டுக்கு பிடிவாதமாக அழைத்துச் சென்றார். எங்கள் கல்விபற்றி எப்பவும் அவருக்கு அக்கறை இருக்கவில்லை. அம்மாவை தனிமைப் படுத்தி வெற்றி பெறுவது மட்டுமே அவரது ஒரே குறிக்கோளாக இருந்தது. இப்படி 1964ல் நிரந்தரமான குடியிருப்புகளோ பாடசாலைகளோ இல்லாத நடுக் காட்டில் எங்களை குடிவைத்த பிறகுதான் அப்பா அமைதி அடைந்தார். எங்கள் சகோதரிகளது கல்வி வாய்ப்பு முற்றாகப் பட்டுப் போனது. எங்கள் கல்விக்காக அம்மா நித்தமும் போராட வேண்டி இருந்தது. வீட்டிலும் நாட்டிலும் நிலவிய ஒடுக்குதல் சூழல் மாணவப் பருவத்திலேயே என்னை ஒரு கிளற்சிக் காரனாக்கியது. இத்தனை ஒடுக்குதலையும் நெருக்கடிகளையும் அம்மாவால் எப்படி சாத்வீகமாக எதிர்கொள்ள முடிந்தது?

அம்மாவும் அப்பாவும் எங்கள் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் நெடுங்கால ஆதரவாளர்கள். அம்மா 1961ல் யாழ் கச்சேரிக்கு முன் ஈழத்துக் காந்தி என புகழ் பெற்ற திரு எஸ்,ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற வரலாற்றுப் புகழ் பெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் நெடுந்தீவு மாதர்சங்க தோழியர்களோடு சென்று பங்குபற்றினாள். அப்பா தீவிர தமிழ் தேசிய வாதியானபோதும் அரசியலில் பெண்களது பணி நிகழ்ச்சிகளில் தேனீரும் உணவும் தயாரித்து வளங்குவது மட்டும்தான் என்று நம்பினார். அப்பாவின் தமிழ் தேசியவாதமும் வெளிவாரியானது. வெளிவாரியாக மட்டுமன்றி தமிழரிடையே உள்வாரியாகவும் பால் சாதி சமத்துவத்துக்கும் தமிழர் போராட்டங்கள் வழி வகுக்க வேண்டும் என்கிற ‘சம ஆசனம் சம போசனம்’ கொள்கையை அம்மா ஆதரித்தார். அம்மா செல்வாக்குப் பெறுவதை அப்பா விரும்பவில்லை. அதன் பின்னர்தான் அம்மாவுக்கும் எங்களுக்கும் வனவாச தண்டனை கிடைத்தது. 1964ல் விருப்பத்துக்கு மாறாக வன்னியின் காட்டுப் பகுதியான வடகாட்டில் இருந்த விவசாயப் பண்னைக்கு நாங்கள் அழைத்துவரப்பட்டோம்.

1970பதுகளின் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள இனவாதிகளால் தேயிலை ரப்பர் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் வாழும் பெருந்தோட்டங்களில் உணவு நெருக்கடி ஏற்படுத்தப் பட்டது. அவர்களில் சிலர் அகதிகளாக தங்கள் பெண்டு பிள்ளைகளோடு வன்னி மாநிலத்துக்குப் புலம் பெயரத் தொடங்கினார்கள்.
மலையகத் தமிழர்கள் எங்கள் காட்டுத் தெரு வழியே அகதிகளாக செல்லத் தொடங்கினர். ஒவ்வொரு நாழும் எங்கள் தனிக் காட்டு வீட்டு வாசலில் அகதிகளின் குரல் கேட்கும். மலையக தமிழ் அகதிகள் வரவால் அந்தக் காட்டுக்கும் அம்மாவுக்கும் புது வாழ்வு உருவாகியது. மிழகாய் வெண்காயம்போன்ற பணப் பயிர் செய்கையில் லாபம் அதிகரித்துச் சென்ற அந்த நாட்களில் கூலி ஆட்களின் தட்டுப்பாடுதான் வன்னியின் பெரும் பிரச்சினையாக இருந்தது. மலைய தமிழ் அகதிகளின் வரவு வன்னியின் விவசாய வளற்ச்சியிலும் அரிசி ஆலைகள் போன்ற சிறு கைத்தொழில் வளர்ச்சியிலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. 1970பதுகளின் நடுப்பகுதியில் வீதியால் சென்ற மலையகத் தமிழ் அகதிகளின் தன்னீர்ப் பந்தலாக தங்குமடமாக எங்கள் வீடு மாறியது. இயன்றவரை அம்மா அவர்களுக்கு ஆதரவாக இருந்தாள். அவர்களுக்கு உதவ சொந்த வீட்டிலும் சொந்த பண்னையிலும் திருடினாள்.

மலையக தமிழ் அகதிகளின் வியர்வையிலும் கண்ணீரிலும் வன்னியின் பணப் பயிர் விவசாயம் பொற் சுரங்கமாக மாறிய நாட்கள் அவை. மலையக தமிழ் அகதிகள் வன்னி தோடங்கள் சிலவற்றில் மறுவாழ்வு பெற்றனர். சிலவற்றில் குறைந்த சம்பளம் அதிக வேலை என சுரண்டப் பட்டனர் சிலவற்றில் அவர்கள் கொத்தடிமைகளாக சிதைக்கப் பட்டதைக் கண்டு நானும் என் தோழர்களும் கொதித்தோம். அகதிகளில் சிலர் வடகாட்டிலும் குடியேறினார்கள். இறுதியாக அந்த காட்டின் மத்தியிலும் மக்கள் வாழும் சிற்றூர் ஒன்று மெல்ல மெல்ல உருவாகி வளர்ந்தது.
பொல்லாத விதிக்கு எங்கள் அம்மாவை அடிக்கடி வேரறுக்கவும் அடித்து நொருக்கவும் முடிந்தது ஆனால் ஒருபோதும் அவளை வெற்றிபெற முடியவிலை.

3

1944ல் அம்மாவின் திருமணம் ஒரு விபத்துப் போல நிகழ்ந்தது. திருமண நெருக்கடிகள் உடுவில் மகளிர் கல்லூரி விடுதிக் கதவையும் தட்ட ஆரம்பித்தபோது அம்மா தென் இலங்கைக்கு மாற்றமாகி தப்பிச் சென்றாள். கொழும்பு புறநகார தெகிவளை மகளிர் கல்லூரியில் அவளுக்கு வேலை கிடைத்தது. எனினும் அம்மவின் அண்ணன்மார் அவளது பாட்டியார் மரணமாகிவிட்டதாக பொய் தந்தி கொடுத்து அழைத்து திருமணம் செய்துவைத்து விட்டனர். அம்மாவின் பெண் சுதந்தர வேட்கையே திருமண நிராகரிப்புக்கு காரணமாக இருந்தது. ஆனால் அப்பாவோ தனது கல்வி நிலை காரணமாகவே அம்மா தன்னை நிராகரித்ததாக தவறாகப் புரிந்து கொண்டார். இன்றுகூட ஆண்கள் பலர் தங்கள் வட்டத்தைத் தவிர பெண்களுக்கு வேறு உலகம் இல்லை என்று கருதுகிறார்களல்லவா? இன்றும்கூட ஆண்கள் பலர் பெண்களுக்குத் தாங்கள் மையப்படாத கருத்துக்களும் காரியங்களும் விருப்பு வெறுப்புகளும் கிடையாது என்று நம்புகிறார்கள் அல்லவா?. இந்த ஆண் புத்தி அபத்த புத்தி.

திருமனத்துக்குப் பின்னர் அம்மா அஞ்சியதுபோலவே அவளது கனவுகள் நொறுங்க சிறகுகள் முறிக்கப் பட்டது. அம்மா தனது சிறை இருப்பிலும் இறுதிவரை போராடி தனது இலட்சியங்களைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்தாள் என்பதுதான் சிறப்பு. அவளுடைய ஆற்றலுக்கும் தலைமைப் பண்புக்கும் இலட்சிய நோக்கிற்க்கும் ஓரளவுக்கேனும் பெண்ணுரிமைச் சூழல் உள்ள வீடும் வாழ்வும் அமைந்திருந்தால் மானுடம் பயனுறும் பெருவாழ்வு வாழ்ந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.

உடுவில் மகளிர் கல்லூரியில் பணிபுரிந்த அமரிக்க பெண்களின் கருத்துக்களும் மகாத்மா காந்தியின் கொள்கைகளும் அம்மாவில் அதிகம் செல்வாக்குச் செலுத்தின. உறுதியான சீர்திருத்த வாதியான அவள் சத்தியம் வெல்லும், சாதகமான மாற்றங்கள் எப்படியும் ஏற்பபடும் என உறுதியாக நம்பினாள்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வருவாய் மார்க்கங்கள் பெருகி மதியதர வர்க்க வளற்ச்சி துரிதப் பட்டு சுவர்க்கம் எனப்பட்ட யாழ்ப்பாணம் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் நரகமாவே இருந்தது.
இத்தனைக்கும் தென்னாசியாவில் அதிக சமூக பொருளாதார பாதுகாப்புள்ள பெண் சமூகங்களுள் இலங்கைத் தமிழ் பெண் சமூகம் முன்னணியில் இருந்தது. இலங்கையில் மரபுரீதியாக தமிழர்களின் சொத்துடைமை திருமண முறைமை என்பவை பெரிதும் தாய்வழி சமூக அம்சங்களைக் கொண்டிருந்தது. நிலம் வீடு போன்ற சொத்துக்கள் பெரும்பாலும் பெண்ணுக்கே சீதனமாகச் சேர்ந்தது. 1850பதுகளில் ஒரு ஐரோப்பியர் யாழ்பாணத்து நிலங்களில் பெரும்பகுதி பெண்களது உடமையாக இருந்ததை பதிவு செய்திருக்கிறார். யாழ்ப்பாணத்து மரபுச் சட்டமான தேச வளமையின் படி சீதனத்தை கணவன் விற்கவோ பிறருக்கு கொடுக்கவோ முடியாது. அது மரபு ரீதியாக அவர்களது பெண்பிள்ளைகளுக்கும் பின்னர் பெண் பேரப் பிள்ளைகளுக்குமே உரியது. நடைமுறையிலும் சொத்து பகிர்வில் முன்னுரிமையும் பெண்களுக்கே இருந்தது. இந்தியாவைப் போல திருமணத்தின் பின்னர் பெண் கணவனின் விட்டுக்குச் சென்று வாழ்கிற மரபும் இலங்கைத் தமிழர்களிடயே நிலவவில்லை. இலங்கைத் தமிழரது மரபுப்படி கணவன் தனக்கு சீதனமாக கிடைத்த மனைவியின் வீட்டுக்கே செல்கிறான். பெண்களுக்கு இத்தனை சமூக பொருளாதாரப் பாதுகாப்புகள் இருந்த யாழ்ப்பாணத்தில் ஏன் எனது அம்மா பெரியம்மா சின்னம்மா எல்லோரும் மிக மோசமாக ஒடுக்கப்பட்டனர் என்கிற விசாரண எப்பவும் எனக்குள் இருந்தது.

சமூக மாற்றங்கள் பெண்களது தழைகளை அறுத்துவிடும் நிலை ஏற்பட்டபோதெல்லாம் சமய கலாச்சார விவாதங்கள் மேலோங்கின. இத்தகைய விவாதங்களின் கொடுமுடி ஆறுமுக நாவலர் தலைமைதாங்கிய விவாதங்களாகும். இத்தகைய விவாதங்கள் அன்னியர்களையும் அன்னிய சமயங்களையும் குற்றம் சாட்டினாலும் அடிப்படையில் அவர்களது அச்சங்கள் மாற்றங்களுள் சாதிய அமைப்பை மாறாமல் காப்பாற்றுவது பற்றியதே. மொழி கல்விவளர்ச்சி சார்பான நாவலரின் பங்களிப்புகளும் அவரது அன்னிய சமய கலாச்சார எதிர்ப்பும் அவரது பன்முக ஆழுமைகளும் அவரது பிற்போக்கான கருத்தியலை நியாயப் படுத்திவிடாது. நாவலரின் மொழிசார்ந்த்த பங்களிப்புகளைப் பதிவுசெய்வது அவசியம். ஆனால் 1970பதுகளின் பின்னர் முற்போக்கான தமிழ் அறிஞர்கள் சிலர் நாவலரது பிற்போக்கான கருத்தியலையும் இயக்கத்தையும் முற்போக்கான கொலோனியல் எதிர்ப்பு கருத்தியலாகவும் இயக்கமாகவும் அடையாளப் படுத்த ஆரம்பித்தது அதிற்ச்சியும் ஆச்சரியம் தருகிறது.

நாவலரின் இயக்கம் கிறிஸ்துவ சேர்ச்சுகளை எதிர்த்தாலும் உண்மையில் தமிழ் மக்கள் சார்பு பக்தி மார்கமான சிறுதெய்வ கோவில்களையும் வழிபாட்டையுமே திவிரமாக எதிர்த்தது. அடிப்படையில் நாவலரின் போராட்டம் கிராமிய பூசாரிகள் தலைமையிலான கிராமிய கலைகளை வளர்த்த பெண்கள் பங்களிப்புள்ள தமிழ் வழிபாட்டு சிறுதெய்வக் கோவில்களை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து பெரும்பாலும் துடைத்தழித்தது. மக்களிடம் இருந்து வழிப்பாட்டையும் கலாசாரத் தலைமையையும் இலக்கியத்தையும் பிடுங்கி மேல் சாதியனரதும் ஆகமக் கோவிகளின் கையில் களினதும் கைகளில் கொடுப்பதே நாவலர் இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.
தமிழக வரலாற்றிலும் பகுத்தறிவு இயக்கம் சிறுதெய்வ வழிபாட்டினைப் பலகீனப் படுத்தியதன் மூலம் தனது நோக்கத்துக்கு மாறாக ஆகமக் கோவில்களும் சமஸ்கிரதமயமாகுதலும் பலப்பட வழிவகுத்துவிட்டது. நமது கொள்கைகள் எதுவானாலும் நமக்கு முன் உள்ள வரலாற்று தெரிவு மக்கள் சார்ப்பான சிறுதெய்வ தமிழ் வழிபாட்டுக்கும் ஆகம கோவில் சார்ந்த சமஸ்கிரத மயமாதலுக்கும் இடையிலானதுதான். இதில் நடுநிலை வகித்தாலும் நமது தெரிவுமாக சமஸ்கிரத மயமாகலே வெற்றிபெறும்.

அதிஸ்டவசமாக தமிழர்களின் கலைப் பொக்கிசங்கள் செழித்திருந்த மட்டக் களப்பையும் திருகோண மலையையும் வன்னியில் சில பகுதிகளையையும் நாவலரின் செல்வாக்கு பாதிக்கவில்லை. இதனால் இன்று ஈழத் தமிழரின் கலை என்று தலைநிமிர வடமோடிக் கூத்து எஞ்சி உள்ளது. இன ஒடுக்குதலால் கிராமிய விழாக்கள் அமைப்பு குலைந்துபோய் கிராமியக் கலைஞர்களும் அ XXXXXXXXXXXXண்ணாவிமார்களும் அகதிமுகாங்களில் முதுமை அடைந்து காலமாகிற அபாயம் ஏற்பட்டுள்ளபோதும் உதவிகள் ஏதும் இல்லாத நிலையிலும் 1970களில் இருந்தே இக்கலைகளைக் காக்க டாக்டர் மெள்னகுரு போன்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவது நம்பிக்கை தருகிறது. இவ்வகையில் மட்டக் களப்புப் பல்கலைக் களகத்துக்கும் தமிழர்கள் அனைவரும் நன்றி சொல்லவேண்டும்.

தொடற்ச்சியாக தென்னிலங்கையிலும் மலேசிய சிங்கபூரிலும் கேரளத்திலும் இருந்து பாய்ந்த பணத்தினால் யாழ்ப்பானத்தில் மட்டுமீறி நடுத்தர வர்க்கம் வளற்ச்சிபெற்ற சென்ற நூற்றாண்டின் ஆரம்பதிலேயே பெண்கள் விடுதலை செயல்பட்டிருக்க வேண்டும். ஏன் அது இடம்பெறவில்லை? ஏன் எனது அம்மாவின் காலங்கள் துயரமானது? தவறு எங்கே இருந்தது?

விடுதலைக்கு கட்டியம்கூறும் சமூக பொருளாதார மாறங்கள் எல்லாம் பெண்கள் விடுதலைக்கு ஏன் வழி வகுக்கவில்லை? உண்மையில் தென்னாசிய சாதிய சமூகங்களில் பரந்துபட்ட தலத்தில் சமூக பொருளாதார வளற்ச்சியும் புதிய வர்க்கங்களின் எழுச்சியும் இடம்பெறும் வாய்ப்புகள் இல்லை. சகல அபிவிருத்திகளும் சாதி ரீதியாக மட்டுப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் சாதிய சமூகங்களில் சமூக பொருளாதர வளற்சியும் மாற்றங்களும் பரவலான மக்கள் மட்டத்தில் சுதந்தரமாக செயல்பட்டுகிற வாய்ப்பு மறுக்கப் படுகிறது.இப்படி ஒற்றைக் கால் ஒற்றைக் கண் பறிக்கப் பட்டு நொண்டியாக்கப் படுகிற மாறுதல்களுக்கான சமூக பொருளாதார கலாச்சார சக்திகள் பழைய தளங்களை உடைத்துக் கொண்டு எழுகிற வாய்ப்பையும் வீரியத்தையும் இழது விடுகின்றன. இப்படித்தான் வளற்சியை சாதி அடிப்படையில் திசைதிருப்பி பொருளாதார மாற்றங்களில் சமூக கலாச்சார மாறாமையை பரமரிக்கும் சமரசங்கள் மேடை ஏற்றப் படுகின்றன. இதனால் பழைய வர்க்க அமைப்பை உடைத்துக்கொண்டு எழ வேண்டிய புதிய வர்க்கங்கள் சாதிய அடிப்படையில்ருயர் சாதிசார் உயர் வர்க்க அமைப்புடன் சமரசமாக அதன்மீதே நிகழ நிர்பந்திக்கப் படுகிறது. இதுதான் இந்திய சமூகங்களின் மாற்றங்களிலும் மாறா நிலையின் யின் அடிப்படை. எனது அம்மாவும் அவளது தலைமுறைப் பெண்களும் அவலது காலத்தில் தீவிரமாக இருந்த இத்தகைய சமரசங்களால்தான்.

உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட முதல் விடிவு 1930 – 1970களில் தலித்துகளின் தலைவர்களும் கம்யூனிஸ்டுகளும் ஒருசில காந்திய வாதிகளும் முன்எடுத்துச் சென்ற சாதி ஒடுக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களின் வெற்றிகள்தான் காண்கிறேன். சாதிரீதியாக பிழவு பட்டிருந்த தமிழர்கள் பலமான ஒரு தேசிய இனமாக ஒன்றுபட மேற்படி வெற்றிகள் வழிவகுத்தன. பெண்விடுதலையின் குரல்களும் இக்காலக் கட்டதில் இருந்தே யாழ்ப்பாணத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. பின்னர் தென்னிலங்கை கம்யூனிஸ்டுகள் சிங்கள இனவாதிகளுடன் சமரசம் செய்ததால் கம்யூனிச இயக்கம் தோற்றுப் போனது. எனினும் தமிழ் மக்களின் முதல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற திருவாளர்கள் யோவேல் போல், எம்.சி.சுப்பிரமணியம், என்.சண்முகதாசன், என்.ரி.நாகரத்தினம், கே.டானியல், டோமினிக் ஜீவா போன்றவர்களை எமது வீர வரலாற்றின் முன்னொடிகளாக அடையாளப் படுத்த நாங்கள் ஒருபோதும் தயங்கக் கூடாது. இது வீரமிக்க தேசிய இன விடுதலைப் போரட்டத்தின் வரலாற்றுக் கடமையும்கூட.

சாதிய ஒடுக்குதலுக்கான எல்லா தழைகளும் கலாச்சாரமும் இறுதியில் பெண்கள்மீதே பிணிக்கப் படுகிறது. பெண் கற்புப் பற்றிய விவாதங்கள் எல்லாம் அடிப்படையில் சாதிரீதியாக பெண்களை தனிமைப் படுத்தும் விவாதங்கள்தான். இன சாதியவரம்புகளை உடைக்கக்கூடிய மானிடகலசமான கருப்பை இல்லாத ஆணுக்கு கலாச்சாரங்கள் கற்பை வலியுறுத்தவில்லை. நமது பத்தாம் பசலிக் கலாச்சாரத்தில் ஆணுக்கு கட்டில்லை. பெண்னோ கட்டுப்பட்டு இன சாதி தூய்மையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றவெண்டியவள். சமூக பொருளாதார வளற்ச்சி துரிதப் பட்டிருந்த எனது அம்மாவின் காலங்கள் பற்றிய ஆய்வு எனக்கு உணர்த்திய விடயங்கள் இவைதான்.

தாய்வழி சமூக அடிப்படையில் பெண்களது உரிமைகளை உறுதிப் படுத்திய அதே யாழ்பாணத்து தேசவழமைச் சட்டமும் மரபுகளும் தலித்துகள் மீது மிக கொடுமையான ஒடுக்குதலை கட்டவிழ்த்து விட்டிருந்தது. எல்லா இன அமைப்பும் உள்வாரியான சமூக ஒடுக்குதலுக்கு வாய்ப்பளிக்கும் எல்லா கலாசார மரபுகளையும் சட்டங்களையும் பெண்களை ஒடுக்க பயன்படுத்தும். சாதி ஒடுக்குதல் மார்க்கங்கள் எல்லாம் இறுதியில் பெண் ஒடுக்குதலிலேயே போய் முடிவடைகிறது. பெண்விடுதலைக்கு முன்நிற்கிற நமது பெண்கள் அணிகள் பெண்கள் விடுதலையையும் மாற்ங்களையும் விரும்புகிற எங்களது இளைஞரது அணிகள் ஆண் பெண் உறவில் சாதி வேறுபாட்டை தகர்க்காமல் பெண் விடுதலை இல்லை என்கிறதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

4

மாணவப் பருவம் மட்டிலுமாவது கிறிஸ்துவ மிஷனரி¢மாரால் நடத்தப் பட்ட மகளிர் கல்லூரிகளும் – விடுதிகளும் பெண் விடுதலைக் கருத்துக்களின் பசும்தரையாக இருந்தது. திருமணம் வரையேனும்முடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளும் ஆசிரியர்களும் பெண் விடுதலைக் காற்றைச் சுவாசித்தனர். பின்னர் ஐரோப்பியரான லேடி ராமநாதனின் நிர்வாகத்தில் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் ஓரளவுக்கு அத்தகைய சுழல் அமைந்தது என்று அம்மா சொல்லி இருக்கிறாள். வட்டுக்கோட்டையில் இயங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியும் மதுரை கிறிஸ்துவக் கல்லூரியும் உடுவில் மகளிர் கல்லூரியின் சகோதர நிறுவனங்களாகும்.

யாழ்ப்பாணத்தில் பொருளாதார மேம்பாட்டோடு கலாச்சார பிற்போக்குவாதம் வெற்றிகரமாக கைகோர்த்துக் கொண்டபோது கிறிஸ்துவ நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தின் முதன்மை சமூகத்துடன் சமரசம் செய்துகொண்டன. இத்தகைய சமரசங்கள் காலம் மாறுகிறது என்கிற நம்பிக்கையுடனும் விடுதலைக் கனவுகளுடனும் வாழ்ந்த அம்மாவின் தலைமுறைப் பெண்களையும் நசித்தது. திருமணத்துக்கான நிர்ப்பந்தம் வந்தபோதுளம்மா முதலில் வீட்டைத் துறந்து மகளிர் கல்லூரி விடுதிக்கும் பின்னர் பணி மாற்றம் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் துறந்து கொழும்பு மாநகருக்கும் சென்றாள். ???????????????????????

உடுவில் மகளிர் கல்லூரியின் பக்கத்தில் இருந்த அம்மாவின் வீட்டில் பெண்களும் எல்லோருமே விடுதலைக் கனவுள்ளவர்களாக இருந்தில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. மாணவப் பருவத்திலேயே பிரபல நாட்டிய நாடக கலைஞராக விளங்கிய அம்மாவின் அக்கா லில்லி சின்னம்மா அன்றைய இளைய யாழ்ப்பாணத்தின் கனவுக் கன்னியாக இருந்ததாக பல முதியவர்கள் நேர்காணல்களின்போது சொல்லியிருக்கிறார்கள். லில்லி சின்னம்மா பெண் விடுதலைக்கும் காதலுக்கும் எதிரான சூழலில் இளம்வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்டார். விடுதலை வேட்கையுள்ள அம்மாவின் இரண்டாவது அக்கா நகுலேஸ்வரி (நாகம்மா) திருமணத் தழைக்கு அஞ்சி கன்னியாஸ்திரியாகினார். எனினும் அவரது கதையும் இளம் வயதிலேயே முடிந்துபோகிறது.

அமெரிக்காவில் கற்று சிங்கப்பூரில் டாக்டராக பணிபுரிந்த அம்மாவின் அண்ணன் கனகரத்தினமும் ஆசிரியைகளான (ஒருவர் கன்னியாஸ்திரி) அவளது இரண்டு அக்காமாரும் அடுத்தடுத்து இளம் வயதிலேயே மரணமடைந்து போனார்கள். அந்த சோகத்தில் அம்மாவின் தாயாரும் இறந்து போனாள். தொடர்ந்த மரணங்களால் பணக்கார விவசாயியான எனது பாட்டனார் இடிந்துபோனார். அம்மாவின் குடும்பத்தில் இரண்டு அண்ணமாரும் ஒரு தங்கையும் தம்பியும் மட்டுமே எஞ்சி இருந்தார்கள்.

இலங்கைவாழ் தமிழர்களைப் பொறுத்து வடகிழக்கு மாகாணங்களில் வாழும் இலங்கைத் தமிழர் மத்தியில் அகவாழ்வில் தாய்வழி சமூக அமைப்பின் செல்வாக்கு வலுவாக இருந்தது. தமிழகத்தில் போல திருமணத்தின் பின்னர் பெண் தனது கனவனின் வீட்டுக்கு சென்றுவாழும் மரபு இல்லை. பதிலாக பெண்ணுக்கு சீதனமாக வீடும் நிலமும் கொடுக்கப் படுகிறது. நடைமுறையில் சொத்தில் பெண்பிள்ளைகளின் சீதனம்தான் முன்னுரிமை பெறுகிறது. சீதணத்தில் ஆண் கைவைக்க முடியாது. ஒப்பீட்டு ரீதியாக இத்தகைய அமைப்பில் பெண்ணுக்கு அக வாழ்வு ரீதியான பாதுகாப்பு அதிகம் என்பது உண்மைதான். எனினும் புற வாழ்வில் யாழ்பாணத்து ஆண் அதிக்க சாதி ஆதிக்க கலாசாரம் பெண்ணையும் ஒரு சாதிபோல ஆறாவது வர்ணமாக தாழ்த்தியே வைத்திருந்தது.

மேம்பட்ட கல்வியும் உள்வாரி வெளிவாரி புலப் பெயர்வுகளின் தாக்கமும் மத்திய தர வர்க்க எழுச்சியும் சாதி மற்றும் பெண்கள் விடுதலை கருத்துக்களின் நாற்றாங்கால்கள் ஆயின???????????????????????????????????

இப்படியே விட்டுவிட்டால் அம்மாவின் தங்கை கனகம்மாவும் அதே பாதையில் போய்விடுவாளென என் பாட்டனார் கவரமடைந்திருந்தார். ஒருநாள் என் சின்னம்மா, மண் விளையாடிக் கொண்டிருந்த போது, சின்னம்மாவை அவசரம் அவசரமாக பிடித்துக் குளிப்பாட்டி, தனது நிலத்தில் வேலைசெய்த உறவுக்காரப் பையனுக்கு அவசரத் திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணம் முடிந்த கையோடு மகிழ்ச்சியுடன் மீண்டும் மண் விளையாட ஒடிய சின்னம்மாவை துரத்திப் பிடித்த உறவினர்கள் “நீ இனி சின்னப் பிள்ளையல்ல கல்யாணமான குடும்பப் பெண்,” என்று அறிவுரை(?) கூறினார்களாம்.

அம்மாவின் தாயார் உடுவில் கிராமத்தைச் சேர்ந்தவரென்பதை ஏற்கனவே குறித்துள்ளேன். அம்மாவின் தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்த பிரபல சித்த சக ஆயுர்வேத மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். செங்கமாரி (Hepatitis) நோய்க்கு கீழ்காய் நெல்லியை அடிப்படையாக கொண்டு வைதியம் செய்வதில் அவர்கள் குடும்பம் முன்னிலை வகித்தது. 1930களின் ஆரம்பத்தில் அலோபதி டாக்டராக பணிபுரிந்த கனகரட்ணம் மாமா விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருக்கு கீழ்காய் நெல்லி அடிப்படையிலான குடும்ப வைத்தய சூத்திரங்களை அறியும் நோக்குடன் குடும்ப வைதிய ஏடுகளை தேடி நெடுந்தீவு சென்றிருந்தபோது யும் நோக்கில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்திருந்தபோது “””””””””””””””””””””””””””

திருமணத்தின் பின்னர் சிறகுகள் யாவும் நொறுக்கப்பட்டு, சமையலறை மூலையில் வீசப்பட்ட அம்மாவின் வாழ்க்கை நெறி எது? அதன் கருத்தியல் எது என்ன? அது எப்படி உருவானது?.

x

எனது அம்மா ஏழு பிள்ளைகள் பெற்று எட்டு பிள்ளைகளை வளர்த்து ஆளக்கியிருக்கிறாள். ஈழத்து நியதிபோல ஏழு பிள்ளைகளுமே வெளிநாட்டுகளில் சிந்திச் சிதறிப் போய்விட்டார்கள். வளர்த்த எட்டாவது பிள்ளையும் எட்ட இருந்தான். இருந்தபோதும் பெரும்பாலான ஈழத்து பெற்றோர்களைவிடவும் எனது அம்மாவும் அப்பாவும் அதிர்ஷ்டக் காரர்களாய் இருந்தார்கள். எனது தம்பி பாரதிதாசன் தான் அதற்குக் காரணம். சற்றும் யோசியாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு 2001 ஆகஸ்டில் இலங்கை சென்றவன் தொடர்ந்து கடந்த 6 வருடங்களாக அப்பா அம்மாவின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கிறான். அதற்காகத்தான் திருமணம்கூட செய்யாமல் இருந்தான் என்று தோன்றுகிறது. பிறாங்பேட் பல்கலைக்களக பழைய மானவனும் ஜெர்மனிய பிரசையுமான அவன் முன்னர் “கடைசி காலத்தில் அம்மா அப்பாவோடு போய் இருப்பேன்” என்று சொல்கிற போதெல்லாம் நாங்கள் யாரும் அது சாத்தியமானது என்று கருதியதுமில்லை பொருட்படுத்தியதும் இல்லை. இலங்கை தமிழரின் வளமைபோல புலம் பெயர்ந்துள்ள பிள்ளைகளில் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து வைத்திருப்பதுதான் எங்கள் திட்டமுமாக இருந்தது.நாங்கள் இந்தியா, நோர்வே, ஜெர்மனி, லண்டன், பிரன்ஸென சிதறி இருந்தோம். அழைப்பது தொடர்பான ஆரம்ப பிரச்சினைகள் தீர்ந்தபோது தங்கள் கடைசி காலத்தை வடகாட்டில் உள்ள பண்ணையில் கழிக்கிற விருப்பத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இந்த நிலையில் பாரதி ஜெர்மனியில் இருந்து திரும்பிவந்து அம்மா அப்பாவுடன் இணைந்து கொண்டான். பாரதி 2001ன் செப்ரெம்பரில் அவர்களை இந்தியா அழைத்து வந்தபோது நானும் சென்னையில் இருந்தேன். சென்னையில் எனது சகோதரி ராதாராணி நடராசா 1989ல் இருந்து சென்னையில் வசிக்கிறாள்.அப்பாவுக்கு அப்பலோ வைத்திய சாலையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த ஒரு சிறுநீரகம் அகற்றப் பட்டது. அப்பா இலங்கைக்கு போக வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். சென்னையின் வறண்ட சுவர்த் தோப்புகளுக்கும் செழித்த வன்னிக் காட்டு பண்ணைவீட்டுக்கும் இடையில் தேர்வு அவர்களுக்கு மிகவும் இலகுவானதாக இருந்தது. அம்மா மட்டும் இலங்கையில் எங்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை வரலாம் என்கிற அச்சத்தில் இந்தியாவில் இருக்க அரைமனசுடன் சம்மதித்தாள். சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். அவர்கள் சென்னையில் ஏறக் குறைய இரண்டு வருடங்கள் இ¢ருந்தார்கள்.
இக்காலத்தில் அவர்கள் சென்னைக்கு முன்றுதடவைகள் வருகை தந்திருக்கிறார்கள். கடைசித் தடவை தம்பி பாரதியும் அவர்களும் முன்று வருடங்கள் (199 – 199 ) சென்னையில் வாழ்ந்திருக்கிறாள். நாங்கள் பாதுகாப்புக் கருதி அவர்களைச் சென்னையில் வைத்திருக்கவே விரும்பினோம். அப்பா திரும்ப வன்னிக்குப் போகிற பிடிவாதத்தில் இருந்தார். அம்மா எங்கள் பாதுகாப்பு கருதி சென்னையில் இருக்க அரைமனசுடன் இணங்கினாள். இந்த தருணத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டு சொந்தக்காரரின் தந்தையார் காலமாகினாஅர். என்னோடுகூட பெசன்ற் நகர் மின் சுடுகாட்டில் நடந்த ஈமைக் கிரிகைகளுக்கு தானும் வர அம்மா விரும்பினாள். அம்மாவுக்கு அவர்கள் யாரையும் தெரியாது என்னினும் அம்மா பிடிவாதமாகக் கேட்டதால் அவளையும் அழைத்துச் சென்றாள். மின் சுடலையில் இடம்பெற்ற எல்லா சடங்குகளையும் அமைதியாக கவனித்துவந்தவள் திடீரென நடுங்கத் தொடங்கினாள். உடல் மின் சூழையுள் தள்ளப் பட்டு நீறாக்கப் படுகிறதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “இங்கிருந்தால் என்னையும் இதற்குள்தான் வைப்பீர்கள். எனக்கு விறகில் எரிய வேண்டும். என்னை ஊருக்கு கொண்டுபோங்கள்” என தீர்க்கமாக சொன்னாள். நான் அவளை தேற்றும் முகமாக “இல்லை அம்மா உனக்கு சந்தண விறகு அடுக்கி நீ விரும்பும் முறைப் படி ஈமக் கிரிகைகள் செய்வோம்” என வாக்குறுதி அளித்தேன். சென்னையில் அது சாதியமென்ன்று அம்மா நம்ப தயாராக இல்லை. அவள் திரும்பவும் வன்னியில் உள்ள தனது அசோக வனத்துக்குப் போகிற தீர்மானத்தில் இருந்தாள். அம்மாவோ நினைத்ததை என்ன விலைகொடுத்தும்
பிடிவாதமாக அடைந்து விடுகிற பெண்.

நெடுங்காலமாக எமது பெற்றோர்கள் வசித்து வருகிற விவசாய பண்ணை வீடு போராளிகளின் கட்டுப் பாட்டில் உள்ள வன்னி மாநிலத்தின் மேற்கு பகுதியில் இருக்கிறது. ஈழத்தமிழனின் விதிபோல பிள்ளைகள் யாவரும் இந்தியா நோர்வே ஜெர்மனி பிரான்ஸ் பிரிட்டன் என்று அகதிகளாக சிதறிப்போய் விட்ட பின்னர் எனது பெற்றோர் தனிமைப் பட்டு விட்டனர். எனது மைத்துணியின் மகளான சசிதான் அம்மா அப்பாவுக்கு உதவியாக இருந்தாள். இந்த நிலையில் 2001ல் ஜெர்மனியில் இருந்து சென்ற எனது கடைசித் தம்பி பாரதி அப்பா அம்மாவோடு சேர்ந்துகொண்டான்.

எனது அம்மாவின் குடும்பக் கதை கிளற்ச்சியும் சோகமும் நிறைந்தது. அம்மாவின் தாய் வழிப் பாட்டன் உடுவில் கிராமத்தைச் சேர்ந்தவர். இலங்கை சிங்கபூர் இடையே ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும் செல்வந்தராக இருந்தவர் அம்மாவின் தாய்வழிப் பாட்டியை இரண்டாம் தாரமாக காதல் திருமனம் செய்துகொண்டார். நெடுந்தீவைச் சேர்ந்த எனது அம்மாவின் பாட்டிய 1890களில் உடுவில் மகளிர் கல்லூரியில் சிற்றூளியராக இருந்திருக்கிறார். இப்படி ஆரம்பத்தில் இருந்தே உடுவில் மகளிர் கல்லூரி எங்கள் அம்மாவின் இளமைக் காலக் கதையின் களனாக அமைந்திருந்தது.

எனது அம்மாவின் சின்ன வயது வாழ்க்கையும் கிளற்ச்சி மிக்கதாகவே இருந்தது. அந்த நாட்களில் பெண்களுக்குப் பொதுவாக பூப்படைந்த நாட்களில் இருந்தே கலாச்சாரம் அடிமைத் தளையாகிவிடும். பெண்கள் கல்வியைத் தொடர்வது சிரமமாகும். பதின்நான்கு பதினைந்து வயதுகளுக்கு முன்னமே பெண்களுக்கு திருமணமும் செய்து வைத்து விடுவார்கள். அந்த நாட்களில் சிறுவயது விவாகத்தில் இருந்து தப்பிப்பதற்க்காகவும் கல்வியை தொடர்கிறதற்க்காகவும் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிகளை தஞ்சம் அடைந்த சுதந்தர உணர்வு கொண்ட பெண்களுள் என் அம்மாவும் ஒருத்தி. கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிகளுக்கு வெள்ளையர் அரசில்
செல்வாக்கு இருந்ததால் சட்டப்படியான திருமணவயதுவரை காத்திருக்கும்படி மாணவிகளின் பெற்றோரை நிர்ப்பந்திக்க முடிந்தது. அல்லது தங்கள் விடுதிகளில் உதவி கோரும் மாணவிக்கு அடைக்கலம் தர முடிந்தது.
வீடு உடுவில் மகளிர் கல்லூரிக்கு பக்கதில் இருந்ததால் எனது இரண்டு பெரியம்மாக்களும் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு மேற்படிப்பு படித்தார்கள். அம்மாவும் அந்த வழியைத் தொடர்ந்தவர்தான்.

லில்லி சின்னம்மா அந்த நாட்களில் யாழ்பானத்தில் பிரபலமான மாணவியாக இருந்த எனது மூத்த பெரியம்மாவின் பெயர். பேரழகியான அவர் கல்லூரி நாட்களில் ஆடலிலும் நாடகத்திலும் புகழ் பெற்றிருந்தார். லில்லி சின்னம்மா நடித்து யாழ்பாணம் முழுவதும் 1920பதுகளில் மேடையேற்றப் பட்ட உடுவில் மகளிர் கல்லூரி நாடகம் பற்றி 1990களில் நான் பேட்டி கண்ட 90 வயது பெரியவர் ஒருவர் தெரிவித்த விடயங்கள் சுவாரஸியமானவை.

அந்த நாட்களில் மாணவி லில்லிச் சின்னம்மா யாழ்பாணத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார்.

சின்ன வயதுகளிலேயே போராட்ட அரசியலால் ஈர்க்கப் பட்டு ஊர்ப் பெரிசுகளதும் தந்தையர்களதும் கோபத்துக்கு ஆளாகி பொலிஸ் தொல்லைகளோடு வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தால்தான் அம்மாவின் அருமை தெரியும். எனது அம்மா பருந்துகளுடன் போராடி தன் குஞ்சுகளைக் காப்பாற்றும் பறவை போன்று எங்களைக் காப்பாற்றியவள். வீட்டில் அப்பா கழுகுபோல இருந்தார்.
அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் கற்று திருமணம் வரை அங்கேயே ஆங்கில ஆசிரியராக பனிபுரிந்தவர். சிறுவது முதலே ஆடல், பாடல் நாடகம் என ஈடுபட்டு அந்த கிறிஸ்துவ பெண்கள் கல்லூரியின் புகழ் பெற்ற மணவியாக இருந்தார். அப்பா வர்த்தக நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே பெரும் தனவந்தராக மேம்பட்டவர். கேழ்வி ஞானம் மிக்கவர். அவருக்கு தமிழிலும் சிங்களத்திலும் நல்ல புலமை இருந்தது. அம்மா கல்விமூலமும் அப்பா கேள்வி மூலமும் கவிதையிலும் காவிய இலக்கியங்களிலும் நல்ல தேற்ச்சி பெற்றிருந்தார்கள். அது ஒன்றுதான் அவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை.
விபத்துப்போல நடந்துவிட்ட திருமணத்தின் பின்னர் அப்பா தழ்வுச் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அம்மாவின் ஆசிரிய தொழில் முதல் பலியானது. அம்மா இரண்டாவது பலி. மூன்றாவது பலி எங்களது கல்வி. சின்னவயதில் இருந்தே காரண காரியமில்லாமல் உதைபடும் அம்மாவை பார்த்தது வளர்ந்ததுதான் என்னை கோபக் காரனாக ஆக்கியிருக்க வேண்டும்.
—————————————-
பெருந்தெய்வ வழிபாடும் வெள்ளாளரின் தொகை நில உடமை சார் தனி ஆதிக்கமும் மேம்பட்டிருந்த யாழ்பாணத்தின் நிலமற்ற கோ

இந்திய வம்சவளியினரான மலையக தமிழர்களைப் பொறுத்து எண்பது விழுக்காடு தமிழகத்து வரண்ட மாவட்டங்களின் சாதிரீதியாக ஒடுக்கப் பட்ட கிராமிய உழைப்பாளர் சமூகங்களில் இருந்து வந்தவர்கள். சிறுதெய்வ வழிபாடு சார்ந்த அவர்களது கலாச்சாரத்தில் ஒப்பீட்டு ரீதியாக பெண்களுக்கான வெளி (space) அதிகம். அவர்கள் வேலை செய்த தேயிலை ரப்பர் பெருந்தோட்டங்களில் நிலம் கம்பனியதும் கலச்சாரம் தொழிலாளர்களதும் கட்டுப்பாட்டில்மிருந்தது. அவர்களுக்கு கம்பனிக்குச் சொந்தமான ஓர் அறை வீடுகள் வளங்கப் பட்டதி பெரும்பாலும் தனிக்குடித்தன வாய்ப்பிருந்தது.
மலையகப் நூறு விழுக்காடு சம்பளம் உழைக்கும் தொழிலாளர்களாகவும் தொழிற் சங்க அங்கதித்னராகவும் முன்னணிப் போராளிகளாகவும் இருக்கிறதில் புற வாழ்வில் வல்லமை பெற்றிருந்தனர்.

3
கடந்த ஆடி மாதத்தில் இருந்தே இறுதி நாட்களிலாவது அம்மாவைச் சென்று பார்த்திட முடியும் என்கிற நம்பிக்கை ஆவலுடன் நான் சென்னையில் தங்கியிருந்தேன். பல்வேறு தரப்பு நண்பர்கள் குறிப்பாக எனது முஸ்லிம் சிங்கள நண்பர்கள் விமர்சிக்கும் தமிழ் கலைஞர்களையும் தமிழ் அறிஞர்களையும் மகிந்த ராஜபக்ச அரசு குறிவைத்திருக்கிறது. “இப்போது இலங்கை வருவது உனக்குப் பாதுகாப்பில்லை” என என்னை தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். மிகுந்த சிரமங்களுக்கிடையில் எனது தம்பி பாரதிதாசன் நோய்வாய்ப் பட்டிருந்த அம்மாவை கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து செஞ்சிலுவைச் சங்க அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்திய சாலைக்கு எடுத்துவந்திருந்தான்.

அம்மா எப்போதும் தன்னை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்கிறவளல்ல. அவளை இரத்தப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதென்றாலும்கூட நிறைய போராட வேண்டியிருந்தது. “கடவுள் தந்த உடலை குத்திக் கிழிக்காமல் என்னை இப்படியே போக விடுங்கள்”, என சண்டைபோடுவாள். “ஏழை சனங்களுக்கு எங்கே பரிசோதனைகளும் வைத்தியங்களும் நடக்கிறது? என்னையும் அவர்கள் போல போக விடுங்கள்”, என்று என்னுடன் ஒருமுறை பெரிய சண்டை போட்டாள். பலகீனமாக இருந்தபோதுகூட பிடிவாதமாக தனது ஆடைகளைத் தானே துவைப்பாள். இறுதிவரை பிடிவாதமாக தனது வேலைகளை தானே செய்தாள். நிலத்தில் மட்டுமே படுப்பாள். கேட்டால் சின்ன வயசில் மகாத்மா காந்திக்கு மாலை போட்டேன். சாகும் வரை அவரைப் போலவே வாழ்வேன் என்று பிடிவாதமாகச் சொல்வாள். அவளுடைய பிடிவாதத்தால் இந்தியாவிலும் கொழும்பிலும் இருந்தபோது ஏற்பாடு செய்த சிறந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு அவள் ஒத்துழைக்கவில்லை. ஒத்துழைத்திருந்தால், நிச்சயமாக இன்னும் சிறிதுகாலம் வாழ்திருப்பாள்.

முதலில் அம்மா கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டாள். அங்கு அவரது சுவாசப் பை பாதிக்கப் பட்டிருந்தமை கண்டு பிடிக்கப் பட்டது. மேற்க்கொண்டு கிளிநொச்சி வைத்திய சாலையில் எதுவும் செய்ய முடியாத நிலமை. அரசின் தடைகளால் அங்கு போதிய மருந்துகளும் மருத்துவக் கருவிகளும் இல்லை. கடுமையான நோயாளிகள் எல்லோருக்கும் தமிழ் பகுதியில் இருந்த பெரிய வைத்திய சாலையான யாழ்பாணம் வைத்திய சாலைதான் விருப்பத் தேர்வாக இருந்தது. ஆனால் அரசு யாழ்பாணம் செல்லும் எ 9 பதையை மிலேச்சத் தனமாக மூடி வைத்திருந்தது. அடுத்த பெரிய வைத்திய சாலையான அனுராதபுரம் வைத்தியசாலையோ சிங்கள இனவெறியர்களின் கோட்டையாக இருந்தது. கிளிநொச்சி வைத்தியசாலை வடாரம் குண்டு வீச்சுக்கு இலக்கான அன்று எனது தம்பி பாரதிதாசன் வேறு வழி இன்றி வன்னிமாநிலத்தின் எல்லையில் அரசு கட்டுப்பாட்டில் இருந்த வவுனியா நகர வைத்திய சாலைக்கு அம்மாவை கொண்டு வந்தான். அந்த குண்டு வீச்சில் எனது தூரத்து உறவினர்கள் சிலரும் கொல்லப் பட்டனர். அதிர்ஷ்ட வசமாக அந்தக் குண்டுவீச்சில் இருந்து தப்பியவர்களுள் எனது தம்பியும் ஒருவன்.

அம்மா காலமாவதற்கு இரண்டுநாள் முன்னர்தான் அவளோடு தொலைபேசியில் பேசினேன். ஒருபோதும் இங்கே வந்துவிடாதே என்றுதான் அவள் திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தாள். அம்மாவோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இரண்டாவது நாள் 8.11.2006 புதன்கிழமை காலையில் அம்மா உயிர் நீத்த துயரச் சேதி கிடைத்தது. மாரி காலத்து காலைப் பொழுதொன்றில் போர்க் களமாகச் சிதைந்திருந்த ஈழத்தின் தென் எல்லை நகரமான வவுனியா வைத்தியசாலையில் எனது மைத்துனியின் மகள் சசியின் அன்பான அரவணைப்பில் எனது அம்மாவின் இதயத் துடிப்பு ஓய்ந்தது. கடைக் குட்டியான பாரதியை தவிர வேறு பிள்ளைகளுக்கும் அம்மாவின் கடைசித் தருணங்களில் அவளுடன் இருந்து வழி அனுப்புகிற பாக்கியம் கிட்டவில்லை. எனது நான்கு தங்கையர்களில் ஒருத்தி மட்டும் லண்டனில் இருந்து சென்று ஒருவாறு அம்மாவின் ஈமைக் கிரிகைகளில் கலந்துகொள்கிற அதிர்ஷ்டத்தைப் பெற்றாள்.

அம்மா நீ கண்மூடியபோது இலங்கையில் காலைப் பொழுது. நோர்வேயிலோ கடைச் சாமம்.அந்தச் சமயம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த என் இளைய மகன் யாரோ தன் காதுகளை வருடியதை உணர்ந்தானாம். தொடர்ந்து கால்களை தடவும் உணர்வில் அவன் திடுக்குற்று விழித்தபோது சிவப்பு சேலையுடன் ஒரு பெண் வெளியேறுவதை கண்டிருக்கிறான். அதன் பின் அவனால் தூங்க முடியவில்லையாம். என் அம்மாவின் மரணச் சேதியைச் சொல்ல நோர்வேயில் வாழும் என் குடும்பத்தினரை தொலைபேசியில் அழைந்தபோது என் மனைவி இளைய மகனின் தரிசனம் பற்றிய சொல்லி ஆச்சரியப் பட்டாள். என்மகனும் அழுதபடி தன் காட்சி பற்றி விவரித்தான். ஐயோ அம்மம்மாவை போய் பார்த்திருக்கலாமே என அவன் அழுதான். இதுதான் பிராங்பேட்டிலும் கனடாவிலும் கூடியிருந்த எல்லா பேரப் பிள்ளைகளினதும் ஓலமாக இருந்தது. பின்னர் நான் பாரதியை அழைத்து என் மகனின் காட்சி பற்றிய சேதியைச் சொல்லிய போது அவன் “அண்ணா அம்மா சிவப்பு சேலைதான் கட்டியிருக்கிறாள்” என உடைந்து அழுதான். வாழ்வின் இத்தகைய புதிர்களை யாரோ விடுவிக்க வல்லவர்கள்??

என் அருமை அம்மா, கொடுங்கோல் அரசின் கொலைக் கரத்துக்கு அஞ்சி நேரில் வந்து உன்னை வழியனுப்ப முடியவில்லை என்பதுதான் உன் மரணத்தில் எனக்கு நேர்ந்த பெருஞ்சோகம். அம்மா நீயும்தானே வார்த்தைக்கு வார்த்தை என்னை வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாய். ஆறு வருடங்கள் உன்னோடு வாழ்ந்த பாரதிக்கும் லண்டனில் இருந்து உனது மரணச் சடங்கிற்க்கு வந்த சகோதரி லலிதாவுக்கு மட்டும் உனது திரு உடலில் கண்ணீர் வடிக்கும் பாக்கியம் கிட்டியது. உலகம் முழுவதும் சிதறிக் கிடந்த ஏனைய உனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சென்னையிலும் பிராங்பேட்டிலும் ஒஸ்லோவிலும் ரொரன்ரோவிலும் துயர் பகிர ஒன்றுகூடினோம். ஓயாமல் தொலைபேசியில் மாறி மாறி தொடர்புகொண்டு கண்ணீர் சிந்தினோம்.

அம்மா உனது மரணச் சடங்கில் கலந்துகொண்டு அழுது ஆறுதல் அடைகிற பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. கொடுங்கோன்மை நம்மை சிதறியது மட்டுமன்றி தொடர்ந்தும் குதறிக் கொண்டும் இருக்கிறது. உன்னை வந்துபார்க்கிற வாய்ப்பையும்கூட அது பறித்துக்கொண்டது. எல்லாம் முடிந்துவிட்டது. நிச்சயம் உன் அசோக வனத்துப் பறவைத் தோழிகளுக்கு ஆறுதல் சொல்ல நானும் என் சகோதரர்களும் உன்னுடைய அனைத்துப் பேரப் பிள்ளைகளுடனும் வன்னிக்கு வருவோம். அந்த நாளில் உன் சமாதியையாவது முத்தமிட்டு கண்ணீர் வடித்து உன் கதைகள் பேசி மனம் ஆறுவோம்.

———————————-

ஆற்றல்மிக்க எங்கள் அம்மா ஒரு சாதாரண வீட்டு பெண்ணாக இருக்க விதிக்கப் பட்டாள். ஒரு ஆணாக இருந்திருந்தால் தியாகமும் தலைமைப் பண்புகளும் மிக்க அவளது வாழ்வும் வரலாறும் வேறுமாதிரி அமைந்திருக்கும். அவளது ஆளுமைக்கு திருமண வாழ்வு தந்த பரிசு ஓயாத அடியும் கொடுமைகளும்தான். எனினும் அம்மா அத்தனை இலகுவில் பணிந்து போகிற பெண்ணல்ல. இளமையில் திருமணத்துக்கு இணங்காமல் வீட்டுடன் முரண்பட்டுக் கொண்டு கல்வி, கல்லூரிக் கலை நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் என துடிதுடிப்பாக இருந்திருக்கிறாள். வீட்டில் நெருக்கடிகள் அதிகரிக்கிறபோது அவளுக்குப் புகலிடமாக உடுவில் மகளிர் கல்லூரி விடுதிக் கதவுகள் திறந்து கிடந்தது.

1927ல் மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். 1930பதுகளில் இருந்து அரை நூற்றாண்டுகளாக இலங்கை தமிழரது அரசியலில் செல்வாக்குச் செலுத்திய காந்திய வாதத்தினதும் அறவழி சத்தியாக்கிரக போராட்டங்களினதும் மகத்தான வரலாறு காந்தியின் மேற்படி வருகையுடந்தான் ஆரம்பிக்கிறது.

நான் அறிவறிந்த காலத்தில் இருந்தே தினமும் சூரியனை முந்திக்கொண்டு எழுந்து முற்றம் பெருக்குவதுதான் அம்மாவின் பொழுதுபோக்காக இருந்தது. முதலில் உடுவில் கிராமத்தில் அடுத்து நெடுந்தீவில் பின்னர் வன்னியில் என்று அவள் அதிகாலையில் விளக்குமாறும் கையுமாக முற்றம் பெருக்கியபடி மரங்களோடும் பறவைகளோடும் துயில் கலையும் சூரியனோடும் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிற காட்சிகள்தான் நினைவில் நிறைகிறது. அடுப்பில் தேனீருக்காக கொதித்துக் கொண்டிருக்கும் வென்னீரின் சுருதி முற்றதில் நிறையும். முற்றம் பெருக்கும் விளக்குமாறும் தாளம் பிசகாமல் அசையும். சிலசமயம் அம்மா தன்னை மறந்து தனது கல்லூரிக் காலத்து தமிழ் பாடல்களையோ அல்லது ஆங்கிலப் பாடல்களையோ பாடுவாள். எப்போதும் எங்கள் நலன் கருதி வாழ்ந்த எங்கள் அம்மா தொடர்ந்தும் இல்வாழ்வின் கொடுமைகளை தாங்குவதற்க்கான பலத்தை அதிகாலைகளிடமிருந்துதான் பெற்றாள் என்று தோன்றுகிறது.
போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிக்காட்டின் நடுவே நெடுஞ்சாலையில் அமைந்திருந்த எங்கள் பண்ணை வீட்டு முற்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட முதிய அசோக மரங்கள் நிரையாக நிறைந்து நிற்கின்றன. அவற்றுடன் கிணற்றடியில் நெல்லிமரம், வேலியில் தேக்க மரங்கள் பக்கவாட்டில் பனை தென்னைகள் என எங்கள் வீட்டு முற்ற வெளி ஒரு சோலையாகவே செழித்திருக்கிறது. சீதையைப் போல அம்மா வாழ்ந்த அந்த அசோக வனத்தில் எப்பவும் அணில்களுக்கும் அருகிய பச்சைப் புறாக்களும் கானத்துப் பறவைகளும் ஆட்டமும் பாட்டுமாக நிறைந்திருக்கும். சில சமயங்களில் அதி காலையிலும் மாலையிலும் வீட்டின் பின் பக்கமாக தோகையை நெளி¢த்தபடி மயில்கள் வரும். இருளில் பின் புறமாக பண்ணைக்கு வரும் இரவு விருந்தினர் பட்டியல் முயல்கள் மான்கள் காட்டுப் பன்றிகள் முள்ளம் பன்றிகள் யானைகள் என நீளும். ஒரு தடவை நள்ளிரவில் எங்கள் ஆட்டுப் பட்டிக்கு சிறுத்தைப் புலிவந்துவிட்டது. அம்மா அதனை சுட்டுக் கொல்ல அனுமதிக்காமல் தீப் பந்தத்தால் மிரட்டி விரட்டியிருக்கிறாள்.

எங்கள் முற்றத்து அசோக வனமும் அங்கு வசிக்கும் தேவதைகளும்தான் என் அம்மாவின் தோழிகள். விடிந்தும் விடியாததுமான காலைப் பொழுதில் எழுந்து காணியின் இரும்பு கேற் படலையை திறந்து விட்டு முற்றத்தைப் பெருக்க ஆரம்பிப்பாள். உண்மையில் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் அவள் தடி விளக்குமாறும் கையுமாக அந்த அசோக வனத்தில் இயற்கை அழகில் லயித்து இழந்த தன் இளமையை மீட்டு நெஞ்சத்தால் வாழ்ந்து குதூகலிப்பாள். பொல பொல வென பொழுது விடிகிறபோது அயலில் உள்ள பெண்கள் தண்ணீர் மொள்ள எங்கள் காணிக்கு வருவார்கள். அவர்கள் அம்மாவுக்கு ஊர் புதினங்கள் சொல்லுவார்கள். இனி நெடுங்காலத்துக்கு அந்த அசோக வனத்து பறவைகள் காலைப் பொழுதுகள் தோறும் தங்கள் இனிய தோழியை தேடித் தவித்திருக்கும். நீர் மொள்ள வரும் பெண்களும் அந்த அசோக வனத்தில் கால் வைக்கிறபோது அம்மாவை நினைத்து ஒருகணம் உறைந்து போவார்கள்.

2

முதலில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அம்மா காச நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகித்தார்கள். பின்னர் வவுனியா வைத்தியசாலையில் அம்மாவுக்கு சுவசப்பை புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அந்தச் சமயம் அம்மாவை பார்கிறதற்க்கு இலங்கை செல்லும் விருப்பத்தோடு
சென்னையில் காத்திருந்தேன். என்னை இலங்கை வரவேண்டாம் என எல்லாத் தரப்பில் இருந்தும் எச்சரித்தபடி இருந்தார்கள். கொழும்பில் உள்ள மேல் மட்ட தொடர்புகளைக் கொண்டுள்ள எனது முஸ்லிம் நண்பர்களும் இப்போதைக்கு கொழும்புக்கு வந்துவிடாதே என்றார்கள். இத்தகைய எச்சரிக்கைகளை வெறும் ஊகம் மட்டும்தான் என்று புறம் தள்ளிவிடவும் முடியவில்லை.
அம்மா காலமாவதற்க்கு இரண்டுநாள் முன்னாடி சென்னையில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு அவளுடன் பேசினேன். விரைவில் உன்னைப் வந்து பார்க்கிறேன் அம்மா என்று நான் கூறியபோது அம்மாவும் பதட்டப் பட்டாள். அவள் தனது இறுதி நாட்களில்கூட தன்னைப் பற்றி கவலைப் படாமல் என்னைப் பற்றியே கவலைப் பட்டாள். தனது மரண வேதனைகளை மறந்துவிட்டு அந்த நிலமையிலும் “இங்கு உனக்கு பிரச்சினை, நீ ஒருபோதும் இலங்கைக்கு வந்துவிடாதே” என்று என்னிடம் மன்றாட தொடங்கிவிட்டாள். அவள் எப்பவும் இப்படித்தான். பருந்துகள் மத்தியில் ஓயாமல் போராடி தன் குஞ்சுகளை காப்பாற்றும் ஒரு பறவைபோலவே அவள் எங்களைக் காப்பாற்றினாள்.
எனது பணக்கார அப்பா நானும் எனது சகோதரர்களும் கல்வி கற்பதை விட்டு விட்டு சிறுவயதிலேயே வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் என முரட்டுத் தனமாக விரும்பினார். படித்த என் அம்மாவுக்கும் பணக்காரரான எனது அப்பாவுக்கும் இடையில் எப்பவும் ஒரு பனிப்போர் நடந்தது கொண்டிருந்தது. எனது தம்பி பாரதியை பள்ளிக்கு ஒழுங்காக போக விடாமல் வருடத்தில் பாதி நாளாவது தனது அரிசி குத்தும் ஆலையில் வேலைசெய்யவைத்து விடுவார். எங்கள் கல்விக்காகவே அம்மா நிறைய போராட வேண்டி இருந்தது. சிறுவயதில் ஆரம்பித்து இருந்தே போராடி வாழ்ந்த எனது அம்மாவை ஒரு ஆரம்பகால பெண்விடுதலை ஆர்வலர் என்று தயக்கமின்றிக் கூறுவேன். அவள் வீட்டில் அப்பவால் மிக கொடூரமாகத் தாக்கப்பட்ட வேளைகளில்கூட அவள் தலை பணிந்ததையோ தனது கருத்துக்களை விட்டுக் கொடுத்ததையோ நான் ஒருபோதும் பார்த்ததில்லை.

நான் சின்னப் பையனாக இருந்தபோது கோவில்களுக்கும் விழா மண்டபங்களுக்கும் வெளியில் அடுத்தவரின் இழிவு படுத்தலை சகித்தபடி ஒதுங்கி நிற்க்கிற மக்களைப் பற்றி கவலையுடன் நிறைய கேள்விகள் கேட்பேன். சின்ன வயதிலேயே சமூகச் சூழலாலும் பள்ளிக்கூடத்தில் சமயம் மற்றும் தமிழ் கற்பிக்கிற ஆசிரியர்களின் செல்வாக்காலும் விதி மற்றும் கர்ம வினை பற்றிய அச்சம் எனக்குள் இருந்தது.

அம்மாவோ “போன பிறப்பில் அடுத்தவரை சாதி அடிப்படையில் இழிவும் கொடுமையும் படுத்தியவர்கள்தான் இந்தப் பிறப்பில் இப்படி பிறந்திருக்கிறார்கள். நீ ஒருபோதும் அத்தகைய பிழை விட்டுவிடாதே என்று கொஞ்சம் மிரட்டலாக பதில் சொல்வாள். பிறப்பில் ஒடுக்கப் உலகம் மேம்பட்டுச் செல்கிறது என்ற நம்பிக்கை உள்ளவராக ஒருக்கப் பட்ட மக்களும் சக மனிதர்களே என்கிற உணர்வை எனக்குள் விதைத்தார். சிறுவயதிலேயே த்தை ந்து செயல் பட வைக்கிற சாத்தியங்கள் குண்டுச் சட்டிகளுள் குதிரை ஓட்டிய மாதர் சங்க நடவடிக்கைகளை பல் சமூகதன்மையுடன் பல்முகப் படுத்துகிற நிச்சயமாக அம்மாவிடம் இருந்துதான் நான் தளராத மன உறுதியை வரித்துக் கொண்டேன். .


visjayapalan@yahoo.com

Series Navigation