சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற தைப்பூசத்திருவிழா

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

நீ ‘தீ”


சிங்கப்பூரகத்தில் மிக விமரிசையாக தைப்பூசத்திருவிழர 31.01.07 ல் கொண்டாடப்பட்டது . பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 31.01.07 அன்று மாலை 8.00 மணிக்கு தொடங்கிய பக்தர்களின் பால்குடம் காவடி அலகு குத்திவருவது மறுநாள் நன்பகல் 01.02.07 1.00 மணி வரை நடைபெற்றது. லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் தொடங்கிய யாத்திரை 1 மணி நேர பயணத்திற்கு பின் டோவர் அருகே அமைந்துள்ள தண்டாயுத பாணி முருகன் கோவிலை சென்றடைந்தது. 90சதவிததிற்கும் மேலனவர் பால்குடத்துடன் சேர்த்து வேலும் குத்திக் கொண்டனர். அதிலும் அதிகமான பெண்கள் அவர்களின் முகத்தில் (நெற்றியில்) வேல்குத்திக் கொண்டது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது. (சிங்கப்பூரில் இது என் முதல் தைப்பூச அனுபவம்) எங்கும் மஞ்சள் மயம். அனைவருமே விரதமிருந்து மங்சள் ஆடை தரித்து வந்தனர். மேலும் அலகு குத்தி விடுபவர்கள் காணிக்கையாக எதுவும் பெறுவதில்லை. இதே நம்ஊராக இருந்தால்? வழி நெடுக தண்ணீர் பந்தல் அமைத்து தாக சாந்தி செய்தனர்.

மலேசிய நாட்டை சேர்ந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடதக்கது. மேலும் மலாய் சீன சமூகத்தினரும் பரவலாக பால்குடம் எடுத்து காவடி து}க்கி வந்ததை காண முடிந்தது.

சிங்கப்பூரக அரசு திறமையாக இவ்விழாவை கையாண்ட விதத்தை கட்டாயம் பாராட்ட வேண்டும். பக்தர்களுக்கு அசௌகர்யம் ஏற்படாத வகையிலும் அதே நேரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படதாவண்ணம் போக்குவரத்தை ஒழுங்கு பண்ணிய விதம் 200அடிக்கு ஒருமுறை பக்;தர்களை தடுத்து அவர்கள் விரைவாக மனம் நிறைவாக முருகனை தரிசிக்க பககதர்களின் தேவையை புரிந்து கொண்டு புன்முறுவலுடன் பணி புரிந்த அனைத்து அரசு அலுவலர்களையும் கட்டாயம் பாராட்ட வேண்டும். பலஆயிரகணக்கான பககதர்கள் மொட்டை போட்டும் சிறப்பித்தனர்.

பொங்கள் தீபாவளி பண்டிகைக்கு கூட தமிழ் சமுகத்தினைர் அனைவரையும் ஒருங்கே காண முடியாது. தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை இல்லாதபட்சத்திலும் அனைத்து சிங்கப்பூர் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடதக்கது. தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக சொற்பொழிவு நடை பெற்றது. தமிழகத்தை சேர்ந்த நாட்டுபுற பாடகி திரைப்பட நடிகை பரவை முனியம்மா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

தகவல்: நீ ‘தீ”


hsnlife@yahoo.com

Series Navigation

நீ “தீ”

நீ “தீ”