மொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

கே ஆர் மணி


நாஞ்சில் நாடன், (நா.நா) படிச்சா போதும்.. பம்பாய் தெரிஞ்சிக்கலாம்.. கேள்விப்பட்டிருப்பீர்கள்..
எந்த எழுத்தாளரும் மண்ணின் மனம் முழுவதையும் தன் எழுத்தில் சமைத்துவிடமுடியாது. அதன் குணம்,வேர், இயல்பு போன்றவற்றை ஒரளவாவது எழுத்திற்குள் உட்காரவைத்துவிட்டால் போதும். மற்றவற்றை வாசகனின் சிந்தனை தளம் பார்த்து கொள்ளும்.
நாஞ்சிலின், இந்தக் கதை மெல்லிய நட்புறவையும், சகோரத்துவத்தையும் பற்றி ஏராளமான எழுதப்பட்ட சென்சேஷனல் ( sensational ) குப்பைகளுக்கிடையேஎனக்கென்னவோ இந்த மாதிரி மெல்லிய கதைகள் தான் உண்மை விளிம்புகள் எனப்படுகிறது. மும்பைவாழ்வுக்கும், எழுத்துக்குமிடையேயான இடைவெளியை குறைக்கவல்லவை. புலம் பெயர்ந்தவர்களின்கலாச்சார கலப்பின் நல்ல பக்கத்தை காட்டக்கூடியவை.
தளவாய் – மும்பாய் பெஷ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர். புதிதாய் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான். தளவாயும், அவன் மனைவியும்சென்று வருகிறார்கள். உறவு துளிர்க்கிறது. இங்கிருந்து இட்லி போகிறது. அங்கிருந்து காய்கறி பரிவர்த்தனை. மொகித்தே – அவன் போகும் பேருந்துக்கும் நடத்துனராகிறார். ஆனால் அவனிடம் மட்டும்பயணச்சீட்டு வாங்கப்படுவதேயில்லை. தளவாய்க்கு குற்றவுணர்ச்சி. கவனமாய் உணர்கிறான். இடையில்ஏறும் பரிசோதகர் பற்றி கவலை வேறு. நேராய் போய் மொகித்தேயிடம் கேட்கிறார். அவன் திரும்பிக்கேட்கும் கேள்விதான் – கதையின் நாதம்..

” எனக்கு சொந்தக்காரனை ஒருத்தனை எப்ப வேணும்னாலும் எத்தனை மட்டம் வேணும்னாலும்கூட்டிட்டு போலாம். கட்டணம் இல்லாமல் ஒரு பய கேக்கமுடியாது ”

” காய் அண்ணாதும்.. ? எனக்கு சொந்தக்காரன் இல்லையா .. நீ.. ”

ஒன்றும் பேசமுடியவில்லை தளவாய்க்கு. நமக்கும் தான். ஒருவரியில் உறவுகள் இறுகி,பல்கிஉயர்ந்து வானத்தையும் கிழித்து விடுகிறது. எல்லா நல்ல உறவுகள் எல்லாமே ப்படித்தான்.ஆர்ப்பாட்டமில்லாது அமைதியான நீரோடைபோல் தெளிவாய், ஈரமாய் ஓடிக்கொண்டேயிருக்கும்.அது சாதி, மொழி தாண்டி உறவின் உணர்வுகள். மும்பை போன்ற நகரில் புலம் பெயர்ந்து, நம் அக்கம்பக்கங்களில் அத்தகைய உறவுகளின் வாசம் கண்டோர் அதிபாக்கியசாலிகள். அவர்களின் அன்புஉலகங்கள் எல்லையற்றது.
கண்ணுக்குத் தெரியாத நட்பு நூலிழைகளுக்குள் அது ணைந்துவிடுகிறது.’யாதும் ஊரே.. யாவரும் கேளீர் ‘ என்று மேடை போட்டு பிளிறும் போலித்தன்மையற்றது அந்த உறவுகள். குறிப்பாய் இத்தகைய உறவுகளில் ‘சாதி ‘ வெகுவேகமாய் காணமல் போய்விடுகிறது.

‘மொகித்தெ ‘ எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம் பெயர்ந்தவர்களுக்கு கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.

நா.நா. வசனத்திற்கு கேட்கவா வேண்டும். கவித்தும், நகைச்சுவை – என எல்லா சுவைகளையும்கலந்து கட்டி சுடச்சுட கொடுக்கிறது. நீங்கள் எந்தமாதிரி வாசகராயிருந்தாலும் உங்களை கஷ்டபடுத்தாது செய்தியையும், அழுத்ததையும் சம அளவில் தரவல்லது – இவரின் களமும் அதனை எடுத்துசெல்லும்பாங்கும், லயமான கதை ஒட்டமும், உங்களையறியாது கதையோடு காலார நடக்கவைக்கும்.இந்த மும்பேயின் பயணம் – நிதர்சனமான உண்மை. அதற்கு பல பக்கங்கள் உண்டு. நா.நா. காட்டும்பக்கம் உண்மைக்கு வெகு அருகிலிருப்பது. மும்பைவாசிகளுக்கு புரியும்.

மும்பை வாழ்வின் – அப்பட்டமான, நிர்வாண உண்மைகளை பதிவு செய்யும் பாசங்கற்ற வரிகள் கீழேயுள்ளவை.

‘சமயங்களில் வேலை நேரத்துக்கு இணையாக பிராயண நேரம் அமைந்துவிடும். ‘
‘அந்தந்த நாளை அன்றன்றே தொலைத்து தலைமுழுகியாக வேண்டும்.’ ”வாழ்வென்பது நாள் தொலைப்பது என்றாயிற்று..
”வாடகைக்கு குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒரு முறை சனிப்பெயர்ச்சி ‘

புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் புதிய இடத்தோடு தனது மண்ணின் (அவ)லட்சணங்களைஒப்பீட்டு பார்க்கும் பழக்கமிருக்கும்- கீழே வரிகளில்.

” பண்பாடு செழித்த தமிழ் நாட்டைப்போல் ஒருத்தர் முண்டியடித்து ஏறி கைகளை பரத்தி, படுத்தபாவனையில் இன்னும் மூணு பேருக்கு இடம் பிடித்து கொள்ளும் வீரவீளையாட்டுக்கள் கிடையா.ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான இருக்கைகள். யார் கற்பும் பங்கப்படுவதில்லை..”

கிணற்று தவளையாய் போய், அக, புக நானூறோடும், கரடிப் பொம்மையாய் கத்திக்கொண்டிருக்கும் நமது தற்போதைய சமூக பழக்கவழக்கங்களையும், கலாச்சார விழுமியங்களையும் மறுபரீசலினை செய்யவேண்டும். அதற்கு நா.நா. போன்ற புலம் பெயர்ந்த நடுநிலையாளர்களின் எழுத்துக்கள் கண்ணாடியாய், தூண்டுதலாய் அமையும்.
” இட்லி சாம்பார் என்பது. பாற்கடலை கடைந்தபோது திரண்டு வந்ததன் சாறு..” என்பதும்,இட்லியை கடித்து தின்பதும், சாம்பாரைக் குடிப்பதும் – அழகாய் பதிவு செய்யப்பட்ட ஒன்று. தமிழர்களின் ஒரு க்கியமானஅடையாளமாய் இட்லி இடம்பெறுகிறது.

“சற்று அகச்சுளிப்புடன் மலர்த்தி பிடித்த முகத்துடன் போனார்கள் ‘ – அடடா! என்ன நுட்பமான எழுத்து. பிடிக்காமல் போகவேண்டுமென – ஓருவித கட்டாயத்துடனும், அதே சமயம் முகத்தில் சிரிப்பை செயற்கையாய் போர்த்திக் கொண்டுபோகிற போது ஏற்படுகிற உணர்வு வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். இது இரட்டை வேடமில்லை. செய்ய வேண்டிய கட்டாயத்தில் செய்கிற கொஞ்ச நேர வேலை.

கெளதம புத்தர், டாக்டர் அம்பேத்கார், பூரி, உருளைக்கிழங்கு கறி, உ.பி. பையாவின் ஜீலேபி, பித்தளை தம்ளர்கள்.. கண்மூடி யோசித்தால் நீங்கள் மொகித்தேவின் வீட்டில் இருப்பீர்கள்..

காலை அகட்டிவைக்கிற கண்டக்டர், சில்லறையில்லாததால் மராத்திய வசவு, போகும் வழியில் பேப்பேர் படிப்பு, உலகச் சந்தை அரட்டையடிப்பு, ( 40 % வாழ்க்கையை பயணத்தில் மும்பைக்காரர்கள் தொலைக்கிறார்கள் – என்கிறது ஒரு கணக்கு. ) பயணச்சீட்டு துளையிடும் கருவியின் டிக்..டிக்.. ஒலி.. எப்போதாவது பம்பாய் வந்தால், பெக்ஷ்ட் ( BEST) பேருந்தில் பயணம் செய்யும் வரம் பெற்றால் நீங்கள் கண்டிப்பாய் மொகித்தேவை தேடவேண்டும்… தேடுவீர்கள்.. !! பயணச்சீட்டு வாங்காமலிருக் அல்ல.. :)-

இன்னும் கொஞ்சம் கலை நேர்த்தி, krafting, முடிவை ஆழமாய் முடித்திருக்கலாமோ ? ..என்று விமர்சனப்புத்தி தலைசொறிகிறது என்றாலும், கதையின் ஆத்மாவின் எளிமை மேற்சொன்ன மேடு பள்ளங்களை தாண்டி பயணிக்கிறது. அதுவே நா.நாடனின் வெற்றி. Sorry.. நம்ப மொகித்தேவின் வெற்றி.
மறுபடியும் சொல்வேன் :
மொகித்தெ ‘ எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம் பெயர்ந்தவர்களுக்கு கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி