விந்தையான யாத்திரிகர்கள்

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

கிரிதரன் ராஜகோபாலன்

[இது காப்ரியல் கார்சியா மார்க்கே(Gabriel Garcia Marquez) எழுதிய Strange Pilgrims எனும் சிறுகதை தொகுப்பின் முன்னுரை. இந்த கதைகளுக்கான கருக்கள் தோன்றிய விதமும், அவை பயணித்த பாதைகளும் விந்தையானவை.இந்த முன்னுரையிலிருந்து ஒரு கதைக்கான கட்டமைப்பிற்குள் கருவை கொண்டு செல்லும் யுத்தியும் , கதை சொல்லும் பாணியையே ஒரு தேடுதலாக அமைத்த மார்க்கேவின் எண்ண ஓட்டங்களுடன் பயணிக்கலாம்.]

முன்னுரை

இந்த புத்தகத்தில் உள்ள பனிரெண்டு கதைகளும் கடந்த பதினெட்டு ஆண்டுகளில் எழுதியது. இந்த கட்டமைப்பிற்குள் வருவதற்குமுன் ஐந்து கதைகள் தொலைக்காட்சி தொடராகவும்,கட்டுரைகளாவும்,திரைக்கதைகளாவும் இருந்தன.பதினைந்து வருடங்களுக்குமுன்பு பதிப்பான ஒரு கதையை,ஒரு நண்பன் மூலமாக அறிந்து இப்போதுள்ளதுபோல மாற்றியுள்ளேன்.இந்த முரண்பாடான அனுபவத்தை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.இதன் மூலம் வருங்கால எழுத்தாளர்களுக்கு எழுதுவது எத்துணை ஒர் முடிவில்லாத காரியம் என்றும்,எழுத முற்படுவது ஒர் உந்துதலற்றது என்றும் தெரியும்.

எழுபதுகளின் தொடக்கத்தில் எழுதப்பட்ட முதல் கதை நான் பார்சிலோனா வந்து ஐந்து வருடங்களான ஒர் இரவின் ஒளிமிக்க கனவாக உருவானது.நான் எனது நீத்தார்தின நினைவு நாள் விழாவில் கலந்துகொண்டேன்.என் சாவு மிகப்பெரிய பரிசாக என் பழைய நீண்ட கால நண்பர்களை எனக்கு மீட்டுத்தந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. விழா முடிந்ததும் எல்லாரும் கிளம்ப முற்படும்போது என் நண்பன் சொன்னான் ” நீ மட்டும் போக முடியாது”. அப்போதுதான் எனக்கு சாவு என்றால் நண்பர்களை பிரிவதென புரிந்தது.

இந்த எச்சரிக்கை கனவை நான் என்னை புரிந்துகொள்ளுதலின் ஒர் புனித பரிட்சையாகவே எடுத்துக்கொண்டேன்.ஒர் லத்தின் அமெரிக்கனின் ஐரோப்பிய வாழ்வில் நடக்கும் விந்தையான விஷயங்களை எழுதுவதற்காக ஏற்ப்பட்ட ஒரு அற்புதமான பாதையாக இவ்விஷயம் எனக்குப்பட்டது.மேலும் அச்சமயம் எனது “Autumn of the Patriach” புத்தகத்தை முடித்திருந்தேன். அப்படி ஒர் கடினமான , தைரியமான படைப்பிற்க்குப் பிறகு என்ன செய்வதென தெரியாமலிருந்தேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கதைக்கருக்களின் குறிப்புகளை தொகுத்து வைத்திருந்தேன்.அவற்றை என்ன செய்வதென முடிவு செய்யவில்லை.இதை ஆரம்பித்த இரவில் புத்தகம் இல்லாததால் என் குழந்தைகளின் கட்டுரை புத்தகத்தில் எழுத ஆரம்பித்தேன்.நாங்கள் அடிக்கடி பிராயணம் செய்ததால் அதை என் குழந்தைகள் அவர்களின் புத்தக மூட்டையில் வைத்துக்கொள்வார்கள்.இப்படியாக அறுபத்து நான்கு கதைகளுக்கான விரிவான குறிப்புகளை தொகுத்துவிட்டேன்.

இனி அவற்றை எழுத வேண்டியதுதான்.

நான் பார்சிலோனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 1974-இல் வந்தேன்.இந்த புத்தகத்தை ஒரு பத்திரிக்கை தொகுப்பாக வெளியிட விருப்பம் இருந்தது.தொடர்கதையாக இல்லாமல் ஒர் திறமையான கவிதையாய் தாங்கள் இறந்த கணத்திலிருந்து இவற்றை மீட்டுவரும் எண்ணம் இருந்தது.ஏற்கனவே மூன்று சிறுகதை தொகுப்புகள் வெளிவந்திருந்தாலும்,எதுவும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியானவையாக தொகுத்ததில்லை.ஆகவே இந்த 64 கதைகளையும் எழுதுவது ஒர் அதிபூர்வமான அனுபவமாக இருக்கும். மேலும் இவை அனைத்தும் ஒரே நேரத்தில், வடிவத்திலும் அனுபவத்திலும் ஒரே மாதிரி இருக்குமானால்,வாசகர்களுக்கு பசுமரத்தாணி போல பதிந்துவிடும்.

முதலிரண்டு கதைகளும் 1976-இல் படைத்து வெவ்வேறு இலக்கிய பத்திரிக்கைகளில் வெளிவந்தவை.ஒரு இடைவேளி இல்லாமல் அயராது எழுதினேன்.ஆனால் மூன்றாவது கதை எழுதும்போது பாதியில் நிறுத்தினேன்.ஒர் நாவல் எழுதுவதைப் போல களைப்பு ஏற்ப்பட்டது.அந்த கதையை முடிக்கக்கூட சக்தியில்லாமலிருந்தேன்.அதற்க்கான காரணம் புரிந்தது.ஒரு நாவலுக்குண்டான எல்லா அமைப்புகளான கட்டமைப்பு,சாரம்,சந்தம்,நீளம்,கதாப்பாத்திரங்களின் ஆளுமை இவை அனைத்தும் ஒரு கதைக்கும் வடிவமைப்பது ஒரு அசாத்தியமான காரியம். மீதியெல்லாம் எழுதும் கலையின் ஆர்வம் மட்டுமே.ஆரம்பிக்க முற்படும் சக்தி கதை முடியும்வரை தொடர வேண்டும்.ஆனால் சிறுகதைக்கோ ஆரம்பமும் இல்லை முடியும் இல்லை.அது நிலைக்கும் அல்லது நிலைக்காது.அப்படி நிலைக்காத கதைகளுக்கு ஒருவன் வேறு திசையை காட்ட வேண்டும் அல்லது அந்த கதை குப்பையாக வேண்டும்.”நல்ல எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியவற்றிற்கு விட கிழித்ததற்காகவே பாராட்டப்படுகிறார்கள்” யாரோ சொன்னது உண்மைதான் போலும்.நான் என் கதைகளை கிழிக்கவில்லை,மாறாக அதைவிட கொடுமையாக அவற்றை மறந்த நிலையில் சூன்னியத்தில் தள்ளி வைத்தேன்.

1978 வரை அந்த எழுத்து என் குப்பைகளுக்கு நடுவில் இருந்தது.ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருந்தபோதுதான்,அந்த கதைகள் காணாமற் போனது உரைத்தது.வீட்டின் ஒவ்வொரு மூலையும் அலசப்பட்டன.மேஜைகளை நகர்த்தி,அலமாரியை இழுத்து என் நண்பர்கள் மற்றும் வீட்டாரின் துணையோடு சல்லடைபட தேடினேன்.குப்பைகளோடு சேர்ந்து தொலைந்திருக்க வேண்டும்.

இதனாலான பாதிப்பு என்னை ஆச்சிர்யப்படுத்தியது.நான்கு ஆண்டுகளாக நான் மறந்த தலைப்புகள் என் மதிப்புகளை கேள்விக்குறிகளாக்கின.இந்த இழப்புகளை ஈடுகட்ட என்னுடைய முப்பது கருக்களை மீண்டும் வடிவமைத்தேன்.இது எழுதுவடைவிட கடுமையான வேலை.நினைவுபடுத்துவது ஒரு விதமான வடிகட்டும் பணி.நல்லது மட்டும் நிற்கும்.

என் தவறுகளுக்கான தண்டனையை அனுபவித்தது என் கருக்கள்.மிஞ்சியது பதினெட்டுதான்.இந்த தடவை ஒர் உறுதியுடன் நிறுத்தாமல் எழுத நினைத்தேன்.ஆனால் மறுபடியும் அந்த உந்து சக்தியை இழந்தேன்.நான் புதிய எழுத்தாளர்களுக்கு சொல்லும் அறிஉரையை செய்யவில்லை.மாறாக அவற்றை தூக்கிப் போடாமல் எதற்கும் இருக்கட்டுமே என்று கோப்பாக மாற்றினேன்.

எழுதும்போது இடைவேளி விடுவதால் எழுதும் பழக்கத்தை இழக்கின்றேன்.மேலும் எழுத ஆரம்பிப்பது மிகவும் கடினமாகிறது.என் எழுதும் பழக்கதை ஒரு சீரான கட்டுக்குள் கொண்டுவர அக்டோபர் 1980-இலிருந்து 1984 வரை ஒரு தினசரிக்கு வாராவாராம் கருத்துரை எழுத தொடங்கினேன்.அப்போதுதான் ஒர் உண்மை உரைத்தது.நான் கடினப்படுவது அந்த கருக்களை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்குதான்.மேலும் அவை ஒரு தினசரி பக்கங்களாகவே லாயக்கானவையாக தெரிந்தன.இந்த கருக்களை மையமாகக் கொண்டு எழுதிய ஐந்து தினசரி கருத்துரைகள் மேலும் ஒர் உண்மையை உணர்த்தின;இவை திரைப்படத்திற்கான கட்டமப்பிற்குள் கச்சிதமாகப் பொருந்தும்.இப்படித்தான் ஐந்து படங்களும் ஒரு தொலைக்காட்சி தொடரும் உருவானது.

அப்போதுதான் எதிர்பாரத ஒன்று நடந்தது.நான் திரைப்படத்திலும் தினசரிகளிலும் எழுதியது என் கதைகளின் கருக்களை மாற்றியது.இதனால் என்னுடைய கடைசி திருத்தத்தில் என்னுடைய மற்றவர்களின் கருத்துகளோடு கவனமாக பிரித்தெடுத்தேன்.என் ஐந்து இயக்கு¨ர்களோடு வேலை பார்த்ததில் கதை எழுதுவதில் மற்றுமொறு புது யுத்தியை கற்றுக்கொண்டேன்.ஒரு கதையை களைப்போ மற்றொறு வேலை வரும்வரை எழுதுவேன்.பின்¨ர் மற்றொறு கதை எழுதத்தொடங்குவேன்.என்னுடைய நீத்தார் தின கதையோடு சேர்த்து ஆறு கதைகள் குப்பை கூடைக்குள் சென்றன.என் கனவில் வந்த அமைப்பிற்குள் அந்த கதைகள் அமையாததே காரணம்.

மீதிக் கதைகள் ஒர் நீணட பயணத்திற்கு தயாராகின.

அந்த மீதி பனிரெண்டு கதைகளைத்தான் இந்த புத்தகத்தில் உள்ளன.இரண்டு வருட இடைவிடாத உழைப்பிற்குப்பின் கடந்த செப்டம்பர் மாதம் அவை பதிப்பிற்கு தயாராகின.குப்பை கூடத்திற்கும் கோப்பிற்கும் பயணம் செய்த இந்த கதைகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக இருந்திருக்களாம்.ஆனால் எனக்குள் ஒரு கடைசி நேர சந்தேகம் ( 11th hour doubt) . இந்த கதைகளின் களமான ஐரோப்பிய நாடுகள் என் ஞாபகத்தின் ஊடாகப்படைக்கப்பட்டது.அவற்றின் இன்றையை நிலைமையை புரிந்து கொள்ள பார்சிலொனா,ஜேனீவா,ரோம் மற்றும் பாரீசுக்கு சென்று வந்தேன்.ஒன்று கூட என் ஞாபத்தோடு பொருந்தவில்லை.நவீன ஐரோப்பாவைப்போல எல்லாமே தலைகீழாக இரூந்தது.என்ன அதிசயம்!!

உண்மையான ஞாபகங்கள் பூதகரமாகவும் , பொய்யான ஞாபகங்கள் நம்பத்தகுந்த உண்மையாகவும் இருந்தன.

இதன் மூலம் என்னால் காட்சிப்பிழைக்கும் பழைய ஞாபகங்களுக்கும் வித்தியாசம் காண முடியவில்லை.

தீர்வு என் கண்முன் வந்தது.என் புத்தகத்தை முடிக்கும் வழியை கண்டுபிடித்தேன்.காலத்தோடு பொருந்திய பார்வை.இதை கடந்த காலங்கள்தான் கற்பிக்க முடியும்.

அந்த லாபகரமான பயணத்திற்கு பிறகு எட்டு மாதங்களில் இந்த கதைகளை எழுதி முடித்தேன்.என் அனுபவத்தில் கண்டிராத ஐரோப்பா அதன் தொடக்கமான கற்பனையை புரிய வைத்தன.இதற்கு பிறகு எழுதுவது மிக இலகுவானது.மனிதமனம் மிதப்பதற்க்கு கதை சொல்லும் மகிழ்ச்சியும் ஒர் காரணம்.எல்லாக் கதைகளிளும் ஒரே நேரத்தில் வேலை செய்ததால்,இந்த பனிரெண்டு கதைகளுக்குள் மிக எளிதாக முன்னும் பின்னும் பயணம் செய்ய முடிந்தது.இதனால் என் பார்வையின் பரப்பளவு விரிந்து என் அஜாக்கிரதை காரணமாக இருந்த தவறுகளை திருத்த முடிந்தது.

இப்படியாக நான் எழுத ஆசைப்பட்ட விதத்திற்கு அருகில் இக்கதைகள் உள்ளன என நம்புகிறேன்.நிச்சயமற்ற தன்மையை உடைத்து அங்குமிங்கும் பயணம் செய்து ஒரு புத்தகமாக உருவாகிவிட்டது இந்த கதைகள்.நான் கதை எழுத ஆரம்பித்த தேதிகளை ஒவ்வொரு கதையிலும் குறிப்பிட்டுள்ளேன்.மேலும் அதே வரிசையில் இருப்பதால் என் சிந்தனையை கோர்வையாகச் சொல்ல முற்பட்டிருக்கேன்.

ஒவ்வொரு முறையும் கதை மெருகேறுவதை உணர்ந்தேன்.என் கடைசி வடிவம் இவைதானென எப்படி முடிவு செய்வது?வாசனைபடி ஒரு பண்டத்தின் நிலை சமையற்காரனுக்கு தெரிவது போல்,இது ஒரு சூத்திரம்.எந்த காரணமும் இல்லாமல் என் உள் மனதின் தீர்வு.என் எந்த புத்தகத்தையும் நான் திரும்ப பாத்திராதது போல இதையும் படிக்கப்போவதில்லை.செய்த தவறுகளும் ஒரு காரணம்.சந்தர்ப்பவசமாக இந்த விந்தையான யாத்ரிகளுக்கு வீட்டிற்க்கு வருவதைப்போல குப்பை கூடைக்குள் செல்வதும் மகிழ்ச்சிதான்.

வாசகர்களுக்கு தெரியும்.

– காப்ரியல் கார்சியா மார்க்கே , ஏப்ரல் 1991.

Series Navigation

கிரிதரன் ராஜகோபாலன்

கிரிதரன் ராஜகோபாலன்

விந்தையான யாத்திரிகர்கள்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

காப்ரியல் கார்சியா மார்க்கே

———————————————–
[இது காப்ரியல் கார்சியா மார்க்கே(Gabriel Garcia Marquez) எழுதிய Strange Pilgrims எனும் சிறுகதை தொகுப்பின் முன்னுரை. இந்த கதைகளுக்கான கருக்கள் தோன்றிய விதமும், அவை பயணித்த பாதைகளும் விந்தையானவை.இந்த முன்னுரையிலிருந்து ஒரு கதைக்கான கட்டமைப்பிற்குள் கருவை கொண்டு செல்லும் யுத்தியும் , கதை சொல்லும் பாணியையே ஒரு தேடுதலாக அமைத்த மார்க்கேவின் எண்ண ஓட்டங்களுடன் பயணிக்கலாம்.]

முன்னுரை
—————

இந்த புத்தகத்தில் உள்ள பனிரெண்டு கதைகளும் கடந்த பதினெட்டு ஆண்டுகளில் எழுதியது. இந்த கட்டமைப்பிற்குள் வருவதற்குமுன் ஐந்து கதைகள் தொலைக்காட்சி தொடராகவும்,கட்டுரைகளாவும்,திரைக்கதைகளாவும் இருந்தன.பதினைந்து வருடங்களுக்குமுன்பு பதிப்பான ஒரு கதையை,ஒரு நண்பன் மூலமாக அறிந்து இப்போதுள்ளதுபோல மாற்றியுள்ளேன்.இந்த முரண்பாடான அனுபவத்தை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். இதன் மூலம் வருங்கால எழுத்தாளர்களுக்கு எழுதுவது எத்துணை ஒர் முடிவில்லாத காரியம் என்றும்,எழுத முற்படுவது ஒர் உந்துதலற்றது என்றும் தெரியும்.

எழுபதுகளின் தொடக்கத்தில் எழுதப்பட்ட முதல் கதை நான் பார்சிலோனா வந்து ஐந்து வருடங்களான ஒர் இரவின் ஒளிமிக்க கனவாக உருவானது.நான் எனது நீத்தார்தின நினைவு நாள் விழாவில் கலந்துகொண்டேன்.என் சாவு மிகப்பெரிய பரிசாக என் பழைய நீண்ட கால நண்பர்களை எனக்கு மீட்டுத்தந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. விழா முடிந்ததும் எல்லாரும் கிளம்ப முற்படும்போது என் நண்பன் சொன்னான் ” நீ மட்டும் போக முடியாது”. அப்போதுதான் எனக்கு சாவு என்றால் நண்பர்களை பிரிவதென புரிந்தது.

இந்த எச்சரிக்கை கனவை நான் என்னை புரிந்துகொள்ளுதலின் ஒர் புனித பரிட்சையாகவே எடுத்துக்கொண்டேன்.ஒர் லத்தின் அமெரிக்கனின் ஐரோப்பிய வாழ்வில் நடக்கும் விந்தையான விஷயங்களை எழுதுவதற்காக ஏற்ப்பட்ட ஒரு அற்புதமான பாதையாக இவ்விஷயம் எனக்குப்பட்டது.மேலும் அச்சமயம் எனது “Autumn of the Patriach” புத்தகத்தை முடித்திருந்தேன். அப்படி ஒர் கடினமான , தைரியமான படைப்பிற்க்குப் பிறகு என்ன செய்வதென தெரியாமலிருந்தேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கதைக்கருக்களின் குறிப்புகளை தொகுத்து வைத்திருந்தேன்.அவற்றை என்ன செய்வதென முடிவு செய்யவில்லை.இதை ஆரம்பித்த இரவில் புத்தகம் இல்லாததால் என் குழந்தைகளின் கட்டுரை புத்தகத்தில் எழுத ஆரம்பித்தேன்.நாங்கள் அடிக்கடி பிராயணம் செய்ததால் அதை என் குழந்தைகள் அவர்களின் புத்தக மூட்டையில் வைத்துக்கொள்வார்கள்.இப்படியாக அறுபத்து நான்கு கதைகளுக்கான விரிவான குறிப்புகளை தொகுத்துவிட்டேன்.

இனி அவற்றை எழுத வேண்டியதுதான்.

நான் பார்சிலோனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 1974-இல் வந்தேன்.இந்த புத்தகத்தை ஒரு பத்திரிக்கை தொகுப்பாக வெளியிட விருப்பம் இருந்தது.தொடர்கதையாக இல்லாமல் ஒர் திறமையான கவிதையாய் தாங்கள் இறந்த கணத்திலிருந்து இவற்றை மீட்டுவரும் எண்ணம் இருந்தது.ஏற்கனவே மூன்று சிறுகதை தொகுப்புகள் வெளிவந்திருந்தாலும்,எதுவும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியானவையாக தொகுத்ததில்லை.ஆகவே இந்த 64 கதைகளையும் எழுதுவது ஒர் அதிபூர்வமான அனுபவமாக இருக்கும். மேலும் இவை அனைத்தும் ஒரே நேரத்தில், வடிவத்திலும் அனுபவத்திலும் ஒரே மாதிரி இருக்குமானால்,வாசகர்களுக்கு பசுமரத்தாணி போல பதிந்துவிடும்.

முதலிரண்டு கதைகளும் 1976-இல் படைத்து வெவ்வேறு இலக்கிய பத்திரிக்கைகளில் வெளிவந்தவை.ஒரு இடைவேளி இல்லாமல் அயராது எழுதினேன்.ஆனால் மூன்றாவது கதை எழுதும்போது பாதியில் நிறுத்தினேன்.ஒர் நாவல் எழுதுவதைப் போல களைப்பு ஏற்ப்பட்டது.அந்த கதையை முடிக்கக்கூட சக்தியில்லாமலிருந்தேன்.அதற்க்கான காரணம் புரிந்தது.ஒரு நாவலுக்குண்டான எல்லா அமைப்புகளான கட்டமைப்பு,சாரம்,சந்தம்,நீளம்,கதாப்பாத்திரங்களின் ஆளுமை இவை அனைத்தும் ஒரு கதைக்கும் வடிவமைப்பது ஒரு அசாத்தியமான காரியம்.மீதியெல்லாம் எழுதும் கலையின் ஆர்வம் மட்டுமே.ஆரம்பிக்க முற்படும் சக்தி கதை முடியும்வரை தொடர வேண்டும்.ஆனால் சிறுகதைக்கோ ஆரம்பமும் இல்லை முடியும் இல்லை.அது நிலைக்கும் அல்லது நிலைக்காது.அப்படி நிலைக்காத கதைகளுக்கு ஒருவன் வேறு திசையை காட்ட வேண்டும் அல்லது அந்த க¨ஊ e குப்பையாக வேண்டும்.”நல்ல எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியவற்றிற்கு விட கிழித்ததற்காகவே பாராட்டப்படுகிறார்கள்” யாரோ சொன்னது உண்மைதான் போலும்.நான் என் கதைகளை கிழிக்கவில்லை,மாறாக அதைவிட கொடுமையாக அவற்றை மறந்த நிலையில் சூனியத்தில் தள்ளி வைத்தேன்.

1978 வரை அந்த எழுத்து என் குப்பைகளுக்கு நடுவில் இருந்தது.ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருந்தபோதுதான்,அந்த கதைகள் காணாமற் போனது உரைத்தது.வீட்டின் ஒவ்வொரு மூலையும் அலசப்பட்டன.மேஜைகளை நகர்த்தி,அலமாரியை இழுத்து என் நண்பர்கள் மற்றும் வீட்டாரின் துணையோடு சல்லடைபட தேடினேன்.குப்பைகளோடு சேர்ந்து தொலைந்திருக்க வேண்டும்.

இதனாலான பாதிப்பு என்னை ஆச்சிர்யப்படுத்தியது.நான்கு ஆண்டுகளாக நான் மறந்த தலைப்புகள் என் மதிப்புகளை கேள்விக்குறிகளாக்கின.இந்த இழப்புகளை ஈடுகட்ட என்னுடைய முப்பது கருக்களை மீண்டும் வடிவமைத்தேன்.இது எழுதுவடைவிட கடுமையான வேலை.நினைவுபடுத்துவது ஒரு விதமான வடிகட்டும் பணி.நல்லது மட்டும் நிற்கும்.

என் தவறுகளுக்கான தண்டனையை அனுபவித்தது என் கருக்கள்.மிஞ்சியது பதினெட்டுதான்.இந்த தடவை ஒர் உறுதியுடன் நிறுத்தாமல் எழுத நினைத்தேன்.ஆனால் மறுபடியும் அந்த உந்து சக்தியை இழந்தேன்.நான் புதிய எழுத்தாளர்களுக்கு சொல்லும் அறிவுரையை பின்பற்றவில்லை.மாறாக அவற்றை தூக்கிப் போடாமல் எதற்கும் இருக்கட்டுமே என்று கோப்பாக மாற்றினேன்.

எழுதும்போது இடைவேளி விடுவதால் எழுதும் பழக்கத்தை இழக்கின்றேன்.மேலும் எழுத ஆரம்பிப்பது மிகவும் கடினமாகிறது.என் எழுதும் பழக்கதை ஒரு சீரான கட்டுக்குள் கொண்டுவர அக்டோபர் 1980-இலிருந்து 1984 வரை ஒரு தினசரிக்கு வாராவாராம் கருத்துரை எழுத தொடங்கினேன்.அப்போதுதான் ஒர் உண்மை உரைத்தது.நான் கடினப்படுவது அந்த கருக்களை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்குதான்.மேலும் அவை ஒது 5 தினசரி பக்கங்களாகவே லாயக்கானவையாக தெரிந்தன.இந்த கருக்களை மையமாகக் கொண்டு எழுதிய ஐந்து தினசரி கருத்துரைகள் மேலும் ஒர் உண்மையை உணர்த்தின;இவை திரைப்படத்திற்கான கட்டமப்பிற்குள் கச்சிதமாகப் பொருந்தும்.இப்படித்தான் ஐந்து படங்களும் ஒரு தொலைக்காட்சி தொடரும் உருவானது.

அப்போதுதான் எதிர்பாரத ஒன்று நடந்தது.நான் திரைப்படத்திலும் தினசரிகளிலும் எழுதியது என் கதைகளின் கருக்களை மாற்றியது.இதனால் என்னுடைய கடைசி திருத்தத்தில் என்னுடைய மற்றவர்களின் கருத்துகளோடு கவனமாக பிரித்தெடுத்தேன்.என் ஐந்து இயக்குனர்களோடு வேலை பார்த்ததில் கதை எழுதுவதில் மற்றுமொறு புது யுத்தியை கற்றுக்கொண்டேன்.ஒரு கதையை களைப்போ மற்றொறு வேலை வரும் வரை எழுதுவேன்.பின்னர் மற்றொறு கதை எழுதத்தொடங்குவேன்.என்னுடைய நீத்தார் தின கதையோடு சேர்த்து ஆறு கதைகள் குப்பை கூடைக்குள் சென்றன.என் கனவில் வந்த அமைப்பிற்குள் அந்த கதைகள் அமையாததே காரணம்.

மீதிக் கதைகள் ஒர் நீணட பயணத்திற்கு தயாராகின.

அந்த மீதி பனிரெண்டு கதைகளைத்தான் இந்த புத்தகத்தில் உள்ளன.இரண்டு வருட இடைவிடாத உழைப்பிற்குப்பின் கடந்த செப்டம்பர் மாதம் அவை பதிப்பிற்கு தயாராகின.குப்பை கூடத்திற்கும் கோப்பிற்கும் பயணம் செய்த இந்த கதைகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக இருந்திருக்களாம்.ஆனால் எனக்குள் ஒரு கடைசி நேர சந்தேகம் ( 11th hour doubt) . இந்த கதைகளின் களமான ஐரோப்பிய நாடுகள் என் ஞாபகத்தின் ஊட 1கப்படைக்கப்பட்டது.அவற்றின் இன்றையை நிலைமையை புரிந்து கொள்ள பார்சிலொனா,ஜேனீவா,ரோம் மற்றும் பாரீசுக்கு சென்று வந்தேன்.ஒன்று கூட என் ஞாபத்தோடு பொருந்தவில்லை.நவீன ஐரோப்பாவைப்போல எல்லாமே தலைகீழாக இரூந்தது.என்ன அதிசயம்!!

உண்மையான ஞாபகங்கள் பூதகரமாகவும் , பொய்யான ஞாபகங்கள் நம்பத்தகுந்த உண்மையாகவும் இருந்தன.

இதன் மூலம் என்னால் காட்சிப்பிழைக்கும் பழைய ஞாபகங்களுக்கும் வித்தியாசம் காண முடியவில்லை.

தீர்வு என் கண்முன் வந்தது.என் புத்தகத்தை முடிக்கும் வழியை கண்டுபிடித்தேன்.காலத்தோடு பொருந்திய பார்வை.இதை கடந்த காலங்கள்தான் கற்பிக்க முடியும்.

அந்த லாபகரமான பயணத்திற்கு பிறகு எட்டு மாதங்களில் இந்த கதைகளை எழுதி முடித்தேன்.என் அனுபவத்தில் கண்டிராத ஐரோப்பா அதன் தொடக்கமான கற்பனையை புரிய வைத்தன.இதற்கு பிறகு எழுதுவது மிக இலகுவானது.மனிதமனம் மிதப்பதற்க்கு கதை சொல்லும் மகிழ்ச்சியும் ஒர் காரணம்.எல்லாக் கதைகளிளும் ஒரே நேரத்தில் வேலை செய்ததால்,இந்த பனிரெண்டு கதைகளுக்குள் மிக எளிதாக முன்னும் பி_ fdனும் பயணம் செய்ய முடிந்தது.இதனால் என் பார்வையின் பரப்பளவு விரிந்து என் அஜாக்கிரதை காரணமாக இருந்த தவறுகளை திருத்த முடிந்தது.

இப்படியாக நான் எழுத ஆசைப்பட்ட விதத்திற்கு அருகில் இக்கதைகள் உள்ளன என நம்புகிறேன்.நிச்சயமற்ற தன்மையை உடைத்து அங்குமிங்கும் பயணம் செய்து ஒரு புத்தகமாக உருவாகிவிட்டது இந்த கதைகள்.நான் கதை எழுத ஆரம்பித்த தேதிகளை ஒவ்வொரு கதையிலும் குறிப்பிட்டுள்ளேன்.மேலும் அதே வரிசையில் இருப்பதால் என் சிந்தனையை கோர்வையாகச் சொல்ல முற்பட்டிருக்கேன்.

ஒவ்வொரு முறையும் கதை மெருகேறுவதை உணர்ந்தேன்.என் கடைசி வடிவம் இவைதானென எப்படி முடிவு செய்வது?வாசனைபடி ஒரு பண்டத்தின் நிலை சமையற்காரனுக்கு தெரிவது போல்,இது ஒரு சூத்திரம்.எந்த காரணமும் இல்லாமல் என் உள் மனதின் தீர்வு.என் எந்த புத்தகத்தையும் நான் திரும்ப பாத்திராதது போல இதையும் படிக்கப்போவதில்லை.செய்த தவறுகளும் ஒரு காரணம்.சந்தர்ப்பவசமாக இந்த விந்தையான யா த்ரிகளுக்கு வீட்டிற்க்கு வருவதைப்போல குப்பை கூடைக்குள் செல்வதும் மகிழ்ச்சிதான்.

வாசகர்களுக்கு தெரியும்.

– காப்ரியல் கார்சியா மார்க்கே , ஏப்ரல் 1991.

giridharan.rajagopalan@wipro.com

Series Navigation

காப்ரியல் கார்சியா மார்க்கே

காப்ரியல் கார்சியா மார்க்கே