அந்த பொசங்களின் வாழ்வு….

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

என் எஸ் நடேசன்


புதிதாக வானிஸ் அடிக்கப்பட்ட அந்தப் மரப்படிகளில் என் முகம் தொிந்தது. மாடிப்படிகளுக்கு கடைசியாக வர்ணம் அடித்த நியாசி என்னும் துருக்கியர் தனது வேலையை திறம்பட செய்திருக்கிறார் என நினைத்து நான் திருப்தியடைந்தேன்.

மாடிப்படிகளின் மேலே சென்றுகொண்டிருந்த எனக்கு சிறிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

கடைசிப்படிகளில் சிறிய அழுக்கான பாதங்கள் படிந்திருந்தது.

நாங்கள் குடிவரமுன்பே எங்கள் வீட்டை க்கிரமித்த பிராணிகள் யாராக இருக்கலாம் ?

சிறிது கவனமாக பார்த்தபொழுது சில மல புழுக்கைகளும் கிடந்தன. எலிகளின் புழுக்கைகளைவிட இரண்டு மடங்காக இருந்தது.

பொசம் (Possum) என முடிவு செய்து கொண்டேன்.

தொழில் முறையாக பொசம் பிடிப்பவர்களை தொடர்புகொண்டு நான் குறித்தேன். பொசத்தை பிடிப்பது மட்டுமல்ல, எதிர்காலத்தில் வீட்டுள் பொசங்கள் வராமல் இருப்பதற்கும் உறுதியளித்தார்.

வீடுகட்டும் செலவோடு இதையும் சேர்த்து கணக்கில் போட்டுக்கொண்டேன்.

சராசாியாக ஒரு குடும்பம் ஏழுவருடங்கள் ஒரேவீட்டில் வசிப்பார்கள் என்பது அஸ்திரேலிய புள்ளிவிபரம். தாத்தா, மகன்இ பிள்ளை என தலைமுறைகளாக ஒரே வீட்டில் வசிக்கும் எம்மைப்போன்ற சிியர்களுக்கு புதுமையாக இருந்தாலும் இங்கு வந்ததும் நாமும் இவ்வகையிலே சிந்திப்பதும் செயல்படுவதும் தவிர்க்க முடியாதது.

பணவசதி கூடியதும் செல்வந்தர்கள் வாழும் பகுதிகளுக்கு குடியேறுவதும், பிள்ளைகள் பல பிறந்தவுடன் பொிய வீடுகளை நோக்கி செல்வதும், பெற்றோரைவிட்டு தங்கள் சொந்த கூடுகளை அமைத்துக்கொண்டு பிள்ளைகள் சென்றதும் பெற்றோர்கள் சிறிய வீடுகளுக்கு செல்வதும தவிர்க்க.முடியாது. இவை வாழ்க்கை சக்கரத்தில் தொடர்ச்சியான சுழற்சியில் வந்துபோகும் புள்ளிகளாகும். வாழ்க்கை சக்கரம் பிரேக்டவுன் கி விவாகரத்து என்று வந்தபோது குடி இருந்த வீட்டைவிற்று பணத்தை இரண்டாக பங்குபோடுவதும் உண்டு. மூன்றுக்கு ஒரு குடும்பத்தில் விவாகரத்து நடப்பது என்பது புள்ளிவிபரம். இது ஒரு சமூகப்பிரச்சனை என்றாலும் வீட்டுசந்தையில ;பொருளாதார உந்து சக்தியாக அமைகிறது. பத்து வருடங்களுக்கு இரண்டு முறை வீடு விற்பனைக்கு வந்தால், வங்கிகள், வீட்டுதரவு நிறுவனங்கள் ஏன் அரசாங்கத்துக்கும் முத்திரை வருமானம் கிடைக்கிறதுதானே! பிாிந்த கணவன்-மனைவி உறவு குழந்தைகளுக்கும், புள்ளி விவர திணைக்களத்துக்கும் மட்டும்தான் முக்கியமாகிறது.

இப்படி எந்த காரணமும் எங்களுக்கு இருக்கவில்லை. வீட்டில் மானசீகமான ஒரு தொடர்பும் ஏற்பட்டதால் பதினைந்து வருட காலத்தில் ஏற்பட்ட நலிவுகளை மாற்றி மாடி அமைத்து புனருத்தாரணம் செய்வது என சகியின் சம்மதத்துடன் முடிவு செய்தேன்.

கட்டிடவியலாளாின் லோசனைப்படி வியட்னாமை சேர்ந்த சீன இனத்தவரை வீட்டைப்புதுப்பிக்க ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

வீட்டை புனருத்தாரணம் செய்ய எடுத்த பதினைந்து மாத காலங்கள் எம்மால் மறக்கமுடியாது. சதிபதி வாக்குவாதம் உச்சக்கட்டங்களை தாண்டியது. உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் பாலுமகேந்திராவின் வீடு திரைப்படத்தை நினைத்துக் கொள்வேன்.

எங்கள் அவல நிலையை பார்த்த பக்கத்து வீட்டு அவுஸ்திரேலிய பெண்மணி சொன்னாள் ங்கிலத்தில்

“போயும் போயும் சீனாகாரனிடம் வீடு கட்ட கொடுத்திருக்கிறீர்களே! அவர்களுக்கு ருசியாக சமைக்க மட்டும் தொியும்.”

இனவாதம் பூசிய இரங்கல் வார்த்தைகள்.

‘சீனாக்காரன் கட்டிய பெரும் சுவர் இன்றும் நிற்கிறதே’ என சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை.

ஏதாவது சந்தர்ப்பத்தில் நாமும் இனவாதியாக மாறிவிடுகிறோம் என்ற உணர்வு உள்ளத்தை உறுத்திியது.

அடுத்த நாள் குளியலறையில் வேலை செய்துகொண்டிருந்த நியாசியிடம் இருந்து எனக்கு தொலைபேசி வந்தது.

‘பொசம் ஒன்று வந்து உங்கள் குளியலறை கண்ணாடியின் மேல் இருக்கிறது.’

‘உடன் வருகிறேன’;.

பூனைகளை கொண்டுசெல்லும் இரும்பு வலை பெட்டி ஒன்றை எனது வேலைத்தலத்திலிருந்து எடுத்துக்கொண்டு வீடு சென்றேன்.

இவ்வளவு செலவு செய்து கட்டிய வீட்டை பொசம் குடியேறி அழுக்காக்கிறதே என்று த்திரத்துடன் அவசரமாக காரை ஓட்டினேன்.

ஒரு சில வீடுகளில் பொசம் பழங்களை தின்று வாழுகிறது. சில அவுஸ்திரேலியர் கூடு ஒன்று செய்து வைப்பார்கள். பாாிய உபத்திரவம் இல்லை. கலவி காலத்தில் கூரைகளில் ஓடி விளையாடும்.

எனக்கிருந்த பொறுமை வீடுகட்டும் சீனாகாரனிடம் விரயமாகிவிட்டது. பொசத்தை சகித்துக்கொண்டு வாழ்வதற்கு மிச்சம் மீதி இல்லை.

குளியல் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது மூலையில் ண் பொசம் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தது. பொசத்தை பார்த்தவுடன் த்திரம் போய்விட்டது.

மெல்பேன் வீதிகளில் வாகனங்களால் மோதப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடக்கும் பொசங்கள் மனத்திரையில் விாிந்தது. மனிதர்கள் வைத்த ரோட்டு விதிகள் அவைகளுக்கு புாியாது. பூனை , நாய்கள் வாகனத்தில் மோதி இறந்தால் அவை அடக்கம் செய்யப்படுவதற்கு உாிமையாளரோ அல்லது நகரசபையோ பொறுப்பேற்கும். காரணம், பூனை , நாய்கள் வாிப்பணம் செலுத்துகின்றன. பொசங்கள் உடல்கள் வீதியோரங்களில் கிடந்து அழுகும்.

எல்லோரும் வாழ்வதற்குதானே இந்த பூமி. மனிதன் மட்டும் எல்லைக்கோடுகளைப்போட்டு பங்கு பிாிப்பது எவ்வளவு அநியாயம ? அவுஸ்திரேலியாவில் மற்றய இடங்களிலும் பார்க்க கூடிய அளவு சுய நலமாக குறைந்த காலத்தில் திவாசிகளுக்கும், மற்றய உயிாினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தென்கண்டம் என்ற அவுஸ்திரேலியாவிற்கு கப்டன் குக்கும் அவனது மாலுமிகளதும், சிறிய குற்றம் செய்த ண்களையும் விபச்சாரம் செய்தவர்கள் எனக் கூறப்பட்ட பெண்களையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு வரும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் தாித்து நின்றார்கள். அங்கிருந்து இரண்டு பேரை சமைப்பதற்கு ஏற்றிக்கொண்டு சிட்னி பொட்டனி பேயில்(Botany Bay) இறங்கினார்கள்.

இக்காலத்தில் சமையல்காரர்கள் தமிழனா, சிங்களவனா என்று கேட்கலாம்.

பொட்டனி பேயில் இறங்கியவர்கள் திவாசிகளை கண்டதும் மனிதர்களாக கருதவில்லை. மனிதர்கள் இல்லாத சூனியப் பிரதேசமாக அவுஸ்திரேலியாவை பிரகடனம் செய்தனர். தங்கள் கூற்றை உண்மையாக்க திவாசிகளை கொல்லவும் செய்தனர்.

புதைபொருள் ய்வு தகவல்களின்படி நாற்பதினாயிரம் வருடங்களுக்கு மேலாக திகுடிகள் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள். ஐரோப்பியர்களுக்கு பின்பு சீனர்கள் தங்கம் எடுக்க வந்தனர். சீனர்களின் வரவை தடுப்பதற்கு ‘வெள்ளையர் மட்டும்’ (Whites only) கொள்கை வந்தது. எழுபதுகளில் இந்த கொள்கை இல்லாமல் போகும் காலத்தில் வள்ளங்களில் வியட்னாமிய அகதிகள் வந்து சேர்ந்தனர். கடைசியாக தமிழர்களும் புலம்பெயர்ந்து வந்தனர்.

இப்படி அவுஸ்திரேலியாவை காலம் காலமாக மனிதர்கள் க்கிரமிக்கு முன்பு இங்கு வாழ்ந்தவை மாசூப்பியல் என்னும் மிருகங்கள். இவை பாிணாம வளர்ச்சியில் முலையூட்டிகளுக்கு முந்தியவை. இந்த நாட்டின் உண்மையான வாாிசுகள்.

முயல், எலி, நாய்கள் கூட ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்டன.

இப்படியான ஒரு பிராணி, இந்த நாட்டின் திவாசி என்னிடம் பயந்து நடுங்கும் குற்றவாளிபோல் வாலை சுருட்டிக்கொண்டு நடுங்குவது நியாயமா ? என்ன கொடுமை!

மனதில் குற்ற உணர்வுகள் அலைமோதின. இரண்டு கால்கள் இருப்பதால் நான் அதிகாரம் படைத்துவனாகிறேன். எத்தனை மில்லியன் வருடங்கள் இந்த பொசத்தி;ன் பரம்பரையினர் இந்த பூமியில் வாழ்ந்தனர். நான் இந்த நாட்டுக்கு வந்து இருபது வருடம் கூட கவில்லையே! மனித வர்க்கம் சுயநலம் கொண்டதுதான். தான், தனது பரம்பரை என்று எவ்வளவு காலத்திற்கு பொருள் சேமிக்கிறான். அதிகாரம், பணம், யுதம் எல்லாவற்றையும் பாவித்து தனது இன மக்களையே கொலை செய்யும் மனிதன் உன்னை விட்டுவைப்பானா ?

கேவலம் ஒரு பொசத்திற்காக இரங்கலாமா ?

மனிதனுக்கு உாிய குணத்தையும் அறிவையும் பாவித்து நியாசியின் துணையுடன் பொிய தடிப்பான துணியால் பொசத்தை மூடி அலாக்காக தூக்கி பூனைப்பெட்டியில் போட்டு மூடினேன்.

பெட்டியின் உள்ளே கண்களை அகல விாித்து என்னை பார்த்து நியாயம் கேட்டது. வால் தூாிகைபோல் இருந்தது.

இப்படியான பிரஸ் வால் பொசம் (Brush Tail Possum) இடம்மாறும்போது இறந்துவிடும் என கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

னாலும் என்ன செய்வது ?

எனது வீட்டுக்கு சமீபத்தில் உள்ள எனது வைத்தியசாலையில் உள்ள மரத்தில் விட்டேன்.

அடுத்த சில நாட்களில் மேலும் இரண்டு பொசம்களை பிடித்து ஒரே மரத்தில் விட்டேன். உணவு அளித்தேன். குடும்பமாக இருப்பதைக்கண்டு ஓரளவு றுதலாக இருந்தது. மரத்தின் கீழ் மேலும் உணவுகளைப் போட்டுவிட்டு வீடு சென்றேன்.

வாரவிடுமுறையின் பின்பு மரத்தை அண்ணாந்து பார்த்தேன். பொசங்களை காணவில்லை.

ஈரமுள்ள இதயங்கள் கொண்டவர்கள் வீடுகளை தேடிப்போய்விட்டனவா ? கார்களின் சக்கரங்களின் கீழ் உயிரை தொலைத்துவிட்டனவா ?

திவாசிகளின் நிலைமையை பற்றி பேசும்போது எனது நண்பன் சொன்னான் ‘ங்கிலேயர் மட்டும் இந்த நிலைக்கு பொறுப்பில்லை. பிற்காலத்தில் வந்த மற்ற இனத்தவர்களும் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த மூன்று பொசங்களை பொறுத்தவரை அந்த கூற்றில் உள்ள உண்மையை நானும் நிரூபித்து விட்டேன்.

—-

uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்