தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

திலகபாமா


டிசம்பர் மாதம் 11ம் தேதி காலை 10 மணிக்கு தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு பாரதி இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.விடாது பெய்து கொண்டிருந்த மழை , கூட்டத்தை தாமதப் படுத்தவே. 11. 15 மணியளவில் நிகழ்ச்si ஆரம்பமானது

இந்நிகழ்ச்சி வெறுமனே அவரது நினைவுகளை பேசி வருத்தப் படுகின்ற கூட்டமாய் இருப்பதை தான் விரும்பவில்லை அதைவிட அவரது நினைவுகள் அவரது படைப்பு தந்து விட்டு போன மகிழ்வான தருணங்களை நினைத்துப் பார்ப்பதுதான் அந்த படைப்பாளிக்கும் , அவர் கவலைப் பட்ட சமூகத்திற்கும் செய்யக் கூடிய நல்ல விசயமாக இருக்கும். அந்த வகையில் இன்று தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புகளைப் பற்றிய விரிவான விவாத அரங்காக இந்த நிகழ்வு அமைய வேண்டும் என விரும்பினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக , அவரது படைப்புகளைத் தொகுப்புகளாகவும் இதழ்கலில் வந்த போதும் வாசித்திருந்த போதும், இன்று மீண்டும் தீவி ர வாசிப்புக்குள்ளாக விரும்பி புத்தகங்களை தேடினேன். அவரது தோழர் நாவல் எனக்கு கிடைக்க வில்லை. அதனால் வாசிப்பு முழுமையானதாய் நிகழ்த்த முடியாது போனது. இருப்பினும், ஒட்டு மொத்த படைப்புகளிலும் இந்த வட்டார வழக்கு எழுத்துக்கள் இருப்பதையும், அவரது எழுத்து போலித் தனங்களின்றி அடித்தள மக்களின் அன்றாடக் கவலைகளிலிருந்து எழும் கேள்விகளை, சின்ன சின்ன நிகழ்வுகள் தான் என்றாலும் அதற்கிடையில் சமூகத்தின் முன் வைக்க வேண்டிய கேள்விகளை வைத்து விடுகின்றது. யதார்த்தங்களில் இருக்கின்ற விசயங்களை பேசும் போதும் அப்படியே பேசி விடாது, இந்த சமுகம் அல்லது மனிதம் இப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்ற வகையில் புதிய கேள்விகளை, யதார்த்த வாழ்வில் நாம் சந்திக்க முடியா கேள்விகளை கேட்டு விட்டுப் போய் விடுவார்.அவர் தோற்றத்தில் தெரிந்த கம்பீரம் என்பது அவரது உள்ளத்தின் உண்மையின் வெளிப்பாடு. என்று திலகபாமா பேச, தொடர்ந்து

அவரது நாரணம்மாள் எனும் சிறுகதை தொகுப்பு பற்றி விமரிசனம் தந்த சிவபெருமான் பொருளாதரா ரீதியாக கஷ்டப் படும் ஓருவன் சமூகத்தில், எப்படி எல்லாம் அலைக்கழிக்கப் படுகின்றான் என்பதைக் காட்டும், பல கதைகள் நியாயமான அதிர்ச்சியை தந்து நமை சிந்திக்க வைப்பவையாக இருக்கும் என்று பேசினார்.

முத்து பாரதி , தோழர் நாவல் அவரது முக்கிய படைப்புகளில் ஒன்று, அவருக்கான அஞ்சலியை த. மு எ ச மிகச் சிறப்பாக செய்தது என்றும் குறிப்பிட்டார். தனுஷ்கோடிராமசாமி ‘ எடிட் செய்யனும் ‘ எனும் வார்த்தையை அடிக்கடி பிரயோகம் செய்வார். நான் எழுதிய கதைகளை பற்றிய விமரிசனம் கேட்கையில், எடிட் செய்யுங்க தோழரே, அருமையான கதை உள்ளிருக்கு என்பார். நண்பர்களை தேவையில்லாதவர்களை எடிட் செய்யுங்கள் என்பார். அவரது தீம்தரிகிட எனும் சிறுகதை தொகுப்பில் வந்த கந்தகக் கிடங்கிலே எனும் சிறுகதை இந்த மண்ணின் பிரச்சனைகளை பேசியது. அந்த தொகுப்பு சிவகாசியில் வைத்து எரிக்கப் பட்டது மிக முக்கிய நிகழ்வு. அவர் கதைகளில் ‘தீப்பெட்டி தொழிற்சாலைகள் எங்களது குழந்தைகள் விளையாட்டை அள்ளிக் கொண்டு போனது ‘ என்று எழுதுவார். அந்த வாக்கியம் இன்று தொலைக்காட்சி, கணிணி எல்லாவற்றுக்கும் பொருந்தும், அவரது தோழர் நாவல் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நிறைய பிரதிகள் அடிக்கப் பட்டது. ‘செந்தட்டிக் காளைக் கதைகள் ‘ எனும் தொடர் புதிய பார்வையில் வெளிவந்தது. அவருக்கு பிடித்தமானது என்று அடிக்கடி குறிப்பிட்டிருக்கின்றார்.

வைத்தியநாதன் பேராசிரியர் சிவநேசன் ஆகியோரும் அவரது படைப்புகளும் படைப்பு சார்ந்த நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

சாத்தூர் கிளை கலைஇலக்கிய பெரு மண்றத்தின் செயலாளரும், தனுஷ்கோடி ராமசாமியின் பள்ளிக் கூடத்திலிருந்து அவரது இறப்பு வரை நண்பராக சகலமும் பகிர்ந்து கொண்டவரான பழனிக் குமார், இறப்பை அவர் ஏற்றுக் கொண்டார் என்றும், எல்லா அனுபவங்களையும் பதிவாகவும் இலக்கியமாக ஆக்கவும் முயன்றார். அவரிடம் நேர்மையான கம்பீரம் குறையாத திட மனம் எப்பவும் இருந்தது என்றார்.மாற்று அமைப்புகளிலும் அவருக்கு இருந்த நட்பு வெளிபாட்டையும் இளைஞர் சூழ எப்பவும் அவர் இருக்க விரும்பியதையும் பகிர்ந்து கொண்டார்.

பேராசிரியர் பொ. நா. கமலா அவர் எழுதிய அஞ்சலி பாடலை இசைத்தார்.

நிகழ்வுக்கு தனுஷ்கோடி ராமசாமியின் புதல்வர் வந்திருந்தார்.தன் தந்தையூடான நினைவுகளை அவரும் பகிர்ந்து கொண்டார். சாத்தூரில் அவர் சார்பாக அறக்கட்டளை நிறுவப் பட்டு இளம் படைப்பாளிகளுக்கு அவர் நினைவை போற்றும் வண்ணம் விருது வழங்க இருக்கிறது எனும் தகவல்களையும் பழனிக் குமாரன் அறிவித்தார்.

தனுஷ்கோடி ராமசாமியின் நூல்கள்

சிம்ம சொப்பனம்

சேதாரம்

நாரணம்மாள்

தீம்தரிகிட

பெண்மை என்றும் வாழ்க

வாழ்க்கை நெருப்பூ

நாவல்கள்

தோழர்

நிழல் என்னும் ஒரு கவிதை

—-

mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா

திலகபாமா