புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

மணிக்கவி, த.சிவபாலு எம்.ஏ.(தங்கபாலு)


கனடா இலக்கியத் தோட்டத்தின் ஆதரவில் கடந்த ஒக்டோபர் 1ம் திகதி பி.ப. 7மணிக்கு ஸ்காபுரோ சிவிக்சென்ரறில் ‘சரணமென்றேன்’ ‘பச்சைமிளகாய் இளவரசி’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும் வெளியீடு செய்திருந்தார் கவிஞர் புகாரி. ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வருடாவருடம் இலக்கிய தகை சான்றோர்க்கு விருதினை வழங்கிக் கெளரவித்து வருவது அனைவரும் அறிந்ததே. ரொறன்ரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்தப் பணியினை இலக்கியத்தோட்டம் செயற்படுத்தி வருகின்றது. இலக்கியத் தோட்டத்தின் பெரும் பணியினைக் கருத்திற்கொண்டு அதன்வழி தனது இரு கவிதை நூல்களையும் வெளியீடு செய்வதற்கு அவர்களின் ஆதரவைப் பெற்று அவர்களுக்குத் தனது ஆதரவுக் கரத்தினை மீகவும் நீளமாக நீட்டியுள்ளார் கவிஞர் புகாரி. வலது கை வளங்குவது இட துகைக்குத் தெரியாது இருக்கவேண்டும் என்ற எம்பாரம்பரியத்தினை மெய்ப்பிப்பவராக அவரது செயல் மிக அந்தரங்கமாகவே நடைபெற்றுள்ளமை அவர் வீணே பகட்டுக்கோ அன்றிப் புகழுக்கோ நிதியுதவி செய்யவில்லை என்பதனை எடுத்துக் காட்டி நிற்கின்றது. பெயருக்கும் புகழுக்கும் அலைந்துதிரியும் எம்மவர் மத்தியில் அவர் பரபரப்பு, சிலுசிலுப்பு இன்றி யாருமறியாவண்ணம் காலத்தால் செய்த இந்த உதவி மாணப் பெரிதாகி அவரின் தகமையை எம்மத்தியிலே உயர்த்;தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

பெருந்தொகையான ஆதரவாளர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்தத்திற்கு பிரபல வீடு விற்பனை முகவரும், இலக்கிய ஆர்வலரும், இலக்கியத்தோட்டத்தின் உறுப்பினரும் விபுலாநந்த அடிகளாரின் யாழ் நூலை மறுபதிப்புச் செய்வித்தவருமான தாம். சிவதாசன் தலைமைதாங்கினார். இந்தநூல் வெளியீட்டில் முன்னைநாள் மகஜனக் கல்லூரி அதிபர் பொ.கனகசபாபதி, பிரபல நாவல் இலக்கிய கர்த்தா அ.முத்துலிங்கம், குவியம் சஞ்சிகை ஆசிரியர் பொன். குலேந்திரன், கடந்த 35 ஆண்டுகளாக கனடியமண்ணில் வாழ்ந்துவரும் இலக்கிய வாதியும் தொலைக்காட்சிக் கலைஞருமான ஆர்.எஸ். மணி, இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த இலக்கியப் பேச்சாளர் ரமணன், விஞ்ஞானக்கட்டுரைகளை எமக்கு எழுதிவரும் பொறியியலாளர் ஜெயபரதன் ஆகியோர் இந்தவிழாவில் பேச்சாளர்களாகவும் நூல் ஆய்வாளர்களாகவும் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.

கவிஞர் ரமணன் சிறப்புச்சொற்பொழிவொன்றினை ஆற்றினார். அவர் கவிஞர் புகாரியினைப்பற்றிக் குறிப்பிடும்போது ஒரு கவிஞன் எப்போது கவிஞனாக இருக்கிறான் தெரியுமா ? எழுதாதபோதும் எவன் கவிஞனோ அவன்தான் எழுதும்போதும் கவிஞனாகிறான். ஆம், கவிதை என்பது எழுத்திலிதான் என்பதிலி;லை. எழுத்துக் கவிதையின் நிழல்! துன்னைச் சுற்றிநடக்கும் அனைத்தும், தனக்குள்ளேயே, தனது பிரதிபலிப்பை விழைந்தே நடக்கின்றன என்று நம்புகிறானே அவன் கவிஞன். ஓவ்வொரு சம்பவமும் கன்றாக, அவனதுநெஞ்சம் பசுமடியாகக்கவிதை பாலாகப் பீறிடுகிறதே, அவன் கவிஞன், எத்தகைய உணர்சிகளுக்கும் தனமாகி, எந்துஉஉணரிச்சிக்கும் ஆட்படாது கனல்கின்றானே அவன் கவிஞன். ஆப்படிப்பட்ட கவிஞன்தான் புகாரி! புகாரி ஒரு நல்ல கவிஞராக விளங்குவதற்குக் காரணம், அவருக்குத் திருப்தியே கிடையாது! ஆம், படைப்பாளிக்குத் திருப்திதான் பாடை! அடிக்கும்போதெல்லாம் மாங்காய் விழுந்தால் ஆவல் செத்துவிடும். ஏன்று இதைத்தான் அழகுறச் சொல்கிறார்.

இங்கே அதி~;டம் என்று ஒன்றுமில்லை. அதி~;டம் என்ற சொல்லுக்கு கண்ணுக்கு மறைந்திருப்பது என்பதே பொருள். அறியாதார் கண்ணுக்கு எல்லாம் அதி~;டம், எல்லாம் ஆச்சரியம். அறிந்தவன் கண்ணுக்கோ மழையும், சுவாசமும் அதிசயமே தவிர ஆச்சரியமல்ல. விளைச்சலைப் பார்ப்பது பாமரப் பார்வை, அதில் உழவன் சிந்திய வியர்வையும் பார்ப்பதும் பாவலன் பார்வை. அதி~;டம் என்று பார்;ப்பது அறிவிலியின் பார்வை, அதன்பின்னே மறைந்திருக்கும் உழைப்பையும் பார்ப்பது கிவஞனின் பார்வை. ஆதனால்தான், ஒருநாள் வீசும் வசந்தம் உன் அதி~;டமல்ல நீ நிதமும் எறிந்த நம்பிக்கைக் கற்களுக்கு மொத்தமாய்க் கிடைக்கும் கனிகள் என்கிறார் கவிஞர். இங்கே இன்னொரு நுண்மையான குறிப்பையும் வைக்கிறார். வரவு என்பது எப்படி நேர்கிறது ? அவர், வசந்தத்திற்குக் காரணம் நம்பிக்கை கலந்த உழைப்பு என்கிறார். அதுபோல், எதையும் எதிர்பார்க்காமல், அலுர்ப்பின்றிவழங்கிக் ெஅகதாண்டே ஈரப்பதுதான் வரவுக்குக் காரணம் என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறார். ஆம், தானத்திலிருந்து வருவதூன் தனம். அலுத்துக்கொள்ளாமல் இப்படி கொடுத்துக் கொடுத்துப் பூத்து நிற்கும் இந்த வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது! இதை வாழக் கிடைத்தபாக்கியம் தான் என்றும் புனிதமானது அற்புதமான கருத்து! ஆழமான எண்ணம்! அனைவரும் அறிந்து பேணவேண்டிய நோக்கம்! ஆர்ப்பாட்டம் செய்கிறது குழந்தை. யூர் ? எல்லாம் நம்புகாரிதான்! ஏன்று அவர் தனது சிறப்புச்சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

அதிபர் கனகசபாபதி தனது உரையில் மிக இரத்தினச் சுருக்கமாக புகாரியின் பச்சைமிளகாயினை இலக்கிய நயம் மிளிர விஞ்ஞானக் கண்டோட்டத்தில் நோக்கி அங்கு வந்திருந்த பேச்சாளர்கள், பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். பச்சைமிளகாயின் நுனியை நாக்கின் நுனிக்கு ஒப்பிட்டுள்ள புகாரியின் உதாரணத்தின் சிறப்பை நாக்கின் நுனி இனிமையை உணரவைக்கின்றது. பச்சைமிளகாய் இளவரசியின் கோபத்தினை உண்மைக் கோபமாக அன்றி இனிமையானதாக இரசிக்கவைக்கின்றார் என்ற கருத்தை எடுத்துக்கையாண்ட பார்வை அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது மட்டுமன்றி குறளுக்குப் பொருள் பலவிதமாகக் கொள்ளப்படுவதுபோன்று புகாரியின் கவிதைக்கும் அவரின் பார்வைவேறு கோணத்தில் அமைந்திருந்தமை அவரின் தமிழறிவை எடுத்துக்காட்டியது எனலாம்.

நூலுக்கு ஆய்வுரை நல்கிய கவிஞரும், விமசகரும், எழுத்தாளரும் குவியம் பத்திரிகையின் ஆசிரியருமான பொன்.குலேந்திரன், கவிஞர் புகாரியின் கவிதையை நன்கு சுவைத்து “நடை அல்லடி அழகு, நளினம் தானடி அழகு” என்னும் கவிதை வரியை எடுத்துரைத்ததோடு “என்ன பச்சை மிளகாய் இளவரசியை மறந்து விட்டு பெண்களைபற்றிய கவிதைகளில் சரணமடந்து விட்டேனோ என்று நினைக்கிறீர்கள். இல்லவே இல்லை. காரம் எனக்கு பிடிக்கும். அதுவும் பழம் சோறும் மரவளிக் கிழங்குக் கறியும் பச்சடியும் பிசைந்து பச்சைமிளகாய் கடித்துச் பூவரசம் இலையில் வைத்து சாப்பிடுவது இப்பவும் எனக்கு பிடிக்கும். அதனால் பச்சை மிளகாய் இளவரசியைப் பிடிக்கத்தானே வேண்டும். உண்மைச் சொன்னால் அட்டைப்படம் ர்யடழறநநெ னுயல நினைவூட்டுகிறது. இக்கவிதை பாசம் வைத்த தன் அருமை மகளை சித்தாித்து எழுதப்பட்டது என்பது என் கருத்து. அவளுக்கு கோபம் மிளகாயை கடித்தால் எப்படிக் காரம் எறுகிறதோ அப்படி வரும் ஆனால் அதன் பின்னால் பாசம் என்ற சுவை இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறார். இந்த கவிதைத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை “சும்மா இருடா”. அதற்கு காரணம் உண்டு. முதலாவது எதையும் சும்மா (பத்திாிகைகள் உற்பட) எதிர்பார்க்கும் தமிழர் கலாச்சாரத்தை இது நினைவு படுத்துகிறது. அடுத்த காரணம் மிகவும் முக்கியமாக யாழ்ப்பாணத்து நல்லூர் தேரடியில தியானம் செய்த யோகா; சுவாமிகள் சொன்ன அர்த்தமுள்ள வாசகம் தான் “சும்மா இரு”. இது மெளனத்தின மூலம் உனக்குள் உள்ளதை அறி என்பதே அர்த்தம். ஊங்கள் சிந்தனைகளை முடக்கி விடாதீர்கள். சும்மா இருப்பதற்கு பல அர்த்தஙகள் உண்டு” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் உரையாற்றும்போது “தமிழை வரவுக்காக வியாபாரம் செய்பவர்கள் உண்டு. தமிழ் மேல் உள்ள காதல், அளவு கடந்த பற்று காரணமாக தங்கள் கையில் உள்ள பணத்தை செலவழித்து நூல்கள் வெளியிடுவோரும் உண்டு. தமிழ் வளர வேண்டும் அழியக் கூடாது என்பதற்காக இளம் சந்ததியினரை கவரும் விதத்தில புதுமையான முறையில் கதை, கட்டுரை கவிதை நூல்கள் வெளியிடுவதும் உண்டு. இப்படியான நூல் வெளியீட்;டு விழாக்களுக்கு வந்து, எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர்கள் குடு;ம்பத்தவர்கள், இனத்தவர்கள், நண்பர்கள், அதோடு தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள். புத்தகங்களை விற்பனையாளர்களை, குழுக்கள் அமைத்து தமிழை வளர்பவர்களையும் காண்பது அாிது.” இப்படி பொன் குலேந்திரன் தமிழ் மேல் உள்ள தன் பற்றினை உணாச்சி பூர்வமாக வெளிப்படுத்தினார்.

உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடிய தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைருமான ஆர். என்.லோகேந்திரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது வாழ்த்துரையில் புகாரி எம்மவர் மத்தியில் நல்ல கவிதைகளை எழுதிவருகின்றார். எல்லோரும் அன்பாகப் பழகும் அவரின் குணாம்சம் அவரது கவிதை ஆக்கத்திலிருந்து வெளிப்படுகின்றது. கவிதை என்பது அதன் கருப்பொருளில் தங்கியுள்ளது. ஒருகாலத்தில் முதன்மை பெறும் கவிதை வடிவங்கள் இன்னொருகாலத்தில் பின்தள்ளப்படுகின்றன. புகாரியின் கவிதைகள் காலத்திற்கேற்றவை. யதார்த்தபூர்வமானவை இலகுவாக எல்லோராலும் புரிந்துகொள்ளத்தக்கவை அவர் எம்மத்தியில் வாழ்வது எமக்கு;ப பெருமைசேர்க்கின்றது. அவர் தானுண்டு தன்வேலையுண்டு என்றில்லாமல் எழுத்துலகில் தனது ஓய்வுநேரங்களைச் செலவிடுவது பாராட்டத்தக்கது, அவரின் சமூகப்பார்வையே அதற்குக் காரணம் என்றுரைத்தார்.

விஞ்ஞானக் கட்டுரையாளர் ஜெயபரதன் அவர்கள் உரையாற்றும் போது தான் எழுதிய கவிதைகள் சிலவற்றையும் அசைபோட்டதோடு கவிஞர் புகாரியின் கவிதா சிறப்பினை உதாரணத்தோடு ஆய்வுரை நிகழ்த்தியதோடு கவிஞர் புகாரியின் கவிதைகள் தனித்துவமானவை என்றும் புகழ்ந்துரைத்தார். இடையே பாரதிதாசனைப் பற்றிக்குறிப்பிட முனைந்து அவர் பாரதிதாசனைப்பற்றிய அறிவினைப்பூரணமாகக் கொண்டிருக்கவில்லை என்ற வகையிலே பாரதிதாசன் காந்தியைப் பற்றியோ இந்திய தேசத்தைப் பற்றியோ எதுவும் பாடவில்லை ஆனால் அவர் ஏனோ தனக்குப் பாரதிதாசன் எனப்பெயரை வைத்துக்கொண்டார் என்னும் வக்கிரம் அவரின் பேச்சில் இழையோடியதைக் காணமுடிந்தது. பாரதிதாசன் கடவுளைப் பற்றி ஒருவரிதானும் பாடவில்லை என்ற அவர் பாரதியார் 25 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை அடைந்துவிட்டோம் என்று பாடுகின்றார் ஆனால் பாரதிதாசன் நாட்டுவிடுதலை பற்றிப் பாடவில்லை எனக்

குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பாரதிதாசன் இந்தியாவின் விடுதலை பற்றியும், மக்களின் விடுதலைபற்றியும், தமிழ்த்ேதுசியத்தின் விடுதலைபற்றியும், மகாத்மாபற்றியும் பாடியுள்ளார் என்பதனை அவர் அறிந்திருக்கவில்லை என்பதனைக் காட்டிக்கொண்டார் எனப் பலரும் பேசிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அர்த்தமுள்ள விஞ்ஞானக் கட்டுரைகளை எழுதுவதில் வல்லமைபெற்றுள்ளமைபோன்று இலக்கியத்திற்குள் தனது கையை நீட்டி சூடுவாங்கிக்கொண்டார் என நினைக்கத்தோன்றுகின்றது.

கலைஞரும், கவிஞரும், பன்மொழிப்பாண்டித்தியம் பெற்றவருமான ஆர்.எஸ்.மணி உரையாற்றும்போது கவிஞர் புகாரி தனது நினைவனைத்தையும் கவிதையிலேயே செலவிடுகின்றார். அவர் கவிதை கட்டுவதே தனிப்பண்பாகக் கொண்டவர். அவர் விஞ்ஞான ரீதியாகச் சிந்திப்பவற்றை கற்பனைகலந்து கவிதையாகத் தருகின்றார். அவரது கவிதைகளின் தனிச்சிறப்பு அது என்றுரைத்தார். எழுத்தாளர் புகாரியின் கவிதைகள் யதார்த்தத்தை முன்வைத்துள்ளன. விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு அவர் எழுதிவருவது அவரின் கவிதைக்குத் தனிச்சிறப்பைத் தருகின்றது என்று தனதுவெளியீட்டுரையில் குறிப்பிட்டார்.

இலக்கியத்தோட்டத்து நண்பர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் நண்பர்களுக்கும் தனது கவிதை வெளியீட்டிற்காக வந்தள்ள அனைவரையும் விழித்து நன்;றியறிதலையும் தன்னை எழுதத் தூண்டிய தன்மைகள், தூண்டியவர்கள் பற்றியும் குறிப்பிட்டு ஏற்புரை நிகழ்த்தினார் கவிஞர்புகாரி. குறிப்பாக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த ரமணன், கனடியமண்ணில் பொருளியலாளராகக் கடமையாற்றும் புகாரி எழுத்துத் துறையில் மிளிருவதற்கு அவர் பிறந்தமண்வாசனை காரணமாகும் என்றுரைத்தார். கனடிய மண்ணில் தமிழ் வளர்த்த சோழன் வாழ்ந்த மண்ணில் பிறந்தவன் நான். அந்தத் தமிழ்ப்பால் குடித்து வளர்ந்தவன் என்றும் விழாவில் பங்குகொண்ட அனைத்துப் பேச்சாளர்களையும், வருகைதந்திருந்தோரையும் வளமையான தனது கவிதா நடையில் வாழ்த்தியும் பாராட்டியும் தனது நன்றியறிதலைத் தெரியத்தந்தார் கவிஞரும் அன்றைய கதாநாயகனுமான புகாரி.

புகாரி தமிழ் மணங்கமழும் தென்னகத்தில் திராவிட இனத்தோன்றல் அவரிடம் இயல்பாகவே தமிழ்மணம் கமழ்வதில் வியப்பில்லை. மேலாக இந்திய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்த ஊரவராச்சே மண்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, இனப்பற்று அனைத்தும் ஒன்றாகக் காணப்படுவதில் அவரின் ஆர்வமே முக்கியமானது. கவிஞனின் ஆற்றல் வெளிப்பாடு அவனது கற்பனாசக்தியின் வெளிப்பாடே. கற்பனைக்கு மேல் கற்பனை விஞ்ஞான உலகின் சஞ்சாரமும் அவருக்கு உறுதுணையாக அமைந்துள்ளது மட்டுமன்றி பற்றபல அறிஞர்களைத் தினந்தினம் வாசிப்பது நட்புக்காகத் தொடர்புகொள்வது என்பது அவரின் தனிக்கலை. இக்கலை அவரின் புகழேணியின் உச்சத்திற்கு அழைத்துச்செல்லும் படிக்கட்டுகளாக அமையட்டும்.

—-

அ முத்துலிங்கம்

உமர்

பொன் குலேந்திரன்

ஆர் எஸ் மணி

புத்தக வெளியீடு

—-[

thangarsivapal@yahoo.ca

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு