‘காலம் ‘ இலக்கிய மாலை!

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

ஆருவி


கனடாவில் இருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் 25வது இதழ் வெளியீடும், அண்ணாவி அல்பிரட் வழங்கும் 157 மெட்டுக்கள் அடங்கிய கூத்து டி.வி.டி வெளியீடும் சென்ற சனி மாலை யோர்க்வ+ட் நூலக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்விற்கு சற்று தாமதித்துச் சென்றாலும் அங்கு நடந்த அனேகமான நகழ்வுகளை பார்க்க முடிந்தது. என்னைப்பொறுத்தவரை அங்கு நடந்த நிகழ்வுகளில் நாடகம், கூத்தரங்கு பற்றி நாலு வார்த்தை அவ்வளவு தான்.

காலம் செல்வம் தனது நன்றியுரையின் பிற்பாடு நாடகம் தொடர்பாக நீண்ட விளக்கவுரை நிகழ்த்தினார். அங்கு வந்த பலருக்கு ‘மீண்டும் வருவார்கள் ‘ என்ற நாடகம் விளங்காது அது ஒரு சீரிய நாடகம், பார்வையாளர்களில் இருக்கும் சில தீவிரநாடகக் கலைஞர்களுக்கு அது அனேகமாக விளங்கும் என்றும், தனக்கும் அந்த நாடகத்திற்கும் எவ்வித தொடர்போ, சம்மந்தமோ கிடையாது என்றெல்லாம் வார்த்தைகளை அடிக்கிக் கொண்டே போனார்.

கனேடிய தமிழ் தொலைக்காட்சியான ரி.வி.ஐ. நிறுவனத்தினர் அவரைப் பேட்டி கண்ட போது அவர், அன்றைய நிகழ்வு தொடர்பாகவும், அங்கு நடக்கவிருக்கும் நாடகம் தொடர்பாகவும் விளக்கம் கொடுத்ததை காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறெல்லாம் தொலைக்காட்சி நிறுவனத்தில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டவர் பின்னர் ஏன் மாலை நிகழ்வின் போது, ‘தனக்கும் நாகடத்திற்கும் எதுவித சம்மந்தமும் இல்லலை என்று கூறியது ஆச்சரியமாக உள்ளது.

நாடக மூலப்பிரதிக்குச் சொந்தக்காரரான அரியநாச்சியின் கருத்துக்களுடன் இவர் உடன்படவில்லையா ? அல்லது பாபுவின் இயக்கத்தில் மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தில் மாற்றப்பட்ட பல சொற்களோடு இவருக்கு உடன்பாடு இல்லையா ? என்பது பார்வையாளர்களின் கேள்விகளாக இருந்தது.

காலமI 1; செல்வம் அவர்கள் நாடகம் தொடங்கமுன் மேற்கண்டவாறு தெரிவித்த கருத்தினை கனடா முற்போக்கு (என்று சொல்லப்படுகின்ற) இலக்கிய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது: இவ் இலக்கிய அமைப்புகள் பல குழுக்களாக பிரிந்து சிறு சிறு வட்டங்களாக இயங்குகின்றன. இவர்களில் அனேகமானோர் ஒருவரை ஒருவர் பகைமை பாராட்டுபவர்களாகவே இருக்கின்றனர். அதாவது இந்த குழுக்களின் நாடக மேடையேற்றமோ அல்லது புத்தக வெளியீடோ அல்லது இலக்கியம் சம்மந்தமான எந்த நிகழ்வினையும் பரஸ்பரம் விமர்சிப்பவர்களாகவே (ஆரோக்கியமற்ற முறையில்) இவர்களில் அனேகமானவர்களின் போக்கினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அல்லது அதனால் வரும் விபரீதங்களை அறிந்தே காலம் செல்வம் அவ்வாறு சொல்லியிருக்கலாம் என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. எனவே இவ்வாறான தோற்றப்பாடு எதிர்கால இலக்கிய சூழலை மிகவும் பாரதூரமாக பாதிக்கும் என்பதில ; ? எவ்வித ஐயமுமில்லை.

***

காலம் 25வது இதழுக்கான விளம்பரங்களில் கூத்து அமர்வு போடப்பட்டிருந்தது. இன்னும் ஒரு படி மேலே போய் விளம்பரத்தில் கூத்துப் படமும் போட்டிருந்தார்கள. எனவே கூத்தின் ஒரு பகுதியாவது அங்கே மேடையேற்றப்படும் என்பது பலரின் எதிர்பார்ப்பு! ஆனால் நடந்ததோ கூத்துப்பற்றிய விளக்க உரையாடலே. (பாடினார்கள், இடையிடையே துள்ளினார்கள் ஆனால் கூத்துக்கான சுவாரிசம் அங்கு காணவில்லை.) இது உண்மையில் பலரின் மனதில் பெரும் ஏமாற்றம் என்றே சொல்லவேண்டும். இந்த நிகழ்வு நீண்டு கொண்டே சென்றபடியால் பார்வையாளர்கள் சலிப்படைந்து சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் நிறைய நேரத்தை ஒட்டுமொத்த நிகழ்வும் அர்த்தமற்று பிடித்துக்கொண்டது.

இனிவரும் காலங்களிலாவது சம்மந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்வார்களா ? செயற்படுவார்களா ?

AARUVI

kannivedip@yahoo.ca

Series Navigation

ஆருவி

ஆருவி