டாவின்சி கோட்

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

என் எஸ் நடேசன்


இந்தியாவில் வசித்தகாலத்தில் அந்திரோபோலஜி (Anthropology) படித்த நண்பர் ஒருவருடன் ஊட்டிக்கு சென்றிருந்தபோது ஊர்விட்டு ஊர் செல்லும் நாிக்குரவர்களோடு சந்தித்து உரையாடினோம். அவர்கள் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை விரும்பிக்கேட்பவர்கள். அத்துடன் KS ராஜா என்ற இலங்கை வானொலி ஒலிபரப்பாளரை தொிந்து வைத்திருந்தார்கள் என்றும் அறிந்து கொண்டேன். இவர்கள் ஊட்டிப்பகுதியில் இலங்கை வானொலி தெளிவாக இல்லை என்றும் குறைப்பட்டார்கள்.

வானொலி என்ற சாதனம் எழுத்தறிவற்ற நாிக்குறவர்களின் மத்தியில் சென்றிருந்தது.

இதைப்போல் தற்பொழுது தொலைக்காட்சி என்ற சாதனம் மக்களை தங்களோடு ஒட்டி வைத்திருக்கிறது. ஒலியும் காட்சிகளும் சேர்ந்துவந்து மனதில் விழுந்து உணர்வுகளை எழுப்பும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாத்திரமாகமாறி தன்னிலை மறக்கிறார்கள். சின்னத்திரையில் வரும் நாடகங்கள் இப்படியான உணர்வை ஊட்டி கவர்கின்றன.

இப்படியான கவரும் தன்மை நூல்கள் சஞ்சிகைகளுக்கும் உண்டு. ஆனால் இங்கே வாசிப்பது ஒரு அக்ாிவ் புரோசஸ் (Active process). ஆனால் வானொலி, தொலைக்காட்சி பசிவ் புரொசஸ் (Passive process) ஆகிறது.

தகவல்களை வானொலியாலும் தொலைக்காட்சியாலும் தொிந்து கொண்டாலும் ஒரு விடயத்தில் மூலத்தை அறிந்து அதை ஆராய்வதற்கு சஞ்சிகைகள், பத்திாிகைகள், புத்தகங்களை படிக்கவேண்டி உள்ளது.

அஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பத்துக்கு ஒருவரே புதினப்பத்திாிகைகள் வாசிப்பவர்கள். இதேவேளையில் இலக்கியம், சமூகவியல் போன்ற புத்தகங்களை படிப்பவர்கள் நூற்றுக்கு ஒருவராக இருக்கலாம். ஆங்கில கவிதை புத்தகங்கள் எவ்வளவு சிறந்ததாயினும் ஆயிரத்தை தாண்டாது என புள்ளிவிபரம் கூறுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக விற்பனையில் அஸ்திரேலியாவில் முன்னணியில் இருக்கும் புத்தகம் டான் பிரவுணின் டாவின்சி கோட். இதனது விற்பனை இரண்டு இலட்சத்தை தாண்டிவிட்டதாக தகவல் கூறுகிறது.

இது துப்பறியும் மர்ம நாவல். பாாிஸ் நகரத்தில் நடந்த கொலைகளை தொடர்ந்து சங்கிலி தொடரான முடிச்சுக்கள் இந்த கதையில் வந்துகொண்டிருக்கும். பாாிசிலும் லண்டனிலும் இந்த கதை நடக்கிறது.

லியனடோ டாவின்சியால் வரையப்பட்ட “கடைசி இரவு உணவு” (Last Supper ) என்ற ஓவியத்தில் இருந்து உருவாக்கப்படுகிற கற்பனை கதை. வேதாகமத்தில் வந்துபோகும் மோி மகதலின் இங்கே யேசு கிறிஸ்துவின் மனைவியாக சித்தாிக்கப்படுகிறாள்.

டான் பிரவுனிஸின் கதைப்படி இயேசு நாதாின் போதனைகளை தொடர வேண்டியவா மோி மகதலின். சீடர்கள் பெண் என்பதால் மோி மகதலினை ஒழித்துக்கட்ட முயன்றதால் பிரான்சுக்கு தப்பியோடி அங்கு சேரா என்ற பெண்குழந்தை பெற்றாள். சேராவின் வாாிசுகளை கத்தோலிக்க திருசபை சேர்ந்தவர்களிடம் இருந்து பாதுகாக்க இரகசிய குழு உண்டாகியது. இதில் ஐசாக் நியூட்டன், விக்டர் ஹேயூஹோ என்பனர் அங்கத்துவம் பெற்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த கதை கற்பனை கதை என்றாலும் புத்தகம் சுவாரசியமாக பல திருப்பங்களில் இதய துடிப்பை அதிகாிக்கபண்ணிக்கொண்டு செல்கிறது. விஞ்ஞானம், சாித்திரம், தற்கால தொழில் நுட்பம் என்பவற்றுக்கூடாக சூடான கத்தி வெண்ணையை வெட்டுவது போல் இலகுவாக இந்த கதை செல்கிறது.

இந்த புத்தகத்தின் வெற்றிக்கு காரணம் எளிய நடை. இப்படியான புத்தகங்கள் சாதாரண வாசகர்களுக்காக எழுதப்பட்டது என்று கூறினாலும் இந்த புத்தகம் பல சிக்கலான விடயங்களை கையாள்கிறது.

கத்தோலிக்க திருச்சபையினரது காலங்காமான பல காாியங்கள் இங்கே சொல்லப்படுகிறது. பெண்களுக்கெதிரான நடவடிக்கைகள் வெளிக்காட்டப்படுகிறது. கத்தோலிக்க பீடத்தின் ஜனநாயகமற்ற தன்மை எடுத்துக்காட்டப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இருந்தே துப்பறியும் நூல்களில் ரசிகனான எனக்கு இந்த புத்தகம் சாதாரண வாசிப்புக்கும் அப்பாலும் சென்று பல விடயங்களை புாியவைக்கிறது.

—-

uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்