மெல்பேனில் AR. ரகுமானின் இசைநிகழ்ச்சி – தென்இந்தியாவில் சங்கீதக் கல்லூரி உருவாக்க திட்டம்

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

என் எஸ் நடேசன்


மெல்பேனில் ஒன்பதாயிரத்துக்கும் (10/9/05) மேற்பட்ட தெற்காசிய மக்கள் இசை வெள்ளத்தில் மூழ்கடித்த பெருமை AR ரகுமானுக்கும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் உரியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என தேச எல்லைகளை மீறி மொழி வேறுபாடுகளை மறந்து சங்கீதமே எம்மொழி என்று இவ்வளவு கூட்டம் கூடியது இதுவே முதல்தடைவை.

“நான் ஒரு ஸ்ரூடியோ கலைஞன். மேடை கலைஞன் இல்லை” என அவையடக்கத்துடன் AR. ரகுமான் கூறிக் கொண்டாலும் நான்கு மணித்தியால தமிழ், இந்தி என்று இசை வெள்ளம் மெல்பேன் ரொட்லிவர் ஏறினா (Rod Laver Arena) வில் பாய்ந்து ஓடியது. சிலருக்கு மூச்சுத்திணறியது. அஸ்திரேலிய பத்திரிகை பட்டு சேலைகளாலும், வண்ண வண்ண சுரிதார்களாலும் அரங்கு அலங்கரிக்கப்பட்டது என்று எழுதியது.

பாரிய திரையில்இ பாட்டுக்களின் போது அனிமேசன் செய்யப்பட்டிருந்து. இதற்கான 3D கண்ணாடிகள் எல்லாருக்கும் வழங்கப்பட்டிருந்தது.

பிரபல பாடகராகிய ஹரிகரன் இலகுவாக பல மொழிகளில் பாடினார். நேரில் சந்தித்த எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்திய போது “இந்தியாவின் கொடை” இது என்றார். உண்மைதான் இந்தியாவின் பல மொழிகள் இயற்கையின் கொடை என்பதை அரசியல்வாதிகளும் உணர வேண்டும் என எனக்குள் நினைத்தேன்.

சிவமணி ஆனந்தனின் ரம்;(DRUM) இசை சங்கீதத்தின் அரிச்சுவடு தெரியாதவர்களையும் ஆகர்சிக்கும். “AR. ரகுமானின் பாலிய நண்பன்” என்பதை நேரில் சந்தித்த போது வெளிப்படுத்தினார்.

பின்பு நடந்த பேட்டியில், கம்பியூட்டர் இன்ஜினியராக படிக்க விரும்பிய நான் அம்மாவினால் சங்கீதத்தில் ஈடுபட்டதாகவும், இக்காலத்திலும் நான் தொடர்ச்சியாக சங்கீதம் பயின்று கொண்டிருப்பதாக AR. ரகுமான் கூறினார்.

தமிழ் இசையை இந்திக்கும் பின் இந்திய இசையை உலக அரங்கிற்கும் எடுத்து செல்லும் இந்த இசைக் கலைஞருக்கு இவ்வளவு அடக்கம் இருக்கலாமா என எண்ணினேன்.

எந்த நாடுகளிலும் இல்லாமல் இந்திய இசை சினிமாவுக்குள் சென்று இசையும் சினிமா என்ற ஊடகத்தையும் மாசுபடுத்துகிறது பற்றி நான் கேட்டபோது, “இந்தியர்கள் அதிஸ்டசாலிகள். இரண்டும் ஒன்றாக கிடைக்கிறது” என்றார் AR. ரகுமான் சிரித்துக்கொண்டே.

தென் இந்தியாவில் சங்கீதக் கல்லூரி ஒன்று உருவாகும் எண்ணத்தையும் பத்திரிகையாளரிடம் வெளிப்படுத்தினார் AR. ரகுமான்.

யு.சு. ரகுமானின் இந்த இசை நிகழ்ச்சி CHARINDAA (Charities through Indian Arts in Australia. .) குழுவைச் சேர்ந்தவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்த பாரிய நிகழ்ச்சியை மெல்பேனிலும் சிட்னியிலும் நடத்தி இதன் மூலம் பெறும்நிதியை கல்கத்தாவில் உள்ள உதயன் என்ற சிறுவர் தொழுநோய் நிதியத்திற்கு கொடுக்கிறார்கள்.

—-

uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்