• Home »
  • »
  • குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2

குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2

This entry is part of 32 in the series 20050513_Issue

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்


‘ஆனால் இதிகாசம் நிச்சயமாக ஒரு எதிர்ப்புக்குரல் கொண்ட நாவல். தாவரங்களின், காய்கறிகளின் உரிமைகள் காப்பாற்றப்படும் ஒரு எதிர்காலத்தை நோக்கிய, அரசு, போர் போன்ற கருத்துருவங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல் அது. சில வழிகளில் அது நாகரிகத்துக்கு எதிரானது(anti-civilisation). சில கதைகளில், அதுவும் கனவுலக்ம (dystopia) பற்றிய கதைகளில் அது நிச்சயம் இருக்கிறது. ‘

‘நெருக்கடி நிலைக்கு முன்னரும் பின்னரும் எழுதிய நாவல் அது. சோவியத் இந்திய இடதுசாரிகளுக்கு எதிராகவும், சோசலிஸ கம்யூனிஸ தலைவர்களையும் ஒரு அரசியல் வம்சத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சிகளுக்கு எதிராகவும் எழுதப்பட்டது. என்னுடைய நண்பர் எஸ்.கே. நாயர் இந்த புத்தகத்தை தொடராக வெளியிட சம்மதித்தார். சூலை 1975இல் அது முடியவேண்டும். ஆனால் சூன் 1975இல் நெருக்கடி நிலை அமல் செய்யப்பட்டது. புத்தகம் தலைமறைவாக ஆகிவிட்டது. எவ்வளவு நாள் நெருக்கடி நிலை இருக்கும் என்று தெரியாததால், நான் அந்தக் கதையை நிறைய தொந்தரவு செய்தேன். நெருக்கடி நிலை முடிந்ததும் அந்த புத்தகம் தொடர்ந்து தொடராக வர ஆரம்பித்தது. அது புத்தகமாக வெளிவந்தத்போது, அதில் இருந்த சில அதீதங்களை சரி செய்து அதன் அழகியல் தொழில்நேர்த்தியை சரியமைத்தேன்.கோபத்தில் எழுதப்பட்டது இது. அது ஒரு தீவிர வலியை உணர வைக்கும் தூய்மைப்படுத்தும் உணர்வோடு கூடியது. ‘

‘நெருக்கடி நிலையைப் பற்றி பல சிறுகதைகளில் திரும்பி வந்து சொல்லியிருக்கிறீர்கள். ‘

‘ஆமாம். அதிகாரத்தின் உவமேயங்களில், கரு, மரு, தேர்வும் எண்ணெயும்.. ஆகியவற்றில்… இவை அனைத்தையும் நெருக்கடி நிலை முடியும் வரைக்கும் பெட்டிக்குள் வைத்திருந்தேன். கொடுங்கோலாட்சியை பல்வேறு வடிவங்களில் பார்த்தேன். ஒரு ஜந்துவாக ‘எண்ணெய் ‘யிலும், உவமேயமாக ‘கரு ‘விலுஇம், ‘சொறி ‘யிலும், ஒரு நகைச்சுவையாக ‘தேர்விலும் ‘ பார்த்தேன். ‘

‘உவமேயங்களிலும், ‘மரு ‘யில் வரும் பண்பாடுள்ள கதாநாயகன் என்னை கவர்ந்தான். மிகவும் சக்திவாய்ந்த தீய சக்தி ஒரு சொறி உருவத்தில் அவன் மீது தாக்குதல் நடத்துகிறது. தன் மூதாதையர்களைப் பற்றியும் அவர்களது ஆயுர்வேத அறிவைப்பற்றியும் அவன் ஞாபகம் செல்கிறது என்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ‘

It was the story of one who could only resist in the spirit and that had a connection to the satvic past, which is what Dhanvantari indicates. Good triumphs over Evil eventually; The Foetus is redeemed with a lot of love; in The Wart, the triumph is more ambiguous.

‘உணர்வுப்பூர்வமாக மட்டுமே எதிர்ப்புக் காட்டக்கூடிய ஒருவனது கதை அது. அதே நேரத்தில் அவனுக்கு சாத்வீகமான இறந்த காலம் இருக்கிறது. அதுதான் தன்வந்திரி கோடிட்டுக் காட்டுகிறார். தீயதை நல்லது இறுதியில் வெல்லுகிறது. ஏராளமான அன்பின் காரணமாக கரு காப்பாற்றப்படுகிறது. ‘மரு ‘யில் வெற்றி அப்படி தெளிவானது அல்ல…. ‘

The Foetus is a thinly veiled story of the excesses of Sanjay Gandhi and his cronies. Is it fair to say that you object to the Nehru dynasty ?

‘ கரு கதை சஞ்சய் காந்தியும் அவரது சகாக்களும் செய்த அத்துமீறல்கள் பற்றிய மிகதெளிவான கதை . நீங்கள் நேரு வம்சத்துக்கு எதிரானவர் என்று கூறலாமா ? ‘

‘இல்லை. அது சரியான விளக்கம் அல்ல. தனிமனித எதிர்ப்பு அளவுக்கு அதனை இறக்கக்கூடாது. மனித தீக்குணத்தை காட்ட, அரசில் இருக்கும் தீக்குணத்தைக் காட்ட, இயற்கையை மறுதலிக்கும் தீக்குணத்தைக் காட்ட நான் எடுத்துகொண்ட ஆரம்பப் புள்ளி மட்டுமே அது. பழி தீர்க்கும் எந்த கோரிக்கையும் அதில் இல்லை. ‘

‘தீக்குணத்தையும், பல கோடி உயிரழிக்கும் ஆயுதங்களையும் பற்றி…. இந்தியா அணு ஆயுத நாடுகள் குழுமத்தில் இணைந்ததை எப்படி பார்க்கிறீர்கள் ? ‘

‘ அது என்னை குழப்படிக்கிறது. நான் அதற்கு ஆதரவாகவும் இருக்க முடியவில்லை எதிராகவும் இருக்க முடியவில்லை. ஹிரோஷிமாவுக்கு ஒருவனால் எந்த விதத்திலும் எதிர்வினை ஆற்ற முடியாது. ஏனெனில் அந்த மாபெரும் தீச்செயல் பற்றி ஒருவன் என்ன சொன்னாலும் அது போலித்தனமாகத்தான் இருக்கும். இந்தியாவின் விஷயத்தில், அணுகுண்டு ஒருவனது விதியின் ஒரு பகுதியை நிறைவேற்ற வந்தது என்று சொல்லவாவது செய்யமுடியும். நம்மால் புரிந்து கொள்ள முடியாத சக்திகளைப் பற்றி ஒருவர் பேசுவதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் வீண். தெய்வீகமான சக்திகள் என்று சொல்லவில்லை. மாபெரும் கண்ணுக்குத்தெரியாத சக்திகள். நான் சிலவேளைகளில், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்குள் அணு ஆயுத போர் நடத்தி வைக்க விழைகின்றனவா என்றும் சிந்திக்கிறேன். அது மிக வினோதமான இன படுகொலையாகவும், சுத்தமானதாகவும், இறுதியானதாகவும் இந்த அணுகுண்டு மூலம் செய்யப்படும் சுத்திகரிப்பு இருக்கும். ‘

‘ லெளகீகம்கடந்து போதல் (transcendence) சம்பந்தமான சிறுகதைகள் ஏர்போர்ட், முடிவிலி போன்றவை என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. ஏனெனில் இது போன்ற கதைகளை கஸாக் படைப்பாளியிடம் நான் எதிர்பார்க்கவில்லை. இது மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தியதா ? ‘

‘பலரை ஆச்சரியப்படித்தவில்லை. (சிரிக்கிறார்). கொள்கை கொள்கை என்று புலம்புபவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். நான் ஒரு காலத்தில் உறுப்பினர் அட்டை வைத்திருந்த மார்க்ஸிஸ்ட், தோழர், காஃபிஹவுஸ் மார்க்ஸிஸ்ட். ‘

‘எந்த காரணத்தால் இடதுசாரியிலிருந்து பிரிந்தீர்கள் ? ‘

‘ அது ஒரு நீண்ட கதை. ஹங்கேரி மற்றும் இம்ரே நாகி அனுபவங்களில் ஆரம்பித்தது. நான் எப்போதுமே ஸ்டாலின் பற்றி அவநம்பிக்கையுடன் இருந்தேன். செக்கோஸ்லேவேகியா என்னுடைய அவநம்பிக்கையை முற்றுப்படுத்தியது. அது எனக்கு கஷ்டமானதும் கூட. ஏனெனில் என் வார்த்தைகள் எப்போதுமே எனது இடதுசாரி சுய பிம்பத்துடனேயே பிணைக்கப்பட்டிருந்தன. ஒரு குறுகிய காலம் உறைந்து இருந்துவிட்டு, பின்னர் ஆன்மாவின் தளத்துக்கு நடக்கவேண்டிய எளிய நடைதான். அது இயற்கையாக நடந்தது. அதிலேயே நான் அதன் பின்னர் எப்போதும் இருக்கிறேன். ‘

(தொடரும்)

நன்றி : rediff.com

Series Navigation