மழை ஆடை (Rain Coat)

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

வானரன்


மழை மாலை நாளொன்றில்

மங்கிய சாலை

வெளிச்சத்தில்

ஆண்கள் கழிவறை

அருகினில்

யுகங்கள் கடந்து

பாா,த்துக் கொண்டோம்

கிழிந்து தொங்கியது

எங்கள் முகமூடிகள்

அவசரமாய் காற்றை

முத்தமிட்டோம்

நனைந்த நிலம் நோக்கி

கண்களை

மேயவிட்டோம்

கைகளை

நீட்டிக் கொண்டோம்

தொடவில்லை

நாயொன்றில்

குரைப்பில்

புிரிந்து கொண்டோம்

(ரதன் – (கண்ணில் தெரியுது வானம்), – பக்கம் 326)

பெரு மழையில்

பாரத்துடன் பறப்பது கடினமென்று

துயரங்களை வாங்கிக் கொண்டன

மர அட்டைகள்

(செழியன் – மழை பெய்த நாள் (கண்ணில் தெரியுது வானம்), – பக்கம் 328)

இவ்விரு கவிதைகளின் மொத்தவடிவமே மழை அணி.

நடிகா,கள்- அஐய் தேவகான், ஐஸ்வர்யா ராய், அனுகபூர்,

ஒளிப்பதிவு – அபிக் முகர்ஐி

நெறியாள்கை – நிருபரனோ கோஸ்ச் (Rituparno Ghosh)

எட்டு வருடங்களாக காதலித்து, பின்னா, பெற்றோருக்காக காதலி வேறொருவரை திருமணம் செய்து கொண்டு சென்று விடுகிறாள். ஓரு பெரு மழை நாளில் மனோஐ, (அஐய் தேவகான்), நிரு (ஐஸ்வரராய்), இருவரும் காதலியன் (நிரு) வீட்டில் சந்திக்கின்றனா,. மிகச் சுருக்கமான கதை இது. ஓ ஹென்றி இன் கதையை மையமாகக் கொண்டு நிருபரனோ கோஸ்ச்

திரைக்கதை அமைத்து நெறியாள்கை செய்துள்ளாா,.

கதை நான்கு பகுதிகளாகவுள்ளது.

முதலில் கல்கத்தா வரும் நாயகன், தனது நண்பன் வீட்டில் தங்குகிறான் அங்கு நண்பனின் மனைவிக்கு அவன் மேல், பரிதாபம் ஏற்படுகிறது. ஏன் ? அவளது திருமணம் நடைபெற்ற பொழுது ஏற்பட்ட சிறு நிகழ்வுகளையும் அவன் நினைவுாடடுகின்றான் அந்த உணர்வுகளுக்கு மேல் ஏற்பட்டுள்ள மதிப்பு இது. அவள் அவனை அவளது கணவுடன் ஒப்பிடும் ஒரு மறைமுக ஆய்வும் ஆகும்.

இரண்டாவது, காதலர்கள் சந்திக்கொண்டனா,. இருவரும் சரமாரியாக தங்களது வாழ்வைப்பற்றிய பொய்யான விடயங்களை கூறுகிக்கொண்டனா,. நிரு உணவு வாங்கக் கடைக்குச் செல்லும் பொழுது அங்கு வரும் வீட்டு முதலாளி, நிருவைப்பற்றிய உண்மைகளை கூறுகின்றார். மனோஜ், நிருவுக்காக தான் சேகரித்த 12,000 ரூபாயை நிருவின் வாடகைக் கடனுக்காக வீட்டு முதலாளியிடம் கொடுக்கின்றான். மனோஜ் இரவல் வாங்கி அணிந்துள்ள மழை ஆடையுள் உள்ள கடிதம் மூலம் நிரு, மனேஜைப்பற்றிய உண்மைகளை அறிந்து கொள்கின்றாள். தனது இரு தங்க வளையல்களை, மழை அணியினுள் வைத்து விடுகின்றாள்.

மூன்றாவது இருவரது பழைய வாழ்வு.

நான்காவது, தனது முன்னால் காதலியை சந்தித்து விட்டு, நண்பனின் வீட்டு வந்து, நண்பனின் மனைவியிடம்

~நீங்கள் அவரை மீண்டும் சந்திக்கவில்லையா~

எனக் கேட்கின்றான். அதற்கு அவள்

~உங்களது காதலியின் கணவர் இப்பொழுது வீட்டுக்கு வந்திருப்பார். அவள் அவரைப் பராமரிப்பதில் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருப்பாள்~

என பதிலளித்து விட்டு,துாக்க மாத்திரை ஒன்றை கொடுத்து, இது எனக்கு பல தடவை உதவி புரிந்துள்ளது என்கிறாள்.

இங்கு அவளது பழைய வாழ்வும், அவள் மனோஜ் மீது ஏற்பட்டுள்ள பரிவுக்கான காரணமும் வெளிப்படுகிறது.

செழியன் கூறியது போல் ~துயரங்களை வாங்கிக் கொண்ட மர அட்டைகள்~.

காதலிக்கும் பொழுது ~ உன்னை மகா ராணி போல் காப்பாற்றுகின்றேன். என்னுடன் வந்து விடு~ எனக் கூறிய மனோஜ், நிரு, மிகவும் மோசமான நிலையில் உள்ளாள் எனத் தெரிந்தும், ஏன் அழைத்துச் செல்லவில்லை ?

சமூகத்தின் மேல் உள்ள மரியாதையா ? இல்லை, இயலாமையா ? வேலையில்லை என்ற யதார்த்தத்தின் வெளிப்பாடா ? நிரு இப்பொழுது இருப்பதைவிட பெரிதாக எதுவும் செய்ய முடியாது, என்ற நினைப்பா ?

நிருவுக்கும் தயக்கம் ஏன் ? மனோஜ்க்கு வரப்போகும் கற்பனை மனைவி பற்றியும், அவளது கற்பனைக் காரியதரிசிகள் பற்றியும் விசாரிக்கும் அவள், ஏன் அவனிடம் மனம் திறக்கவில்லை ?

சமூகம் திணித்துள்ள சமூக வழக்காறுகளின் வெளிப்பாடா ?

இவ்விருவரும் தொடர்ச்சியாக பொய்களை கூறுகின்றனா,. இது பார்வையாளர்களான எங்களுக்கும் தெரிகிறது. ஓரு கட்டத்தில் எங்களுக்கும் இது சலிப்பை ஏற்படுத்திறது. இயக்குனா, அவர்களது வாழ்வில் ஏற்பட்ட மன உழைச்சலை சலிப்பை, எங்கள் மனதிலும் ஏற்படுத்தி விடுகிறார்.

பாத்திரங்களின் உள் உணா,வின் மூலம், அவா,களைச் சுற்றியுள்ள புறக்காரணிகள், விழுமியங்கள் விமர்சிக்கப்படுகின்றன. சமூக ஒழுக்க புறக்காரணிகள், கற்பிதங்கள் மூலம் மேலும் வலுப்படுத்துகின்றன.

அன்பின் எல்லை எது ? கூறுகள் எவை ?

காமமும், தியாகம், அதன் வெளிப்பாடாக கருணை அக்காரணிகள்

சுயநலம், சமூகத்தின் மேல் உள்ள பயம், புறக்காரணிகள்.

எமது இயக்கங்களின் வெளிப்பாடு அகம் சார்ந்து வெளிப்பட்டாலும், புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

இங்கும் தனது கற்பனை ~செல்வம்~தில் காதலன் இல்லை என்பதற்காக, தனது காதலை துறந்த, நிரு, மோசமான நிலையில் இருந்த பொழுதிலும், சமூக புறக்காரணிகளுக்கு கட்டுப்படுகிறாள். ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அக்கறையும், புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

அதே போன்றே மனோஜின் நண்பனின் மனைவியினது வாழ்வும்.

பிண்ணனி இசை வெகு அருமை. இரு பெரும் நடிகர்களையும், தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளாா, இயக்குனர். அஐய் தேவகான், ஐஸ்வர்யா ராய், இருவரது சிறப்பான நடிப்பின் பின்னால் இயக்குனர் உள்ளார்.

நிருபரனோ கோஸ்ச்சின் முதல் படம் ஜஸ்வர்யாராய்க்காக எடுக்கப்பட்டது. ஆனால், இப்படம் ஜஸ்வரராய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்.

~இங்கு மழைக்காலம் என்பது காதலர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வலியின் சின்னமாகவே வெளிப்படுகிறது~ என இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இவ்வாறான படங்கள் வந்ததில்லை. இது ஒரு வகை அபத்த வடிவமே.

ஓரு படைப்பு எவ்வாறு சம காலத்தை எதிர் கொள்கிறது ? எந்த மதீப்பிடுகளை சொல்கிறது ? எந்த பார்வைகளை முன் வைக்கிறது ? என்ற கேள்விகளுக்கு இப்படம் பதில் சொல்கிறது.

~நாயொன்றின் குரைப்பில்

பிரிந்து கொண்டோம்~

வானரன்

—-

Nmahesu@aol.com

Series Navigation

வானரன்

வானரன்