கோட்டல் ருவண்டா

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

வானரன்


(100 நாட்களில் 800,000 கொலைகள்)

திரைப்படம் பற்றி பார்ப்பதற்கு முன் ருவண்டாவை ப்பற்றிய சில குறிப்புகளை பார்ப்பது நல்லது.

ருவண்டா(Rwanda)

புரண்டி,தன்சானியா,உகண்டா ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டது ருவண்டா.

மோத்தம் 26,338 சதுர கி.மு

இயற்கை வளங்கள்: தங்கம், தகரம், மெதனேன் போன்றவை

சனத்தொகை:7,954,013

சராசரி வாழ்வுக்காலம்: 39.18 வருடங்கள்

இனக் குழக்கள்

ருட்சி 15 விகிதம் 84 விகிதம், ருவா 1 விகிதம்

மதம்

றோமன் கத்தோலியம் 56.5 விகிதம், புரட்டஸ்ரான்ற் 26 விகிதம், முஸ்லீம் 4.6 விகிதம், அட்வென்ஸ்ட் 11.1 விகிதம், மற்றவை 1.8 விகிதம் (2001)

:

சுதந்திரம்

1962 ஆடி 1ம் நாள் (பெல்ஜியம் – நிர்வாகம் – ஜக்கிய நாடுகள் நம்பிக்கை வலயம்)

:

வரலாறு

கி.மு 1000 – கூற்டு மக்கள் ருவண்டால் வாழத்தொடங்குகிளன்றனர்.

14-15 ம் நுாற்றாண்டு ருட்சி மக்கள் குடி பெயர்கின்றனர்.

18 ம் நுாற்றாண்டு ருட்சி மக்கள் பெரும்பான்மை ருவண்டாயை ஆட்சிசெய்கின்றனர்.

1890 யோர்மன் ருவண்டா அரசை கைப்பற்றுகின்றனர். புின்னர் யேர்மன ருவண்டா ஆக மாறுகிறது.

1916 முதலாம் உலக போரின் போது பெல்ஜியம் ருவண்டாயை கைப்பற்றுகின்றனர்.

1946 ஜக்கிய நாடுகள் நம்பிக்கை வலயமாக மாறுகிறது.

ஆடி 1 ம் நாள் 1962 சுதந்திரம் பெறுகிறது.

சுதந்திரத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் (1959) கூற்டு பெரும்பான்மையினர், ருட்சி சிறுபான்மையினரினர் மாநிலஅரசை கைப்பற்றுகின்றனர். ஆதன் பின்னர் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். சுமார் 150,000 பேர் அகதிகளாக அண்டை நாடுகளை தஞ்சம் கோருகின்றனர். இதன் பின்னர் ருட்சி சிறுபான்மையினர் இவர்களின் சந்ததியினர் ருவண்டா தேசிய அணியை உருவாக்கினர்.

1990ல் உள் நாட்டு போர் மூண்டது. உகண்டா அரசின் உதவியுடன் ருட்சி சிறுபான்மையினர் ஆட்சியை கைப்பற்றுகின்றனர்.

1994 ல் சுமார் 800,000 பேர்வரையில் இறந்துள்ளனர். (பெரும்பான்மையினர் ருட்சி சிறுபான்மையினர்)

ஆடி 1994 யில் ருட்சி சிறுபான்மையினர், கூற்டு பெரும்பான்மை அரசை வெற்றி கொள்கின்றனர். சுமார் 2,000,000 கூற்டு பெரும்பான்மையினர் அண்டை நாடுகளை தஞுசம் அடைகின்றனர்.

2003 – தேர்தலில் ருவண்டா தேசிய அணி வெற்றி பெறுகிறது.

1994 படு கொலைகள்

சுமார் 100 நாட்களில் 800,000 கொல்லப்பட்டுள்ளனர்.

1994 சித்திரை ருவண்டாவின் அதிபர் ர்யடிலயசைஅயயெ விமான விபத்தில் கொல்லப்பட்டுளடளார்.

9-10 சித்திரை- கூற்டு பெரும்பான்மையினர் ருட்சி சிறுபான்மையினரை கொலை செய்யத்தொடங்குகின்றனர். ஜ.நா படைகள் சுடுவதற்கு மறுக்கின்றனர்.

9-10 சித்திரை – வெளிநாட்டு அரசுகள் தமது பிரசைகளை தமது நாடுகளுக்கு அழைத்தனர்(பிரான்ஸ்,பெல்ஜியம், அமெரிக்கா)

11 சித்திரை – ஜ.நா படைகளின் வெளியேற்றத்ின் பின்னர் பாடசாலையில் அவர்களால் பாதுகாக்கப்பட்ட சுமார் 2,000 பேர் கொலை செய்யப்படுகினடறனர்.

21 சித்திரை: ஜ.நா படைகளின் எண்ணிககை 90 விகிததால்குறைக்கப்படுகின்றது

15 வைகாசி: ரெட் குறெஸ் சுமார் 500,000 கொல்லப்பட்டுள்ளனர் என கருதுகிறது.

17 வைகாசி: ஜ.நாவுககும் ஜ. அமெரிக்கா வுக்கும் ஏற்ப்பட்ட பிணக்கினால் புதிய ஆயுதம் தாங்கிய படைகளின் வரவு தாமதமாகிறது.

19 வைகாசி: ருட்சி சிறுபான்மையினர் வடக்கு கிழக்கு பகுதிகளை கைப்பற்றுகின்றனர்.

22 வைகாசி: 2500 பிரென்ச் படைகளட தரை இறங்குகின்றனர்.

04 ஆடி: ருட்சி சிறுபான்மையினர் மிகுதி பகுதிகளை கைப்பற்றுகின்றனர்.

18 ஆடி: ருட்சி சிறுபான்மையினர் பேர் முடிந்து விட்டது என அறிவிக்கினறார்கள்.

கோட்டல் ருவண்டா

நெறியாள்கை: ரெறி ஜோர்ஜ்

எழுத்து: கீர் பியர்சன், ரெறி ஜோர்ஜ்

(ருட்சி சிறுபான்மையினர், கூற்டு பெரும்பான்மையினர் )

ருட்சி சிறுபான்மையினரை கூற்டு பெரும்பான்மையினரை கரப்பான் ப+ச்சி எனத்தான் அழைப்பார்கள்.

கூற்டு இனத்தை சேர்ந்த போல் ருசபஜினா (டொன் சடில்), ருட்சி இனத்தை சேர்ந்த ரற்றினா (சோபியா ஓக்கன்டியோ) வை திருமணம் செய்து பிள்ளைகளும் உள்ளனர்.

போல் பெல்ஜிய முதலாளிக்கு சொந்தமான மில்லிஸ் கொலின்ஸ் என்ற நட்சத்திர கோட்டலில் முகவராக (மனேஜர்) உள்ளார். 1994 ன் படு கொலைகளின் போது எவ்வாறு 1,268 ருட்சி சிறுபான்மையினரை காப்பாற்றினார் என்பதே கோட்டல் ருவண்டா திரைப்படம்.

போல் திறமையுள்ள, தந்திரசாலியான முகவர். இதனால் அனைத்து மேலிடங்களிலும் இவருக்கு தொடர்புகளுண்டு. வெளிநாட்டு அரசுகள் தமது பிரசைகளை தமது நாடுகளுக்கு அழைத்தபோது, தாமும் வெளியேறலாம் என்ற போலின் கனவு நிறைவேறவில்லை. அதன் பின்னர் அவரில் பல மாற்றங்கள். தமது குடும்பத்துடன், ருட்சி சிறுபான்மையின உறவினர்களையும் தமது கோட்டலில் அகதிகளாக தங்க வைக்கின்றார்.

இடையில் சில அகதிகளுக்கும், இவரது குடும்பத்துக்கும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தும், இவர் தமது குடும்பத்தை அனுப்பிவிட்டு தாம் செல்லாது அகதிகளுடன் தங்குகிறார். ஆனால் சென்றவர்கள் பலர் விமான நிலையத்தை அடையமுன்னர் கொல்லப்படுகின்றனர், பலர் திரும்பி வருகின்றனர். போல் தம்முடம் உள்ள ஸ்கொட்ச், கியுபன் சிகார், டொலர், நகைகள் எதுவும் எடுபடாமால் போகவும் சர்வதேச கொலையாளியாக கருதப்படுவீர்கள் என மிரட்டுகிறார். இது காடையினரின் அறிவின்மையை காட்டுகிறது.

ஓரு கட்டத்தில் கோட்டலை முற்றுகையிடும் கூற்டு பெரும்பான்மையினர் இராணுவத்தையும், காடையினரையும் சமாளிக்கமுடியாமல், தமது பெல்ஜிய முதாளியை தொலை பேசியில் அழைக்கிறார், முதலாளியின் கேள்வி

~~ யாரை அழைத்தால் நிறுத்தலாம் ~~

ு இவர்களுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் பிரான்ஸ், அவர்களால்தான் முடியும். ு

முதாளி பிரென்ச் அதிபருடன் தொடர்பு கொள்கிறார்.

சில செக்கனில் ஆக்கிரமிப்பாளர்கள் விலகுகின்றனர்.

100 நாட்களில் 800,000 கொலைகளுக்கு சில செக்கன்களில் விடை தெரிந்துவிடுகிறது.

பின்னர் சமாதானம் என்ற பெயரில் ஜ.நா அட்டையுடன்..கோட்டலில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு உணவு பொருட்கள் பெற தமது இன முகவரும், பெரும்பான்மையின போராளி முக்கியஸ்தரை சந்திக்கின்றார். அந்த உணவுக்களஞ்சியம், இப்பொழுது சித்திரவதைக் கூடமாக உள்ளது. பாதை மாறியதால் வாகனத்தை விட்டு இறங்கியபொழுது தடுக்கி விழுந்தது உடல்களின்மேலே. பாதையெங்கும் உடல்கள், பார்க்கும் இடமெங்கும் உடல்கள்.

மனதை நெருடும், மனதை உருக்கும், மனதை உறுத்தும் காட்சிகள்.

ருட்சி சிறுபான்மையினர், கூற்டு பெரும்பான்மையினர் இவர்களது மொழியும் மதமும் கலாச்சாரமும் ஒத்தவையே. அப்படியாயின் இவர்கள் இரு இனமா ? என்ற கேள்வி எழும்.

இலங்கை, இந்தியாவில் உள்ள சாதிமுறையை இது ஒத்தது. தொடர்ச்சியான ஒடுக்கு முறை இன வடிவம் எடுக்கும்.

பெல்ஜிய அரசு ருவண்டாவை கைப்பற்றியபொழுது அடையாள அட்டை வழங்கியது. அதை வைத்து தான் ஒருவர், என்ன இனம் என அடையாளம் காணமுடியும். பிரித்தாளும் சூழ்ச்சியை பெல்ஜியம் கைக்கொண்டது.

உண்மைக்கதையை மையமாகக் கொண்ட இப்படத்தை ரெரி ஜோர்ஜ் இயக்கியுள்ளார். சம்பவங்களை இலகுவாக்கிவிட்டார் என்ற விமர்சனமும் இவர் மேல் வைக்கப்பட்டுள்ளது.;.

100 நாட்களில் நடந்த பல அரசியல் சகதிகளையும் விமர்சித்துள்ளனர். ஜக்கிய நாடுகளினதும், வெளிநாட்டு அரசுகளினதும் கவனிப்பின்மையையும் சுயநலத்தையும் விமர்சித்து அவர்களை குற்றவாளியாக்கியுள்ளனர். சுனாமியிலும், ஈராக்கிலும் கவனம் செலுத்திய இவர்கள் ஏன் ருவண்டா வில் அக்கறை காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ஜக்கிய நாடுகள் கொலனல் ஒலிவராக நடித்த நிக் நொல்ட் சிறப்பாக நடித்துள்ளார்.

போல் ருசபஜினாயாக நடித்த டொன் சடில் அதி அற்புதம். சர்வ சாதாராணமாக நடித்துள்ளார். மிகவும் கடினமான பாத்திரம். யதார்த்தமாக நடித்துள்ளார். ஒஸ்காரின் சிறந்த நடிகர் இறுதித் தேர்வுக்கு தெரிவு செய்யப்படடுள்ளார் டொன் சடில். ஆரசியல் குறுக்கே வராவிடின் இவர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படலாம்.

சிறந்த துணை நடிகை விருதுக்கு சோபியா ஓக்கன்டியோவின் பெயர் தெரிவு நெய்யப்படடடுள்ளது.

ஒரு விவரணத்திரைப்படமாக படமாக்கப்படமால் ஓரு ரத்தம் படிந்த வரலாறு இயல்பாக படைக்கப்பட்டுள்ளது.;

நாங்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். எமக்கு பல நினைவுகளை, மீட்டும்.

இப்படம் 2004 ரொரன்ரோ சர்வதேசத் திரைப்படவிழாவில் சிறந்த மக்கள் தேர்வு படமாக தெரிவு செய்யப்பட்டது.

வானரன்

Series Navigation

வானரன்

வானரன்