அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

புதுவை ஞானம்


கீழ்க்கண்ட கருத்துக்களையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

‘வரலாற்றின் தொன்மை காலங்களை விளக்கிச் சொல்வதில் வரலாறு சார்ந்த பொருள் பற்றிய இலக்கியத்தைப் பொருத்த வரை சிறிதளவு முக்கியத்துவம் தான் உள்ளது. (அல்லது முக்கியத்துவம் இல்லை) ஏனெனில் அவை மிக நீண்ட காலத்திற்கு முன்னிருந்தவை பற்றி பேசுவதால் தற்போதைய சமுதாயத்தின் பொருளை விளக்கிக் கொள்வதற்கான சித்தாந்த நோக்கில் அதிக முக்கியத்துவம் பெற்றவை அல்ல. அத்தோடு கிடைக்கக் கூடிய அற்பசொற்ப சாட்சியங்களும் ஒரு சித்தாந்த விவாதத்தக்கு போதுமான இடம் தருவதில்லை என்று சில நேரங்களில் சொல்லப்படுகிறது. இந்த கருத்தோட்டம்/பார்வை இந்தியாவின் தொன்மைக்கால வரலாற்றை விளக்கிச் சொல்வதில் பொருத்தமற்றதாக இருக்கிறது. இங்கே காலனி ஆட்சியாளர்களின் அனுபவமும் சரி சமீப காலத்திய தேசிய அக்கறையும் சரி இரண்டுமே இத்தகைய ஆய்வின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. குறிப்பாக பண்டைக்கால இந்திய வரலாற்றுக் கட்டத்தின் மேல் செல்வாக்கு செலுத்துகின்றன ‘ என்று ரொமிலா தாம்பர் அவர்கள் சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

‘கடந்த காலத்துக்கும் தற்போதைய காலத்துக்கும் இடையிலான உறவுகளை விளக்கிக் கொள்வதில் இந்த இரண்டு கால கட்டங்கள் பற்றியும் ஆய்வு செய்யும் அறிஞர்களிடையே தொடர்ச்சியானதொரு உரையாடல் நடத்தப்பட வேண்டும். அத்தகையதொரு உரையாடல் ஏற்கனவே காலனியாக அடிமைப்பட்டிருந்த சமுதாயங்களுக்கு காலனிய அனுபவங்கள் கடந்தகாலம் பற்றிய புரிதலின் வரையறையை முன்பு இருந்ததிலிருந்து மாற்றிவிட்டதொரு சூழலில், இந்த மாறுபட்ட புரிதல் வரலாறு சார்ந்த பொருள் பற்றிய இலக்கியத்தில் அதிகமான பொருத்தப்பாட்டினை வகிக்கிறது. எங்கே அரசியல் சித்தாந்தங்கள் இந்தப்புரிதலை உள்வாங்கிக்கொண்டு காலனி ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்பிருந்த கடந்த காலத்தை நியாயப்படுத்துகிறார்களோ அங்கே இந்த செயல் முறை தேவை என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள் ‘ (பக். 60) Interpretting Early India by Romila Thapar.

‘சமீப காலங்களில், விவரங்களாக தொகுப்பதால் மட்டும் அறிவியல் புரட்சி ஏற்படுவதில்லை. கண்ணோட்டத்தில் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றங்களில்தான் ஏற்படுகிறது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த விளக்கத்தின் வரையறை அல்லது கருதுகோள் மாற்றப்பட்டு, அல்லது புதியதான ஒரு கேள்வித்தொகுதி எழுப்பப்படுமானால் அப்போது தான் அறிவியல் பற்றிய அறிவில் ஒரு பாய்ச்சல் ஏற்படும். இது வரலாறு மற்றும் சமூக அறிவியலுக்கும் பொருந்தும். விவரங்களைத் தொகுப்பது அவசியமான முதல்படி என்ற போதிலும், புதிய ஆதாரங்களிலிருந்தும் புதிய விவரங்கள் சேகரிப்பது இதில் உள்ளடங்கும் என்ற போதிலும் அறிவியலில் முன்னேற்றம் ஏற்படுவது என்பது புதிய விவரங்களிலிருந்து தற்போது கிடைத்திருக்கும் விவரங்களை எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்திருக்கிறது ‘ (பக் 89).

‘வரலாற்று அறிஞரின் வேலை கடந்த காலத்தை நேசிப்பது என்பதோ அல்லது கடந்தகாலத்திலிருந்து விடுபடுவது என்பதோ அல்ல மாறாக அதனைப் புரிந்து கொண்டு நிகழ்காலத்தின் திறவுகோலாக பயன்படுத்துவது ஆகும். நிகழ்காலத்தின் பிரச்சினைகளின் வெளிச்சத்தில் கடந்தகால ஞானத்தின் ஒளி பாய்ச்சப்படும்போது தான் உன்னதமான வரலாறு எழுதப்படுகிறது. கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் உள்ள உறவின் பின்புலத்தில் ஒரு முழுமையான புரிதலை ஏற்படுத்துவது வரலாற்றுக்கடமையாகும். ‘ (இந்த மேற்கோள் E.H. CARR சொன்னது எந்த நூலில் இருந்து எடுத்தேன் என்பதைக் குறிக்க மறந்துவிட்டேன்.)

‘சிந்தனைகள் சில சமயங்களில் சமூக நிர்பந்தங்கள் மற்றும் தேவைகள் என்பதாக பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. சமூக ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகவும் தகுந்ததாகும். முக்கியமான சில இலக்கியங்களில் அந்தச் சமூகத்தின் கருத்தில்/தத்துவார்த்த கோட்படுகள் நிரம்பியுள்ளன. அவை அடையாள பூர்வமாகவோ, எண்ணங்களுக்கு உருக்கொடுப்பன போலவோ இருந்த போதிலும் கூட சொற்களிலிருந்து மட்டும் பொருள் விளங்கிக் கொள்ள முடிவதில்லை அவற்றின் கலாச்சாரத் தொடர்புகளிலிருந்து தான் பொருள் விளங்கிக் கொள்ள முடியும். ‘ (பக் 133)

‘அறிவியல் வரலாறு தனித்து இருப்பதில்லை. அறிவைத் தொகுக்கும் செயல்முறை மட்டும் அல்ல, அது கருத்துக்களின் மோதலும் ஆகும். அது ஒரு நாட்டின் கலாச்சார உயிர்ப்பாகும். வரலாற்றைப் புரிந்து கொள்ளும் கலையில் பல்வேறு விஷயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. தத்துவம் அரசியல் கலை இலக்கியம் அந்த காலகட்டத்தின் ஆன்மீக நிலைப்பாடு குறிப்பாக தேசிய உணர்வு ஆகியவை அவையாகும். வரலாற்றைப்புரிந்து கொள்ளும் கலையில் அறிவியலின் தனித்தனி களங்களில் எவ்வாறு அக்கறை செலுத்துகின்றன, எவ்வாறு ஆய்வுக்கான பிரச்சினைகளை தேர்ந்தெடுக்கின்றன என்பதையும் பொருத்து தேசிய நீரோட்டங்கள் அமைகின்றன.அத்தகைய கருத்தோட்டங்களில் பாரம்பரியம் விடாப்பிடியானது. வரலாற்றைப் புரிந்து கொள்ளும் கலையில் சில சமயங்களில் தொய்வு ஏற்படுவதுண்டு. ஆனால் பாரம்பரியம் காப்பாற்றப்படுகிறது. அதே விஷயத்தின் மேல் அல்லது அதே அடிப்படையின் மேல் மீண்டும் உயிர்த்தெழுந்து புணரமைக்கும் போக்கு அதற்குள்ளது. இந்த கண்ணோட்டத்தில் தேசியக் கருத்தோட்டங்களை ஆய்வுசெய்வது மிகவும் சுவாரசியமானதும் பயனளிக்கக்கூடியதும் அறிவியல் பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். [THE IMAGE OF INDIA by GM BONGARD LEVIN AND A. VIGASIN P-10&11 இவர்கள் சோவியத் நாட்டைச் சேர்ந்த இந்தியவியலாளர்கள்.

மேலை நாட்டினர்கள் தான் தமது புாிதலுக்காக இந்திய அறிவியல் பற்றிய நீதாமிய வரலாற்றை தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற BAYLAYன் வாசகத்துக்கு மீண்டும் உருவோம்.

இயற்கையாயவே கீழைத்தேய சிந்தனைகள் ORIENTALISM அமைப்பு ரீதியாக எழுந்தமைக்கு குறைந்தபட்சம் இங்கிலாந்திலும் பிரான்சிலும் தோன்றியதற்கு அந்தச் சமயத்தில் ஆசியா மற்றும் ஆப்பிாிக்காவில் பரவலாக்கப்பட்ட காலனியமயமாக்கல் மற்றும் இதர வடிவங்களில் வெளிப்பட்ட ஆதிக்கம்தான் காரணமாகிறது. ஐரோப்பியர்கள் அல்லாத மக்களின் பேச்சு மொழியைக் கற்பது மட்டும் அந்த மக்களைக் கட்டுப்படுத்தப்போதுமானதாக இல்லை. அவர்களது நாகாிகம் பற்றிய இஅறிவு அவர்களது பண்பாடு பற்றிய புாிதலும்இ வகைப்படுத்தலும் கையகப்படுத்துவதுமான அறிவு தேவைப்பட்டது. இது காலப்போக்கில் அந்த பூர்வ குடிமக்களே ஐரோப்பிய அறிவு முலம் தான் தங்களைப் பற்றியும் நாகாிகம் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. மேலைத்தேய மேட்டுக்குடியினருக்கு ஐரோப்பிய கலாச்சார ஆதிக்கத்தை நிலைநிறுத்த மேலும் ஒரு சுருக்குக்யிற்றை வழங்கியது. இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் நேரடி காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்த பிறகும் கூட இந்த ஐரோப்பிய கலாச்சார மேலாதிக்கத்தை நீடிக்கவும் கூட செய்தது. [BLACK ATHENA BY Edward said 1974, 73-110) Page. 236]

இத்தகைய அறிவு பூர்வமான மற்றும் கல்வி வடிவிலான மாற்றங்கள் ஐரோப்பிய காலனியாக்கம் கீழைத்தேயங்கள் மீது விாிவாக்கம் செய்யப்பட்டதான நிகழ்வுடன் உறவுகொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக 17, இ18 ம் நுாற்றாண்டுகளில் துவக்கப்பட்ட இந்திய ஆய்வுகள்இ தங்கள் குடிமக்கள் பற்றியும்இ தோழமை சக்திகள் பற்றியும் புாிந்து கொள்வதற்கான கிழக்கிந்திய கம்பெனியின் தேவையிலிருந்து வளர்ந்தது. இந்தியாவைப் பற்றிய அதீத கற்பனைகள் ஜெர்மானியர்களுக்கு ஏற்பட்டதும் அவர்களுக்கு இந்தியாவின் மேல் எந்த நேரடி ஆர்வமும் இல்லையென்பதும் முக்கியமாகக் கவனிக்கதக்க ஒன்றாகும். 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் கூட இந்தியவியலில் முன்னனியில் நின்ற மாக்ஸ்முல்வர்இ பிரஷ்ய துாதுதரான பரோன் கிாிஸ்டியின் புன்சன் என்பவரது பாிந்துரையின் போில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டு தனது ஐம்பதாவது வயது வரை அந்தப் பதவியில் இருந்தார். (அதே புத்தகம் பக்கம் 237) மேற்கோள் எடுக்கப்பட்டது chudhuri 1974) ‘It is thus for the west to produce a needhamian history of sciences of India for the west ‘ என்ற BAYLYன் வாசகத்துக்கு மீண்டும் வருவோம்.

மேலே குறிப்பிடப்பட்ட இஇஇஇரு மேற்கோள்களையும் பார்க்கும்போது மேற்கத்தியர்கள் இந்திய அறிவியல் பற்றி இனியும் தெரிந்து கொள்ள என்ன தேவை இருக்கிறது ? நம் அறிவியலை நாம் தானே தேடிப்படிக்க வேண்டும்இ அவரவர் தாய்மொழியில்-என்ற சிந்தனையும் எனக்குத் தோன்றுகிறது.

கணினியைப் பயன்படுத்தி ‘திண்ணை ‘ யைப் படிக்கின்ற வாசகர்களாகிய நீங்கள் சராசரி தமிழ் வாசகர்களை விட மேம்பட்டவர்களாகவும் பல்வேறு நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பீர்கள் எனவும் உங்களில் சிலர் கல்வி நிறுவனங்களில் இருப்பீர்கள் எனவும் உங்களின் இருப்பு வெளிநாட்டில் என்றாகிவிட்டால் இயல்பாகவே தாய்மொழி மீதான ஒரு பாசமும், தாய்மண்ணின் மீதான ஒரு ஏக்கமும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். Edward said தனது Orientalism நூலில் சொன்னதைப் போல் நம்மில் பெரும்பாலானோர் ஆங்கிலம் வழியாகத்தான் நமது கலாச்சார தொன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியம் நிலவுகிறது. பெரும்பாலான சொல்லாடல்கள் ஆங்கிலம் வழியாக அல்லது ஆங்கிலத்திலிருந்து உள்வாங்கி நடைபெறுகிறது. அறிவியல் கண்ணோட்டம் உள்ளவர்களுக்கு தமிழ் இலக்கியங்கள் புரிவதில்லை (மற்ற மொழிக்காரர்கள் என்றால் அவர்களது தாய்மொழி இலக்கியங்கள் புரிவதில்லை அப்படியே புரிந்தாலும் பண்டைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய ஓலைச்சுவடிகள் இன்னும் முழுமையாக அச்சிடப்படவில்லை. அப்படி அச்சிடப்பட்ட நூல்களையும் படிக்கும்போது ‘ஓகோ, இதுவெல்லாம் கூட தாய்மொழியில் இருக்கிறதா! என்ற வியப்புக்கு மேல் நவீன அறிவியலுக்கும் பண்டைய புரிதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா ? அப்படி இருந்தால் இஅந்த தொன்மை புரிதல்கள் ஏன் தொடர்ந்து வளராமல் போயிற்று ? என்றெல்லாம் கேள்வி எழுப்புவதில்லை. இதனால் என்ன லாபம் தனக்கு கிடைக்கும் என்று எண்ணும் சாத்தியமும் இல்லாமல் போகவில்லை.

அன்று மலேயாவின் ரப்பர் தோட்டங்களிலும் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும் ஆப்பிரிக்க சுரங்கங்களிலும் மேற்கிந்திய கரும்புத் தோட்டங்களிலும் கூலிகளாய் வேலை செய்த

‘பிழைப்புக்கே வழியின்றி பிறநாடு சென்றும்

பித்தர்களாய் வாழுகின்ற முத்தமிழர் தம்மை

அழைக்கின்றார் அழைக்கின்றார்

ஆழைக்கின்றார் அண்ணா! ‘ என்று நாகூர் அனிஃபா பாடிய தமிழர்களை விட பன்மடங்கு மேலானவர்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

மேட்டுக்குடியில் பிறந்து மேட்டுக்குடிகளுக்கான ஆங்கில வழிக்கல்வி பயின்று சமுதாயத்தின் உயர்மட்டத்தில் சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் தனது தேசிய அடையாளம் பற்றிய அக்கறை ஏற்படுவது கடினம் என்பது எனக்குத் தெரியும் எனவே செல்லுபடியாகாத கோபம் கொண்ட இடைத்தட்டுத் தமிழர்கள் மற்ற இந்திய மொழிக்காரர்கள் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர்கள் தம் கலாச்சார அறிவியல் தொண்மையை அடுத்துவரும் தலைமுறைக்கு சுட்டிக்காட்டிவிட்டு செல்லவேண்டியதொரு சரித்திரக் கடமை இஇருக்கிறது. வெள்ளைத்துரைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பூட்ஸ் துடைத்து காட்டிக்கொடுத்து வாழ நினைத்தவர்களின் காலம் முடிந்துவிட்டதாக நான் நம்பவில்லை. வேறு உருவமெடுத்து தேசிய அடையாளத்தை அழிக்கவும அமுக்கவும் புதைக்கவும் தன்னை அறியாமலேயே உடந்தை ஆகிக்கொண்டிருக்கிறது.இந்த புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தமிழ் ஆர்வலர்களுக்கு தேவை.

—-

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்