பாரதியும் கடலும்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

பா. சத்தியமோகன்


திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு அழகிய காட்சி. குறிஞ்சி நிலமும் நெய்தலாகிய கடலும் புணரும் இடங்களை அழகாக வர்ணிக்கிறார் சேக்கிழார்.

கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து

மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும்

நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்

ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய.

( பாடல் 1118 )

கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய இடத்தில் பவளக்கொடியின் மெல்லிய கொழுந்துகளைக் காண்கிறார் சேக்கிழார். அதன் அருகில் சந்தனமரத்தின் கிளைகள் தொட்டுக் கொண்டிருக்கின்றன. இன்புறுகிறார் அவர். குறிஞ்சி நிலமும் நெய்தலும் கொள்கிற இணைவு, திணைமயக்கமாக விரிகிறது. இந்த இடத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது மகாகவி பாரதியின் புலமை நினைவு வந்தது.

கவிதை மட்டுமாகவே அவரை அடைகிற பலருக்கு உண்மையில் அவர் குறிஞ்சி நிலமாக மட்டுமே தெரிவார். அரசியல் கட்டுரைகளும், (சியூசின்) சீனக்கதையை அவர் மொழி பெயர்ப்பதும், தத்துவ விசாரணையும், பகவத் கீதை உரையும், ?வி ?யா ? பத்திரிகையின் ஆசிரியராக இருந்து அவர் உரைத்த சிந்தனை வீச்சுகளும் வாசிக்கிறவர்களுக்கு ,பல படைப்புகள் கொண்ட கொந்தளிக்கிற கடலாக, அறியப்படாத நெய்தல் நிலமாகவும் தரிசிக்க முடியும்.

கடல் அவருக்கு மிகவும் பிடித்த வி ?யம். ?சித்தக்கடல் ? என்று ஒரு படைப்புக்கு தலைப்பு வைத்துள்ளார். இது தவிர கடல் என்ற தலைப்பில் பாரதியாரின் கதைகளிலும் ஒன்று வருகிறது. மிக வி ?தாரமான கதை. ?ஒரு நாள் மாலையில் நான் வேதபுரம் கடற்கரையில் தனியிடத்தில் மணல் மேலே போய் படுத்துக் கொண்டிருந்தேன் ? என்று ஆரம்பிக்கிறது அது. ?கடற்கரை ஆண்டி ? என்றும் ஒரு கதை எழுதியிருக்கிறார். யோகி ஒருவரை சந்திக்கிறார் பாரதி. இனி அவர் வரிகளில் காண்போம்.

?இந்தக் கடற்கரையாண்டி நடுப்பகலில் நான் அலைகளைப் பார்த்து யோசனை செய்வது கண்டு புன்சிரிப்புடன் வந்து என்னருகே மணலின் மேல் உட்கார்ந்து கொண்டு ?என்ன யோசனை செய்கிறாய் ? ? என்று கேட்டார்.

?விதியைப் பற்றி யோசனை செய்கிறேன் ? என்றேன்.

?யாருடைய விதியை ? என்று கேட்டார்.

?என்னுடைய விதியை; உம்முடைய விதியை; இந்தக் கடலின் விதியை; இந்த உலகத்தின் விதியை ? என்று சொன்னேன். அப்போது கடற்கரையாண்டி சொல்லுகிறார் ?தம்பி உனக்கும், கடலுக்கும், உலகத்துக்கும் விதி தலைவன். எனக்கு விதி கிடையாது. ஆதலால் உங்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்துப் பேசாதே ? என்றார்.

?எதனாலே ? ? என்று கேட்டேன்.

அப்போது அந்த யோகி மிகவும் உரத்த குரலில் , கடலோசை தணியும்படி பின் வரும் பாட்டை ஆச்சரியமான நாடக ராகத்தில் பாடினார்.

?சேல்பட்டடிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்

மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்

வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்

கால்பட்டழிந்ததில் கென்றலை மேலயன் கையெழுத்தே! ?

கந்தரலங்காரத்தில் நான் பலமுறை படித்திருக்கும் மேற்படி பாட்டை அந்த யோகி பாடும் போது, எனக்கும் புதிதாக இருந்தது. மேலெல்லாம் புளகமுண்டாய் விட்டது. முதலிரண்டடி சாதாரணமாக உட்கார்ந்து சொன்னார். மூன்றாவது பதம் சொல்லுகையில் எழுந்து நின்று கொண்டார். கண்ணும், முகமும் ஒளி கொண்டு ஆவேசம் ஏறிப்போய் விட்டது. ?வேல் பட்டழிந்தது வேலை (கடல்) ? என்று சொல்லும் போது சுட்டு விரலால் கடலைக் குறித்துக் காட்டினார். கடல் நடுங்குவதுபோல் என் கண்ணுக்குப் புலப்பட்டது.

கடற்புரத்திலிருந்து சிங்கத்தின் ஒலி போலே விடுதலை விடுதலை என்ற ஒலி கேட்டது. ? இப்படியாக முடிக்கிறார் .

வாழ்வில் விடுதலை அடைய விரும்பிய பாரதிக்கு கடல் என்பது நிச்சயம் வெறும் நீர்ப்பகுதியாகத் தோன்றியிருக்க முடியாது. தன் அகத்தையே பொங்குமாக்கடலாக

ஆக்கிக்கொண்ட பாரதி , கடல் வேறு என நினைத்திருக்கவே முடியாது .

****

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்