சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
பாலா
என்னவோ தெரியவில்லை ? பொதுவாக, நம்மில் பலருக்கு, நம் பள்ளி/கல்லூரி நாட்களில் நாம் ரசித்துக் கேட்ட திரைப்பாடல்களும், படித்த பாடங்களும், கண்ட காட்சிகளும், அவற்றை நினைவில் கொள்ள நாம் பெருமுயற்சி எடுக்காதபோதும், நம் மனதில் ஆழமாக (உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டால் கூறுமளவு!) பதிந்து விடுகின்றன. அதே சமயம், வேலைக்கு சென்று நான்கைந்து வருடங்களில், இந்த திறமை குறைந்து, போகப்போக காணாமல் போய் விடுகிறது! இதற்கு, வயது கூடும்போது ஏற்படும் ஞாகபக் குறைவு ஓரளவு காரணமாக இருப்பினும், எனக்கென்னவோ, தற்போது நம்மில் பலர் சந்திக்கும் வேலைச்சூழல் தரும் அழுத்தமும், நாம் வாழும் ஒருவித monotonous வாழ்க்கையும் நம் ரசிப்புத்தன்மையை மங்க வைப்பதால் இந்நிலை உருவாகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது!!
என் நினைவில் இன்னும் வாழும் சில திரைப்பாடல் வரிகள்!
1. காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்! சென்றதை எண்ணி அழுகின்றேன், வருவதை எண்ணி சிரிக்கின்றேன்!
2. காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்!
3. நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே! … நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே, தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே, தெம்மாங்கு பூந்தமிழே, தென்னாடன் குலமகளே!
4. உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக்கை பட பாடுகிறேன் … பொன்னெழில் பூத்தது புது வானில், வெண்பனி தூவும் நிலவே நில்!
5. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா, இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா!
அது போலவே, நம்மில் பலருக்கு பழைய நினைவுகளை அசை போடுவதும், அதனால் ஏற்படும் அலாதியான மனமகிழ்ச்சியும் அடிக்கடி நிகழ்பவையாக உள்ளன.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ‘ப்ருந்தாரண்ய ஷேத்ரம் ‘ என்றழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் தான். தந்தையார் என் சிறு வயதிலேயே தவறி விட்டதால், என் அம்மா வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது நான் 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கிறித்துவப் பள்ளியின் (Montessori) தலைமையாசிரியரான, மிகுந்த கனிவும் இரக்க குணமும் கொண்ட Johannes அம்மையார் என் அம்மாவை ஆசிரியை பணிக்கு வருமாறு கூறினார்கள்.
என் தாய்வழிப் பாட்டனார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்பதாலோ என்னவோ, எனக்கு படிப்பில் ஈடுபாடு இயற்கையாகவே அமைந்திருந்தது. சிலேட்டில் ‘a b c d ‘ சரியாக எழுத வரவில்லையென பலமுறை அழுதிருப்பதாக, என் முதல் வகுப்பு ஆசிரியை, காலஞ்சென்ற திருமதி ராஜி, பிற்காலத்தில் கூறி சிரித்திருக்கிறார்கள்! நான் கல்வியார்வத்துடனும், அமைதியான குணமுடனும் காணப்பட்டதால், Johannes அவர்களுக்கு என் மேல் தனிப்பட்ட பிரியம் இருந்தது. கருணையும் கண்டிப்பும் ஒரு சேர அமைந்த அவரிடம் எனக்குப் பிடித்தவை அவரின் முத்து முத்தான கையெழுத்தும், ஆங்கில இலக்கண அறிவும் தான். என் நினைவில் என்றும் வாழும், என் முதல் ஆசான் அவரே ஆவார்.
நான் (ஆறாம் வகுப்பிலிருந்து) இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலும், அவரை மரியாதை நிமித்தம் அவ்வப்போது பார்க்கச் செல்வேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் என் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அவர் பள்ளிக்கு வரும் பெற்றோர்களிடம் நான் அவர் மாணவன் என்று பெருமிதத்துடன் கூறுவார். தேர்வு சமயங்களில், கிறித்துவ முறைப்படி என்னை மண்டியிட வைத்து ஆசிர்வதித்துத் தான் அனுப்பி வைப்பார்!!! அவரின் அந்த ஆசிர்வாதம் எனக்கு வெகுவாக உதவியது என்று திடமாக நம்பினேன். 1981-இல் அவர் எனக்களித்த நல்லொழுக்கச் சான்றிதழை ஒரு பொக்கிஷம் போல் இன்று வரை பாதுகாத்து வருகிறேன்.
ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. Johannes அவர்கள் இறக்கும் தறுவாயில் என்னை பார்க்க விரும்பினார். நான் செல்வதற்குள், அவர் உயிர் பிரிந்தது என்னுடைய துர்பாக்கியம்.
என் பெண்ணும் நான் பாடம் பயின்ற Montessori பள்ளியில் தான் தன் கல்வியைத் தொடங்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அப்போது தலைமையாசிரியராக இருந்த Johannes அவர்களின் மகளிடம் கூறியபோது, அவர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். சிறிது காலம் அங்கு படித்த என் மகள், இப்போது வேறு பள்ளியில் கல்வி கற்கிறாள். என் இரண்டாவது பெண்ணுக்குத் தான் அந்த கொடுப்பினை இல்லை போலும்!
Johannes அவர்களின் மகளும் சில வருடங்களுக்கு முன் இறந்து போனதால், பள்ளி மூடப்பட்டு, அக்கட்டிடமும் இடிக்கப்பட்டு, அங்கே ஒரு காபிப்பொடி கடையும், ஒரு சிறு Super Market-உம் தோன்றி விட்டன! என் பள்ளி இருந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், நெஞ்சு சற்று கனத்துத் தான் போகிறது! நான் படித்த பள்ளி, இலைகளும் மலர்களும் பழங்களும் கூடிய உயிரோட்டமிக்க ஒரு அழகான சிறு மரம் போன்றதென்றால், தற்போதைய கட்டிடம் கிளைகள் தவிர வேறெதுவும் இல்லாத உயிரற்ற ஒரு சூனிய மரமாகவே எனக்கு காட்சியளிக்கிறது. பள்ளி இருந்த காலத்தில், அதன் முகப்பையாவது ஒரு புகைப்படமாக எடுத்து வைத்திருக்கலாம் என்று இப்போது நினைத்து என்ன பயன் ? வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் கூட, சில மாற்றங்களை மனதளவில் நம்மால் ஏற்க முடிவதில்லை!
என்றென்றும் அன்புடன்
பாலா
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- புனிதமானது
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- நீங்களுமா கலைஞரே ?
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- பகையே ஆயினும்….
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- மோகனம் 1 மோகனம் 2
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- புத்தர்களும் சித்தர்களும்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- மரபுகளை மதிக்கும் விருது
- மெய்மையின் மயக்கம்-29
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- பெயரில் என்ன இருக்கிறது ?
- அம்மா
- அடியும் அணைப்பும்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- கடிதம் டிசம்பர் 9,2004
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- பாரதியும் கடலும்
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பேட்டி
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- புத்தர்களும் சித்தர்களும்
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- காதல் கடிதம்
- இப்படித்தான்….
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்