பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

அறிவிப்பு


பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு

விமரிசனக் கூட்டம்

வாழுகின்ற வாழ்வை விசாரணைக்குள்ளாக்கும்

எழுத்துக்களை விசாரணை செய்ய

விரும்புபவர்களும்,

வாழ்க்கையை கேள்விகளால்

வளப்படுத்த விழைபவர்களும்

கலந்து கொள்கிறார்கள்

உடன் நீங்களும்

விசாரணைக்குள்ளாக்கப் படும் புத்தகங்கள்

வைகைசெல்வியின்

கருவேப்பிலைச்செடியும், நெட்டிலிங்க மரங்களும்

ஜெர்மனியிலிருந்து வெளிவந்திருக்கும்

தமிழ் பெண்கள் அமைப்பு தொகுத்தளித்த

பெண்கள் சந்திப்பு மலர்2004

இடம்: ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி

நாள் 17.4.05, ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணி

—-

mathibama@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

திலகபாமா


மாலை 4.30 மணிஅளவில் மதுரை காலேஜ் ஹவுஸில் திருவள்ளுவர் அரங்கில் “உமா சங்கரி”ன் இன்னிசை நிகழ்வுடன் சி. கனகசபாபதியின் “இலக்கியம்- வாசிப்பும் திறனாய்வும்” கட்டுரைத் தொகுப்பு, திலகபாமாவின் “ கூர்ப்பச்சையங்கள் “ எனும் கவிதைத் தொகுப்பு வெளியீடும் இந்த ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்பு மற்றும் சிறுகதைத் தொகுப்புக்கான பரிசளிப்பு விழாவும் என சி. கனகசபாபதி நினைவரங்க இலக்கிய நிகழ்வு நடந்தேறியது

காவ்யா சண்முக சுந்தரத்தின் வரவேற்புரையுடன் துவங்கிய நிகழ்வில் முதலில் மாலன் சி. கனகசபாபதியின் “ இலக்கியம் வாசிப்பும் திறனாய்வும்” எனும் கட்டுரைத் தொகுப்பை வெளியிட பேராசிரியர் முத்துமோகன் பெற்றுக் கொண்டார்.

திலகபாமாவின் “கூர்ப்பச்சையங்கள் “ கவிதை தொகுப்பை பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த செளந்தரபாண்டியனாரில் குடும்பத்தினரான திரு இராசகோபாலன் வெளியிட பேராசிரியர் சுசீலா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

முருகேசபாண்டியன் சி. கனகசபாபதியின் இலக்கியம் சார்ந்த நினைவுகளை அந்த அரங்கில் பதிவு செய்தார்.

பேராசிரியர் முத்துமோகன் அவர்கள் வெளியிடப்பட்ட “ இலக்கியம்- வாசிப்பும் திறனாய்வும் “ தொகுப்பின் மீதான தனது விமரிசனத்தை முன் வைத்தார்

“ வேறு பட்ட இலக்கியக் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் குறித்த ஆழமான புலமை கொண்டவராயும் திரு. சி. க அவர்கள் எந்த சித்தாந்தச் சிமிழுக்குள்ளும் தன்னைத் தளைப்படுத்திக் கொள்ளாமல் திறந்த மனத்துடன் நடுநிலைப் பார்வையுடனுமே இலக்கியத்தை அணுகியுள்ளாரென்பது இன்றைய திறனாய்வாளர்கள் அனைவரும் மனங்கொள்ளத் தக்கதாகும். சி. கவின் நூலை அன்றைய அரங்கில் மதிப்பீடு செய்த முத்துமோகன் அவர்களின் உரையும் இதற்கு வலுவூட்டுவதாகவே இருந்தது

திலகபாமாவின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பான” கூர்ப்பச்சையங்கள் என்ற நூலை பேராசிரியர் சுசீலா அவர்கள் விமரிசனம் செய்தார்.

அவர் தன் உரையில்” பெண்ணின் சமூக விடுதலைக்கு முன்னுரிமை தரும் கவிதைகளைக் காட்டிலும் , உடல் மொழியைப் பெண் மொழியாக முன்னிறுத்தும் கவிதைகளே மிகுதியான கவனிப்பை பெறும் இன்றைய சூழலில் திலகபாமா தனது கவிதையின் போக்கை எந்த அலைவீச்சுகளுக்கேற்றபடியும் மாற்றிக் கொள்ளாமல் தனது பாணியில், தான் வலியுறுத்த விரும்பும் கருத்துக்களைக் கவிதையாக்கியிருப்பதை யும், போராட்ட உணர்வுகளை நசித்துப் போட்டு விட்டு சிதைவுகளையும் கட்டவிழ்ப்புகளையும் நம்பிக்கை வறட்சியையுமே கவிதைகளாகப் புனைந்து வரும் கூட்டத்திலிருந்து வேறுபட்டுத், தளராத நம்பிக்கை உணர்வையும் போர்க்குணத்தையும் மீட்டெடுக்கும் வகையில் அவரது கவிதைகள் அமைந்திருப்பதை தகுந்த மேற்கோள்களூடன் எடுத்துக் காட்டுவதாக சுசிலா அவர்களின் உரை இருந்தது.

தமிழ் எழுத்தாளர் சி. சு . செல்லப்பாவின் நினைவாக லஷ்மி கனகசபாபதி அவர்கள் வழங்கிய பரிசை தனது “உயிர்க்கும் மனிதம்” தொகுப்புக்காக பெற்றவர் நெய்வேலியைச் சேர்ந்த திரு.ப.. ஜீவகாருண்யன் என்பவர். அவரது படைப்புகளை திறனாய்வு செய்த காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. ஆனந்த குமார், புரட்சிகரமான விடுவிப்பும், மனித நேயமும் அச்சிறுகதைகளில் இருப்பதை எடுத்துக் காட்டினார்.

கவிஞர். தேவேந்திர பூபதியின் “பெயற்சொல்”, ஈழக் கவிஞர் திருமாவளவனின் “ அஃதே இரவு, அஃதே பகல் ஆகிய கவிதைத் தொகுப்புகள் சி. கனகசபாபதியின் நினைவாக லஸ்மி கனகசபாபதியால் தேர்வு செய்து வழங்கப் பட்ட கவிதைகளுக்கான விருதைப் பெற்றன. அத்தொகுப்புகளைப் பற்றிய விமரிசன உரையுடன் இன்றைய இலக்கியங்களின் போக்குகள் பற்றியும் சிற்றிதழ்களின் போக்குகள் பற்றியும் பேசினார் மாலன் அவர்கள்.

சிற்றிதழ்கள் இலக்கியத்தை நுகர்பொருளாக மாற்ற முயலும் போக்கை கண்டித்தும், இன்றைய நவீன தமிழ்க் கவிதை “ இருண்மை,” “நம்பிக்கையின்மை ஆகிய போக்குகளிலிருந்து விடுபட்டதாய் நேர்படப் பேசுவதாக அமைய வேண்டுமென்ற விழைவைத் திரு மாலன் அவர்கள் தனது உரையில் வெளிப்படுத்தினார்.

பழமைக்கும் புதுமைக்கு பாலமாக விழங்கிய சி. கவின் பேரால் விருது வழங்கப் பட்ட இத்தொகுப்புகளின் தேர்வு மிகப் பொருத்தமானதாக இருந்ததை பாராட்டி பேசினார்.

பரிசு பெற்ற படைப்பாளிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த லஷ்மி கனகசபாபதி அவர்கள் தான் தொடர்ந்து தற்போது இலக்கிய நிகழ்வுகளைப் போக்குகளை கவனமாக பார்த்தபடியும் , நிகழ் கால படைப்புகளை வாசித்தபடி இருப்பதாகவும், சொல்லி, ஆகவே தன் அவதானிப்பின் பேரில் அழகியலோடும், சமூகப் பிரக்ஞைகளோடும் வெளிவரும் நிகழ்கால கவிதை தொகுப்புகளுக்கு இனி வரும் காலத்தில் ந. பிச்சமூர்த்தியின் பேராலும் நினைவுப் பரிசு ஒன்று வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அறிவித்தார்.

. பரிசுகளைப் பெற்ற திரு . தேவேந்திர பூபதியும் திரு. ஜீவகாருண்யனும் நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டு தங்களது படைபாக்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்..

இந்நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக, இந்த நிகழ்வில் கனடாவில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போன கவிஞர் திருமாவளவன் தனது ஏற்புரையை கனடாவில் இருந்தே நேரடியாக கணிணி வழியாக வீடியோ கான்பிரன்ஸிங் மூலமாக வழங்கினார். இங்கு நடந்த முழு நிகழ்வையும் அங்கிருந்தே அவர் கண்டு களித்ததன் மூலம் அந்நிகழ்வில் கலந்துகொண்ட திருப்தியையும் அடைந்திருப்பார் என்றே நம்புகின்றேன்.

இந்நிகழ்வை ஒட்டி கனடாவிலும் ஒரு இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்து விடலாம் என்று நான் எண்ணியிருந்தேன். அது முடியாமல் போக , திருமாவளவன் மட்டுமாவது அவசியம் பங்கேற்க வேண்டுமென விரும்பியதால், இந்த கணிணி தொழில் நுட்பம் பயன் படுத்தப் பட்டது. . அதற்கு கனடாவில் இருந்த படியே , திருமாவளவனுக்கு தேவையான ஏற்பாடுகளைக் கனகசபாபதியின் பேரன் கபில் செய்து தர, இங்கு அதற்கான ஏற்பாடுகளை கனகசபாபதியின் இன்னொரு பேரன் நவீன் கோர்க்கி நிறைவாக அதை செய்து முடித்திருந்தார்கள்.

திலகபாமாவின் நன்றியுரையோடும் ஏற்புரையோடும் நிறைவு பெற்ற இந்த நிகழ்வில் தொ. பரமசிவம், கு ஞானசம்பந்தம் என முக்கிய இலக்கிய வாதிகளூம் பங்கேற்று சி. கனகசபாபதி இன்றைய இலக்கிய போக்குகளில் , மீண்டும் நினைவு கூறப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.

—-

(படம் 1: இடமிருந்து வலம் : திலகபாமா, முத்துமோகன், ஜீவ காருண்யன், லட்சுமி கனகசபாபதி, மாலன், தேவேந்திர பூபதி . பின் வரிசை: முருகேச பாண்டியன் , பேராசிரியர் சுசீலா)

(படம் 2 : சி க நூல் வெளியீடு : இப்படத்தில் கணிணி வழியாக திருமாவளவன், நிகழ்வைப் பார்க்க ஏற்பாடு, செய்யப் பட்டிருந்தது படமாக இருக்கிறது)

(படம் 3 : திலக பாமாவின் ‘ கூர்ப் பச்சையங்கள் ‘ நூல் வெளியீடு

காவ்யா சண்முக சுந்தரம், லட்சுமி கனகசபாபதி, திலகபாமா, சுசீலா இராசகோபாலன், மாலன்.

பின் வரிசையில் தேவேந்திர பூபதி , ஜீவ காருண்யன்)

கவிஞர் சி க நினைவுப் பரிசு பெறுதல்

திலகபாமா, லட்சுமி கனகசபாபதி, தேவேந்திர பூபதி, மாலன், காவ்யா சண்முக சுந்தரம்

(படம் 1 : சி சு செல்லப்பா நினைவுப் பரிசு ழழங்கும் படம்.

திலகபாமா, ஜீவ காருண்யன், லட்சுமி கனகசபாபதி, மாலன் , காவ்யா சண்முக சுந்தரம்)

(படம் 2 : திலகபாமா நன்றியுரை , ஏற்புரை வழங்குகிறார்.)

கவிஞர் திருமாவளவன்

mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா

திலகபாமா