புத்தர்களும் சித்தர்களும்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

புதுவை ஞானம்

சித்தர்கள், புத்தர்கள், மறைஞானிகள், சூஃபிக்கள், தாவோயிஸ்டுகள் [Siddhas, budhas, Mystics, Sufis, Taoists] எனப்பலவாறாக, உலகின் மிகப்பெரிய சமயங்களான இந்துமதம், புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம், சீனத்தின் தொன்மையான தாவோ மதம் இவற்றைச் சார்ந்த ஞானிகளைக் குறிப்பிடுகிறார்கள். சடங்கு சம்பிரதாயங்களைக் கடன் இழவே என்று கடைப்பிடித்துக் கொண்டு உள்முகமான (Intravision) ஆன்மிக வளர்ச்சியில் மனித மேம்பாட்டில் மனித விடுதலையில் அக்கரை கொள்ளாத அனைத்து சமயப் பூசாரிகள், புரோகிதர்கள், மதகுருக்கள், பாதிரியார்கள், உலாமாக்கள் மடாதிபதிகள் இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சமூக அக்கறை உள்ளவர்கள் இவர்கள். என்பதாக சித்தர் தத்துவம் என்ற நூலில் புதுவைப்பேராசிரியர் நாராயணன் குறிப்பிடுகிறார்.

[எந்தெந்த மதங்களில் பிறந்தபோதிலும் பிறப்பால் இந்து, முசல்மான், கிருத்துவன், பெளத்தன், சமணன் எனப் பலவாறாக இருந்தபோதிலும்] ஒன்றே கடவுள்; ஒருவனே தேவன். அவனை அடைவதற்குப் பிறப்பறுக்கவேண்டும். முக்தி நிலையை எட்ட வேண்டும். சமதளத்தில் இயங்கி ஆசைகளால் அலைக்கழிப்பட்டு போகத்திலும் துய்ப்பதிலும் பேராசை பிடித்து செயற்பட்டு அதன் காரணமாக உடலாலும் உள்ளத்தாலும் நொந்து நோய் மூப்பு வழியாக சாக்காடு எய்தி; பின்னரும் பிறவிச் சக்கரத்தில் சிக்குண்டு நச்சுச்சுழலில் மாட்டிக் கொள்ளாமல் யோக மார்க்கத்தில் இறைவனை அல்லது இறைத்தன்மையை அல்லது பரினாம வளர்ச்சியில் ஆதிமனிதத்தன்மையை எட்டுவது இவர்களது பாதை.

தனக்குவமை இல்லாதவன் தாள் சேர்ந்தார்க்கல்லால்

மனக்கவலை மாற்றலறிது.

‘Earth ‘s pain were the ransom of its prisoned delight ‘

Sri Aurobindho

Earth ‘s pain என அரவிந்தர் குறிப்பிடுவது பூமி எனும் கோளின் Planet Earth துயரம் அல்ல அதில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக மனிதர்களின் வேதனை துயரம். இது பொதுவானது. துயரமற்ற உயிரனங்களே உலகில் இல்லை. இந்தத்துயரம் இந்த வேதனை ஒரு விதமான (பிரசவ) மகப்பேறு கால வேதனை. மாற்றத்தைப் பிரவிப்பதற்கான வேதனை.

ஹளபேடு – பேளூர் என்ற கருநாடக மாநிலக் கோயில்களைப் பார்த்தவர்கள் உண்டானால் அவர்களுக்கு நினைவுபடுத்தவும் பார்க்காதவர்கள் சென்று அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு செய்தியைக் – காட்சியை குறிப்பிடுகிறேன். அந்த ஆலயத்தின் கருவறை நிலைப்படியில் (வாசற்படியில்) மேல் விதானத்தில் ஒரு அழகிய சிற்ப வேலை. ஒரு பூ மலர்ந்திருக்கிறது இடதுபுற ஓரத்தில் அதில் சுரக்கும் தேனை அருந்த ஒரு வண்டு அமர்ந்திருக்கிறது. அந்த வண்டைப் பிடித்துத் தின்பதற்கு ஒரு பறவை. அந்தப் பறவையைப் பிடிக்க ஒரு [பூனையோ எதுவோ நினைவில்லை] நாலுகால் மிருகம் அந்த நாலுகால் மிருகத்தை வேட்டையாட ஒரு வேடன் எனப்போகிறது என் நினைவு யாரவது சரியாகச் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். இப்படி இருக்கிறது இயற்கை. துன்பம் நிறைந்ததாக. இது நீரோடு போகின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக்கூடும்.

இன்னும் ஒரு கதை. ஒரு மனிதனை புலி துரத்துகிறது காட்டு வழியில் தப்பியோடும் போது ஒரு பாழுங்கிணற்றில் விழுகிறான். கிணற்றின் அடியாழத்தில் ஒரு பாம்பு படமெடுத்துச் சீறுகிறது. அவனோ கிணற்றுக்குள் இறங்கும் ஒரு காட்டுக் கொடியை பிடித்துக் கொள்கிறான். மேலே புலி கீழே பாம்பு. மனதும் உடம்பும் பதை பதைக்கின்றன. அந்தச் சமயம் கிணற்றடியில் இருந்த மரத்தில் ஒரு தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அதை அவன் நக்கிச் சுவைக்கிறான்.

இப்படி என்ன துன்பங்கள் வாழ்வில் வந்த போதும் Positive ஆக எதிர்ப்பின்றி இருப்பதைக் கொண்டு திருப்தியடைவது ஒரு வகை வாழ்க்கை வழி. ‘துன்பம் வரும் போது கொஞ்சம் சிரிங்க ‘ என்று சொல்லி வைத்தார் வள்ளுவரு சிரிங்க – பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் …. என ஒரு திரைப்பட பாட்டு ராசபார்ட்டு ரங்கதுரையோ ? இருக்கலாம். லொடாய் லொடாய் லொடாய் கரோ லொடாய் கரோ முக்தி சலாய் – என்று ஒரு வங்கமொழிப்பாடல் – ஒலிமுழக்கம் (கோஷம்). இதற்கு பொருள் ‘போராடுவதற்காக வாழ் வாழ்வதற்காக போராடு ‘ என்பதாகும் இப்படியும் வாழலாம்.

எப்படி வாழ்ந்தாலும் – ஏற்றாலும் எதிர்த்தாலும் புரட்சி செய்து சமூக மாற்றங்கள் கொண்டு வந்தாலும் தனிமனிதத் துயரங்கள் (Personal Sorrows) தொடரும். சம உடமைச் சமுதாயம் அமைந்தாலும் சரி அதைத்தாண்டி பொதுவுடமைச் சமுதாயம் அமைந்தாலும் சரி மனிதனுடைய வெளிபுறத் தேவைகளைப் பூர்த்தி செய்ய (நிறைவேற்ற) ஓரளவு ஏற்றத் தாழ்வற்ற வருமானத்தைப் பகிர்ந்தளிக்கலாம்.

இது ஒட்டுமொத்த (Collective) துயரங்களை வேதனைகளை தீர்க்க உதவும். இதை IMPERSONAL SORROWS என வைத்துக் கொள்வோம்.

ஆனால் தனிப்பட்ட துயரங்களை உள்முகமான ஏக்கங்களை கவலைகளைத் தீர்க்க முடியாது. உதாரணத்துக்கு (எடுத்துக்காட்டாக) ஒருவனுக்கு ஒரு குழந்தையே இல்லை. இன்னொருவனுக்கு ஆண் குழந்தை இல்லையே என ஏக்கம். ஒருவனுக்கு காதல் தோல்வி மற்றொருவனுக்கு கருப்பு பெண்டாட்டி. சிகப்பு தோல்மேல் மோகம். இன்னொருவனுக்கு குண்டுப் பெண்டாட்டி. நன்றாகப் படிக்க வருகிறது படிக்க வசதியில்லை. சொத்து இருக்கிறது படிப்பு வரவில்லை. பதவி உயர்வு கிடைக்கவில்லை. இன்னொருத்தனுக்கு அதிகாரிப் பதவி கிடைத்தும் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கவில்லை. மற்றொருவனுக்கு சாதிப்பிரச்சனை மேல் சாதி என்பதனால் வேலை கிடைக்கவில்லை.

ஒருவனுக்கு எல்லாமிருந்தும் சர்க்கரை வியாதி. சில பணக்காரன் வீட்டில் டிரைவர் காரையும் கூட சேர்த்து ஓட்டுகிறான். உண்மையான தொண்டனுக்கு கட்சியில் பதவி இல்லை. இப்படி எத்தனையோ அடுக்கலாம். இவையெல்லாம் தனிப்பட்ட துயரங்கள் மனவியல் (உளவியல்) நிபுணர்களுக்கே மன நோய் வருகிறது. இவர்கள் இத்தகைய துயரங்களுக்கு 100, 90, 80 .. என்று தரத்துக்கேற்ப மதிப்பெண் கொடுத்து சிகிச்சை அளிக்கிறார்கள் இதில் ஏழை பணக்காரன் மேல் சாதி கீழ் சாதி என்றெல்லாம் விதிவிலக்கு கிடையாது. இதனை சோதிடத்தில் ‘ரொண ரோக ரெளத்திரம் ‘ என்கிற ஆறாம் இடமும், ‘விரயம் ‘ பன்னிரண்டாம் இடமும் சுட்டிக்காட்டும் என நமது முன்னோர்கள்களின் நம்பிக்கை.

‘நீ என்னப்பா மார்க்கிஸ்டாக (மார்க்சீய வாதியாக இருந்து கொண்டே சோதிடத்தை நம்புகிறாயே ? ‘ என்று ஒரு நண்பர் கிண்டல் செய்தார் 1975ல். நான் சொன்னேன் ‘நீயும் மார்க்சீயவாதி ஆகிப்பார் அப்போது தெரியும் – ‘ என்று. ‘ஆனால் …. ‘ என்று இழுத்தார். நமது தலைவர்களது யோக்யதையை எண்ணிப் பார். அப்போது தலை எழுத்து என்பது என்னவென்று புரியும் ‘, என்றேன். அவர் வாய்விட்டுச் சிரித்தார். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்.

எங்கள் தொழிற்சங்கத்துக்கு ஒரு தேர்தல் நடந்தது … ஒரு காலத்தில் (இப்போதெல்லாம் சாமபேததான தண்டம் எனும் நான்கு உபாயங்களையும் பயன்படுத்தி வேட்பாளர்களை வாபஸ் பெறவைத்து unapposed ஆக வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற தொண்டை கிழிய கத்துபவர்கள்) சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு தோழர் இருந்தார். வேட்பாளர் பட்டியலில் அகரவரிசைப்படி அவர் பெயர் முதலில் இருக்கும். (ஆனந்தன் என வைத்துக்கொள்ளுங்களேன்) அவர் சோறு தண்ணியில்லாமல் இராப்பகலாக சங்கத்துக்கு உழைக்கும் ஆர்வலர்களையும், குடும்பம் குட்டி எனப்பார்க்காமல் சங்கத்தை கட்டியழும் சில அகில இந்தியதலைவர்களைவிட அதிக வாக்கு பெறுவார் பெயர் அவர் எண் ‘1 ‘ என்பதால். வெல்க தொழிற்சங்க ஜனநாயகம் சாதிஅரசியலும் என்று வாழ்த்துவது தவிர வேறெதுவும் செய்ய இயலாது இதுவும் கூட தலைவிதிதான்.

சுவாமிநாத ஆத்ரேயன் என்ற ஒரு எழுத்தாளர் ஒரு நல்ல கதை எழுதினார். அது புதிதாக (சமீபத்தில் – Recently married என்று தான் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமே ஒழிய Newly married என்று சொல்ல கூடாதாம்) வார்த்தைகளைப் பிரயோகிக்கப் புலமை வேண்டும். சொல்லாட்சி வேண்டும். அது இல்லாவிட்டால் பப்பு வேகாது. நான் ஒரு தடவை அதிகமாக பார்ப்பன தோழர்களோடு குறிப்பாக முதிர்ந்தவர்களோடு பழகியதில்

பழகியதில், அவர்கள் யாரையாவது இளப்பமாக குறிப்பிடும்போது ‘பிரகஸ்பதி ‘ என்று சொல்வதை (பிரக்ஸ்பதி என்றால் தேவகுரு) தவறாக மாற்றி ‘பிரஜாபதி ‘ என்று சொல்லிவிட்டேன். அதற்கு அசிங்கமான ஒரு அர்த்தம். அட இழவு. எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். தலையெழுத்து இந்த Internet Softwareல் ‘இ ‘ யும் வராது என்பதனால் எழவு என்று படிக்கவும். அதாகப்பட்டது அதில் வடமொழி எழுத்துக்களும் வராது என்பதனால் சுவாமிநாத …. என எழுதத் தொடங்கினேன் ‘என்னா மசுரு கம்ப்யூட்டர் நாமத்தானே யூகமாகப் படிக்க வேண்டி இருக்கிறது ‘ என்றுதான் நண்பர் விக்கிரமாதித்யன் சொல்கிறார். எழவுக்கும் திருநெல்வேலிச் சீமைக்கும் அப்படி ஒரு நெருக்கம்.

சரி கதைக்கு வருவோம். ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டுக்குத் தாமதமாக வந்து புதுப் பெண்டாட்டியிடம் மாட்டிக் கொண்டான் வங்கி ஊழியனான அந்தப் புதுமாப்பிள்ளை. (அவன்வேறுஒரு புரட்சி கவிஞர் கவிதை எழுதிய கதையாக பூக்காரியின் பரட்டைத் தலையைப் பார்த்துப் பரிதாபப்பட்டு நமக்கேன் இந்த சுகபோக ஆடம்பரம் என்று வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் மல்லிகைப்பூ வாங்காமல் மாட்டிக்கொண்டான் – இது என் உபகதை, சொந்த ரீல் – சரக்கு)

புது பெண்டாட்டி முகம் போன போக்கைப்பார்த்து பயந்து, ‘இன்னக்கி கிரெடிட் சொஸைட்டியில போர்டு மீட்டிங். அதனாலதான் லேட் ‘ என அசடு வழிந்தான். அவள், ‘அப்படான்னா என்னா ? ‘ என்றாள். ‘அந்த மீட்டிங் போனா சிட்டிங் பீஸ் (படி) ரூபாய் 250 கிடைக்கும் நமக்கு ஆதாயம் தானே என்றான். ‘ ஆத்துக்காரிக்கு வாயெல்லாம் பல் சமத்துப் புருஷன் என்று. இன்னொரு நாளும் லேட் ‘ஏன் ? ‘ என்ற கேள்விக்கு ‘யூனியன் மீட்டிங் ‘ என்றான். ‘ஏதாவது நொண்டிச் சாக்கு ‘ என முகம் சுளித்தவளை நோக்கி (இப்போது கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது சமத்துக் கண்ணோல்லியோ) ‘ அடிஅசடே யூனியன்ல ஆக்டிவா இருந்தாதாண்டி. கிரெடிட் சொஸைட்டியில டைரக்டர் ஆக முடியும் ‘, என்றான். படுசமத்துக் கதாநாயகன். அதைவிடப் படு சமத்து சுவாமிநாத ஆத்ரேயன். தொழில் சங்க உணர்வை எப்படி ஊட்டினார் பார்த்தீங்களா ?

இவர் இன்னொரு கதை எழுதினார். அதுவும் அவாத்துக்கதைதான் போல இருக்கு. ஒரு வெஜிடேரியன் மாப்பிள்ளை நான்-வெஜிடேரியன் பெண்ணைக் கட்டிக்கிட்டு சாந்திமுகூர்த்தத்தில் அம்பேல் ஆன மாதிரி ஒரு கதை. நான்-வெஜிடேரியன் பொண்ணுகளை கட்டிக்கொண்ட அய்யருவ எனக்கு நண்பர்கள். ‘ பறத்தி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ ‘ என்ற சித்தருக்கு எதிரான கதையல்லவா இது. இப்படி எல்லாமா சாதியைக் காப்பாற்ற முடியும். பணம் வருகிறதென்றால் பண்ணிக்கரி சாப்பிடற விதவையோ வாழாவெட்டியோ எல்லாத்துக்கும் ரெடி. ரெட்டை சம்பளம்னா கசக்குதான்னா ?

இப்படிப்பட்ட அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி அர்ச்சனை செய், பரிகாரம் செய் கோதானம் செய், ஸ்வர்ன தானம் செய், வஸ்திரதானம் செய், விரதம் இரு, அங்கபிரதட்சனம் செய் துயரம் விலகும் என்று போதித்தார்கள். ‘எத்தைத் தின்னா பித்தம் தெளியும் ? ‘ என்று கவலைப்பட்ட மனிதன் பகடைக்காயானான்.

‘சிற்றிறைவர் இவ்வுலகின் சிறியோரின் சிறுபொருளில்

வற்றிறையை வாங்குவரே வல்லமையும் மகிழ்ச்சியுள்ள

பற்றிறைவன் – நீதிறையை வாங்காயோ ஆனதினால்

சொற்றிறை விட்டு இட்டுரையை சொரிவேனே – நமசிவாய ‘

‘சர்வ வல்லமை உள்ள தெய்வமே ‘ பேரானந்த வடிவாய பெருமானே ‘ பரந்த உலகமெல்லாம் பற்றியாளும் பரமனே ‘ இம்மண்ணுலகத்தையாளும் சிற்றரசர்கள் தம் குடிகளைக் கண்டித்தும் தண்டித்தும் வரிப்பணம் வாங்குவர் ஆனால் அரசர்க்கெல்லாம் அரசனாக விளங்கும் நீயோ ஒன்றையும் திறையாக (கப்பமாக – லஞ்சமாக) பெறுதல் இல்லை. ஆதலால் வாக்காலே திறையளக்கும் வழக்கத்தை விட்டு (அர்ச்சனை) என் உள்ளத்திலே ஊறி எழுகின்ற அன்பினையை உனது திருவடியிற் காணிக்கையாகச் சொரிகிறேன் ‘ என்ற கருத்தை அமைத்து எல்லீசர் என்பவர் பாடினார். (அழுதால் பெறலாம் அவனை. லஞ்சம் கொடுத்து அல்ல)

சென்னை நிலவரி மன்றத்தின் செயலாளராகப் பணிபுரிந்த (செக்ரட்டரி ரெவன்யூ போர்ட்) இவர் ஒரு ஆங்கிலேய ஐ.சி.எஸ் அதிகாரி. சிறந்த தமிழ் தொண்டர். ‘நமசிவாய என்னும் ஐந்தெழுத்து சைவ சமயத்தார் போற்றும் தாரகமந்திரமாயிற்றே ‘ அதனை எவ்வாறு கிருத்துவராகிய எல்லீசர் எடுத்தாளலாம் என்ற கேள்வி எழுந்தது. ‘என்றென்றும் நிற்கும் ஏககடவுட்கு நன்றென்று இதோ புரிந்தேன் நமஸ்காரம் ‘ என்பதே ‘நமசிவாய ‘ என்ற சொல்லின் பொருள். ‘நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே – என்று விளக்கம் கிடைத்தது. இவர் தாயுமானவ சாமியார் சமாதி அடைந்த இடத்தைக் காணச்சென்று இராமநாதபுரத்தில் ‘இன்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடமில்லையே ‘ என்ற பாடலை நெஞ்சுருகிப் பாடி அத்தலத்திலேயே இறைவனடி சேர்ந்தார். சித்தர் வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய நல்ல மனமுள்ள நல்லடியார் இவர். சென்னை மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றிய இவர் ரெவின்யூ கோஆபரேட்டிவ் என்றாலே ஊழல் என்றாகி பலகோர்ட்டுகளில் ஏறி இறங்கும் ஐ.ஏ.எஸ் ஆபிசர்களுக்கு முற்றிலும் மாறானவர். லஞ்சம் வாங்கவும் இல்லை, கொடுக்கவும் இல்லை.

பின்னர் எப்படித்தான் துக்கத்தைத் தொலைப்பது ? இதற்குத்தான் சித்தர்களையும் புத்தர்களையும் பற்றி படித்துப்பார்க்க வேண்டும்.

எனக்குத்தெரிந்தவரை :

1. ஒவ்வொரு மனிதனுக்கு சுய இயல்பு என ஒன்று இருக்கிறது.(சுபாவம்)

2. அவனவன் இயல்புக்கு ஏற்ப ஆணவம் செயல்படுகிறது.

****

3. ஆணவத்தால் தான் செய்யும் செயல்களால் (கர்மம்) பாவ புண்ணியங்களைச் சம்பாதிக்கிறான்.

4. வினை விதைத்தவன் வினை அறுப்பான்

விதையொன்று போட சுரையொன்று முளைக்காது…

என்ற ஞானம் பிறந்த பின்பும் தன் துயரத்துக்குத் தானே பொறுப்பேற்காமல் மாயையில் சிக்குண்டு அப்படி நடந்திருந்தால் இப்படி நடந்திருந்தால் (If and but have no place in history, either personal history or in universal history) அத்தைக்கு மீசை முளைத்தால் என்று செக்கில் ஏறிக்கொண்டு சிங்கப்பூர் இன்னும் வரவில்லையே என்று சுற்றிச் சுற்றி சகதியில் (புதைமணலில்) தவிக்கிறான் மனிதன்.

இது ஒருபக்கம் இருக்க இந்த சுய இயல்பு என்ற அறிவோடு கூட சமூகத் தொடர்பால் (social interaction) மனிதனுக்கு பட்டறிவு ஏற்பட்டு வளரத் தொடங்குகிறான். அவ்வளர்ச்சியில் படி நிலைகள் உள்ளன. உணர்வு நிலை (instinct level) உணர்ச்சி நிலை (Emotional level) அறிவு நிலை (Intellectual level) நடுவு நிலை அல்லது ஆன்ம நிலை (Psysich level) physical – mental – vital – psysich உடல் – மனம் – பிராணன் – ஆன்ம நிலையெனக் கொள்ளலாம். இந்த நாலாவது நிலைக்கு வளர்ந்து வந்தவனிடம் தான் ஆன்மீக அனுபவம் அவதி ஞானம், கேவலஞானம், சச்சிதானந்தம் என்பது பற்றியெல்லாம் உரையாட முடியும்.

நீங்கள் இந்த நான்காம் நிலையை எட்டி இறைவனோடு சாலோக – சாரூப – சாமீப – சாயுக்ஷ நிலையிலிருந்தால் உடனடியாகப் படிக்க வேண்டியவை சித்தர் பாடல்கள் திரு அருட்பா, திருமந்திரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி என எத்தனையோ தமிழ் நூல்கள். Madam Blavatsky ன் The secret Divine, அரவிந்தரின் Divinelife, D.T.Suzuki ன் Introduction to Buddhism, Kathleen Riordan speeth ன் The Gurdfieft Work என ஏராளமான ஆங்கில நூல்கள். எளிதாய்ப் புரிந்து கொள்ள Richard Bachவின் Illusions, Zen and Art of Motor Cycle Maintenance, Martin Grey ன் Book of life எனப் பட்டியல் நீளும். Osho வும் அகல உழுதிருக்கிறார்.

‘நீரளவேயாம் நீராம்பல் -தான் கற்ற

நூலவேயாம் நுண்ணறிவு – மேலே

தவத்தளவேயாம் தான் பெற்ற செல்வம்

குலத்தளவேயாம் குணம். ‘

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும் – என்பதை

மனதை விட்டு அகலவிடக்கூடாது. பள்ளிகளில் கற்றுக் கொடுத்துவிட்டு காலாண்டு, அரையாண்டு, இறுதித் தேர்வு என்று சோதனை செய்து மேல் வகுப்புக்கு அனுப்புவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பள்ளிகள் பாடம் நடத்தி பரீட்சை வைப்பதற்கு முற்றிலும் மாறாக வாழ்க்கையோ பரீட்சை வைத்து சோதனைகளைக் கொடுத்து அதன் மூலம்தான் கற்றுக் கொடுக்கிறது. எனவே வாழ்வையும் சாவையும் தனது சொந்த அனுபவம் மற்றுமல்ல தனதறிவுக்கும் பரிச்சயத்துக்கும் எட்டிய அனைவரது வாழ்வின் ஏற்ற இறக்கங்களை உன்னிப்பாக கூர்ந்து கவனித்தால் காலமும் வாழ்க்கையும் எவ்வளவு பெரிய ஆசான் என்பது விளங்கும். இப்படி அவதானித்தால் அனுபவம் முதிர்ந்து ஞானப்படிகளில் ஏறமுடியும். ஏறும்போது அது பரமபத விளையாட்டு போல ஏணியும் வரும் பாம்பும் கடிக்கும். மனோ வாக்கு காயம் மூன்றும் பரிசுத்த மாக இல்லாவிட்டால் சாணேறி முழம் வழுக்கித்தான் சர்ப்பத்திலிருந்து தப்ப முடியும். தர்மத்தைப் போதிக்க எப்படி ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ? Play way method நமது பூர்வீகச் சொத்து அல்லவா ?

****

puduvai_gnanam@rediffmail.com

Series Navigation