தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

யமுனா ராஜேந்திரன்


பாப்லோ நெருதாவின் கான்டோ ஜெனரல் தொகுப்பிலான – நான் தண்டனை கோருகிறேன்-. என்னும் பகுதியிலான கவிதை தமிழில்; மொழிபெயர்க்கப்பட்டு, பாப்லோ நெருதா மரணமுற்ற அடுத்த மாதம் தாமரையிலும் செம்மலரிலும் சமகாலத்தில் வெளியானது. தமிழ் மொழியில் வெளியான பாப்லோ நெருதாவின் முதல் நீண்ட கவிதை அதுதான் என நினைக்கிறேன். அந்தக் கவிதை மொழிபெயர்ப்பு இதுவரையிலும் இந்தியாவிலும் இலங்கையிலும் குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து முறையாவது பல்வேறு இதழ்களில் முழுமையாகவும் பகுதியாகவும் மறுபிரசுரம் செய்யப்படிருந்ததை நான் பாரத்திருக்கிறேன்.

சிலிக்குயில் பொதியவெற்பன் பாப்லோ நெருதா தொடர்பாக தமிழில் முதன் முதலாக ஒரு தொகுப்பினைக் கொண்டுவந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அறந்தை நாராயணண் முதன் முதலாகத் தமிழில் மிகவிரிவாக பாப்லோ நெருதாவின் கவிதையம் அரசியலும் குறித்து ஒரு நூலைக் கொண்டுவந்தார். இதுவன்றி பாப்லோ நெருதாவின் காதல் அனுபவங்கள் தொடர்பான நூல் ஒ;னறினை தமிழன்பன் மொழபெயர்த்து வெளியிட்டதாகவும் எனக்கு ஞாபகம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழான தாமரையிலும், மாரக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழான செம்மலரிலும் வெளியான பாப்லோ நெருதாவின் – நான் தண்டனை கோருகிறேன்- எனும் மொழி பெயரப்புக் கவிதை மொழி பெயர்ப்பாளனின் பெயர்; இல்லாமலேயே பல இதழ்களிலும் எடுத்தாளப்பட்டிருந்தது மகத்தான சோகம். சிலிக்குயில் பொதியவெற்பன் மட்டுமே உரிய அனுமதியுடன் அந்த மொழிபெயர்ப்பினை வெளிட்டிருந்தார்.

அக்கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு அப்போது மெய்ன்ஸ்டிரீம் பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. அந்தக் கவிதையை யமுனாபுத்திரன்; எனும் பெயரில் நான் மொழிபெயர்த்திருந்தேன். அதனது பிரதி என்னிடம் தற்போது இல்லையென்பதால், நண்பர் மனுஷ்யபுத்திரன் மூலம் அதனது பிரதியை பொதியவெற்பனிடமிருந்து அல்லது தாமரை வசமிருந்து எடுக்க முயற்சித்து வருகிறேன்.

நெருதாவின் கான்டோ ஜெனரல் எழுபதுகளில் ஆங்கிலத்தில் முழமையாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கவில்லை. இப்போது முழுத் தொகுப்பும் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பாப்லோ நெருதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கவிதைகளின் தொகுப்பொன்றையும் வெளிக்கொணர உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் பாப்லோ நெருதா பற்றி நடந்திருக்கும் அழுத்தமான விரிவான பங்களிப்புகள் துப்பரவாக சுகுமாரனின் குறிப்பகளில் இடம் பெறாது போனது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் தோழர் நல்லகண்ணு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கே.பி.ஜி.நம்பூதிரி, சச்சிதானந்தன் என்றெல்லாம் தேடித்தேடி விரிவாகக் குறிப்புக்களைப் பதிவு செய்திருக்கும் சுகுமாரனுக்கு, தமிழில் நடந்திருக்கும் குறிப்பிட்ட பிறிரின் அழுத்தமான பங்களிப்புகள் தெரியாமல் போனது நிச்சயமாகவே ஆச்சர்யத்துக்கு உரியதுதான்.;.

குறிப்பிட்ட உலகக் கவியொருவர் குறித்து தமிழில் நடந்திருக்கும் இத்தனை பங்களிப்புகளையும் ஒதுக்கிவிட்டு, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தொனியிலேயே சுகுமாரனின் கட்டுரை அமைந்திருப்பது, நியாயமாகவே எனக்குள் ஆதங்கத்தை எழுப்புகிறது.

நான் இந்தக் குறிப்புக்களைக் கூட பதிந்திருப்பதன் காரணம், சுகுமாரனால் மறக்கப்பட்டிருக்கும் இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி இதழான தாமரை, மாரக்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி இதழான செம்மலர் போன்றனவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சார தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டு மரணமுறற எனது அன்புத் தோழன் அறந்தை நாராயணன் போன்றவர்களும்; பாப்லோ நெருதாவுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு மறக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.

கோயமுத்தூர் ராமநாதபுரத்தில் சுகுமாரன் குடியிருந்த நாட்களும்;, அவரோடு பகிர்ந்து கொண்ட சில காத்திரமான பொழுதுகளும் இன்னும் புசுமையாக எனது ஞாபகத்தினுள்; இருப்பதால்தான் நட்புடன் இந்தக் குறிப்புக்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

அன்புடன்

யமுனா ராஜேந்திரன்

yamunarn@hotmail.com

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்