சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் – 5

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

கரு.திருவரசு


பெயர்சொல் – பெயர்ச்சொல்

பெயர்சொல் என்பதும் பெயர்ச்சொல் என்பதும் ஒருபொருள் சொற்களா ?

இல்லை. ‘பெயர்சொல் ‘ என்பதன் இடையே ‘ச் ‘ எனும் ஒற்று மிகுந்தால் ஒரு பொருளும் ஒற்று மிகாமல் இயல்பாக இருந்தால் ஒரு பொருளும் தரும்.

சொற்புணர்ச்சிப் பொருள் மாறுபாட்டு விளக்கம் காண்பதற்கு முன் பெயர், சொல் எனும் இரு சொற்களின் பொருள்களைக் கண்டு தொடர்வோம்.

‘பெயர் ‘ என்பது ஒரு பொருளின் அல்லது ஒரு மனிதரின் பெயரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் அடையாளச் சொல். காட்டாக: வீடு, குழந்தை என்பனபோல.

‘சொல் ‘ எனும் சொல் பெயர்ச்சொல்லாக வரும்போது, பேச்சு, வாக்கு என்பன போன்ற பொருள்களைத் தரும். அதுவே வினைச் சொல்லாக வரும்போது தெரிவி, அறிவி, குறிப்பிடு. பொதுவாக ‘வாயால் வெளிப்படுத்து ‘ என்று பொருள்படும்.

உங்களை ஒருவர் உங்கள் பெயரைச் சொல்லி அழைத்தால் போதும் என நீங்கள் கருதும்போது, ‘நீங்கள் என்னைப் பெயர்ச்சொல்லிக் கூப்பிட்டால் போதும் ‘ என எழுதுவதோ, பேசுவதோ தவறு.

‘பெயர்சொல்லிக் கூப்பிட்டால் போதும் ‘ எனக் குறிப்பிடுவதே சரி.

தமிழில் சொற்களை இலக்கணம் நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் பெயர்ச்சொல். (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்) அதாவது, பொருளைக் குறிக்க வழங்கும் சொல்.

‘தமிழில் பெயர்சொல் என்பது நால்வகைச் சொற்களில் ஒன்று ‘ என எழுதுவது தவறு.

‘தமிழில் பெயர்ச்சொல் என்பது நால்வகைச் சொற்களில் ஒன்று ‘ என எழுதவேண்டும்.

பெயர்சொல் = பெயரைச் சொல்

பெயர்ச்சொல் = பொருள்குறிக்கும் அடையாளச்சொல்.

—-

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கரு.திருவரசு


ஏழைசொல் – ஏழைச்சொல்

ஏழை என்பதன் பொருள் என்ன ? போதிய பொருள் வசதி இஇல்லாதவர், வறியவர் என்பதோடு, ‘ஏழு (7) எனும் எண்ணை ‘ என்றும் பொருள்படும்.

சொல் என்பதன் பொருள் என்ன ? ஒரு பொருள் குறிக்கும் ஒலி. பேச்சு, வாக்கு என்றெல்லாம் பொருள்படும்.

‘ஏழைசொல் அம்பலம் ஏறாது ‘ என்பது பழமொழி. வறுமையான, பொருள் வசதி இல்லாத ஓர் ஏழையின் சொல், அதாவது ஏழையின் பேச்சு கூட்டத்தில் எடுபடாது, ஏறாது.

இஇங்கே நாம் சொற்புணர்ச்சி விளக்கத்திற்காகச் ‘சொல் ‘ என்பதற்குப் பேச்சு என்னும் பொருளைமட்டும் கொள்வோம்..

ஏழைச்சொல் என்றால், ஏழாம் எண்ணைச் சொல் என்பது பொருள். எண் வரிசையில் ஆறுக்கு அடுத்து வரும் எண்ணான (7) ஏழைச் சொல் என்பது பொருள்.

ஏழையின் சொல் என்று சொல்வதானால், எழுதுவதானால் அதை ‘ஏழைச்சொல் ‘ என எழுதுவது தவறு. ஏழைசொல் எனச் சொல்லவேண்டும், எழுதவேண்டும்.

ஆறுக்கு அடுத்து வரும் ஏழு (7) எனும் எண்ணைச் சொல்வதானால், எழுதுவதானால் அதை ஏழைசொல் என எழுதுவது தவறு. ஏழைச்சொல் எனச் சொல்லவேண்டும், எழுதவேண்டும்.

ஏழைசொல் = ஏழையின் பேச்சு

ஏழைச்சொல் = ஏழாம் எண்ணைச் சொல்

—-

thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

கரு திருவரசு


மருந்துகடை – மருந்துக்கடை

‘விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்குத்தான் ‘ என்பது பழமொழி.

பெரும்பாலான மருத்துவர்கள் மூன்று நாளுக்குத்தான் மருந்து தருவர். மருந்து என்பது நோயைக் குணப்படுத்தும் பொருள். அந்த மருந்தைத்தான் சொல்கிறேன்.

கடை என்பதற்குப் பல பொருள்கள் இஇருந்தாலும் பொருள்களை விற்பனைசெய்யும், மருந்துகளை விற்பனைசெய்யும் கடையைத்தான் நாம் இஇங்கே பார்க்கிறோம்.

மருந்துகள் விற்கும் கடையை மருந்துக்கடை என்றுதான் சொல்லவேண்டும், எழுதவேண்டும். ஒரு மருந்துக்கடையின் பெயர்ப் பலகையில் ‘மருந்துகடை ‘ என்று எழுதப்பட்டிருந்ததை நான் தமிழ்நாட்டில் பார்த்தேன்.

மருந்துகடை என்றால் மருந்தைக் கடை என்று பொருள்.

மருந்துக்கடையில் ஒரு மாத்திரையைச் சின்ன உரலில் போட்டு இடித்துக் கீரையைக் கடைவதைப்போலக் கடைந்து பொடியாக்கித் தாளில் மடித்துத் தருவதுண்டு.

அப்படிச் செய்யும் செயல்தான் மருந்துகடை.

மருந்துகடை = மருந்தைக் கடை

மருந்துக்கடை = மருந்து விற்கும் கடை

—-

thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

கரு திருவரசு


உலகப் பெருமொழிகள் அனைத்துக்கும் தனித்தனி இஇயல்புகள், மரபுகள் இஇருக்கின்றன.

இஇயல்பு, மரபு என்பனவற்றின் தொகுதியைத்தான் இஇலக்கணம் என்று சொல்கிறோம்.

இஇப்போது, ‘தமிழில் உள்ள சொற்புணர்ச்சி விதி தேவையில்லை ‘ என்பதுபோல ஒரு நிலைப்பாடு காணப் படுகிறது. அது தவறு.

சொற்களின் புணர்ச்சி சரியாக அமைய வில்லையானால் சொற்றொடரின் பொருளே மாறிவிடும்.

கைகுட்டை – கைக்குட்டை (1)

கைகுட்டை, கைக்குட்டை என்ற சொற்களிலுள்ள ‘கை ‘ என்பதற்குச் சில வேறு பொருள்கள் இஇருந்தாலும் இஇங்கே நாம் மனிதக் கையைப்பற்றிச் சொல்கிறோம் என்பது தெளிவு.

‘உடுக்கை இஇழந்தவன் கைபோல ‘ என்பார் திருவள்ளுவர்.

‘இஇதை உங்கள் காலாக நினைத்து வணங்குகிறேன் ‘ என்று கையைப்பிடித்து நடிப்பார் ஒருவர்.

‘வெறுங்கையால் முழம் போடுவது ‘ தெரியுமா ?

‘குட்டை ‘ என்பதற்கு வேறு பொருள்கள் இஇருந்தாலும் இஇங்கே நாம் குறுகியது, சிறியது என்னும் பொருள்களில் மட்டுமே பார்க்கிறோம்.

கைகுட்டை என்றால் அந்த மனிதருடைய கை பொதுவான அமைப்பைவிட நீளக் குறைவானது என்று பொருள்.

கைக்குட்டை என்றால் சதுர வடிவத்திலான சிறு துணி.

கைக்குட்டையால்தான் நாம் முகம் துடைக்கவேண்டும்.

உங்கள் கைகுட்டை கீழே விழுந்துவிட்டது என்று சொல்லக்கூடாது, எழுதக்கூடாது. குட்டையான கையோ, நீளமான கையோ, அது எப்படிக் கீழே விழும் ?

கைகுட்டை = நீளம் குறைந்த கை

கைக்குட்டை = சதுர வடிவச் சிறுதுணி

—-

thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு