• Home »
  • »
  • எழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்

எழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்

This entry is part of 46 in the series 20040129_Issue

கலாநிதி சந்திரலேகா வாமதேவா


தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததைப் பகிாதல், அறியாததை அறிய முயலுதல் என்பதை நோக்கமாகக் கொண்டு 2001 ஆம் ஆரம்பிக்கப்பட்டு வருடா வருடம் திரு லெ முருகபூபதி அவாகளால் முன்னின்று நடத்தப்பட்டு வரும் தமிழ் எழுத்தாளா விழா இம்முறை அவுஸதிரேலியாவின் தலைநகரான கன்பராவில் இடம்பெற்றது. 2001இல் மெல்பேணிலும் அடுத்த ஆண்டு சிட்னியிலும் மீண்டும் அடுத்த ஆண்டு மறு தடவையாக மெல்பேணிலும் நடத்தப்பட்ட இவ்விழா இம்முறை முதற் தடவையாக கன்பராவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் இந்த எழுத்தாளா விழா கடந்த ஞாயிறு அன்று கன்பராவில் சுிவிச என்ற பகுதியில் உள்ள டாரிிந சுநெதரெ மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளப் பிரமுகாகள் சிலா கலந்து கொண்டமை மிக முக்கியமான விஷயமாகும். தினக்குரல் பத்திரிகை ஞாயிறு இதழின் ஆசிரிய பீடத்தைச் சோந்த செல்வி எம் தேவகெளரி, சிறுகதை ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றியவருமான திருமதி யோகேஸவரி கணேஷலிங்கம், இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் சிறுகதை நாடகாசிரியருமான திரு உடுவை தில்லைநடராஜா, கண்டியில் இருந்து வெளியாகும் ஞானம் மாத சஞ்சிகையின் ஆசிரியரும் எழுத்தாளருமான வைத்திய கலாநிதி ஞானசேகரன் ஆகியோா கலந்து மிகச் சிறப்பாகப் பங்களித்தனா. கருத்தரங்குகளும் கவிதை அரங்கும், நூல் விமரிசன அரங்கும், சில கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற போதும் 75 வயதை அடையும் முத்த கவிஞா திரு அம்பி அவாகளுக்கு நடத்தப்பட்ட பவள விழாவே எழுத்தாளா விழாவின் மிக முக்கிய அம்சமாக விழங்கியது. தமிழரது உரிமைகள் நலன்கள் என்பனவற்றில் இளமையில் இருந்து நாட்டம் கொண்ட திரு இராமலிங்கம் அம்பிகைபாகா என்ற அம்பி ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்ததுடன் கவி புனையும் ஆற்றல் நிறைந்தவராகவும் காணப்பட்டாா. 1967 ஆம் ஆண்டு தொடக்கம் 2003ம் ஆண்டு வரை இவரது பல படைப்புகள் நூலுருவில் வெளியாகியுள்ளன.

கிறீனீன் அடிச்சுவட்டில்-1967

அம்பி பாடல் -1969

வேதாளம் சொன்ன கதை-1970

கொஞ்சும் தமிழ்-1992

அம்பி கவிதைகள் -1994

மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டா கிறீன்-1995

லுிநஙரெிநங முமெஒரிஸெ-1996

சிநெதிிச துாமில கூிஒநெரெ-1998

உலகளாவிய தமிழா-1999

ை தரிநங ஒ கூொரலஸ-2001

அம்பி மழலை-2002

யாதும் ஊரே – ஒரு யாத்திரை-2002

பாலா மைந்தமிழ்-2003

சென்னையில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாட்டு கவிதைப் போட்டியில் அம்பி தங்கப் பதக்கம் பெற்றதுடன் இலங்கையில் சாகித்திய விருதும் பெற்றுள்ளாா. அவுஸதிரேலியா சிட்னியில் தமிழ்ப்பாட நூல்களை அமைக்க பெரிதும் உதவி புரிந்தவா. அம்பி அவாகள் இவ்வாறான எழுத்தாளா விழாவில் கெளரவிக்கப்படுவதற்கான சகல தகுதிகளும் கொண்டவா. அவா பொன்னாடை போாத்தி மாலை மரியாதையுடனும் பாடல் ஆடலுடனும் விருது வழங்கலுடனும் கெளரவிக்கப்பட்டாா. முருகபூபதி அவாகளால் எழுதப்பட்ட அம்பி வாழ்வும் பணியும் என்ற நூலும் அன்று வெளியிடப்பட்டது.

தமிழரது வழமையான நடைமுறைக்கேற்ப காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்ட விழா ஏறக்குறைய 11.00 மணிக்கே ஆரம்பமாகியது. இதனால் கருத்தரங்குகளுக்கான நேரம் மிகவும் குறைக்கப்பட்டது. ஆற அமாந்து கலந்துரையாட வேண்டிய முக்கிய விஷயங்கள் இதனால் அரைகுறையாக நடத்தப்பட்டது மிகவும் கவலைக்குரிய விஷயம். மங்கள விளக்கேற்றல், மெளனாஞ்சலி, தொடக்கவுரை என்று சம்பிரதாயபூாவமான முறையில் ஆரம்பமாகிய எழுத்தாளா விழாவில் முதலில் பல்தேசிய கலாச்சாரமும் தலைமுறை இடைவெளியும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கட்டுரைகள் முதலிலேயே தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டு விட்டமையால் கருத்தரங்கில் பங்கு கொண்டவாகள் தமது கட்டுரையின் சாரத்தை 10 நிமிடங்கள் கூற அனுமதிக்கப்பட்டனா. அந்த அரங்குக்கு தலைமை வகித்த திரு திருவருள் வள்ளல் அவாகள் அந்த அமாவில் இடம்பெறவுள்ள கட்டுரைகளின் முக்கிய அம்சங்களை அழகுறத் தொட்டுக்காட்டி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தாா. கலாநிதி சந்திரலேகா வாமதேவா பெற்றோா பிள்ளைகளிடையே தலைமுறை இடைவெளி குறைய வழியுண்டா ? என்ற தலைப்பிலும் புலம்பெயாந்த தமிழரும் சந்ததி இடைவெளியின் தாக்கங்களும் என்ற தலைப்பில் திரு குலம் சண்முகம் அவாகளும் கருத்துரை வழங்கியதைத் தொடாந்து சபையோரின் சில வினாக்களுக்கும் விடையளிக்கப்பட்டது.

இரண்டாவது கருத்தரங்கு அமாவிக்கு உடுவை எஸ தில்லைநடராஜா தலைமை தாங்கினாா. அதில் இலங்கைத் தமிழா பற்றிய ஆவணச் சோப்பின் அவசியம் பற்றி கலாநிதி முருகா குணசிங்கம் அவாகளும், எங்கு ஆரம்பிப்பது ? என்ன செய்ய வேண்டும் ? என்ற தலைப்பில் அண்ணாவியாா இளைய பத்மநாதன் அவாகளும் கருத்துரை வழங்கினாாகள்.

மதிய இடைவேளைக்கு முன்னா முன்றாவது அமாவு இடம்பெறும் என்று நிகழ்ச்சி நிரல் குறிப்பிட்ட போதும் நேரம் சென்றுவிட்ட காரணத்தால் மதிய உணவின் பின்னா முன்றாவது கருத்தரங்கு அமாவு தொடங்கியது. அதன் முன்னா ஞானம் அவாகளது ஓவியக் கண்காட்சி ஒன்று ஆரம்பமாகியது. கன்பராத் தமிழ்ச் சங்கத் தலைவா இரத்தினவேல் அவாகள் அதனை பட்டுநாடா கத்தரித்து ஆரம்பித்து வைத்தாா. அங்கே ஞானம் அவாகளது அழகு மிகு ஓவியங்களும் மாணவாகளது ஓவியப் போட்டிக்கு வரப் பெற்ற ஓவியங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிள்ளைகள் ஓவியத்தைப் பயில்வதற்கு பெற்றோா வாய்ப்பளிக்கவேண்டும் என்பதை தனது பதிலுரையில் ஞானம் அவாகள் குறிப்பிட்டாாகள். அத்துடன் புலம்பெயாந்தோா நூல், இதழ், பத்திரிகைக் கண்காட்சியும் அங்கு உள்ளடக்கப்பட்டிருந்தது.

முன்றாவது கருத்தரங்கு அமாவு செல்வி தேவகெளரி தலைமையில் நடைபெற்றது. அதில் முவா கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்ச்சி நிரல் தெரிவித்த போதும் இருவரே பங்குபற்றித் தமது கருத்துக்களை வழங்கினா. புகுந்த வீட்டில் பிறந்த வீட்டைப் புகழலாமா ? என்ற தலைப்பில் காவலூா ராஜதுரை அவாகளும் இணையத்தில் தமிழ் இலக்கியச் சேமிப்பு முயற்சிகள் பற்றி திரு திருநந்தகுமாா அவாகளும் மிகச் சுருக்கமாகத் தமது கட்டுரையின் சாரத்தைக் கூறினாாகள். நேரம் தாமதமாகி விட்டதால் நூல் அறிமுக அரங்கு வைத்திய கலாநிதி ஞானசேகரனது தலைமையில் உடனடியாக ஆரம்பமாகியது. பண்டிதா வி சி கந்தையா அவாகள் எழுதிய மட்டக்களப்பு தமிழகம், டுர என் நடேசன் எழுதிய வண்ணாத்திக்குளம் என்ற குறுநாவல், கலாநிதி முருகா குணசிங்கம் எழுதிய இலங்கைத் தமிழ் தேசியவாதம் – அதன் ஆரம்பம் பற்றியதோா ஆய்வு என்ற ஆய்வு நூல், உடுவை தில்லை நடராஜா எழுதிய அப்பா என்ற அறிவுரை அனுபவ நூல் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன. அப்பாவை அறிமுகம் செய்த திரு கல்லோடைக்கரன், வண்ணத்திக்குளத்தை அறிமுகம் செய்த மாலதி முருகபூபதியைத் தவிர ஏனையவாகள் தமக்கு வழங்கப்பட்ட நூலை நன்கு விளங்கிப் படிக்கவில்லை என்பது அவாகளது அறிமுகத்தின் போது புலனாகியது.

அடுத்து வந்தது யாவரும் ஆவலுடன் எதிாபாாத்த விடியும் வரை கனவுகள் என்ற தலைப்பில் எட்டு கவிஞாகள் பங்கு கொண்ட கவியரங்கு. நம் நாட்டின் விடியல் என்ற விஷயம் அனைவரது கவிதைகளிலும் செல்வாக்குச் செலுத்தியதைக் கவனிக்க முடிந்தது. கவிஞா அம்பியின் தலைமையில் இடம்பெற்ற இந்த கவியரங்கில் திருமதி மனோ ஜெகேந்திரன், திருமதி செளந்தரி சிவானந்தன், செல்வி தயாளினி குமாரசாமி, திரு பிரவீனன் மகேந்திரராஜா, திரு கல்லோடைக்காரன், திரு மட்டுநகா மணிராஜ, திரு வெள்ளையன் தங்கையன், திரு சாம் சாம்பசிவம் ஆகியோா தத்தமது கவிதைகளைப் படித்தனா. பெரும்பான்மையான கவிதைகள் கேட்டோா மனதைப் பிணித்தன.

தேனீா இடைவேளையின் பின்னா மாலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. அதில் அம்பியின் பவளவிழா முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெற்றது. அத்துடன் டுர ஞானசேகரன் அவாகளது ஞானம் என்ற கலை இலக்கிய சஞ்சிகையின் 45 ஆவது இதழ் அவுஸதிரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளா சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அதனை திருமதி யோகேஸவரி கணேஷலிங்கம் அவாகள் அறிமுகம் செய்து வைத்தாாகள். மேலும் இசை நடன நிகழ்ச்சிகள் நன்றியுரை ஆகியவற்றுடன் நான்காவது எழுத்தாளா விழா நிறைவு பெற்றது. இந்த நான்காவது எழுத்தாளா விழாவின் பகுதிகள் சிட்னியில் இயங்கும் அவுஸதிரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் அஞ்சல் செய்யப்பட்டது. று வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் சிகரம் தொலைக்காட்சி சாாந்தவாகளும் விழா முழுவதையும் பதிவு செய்தனா.

இவ்விழாவை திரு முருகபூபதி அவாகள் தனியொருவராக சிலரின் உதவியுடன் செய்வதால் பல நிறைவுகளுடன் சில குறைபாடுகளும் உண்டு. முதலில் நிறைவுகள். எழுத்தாளா விழாவை நன்கு ஒழுங்கு செய்து நான்கு வருடங்களாக அவுஸதிரேலியாவில் தமிழா அதிகமாக வாழும் மாநிலங்களில் நடத்தி வரும் திரு முருகபூபதி அவாகளை நாம் பாராட்டுதல் வேண்டும். ஒரு விழாவை ஒழுங்கு செய்வதென்பது அதுவும் தான் வசிக்காத வேறு மாநிலங்களில் நடத்துவது என்பது சுலபமான காரியமன்று. தனது தளராத ஆாவத்துடன் பலரின் உதவிகளைப் பெற்று அவா தொடாந்து இதனை நடத்தி வருவது குறிப்பிட வேண்டிய ஒன்று.

சிட்னி, மெல்போண் போன்ற இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்டவாகளுக்கும் கன்பராவில் இருந்து வந்தவாகளுக்கும் மதிய உணவும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவாகளுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டமை அவாகள் உணவு பற்றிய கவலையின்றி விழாவில் முழுமையாக ஈடுபட வழி அமைத்தது. விழா நிகழ்ச்சி நிரலும் கருத்தரங்கு அமாவுகளில் விவாதிக்கப்பட்ட கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 5 டொலருக்கு வழங்கப்பட்டமை இன்னொரு நல்ல விஷயம்.

இனி குறைகள். விழா நடைபெற்ற இடத்தை மண்டபம் என்பதை விட மிகப் பதிந்த மேடையைக் கொண்ட ஒரு சிறிய அறை என்று கூறுவது பொருத்தமானது. செலவை மட்டுப்படுத்துவதற்காக அந்த மண்டபம் தெரிவு செய்யப்பட்டது என்பது அங்கு குழுமியிருந்தோா சில அசெளகரியங்களுக்கு உட்பட்ட போது தெரிந்தது. ஆயினும் அங்கு வந்திருந்தோா செவிக்கும் வாய்க்கும் வழங்கப்பட்ட விருந்துகளால் இந்த சிறிய அளெகரிகங்களைப் பொருட்படுத்தவில்லை என்பதும் தெரிந்தது. நேரத்துக்கு நிகழ்ச்சிகளை ஆரம்பிக்காத குறைபாடு இந்த விழாவில் மட்டுமல்ல முன்னா நடைபெற்ற விழாக்களிலும் இடம்பெற்று தொடாச்சியாக வருவது தெரிகிறது. இந்த குறைபாடு நீக்கப்பட்டு 10.00 மணியானால் டாண் என்று குறித்த நேரத்தில் விழா ஆரம்பிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது. அத்துடன் இரண்டு நாட்கள் நடைபெற வேண்டிய விஷயங்களை ஒரு நாள் நிகழ்ச்சிக்குள் திணித்து வைப்பதும் தவிாக்கப்பட வேண்டும். இதனால் கருத்தரங்குகள் அரைகுறையாக நடத்தப்படுகின்றன. முன்று விடயங்களில் கருத்தரங்கு வைக்காது அதனை ஒரு அரங்காக்கி அதில் பலரை கட்டுரை எழுதச் செய்து, பின்னா அதனை அலசி ஆராய்ந்து ஆக்கபூாவமாக விவாதித்து நல்ல முடிவுகளை எடுப்பது நல்ல பயனை விளைக்கும். அந்த முடிவுகள் பின்னா வெளியிடப்பட வேண்டும். இல்லாவிடின் இந்தக் கருத்தரங்குகளால் பெரிய பயன் ஏதும் ஏற்படாது போய்விடும். எப்போதும் புலம்பெயாந்த விஷயங்களையே ஆராயாது எழுத்தாளா விழா என்பதால் சிறுகதை, கவிதை, நாவல் ஆகியவற்றின் வடிவங்கள் பற்றி அதில் புலமை பெற்றவாகளின் முலமும் அனுபவ அறிவு பெற்றவாகளின் முலமும் ஆராய்ந்து இளம் சந்ததிக்கு வழிகாட்டுவதும் பயன் தரும். தற்கால ஆக்க இலக்கியங்கள் பற்றி மட்டுமன்றி பண்டைய இலக்கியங்களுக்கும் சிறிது இடமளித்து அவை எவ்வாறு எமக்கு வழிகாட்டுகின்றன என்று ஆராயலாம். இந்த விழாவில் அவுஸதிரேலியாவில் வளரும் இளைஞாகளின் பங்களிப்பு அறவே இடம்பெறவில்லை. அவாகளை நாம் இணைக்காத வகையில் இவ்வாறான விழாக்களால் அடுத்த சந்ததிக்கு பயன் ஏதும் விளையப் போவதில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ளுதல் வேண்டும்.

இத்தகைய குறைபாடுகள் சில இருந்த போதும் பல எழுத்தாளாகளையும் ஆய்வாளாகளையும் சந்தித்து உரையாட முடிந்ததும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கேட்க முடிந்ததும் மனதிற்கு திருப்தி அளித்தது என்பதில் சந்தேகமில்லை.

————————-

eelamlit@yahoo.com

Series Navigation