தமிழாக்கம் 1

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

மணி வேலுப்பிள்ளை


1

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை (12).

மழை நாம் பருகும் நீராகவும், எமது உணவுப் பயிர்களுக்கு உணவாகவும் விளங்குகிறது. அதாவது மழை தானும் எமக்கு உணவாகி, எமது உணவுக்கும் உணவாகி நிற்கின்றது.

மழையைப் போன்றதே மொழியும். மக்களின் தலையாய ஊடகம் மொழியே. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் முதலிய ஏனைய ஊடகங்கள் மொழியையே தமது ஊடகமாகப் பயன்படுத்துகின்றன. அதாவது மொழி தானும் எமக்கு ஊடகமாகி, பிற ஊடகங்களுக்கும் ஊடகமாகி நிற்கின்றது.

ஒரு கட்டடத்தை அமைப்பதற்குச் செங்கற்கள் இன்றியமையாதவை. அமைக்கப்படும் கட்டடத்தின் கட்டுறுதி, பாவிக்கப்படும் செங்கற்களின் தன்மையிலேயே தங்கியுள்ளது. கல்லும் மணலும் நீரும் சாந்தும் சரிவரச் சேர்ந்த கலவையினால் ஆன செங்கற்களே கட்டுமானத்துக்கு உகந்தவை. அத்தகைய செங்கற்களினால் அமைக்கப்படும் கட்டடமே கட்டுறுதி வாய்ந்ததாய் விளங்கும்.

கட்டடங்கள் கல்லினால் அமைவது போலவே, ஆக்கங்கள் சொல்லினால் அமைவன. கல்லுறுதியைப் போன்றதே சொல்லுறுதி. கல்லாக்கத்தைப் போன்றதே சொல்லாக்கம். கல்லடுக்கைப் போன்றதே சொல்லடுக்கு. கல்லின் உறுதி கட்டடத்தில் தெரியும். சொல்லின் உறுதி ஆக்கத்தில் தெரியும். நூலைப் போலவே சேலை!

எடியேன் டொலே (Etienne Dolet 1509-1546) ஒரு பிரெஞ்சுக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், அச்சிடுநர், வெளியீட்டாளர். 1540ல் அவர் சிறந்த மொழிபெயர்ப்பு குறித்து எழுதிய நூலில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு 5 புத்திமதிகளைத் தெரிவித்துள்ளார். அவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்ட மேற்படி புத்திமதிகள் பின்வருமாறு:

1. மூலகர்த்தா எடுத்துரைக்கும் பொருளையும், அதன் விளக்கத்தையும் மொழிபெயர்ப்பாளர் செவ்வனே புரிந்துகொள்ள வேண்டும். அவற்றைப் புரிந்துகொள்பவரின் மொழிபெயர்ப்பு என்றுமே மங்கலாகாது. விளங்கிய பொருளையே எளிதாகவும் முழுதாகவும் பெயர்க்க முடியும்.

2. மொழிபெயர்ப்பவருக்கு இரு மொழிகளிலும் புலமை வேண்டும். அத்தகைய மொழிபெயர்ப்பாளர் மொழியின் மாண்பினைக் குலைக்கவோ குறைக்கவோ போவதில்லை. ஒவ்வொரு மொழிக்கும் சொந்தச் சிறப்புகள் – நடை, பாணி, நயம் – உண்டு. அத்தகைய சிறப்புகள் குன்றாது மொழிபெயர்க்க வேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்காதோர் இரு மொழிகளுக்கும் ஊறு விளைவித்தோர் ஆவர். அவர்கள் இரு மொழிகளின் சிறப்புகளையும் வெளிக் கொணராதோர் ஆவர்.

3. மொழிபெயர்ப்பாளர் சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்க்கும் முறைக்குக் கட்டுண்டிருத்தலாகாது. புலமை குறைந்தவர்களே அல்லது போதாதவர்களே அவ்வாறு மொழிபெயர்ப்பர். ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் சொல்லொழுங்கினை விடுத்து, வசன ஒழுங்கிலேயே கருத்தூன்றுவார். மூலகர்த்தாவின் எண்ணத்தை எடுத்துரைக்கும் தறுவாயில், இரு மொழிகளின் சிறப்புகளையும் வெளிக்கொணரும் அற்புதத்தை நிகழ்த்துபவரே சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஆதலால் மூல வசனத்தின் தொடக்கத்தில்தான் உங்கள் மொழிபெயர்ப்பும் தொடங்கவேண்டும் என்று கொள்வது தவறு. மூலகர்த்தாவின் எண்ணத்தை எடுத்துரைக்கும் நோக்குடன் நீங்கள் சொல்தொடரியலைக் குலைக்க நேர்ந்தாலும் கூட, உங்களை எவரும் குறைகூறப் போவதில்லை. கட்டின்றி மொழிபெயர்ப்பதை விடுத்து, கட்டுண்டு மொழிபெயர்ப்போரின் மடைமையை என்னால் சகிக்க முடியவில்லை. வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்க்க முற்படும் மூடர்கள் இழைக்கும் தவறினால் மூலகர்த்தாவின் எண்ணம் ஈடேறப் போவதில்லை. எம்மொழியின் செழுமையும் முழுமையும் புலனாகப் போவதில்லை. மாறாக, மொழிபெயர்த்தவரின் அறியாமையே புலனாகும். ஆகவே கட்டுண்டு மொழிபெயர்க்கும் கேட்டினைத் தவிர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

4. மொழிபெயர்ப்பாளர் பொது வழக்கிலுள்ள சொற்களையே எடுத்தாள வேண்டும். சில மொழிபெயர்ப்பாளர்கள் அருவருக்கத்தக்க முறையில், முட்டாள்தனமான முறையில் புதிய சொற்களைப் புகுத்துவதுண்டு. அத்தகைய மொழிபெயர்ப்பாளர்களின் தான்தோன்றித்தனத்தை நீங்கள் பொருட்படுத்தலாகாது. அவர்களுக்குக் கற்றோரிடை மதிப்புக் கிடையாது. ஆதலால் நீங்கள் அவர்களைப் பின்பற்றலாகாது. அதேவேளை, பொது வழக்கில் இல்லாத சொற்களை நீங்கள் அறவே கையாளலாகாது என்று நான் கூறவில்லை. வழக்கிலுள்ள சொற்கள் கைகொடாவிடத்துப் புதிய சொற்களைப் புகுத்தியே ஆகவேண்டும்.

5. மொழிபெயர்ப்பு அணி இலக்கணத்துக்கு அமைய வேண்டும். மொழி அமைதி கெடா வண்ணம், உள்ளம் உவக்கும் வண்ணம், காதில் இனிக்கும் வண்ணம் சொற்களைத் தொகுக்க வேண்டும். அத்தகைய மொழிபெயர்ப்பே கருத்தும் கனதியும் வாய்ந்ததாய் விளங்கும் (TRANSLATION/HISTORY/CULTURE Editor: Andre Lefevere, Publisher: Routledge, 1992, p.27-28).

2

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னர் மூதறிஞர் ராஜாஜி இப்படி அறிவுறுத்தியிருக்கிறார் (அவர் தமிழ் மொழிகள் என்று சொல்லும் பொழுது தமிழ்ச் சொற்களையே கருதுகிறார்):

ஸபல வேறு விஷயங்களை அறிந்தும் ஆராய்ந்தும் வரும் தமிழர், தாங்கள் சாதாரணமாகப் பேசும்போது முழுதும் தமிழ்மொழிகளாவே பேசினால் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படும். விஷயங்களைப் பேசும்போது தமிழ் மொழி தெரியாத இடத்திலும், மறந்துபோன இடத்திலும், புதுத் துறைகளில் ஆராய்ச்சி செய்யும்போதும், வாதப் பிரதிவாதம் செய்யும் போதும் அறிவையும் நினைவையும் செலவழித்துத் தமிழ் மொழிகளைத் தேடி உபயோகிப்பதற்குப் பதில், எளிதில் கிடைக்கக்கூடிய ஆங்கில மொழிகளை, அதாவது பிறதேசத்தார் கஷ்டப்பட்டுத் தங்களுக்கென்று உண்டாக்கியிருக்கும் மொழிகளை, எவ்விதக் கூச்சமுமின்றி இடைஇடையே கலந்து பேச்சை நடத்திவிட்டுத் தமிழுக்குச் சோறு போடாமல் கொல்லுகிறோம். சோம்பேறிகளைப் பெற்ற தாயைப் போல், தமிழ் அவதிப்பட்டு வருகிறது. அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும் ? நுட்பமான பொருட்பேதங்களும் அவைகளுக்குத் தகுந்த மொழிகளும் நடையும் ஒரு பாiயில் எவ்வாறு தோன்றும் ? தோன்றியவை எவ்வாறு உயிருடன் நிற்கும் ? பொருளைப் புகுத்திப் பேசிப் பழகி வந்தால்தானே பாi வளம் பெறும். கிடைத்த புல்லையும் தவிட்டையும் ஆங்கில மாட்டுக்கே போட்டு வந்தால் நம்முடைய பசு எவ்வாறு பால் கொடுக்கும் ? கொஞ்சம் தடை தோன்றிய இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தைப் போட்டு நிரவிப் பேச்சை ஓட்டிக் கொண்டு போனால், தமிழ் எங்கனம் வளரும் ? அறிஞர்களெல்லாம் தமிழைக் கொல்லுவதற்காகச் சதியாலோசனை செய்தால் கூட இதைவிட யுக்தி கண்டுபிடிக்க முடியாது… (கல்கி, தீபாவளி மலர் 2001, ப. 158).

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்

என்று அறிவுறுத்தினார் பாரதியார். அவர் அறிவுறுத்திய இன்னொரு விடயம்:

…தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற வியத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபர ஷேமங்களுக்கு இடமுண்டாகும். இல்லாதுபோனால் நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது. சுpல சமயங்களில் சில பத்திரிகைகளை வாசித்துவிட்டு, நான்:-ஐயோ, இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ உண்மைகளும் எத்தனையோ ஆச்சரியங்களும் எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே ? என்று எண்ணி வருத்தப்படுவதுண்டு (பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1997, ப.207).

பின்வரும் தொடர்கள் இயல்பான தமிழ் நடையில் அமைந்தவை:

எனக்குப் பிடித்த பாடல்

எனக்கு விருப்பமான பாடல்

இதற்கிடையில் நாங்கள் கொஞ்சம் ஆங்கிலம் படித்துவிடுகிறோம்:

Your favourite song

எங்கள் உள்ளத்துள் ஆங்கில நடை குடிகொள்கிறது. இயல்பான தமிழ் நடை அதற்கு இரையாகிறது. ஆங்கில நடைக்குக் கட்டுண்ட செயற்கையான தமிழ் நடை பிறக்கிறது:

உங்கள் விருப்பப் பாடல்

உங்கள் அபிமான பாடல்

லுழரச கயஎழரசவைந ளழபெஸஎன்று உள்ளத்துள் தலையெடுக்கும் ஆங்கில நடையே உங்கள் விருப்பப் பாடல்.. அல்லது உங்கள் அபிமான பாடல்.. என்ற செயற்கைத் தமிழின் தோற்றுவாய். ஆங்கில நடைக்குக் கட்டுண்ட செயற்கையான மொழிபெயர்ப்பே புதிய தமிழின் தோற்றுவாய் என்றால் மிகையாகாது! வேறு உதாரணங்கள்:

தமிழ் வழக்கு: நன்றி

ஆங்கில வழக்கு: Thanks

செயற்கைத் தமிழ்: நன்றிகள்

தமிழ் வழக்கு: ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள்

ஆங்கில வழக்கு: Opponents of the ruling party

செயற்கைத் தமிழ்: ஆளும் கட்சியின் எதிர்ப்பாளர்கள்

தமிழ் வழக்கு: ஒருவர் காயமடைந்தார்

ஆங்கில வழக்கு: A person was injured

செயற்கைத் தமிழ்: ஒரு நபர் காயமடைந்தார்

தமிழ் வழக்கு: அவளைப் புண்படுத்தாதே

ஆங்கில வழக்கு: Don ‘t hurt her feelings

செயற்கைத் தமிழ்: அவளுடைய உணர்ச்சிகளைக் காயப்படுத்தாதே

தமிழ் வழக்கு: பேணியிலடைத்த பழம்

ஆங்கில வழக்கு: Tinned (canned) fruit

செயற்கைத் தமிழ்: தகரத்திலடைத்த பழம்

ளுpழமநளஅயn என்ற சொல்லைப் பேச்சாளர் என்றும், ளுpழமநளறழஅயn என்ற சொல்லைப் பெண் பேச்சாளர் என்றும் கொள்வது வழக்கம். ளுpழமநளறழஅயn பேசும் பெண் ஆகாமல், பெண் பேச்சாளர் ஆகியமை மாபெரும் முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை!

பெண்குலத்தைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சொல்லாட்சியே ளிழமநளறழஅயn. அதனை நாம் பால்படு சமாளிப்பு எனலாம். ஆங்கிலத்தில் இடம்பெறும் பால்படு சமாளிப்பை ஈ அடித்த பிரதிக்காரரைப் போல (பெண் பேச்சாளர் என்ற உருவத்தில்) தமிழுக்குள் புகுத்துவது படு முட்டாள்தனம் ஆகும்.

1958ல் வெளிவந்த இலங்கை அரச சொல்தொகுதி ஒன்று, ஒரு தரப்பின் சார்பாக மொழிபவரை, மொழிவாளர் என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது மொழிபவர் ஆணாயினும் (spokesman)இ பெண்ணாயினும் (spokeswoman)மொழிவாளர் (spokesperson) பொருந்தும். மொழிவாளர் என்பது வெறும் சமாளிப்பு அல்ல. அது தமிழ் இலக்கணத்துக்கும் மரபுக்கும் அமைந்த சரியான, எளிதான, செவ்வையான, பொருத்தமான மொழிபெயர்ப்பு. அதனை விடுத்து பேச்சாளர் என்கிறோம். பேச்சாளர் என்றால் ஒரு கூட்டத்தில் உரையாற்றுபவர் (speaker)அல்லது நாவலர் (orator)என்று பொருள். மொழிவாளர் ஒரு பேச்சாளரோ நாவலரோ அல்லர்.

Affect, impact, impress, influence என்பன ஒத்த பொருளில் அமைவதுண்டு.

Affect என்ற சொல்லை வுhந ஊழnஉளைந ழுஒகழசன னுiஉவழையெசல இப்படி வரையறுத்துள்ளது:

produce an effect on

(of a disease etc.) attack (His liver is affected)

(ஏனைய பொருள்கள் இங்கே தேவைப்படா)

Produce an effect on என்ற தொடரை தாக்கம் உண்டுபண்ணு அல்லது விளைவு உண்டாக்கு என்று கொள்ளலாம். தாக்கம் சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் என்பதும் இங்கு பெறப்படுகிறது.

His liver is affected என்ற வசனத்தை அவருடைய ஈரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று மொழிபெயர்க்கலாம். இது பாதகமான தாக்கம் என்பதில் ஐயமில்லை.

அதாவது சாதகமான தாக்கம் பாதிப்பாகாது. பாதகமான தாக்கமே பாதிப்பாகும். எனினும் சாதகமான தாக்கத்தையும் பாதிப்பென்று கொள்ளும் போக்கு, அதாவது 2ஆவதை 1ஆவதற்கு ஏற்றும் போக்கு இன்று மேலோங்கியுள்ளது.

Alcohol affects health என்ற வசனத்தை குடிவகை உடல்நலத்தில் தாக்கத்தை உண்டுபண்ணும் அல்லது குடிவகை உடல்நலத்தைப் பாதிக்கும் என்று கொள்ளலாம். Music affects the mind என்ற வசனத்தை இசை உள்ளத்தில் தாக்கத்தை உண்டுபண்ணும் என்று கொள்வது பொருந்தும். ஆனால் இசை உள்ளத்தைப் பாதிக்கும் என்று கொள்வது பொருந்தாது. அதாவது பாதிப்பு என்று வரும் இடங்களில் எல்லாம் தாக்கம் பொருந்தக்கூடும். ஆனால் தாக்கம் என்று வரும் இடங்களில் எல்லாம் பாதிப்பு பொருந்தும் என்பதற்கில்லை.

ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக ஒரு தமிழ்ச் சொல்லை இடும் போக்கினால் தாக்கம் உண்டுபண்ணு என்ற தொடர் புறக்கணிக்கப்பட்டு, பாதி என்ற சொல் இங்கு வலிந்து திணிக்கப்படுகிறது போலும். தாக்கம் சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம். Affect-உம் அவ்வாறானதே. தாக்கம் சாதகமானதா பாதகமானதா என்பதைச் சந்தர்ப்பத்தின் (context) மூலம் அறியலாம். எனவே மேற்படி வசனங்கள் இரண்டையும் ஒரே மாதிரியாகவே மொழிபெயர்க்கலாம்:

Alcohol affects health

குடிவகை உடல்நலத்தில் தாக்கத்தை உண்டுபண்ணும்

(பாதகமான தாக்கம்).

Music affects the mind

இசை உள்ளத்தில் தாக்கத்தை உண்டுபண்ணும்

(சாதகமான தாக்கம்)

தமிழ் நடிகர்கள் அனைவரிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பாதிப்பு காணப்படுகிறது என்று குறிப்பிடுவோர் அனைவரும் நடிகர் திலகம் ஏற்படுத்திய தாக்கத்தையே கருதுகிறார்கள் என்பதில் ஐயமில்லை. கவிஞர் வைரமுத்து அவர்கள் தமது இரங்கலுரையில் தாக்கம், பாதிப்பு இரண்டையும் ஒரே பொருளில் மாறி மாறிப் பாவித்துள்ளார். பாதிப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வேறு உதாரணம் தேவையில்லை.

பாதிப்புக்குள்ளான இன்னொரு சொல் விமர்சனம். எதிர்க் கட்சிகள் ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளன. ஜனாதிபதி முஷாரவ்வை பிரதமர் வாஜ்பாயீ காரசாரமாக விமர்சித்துள்ளார். .அதாவது எதிர்க் கட்சிகள் ஆளும் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளன. ஜனாதிபதி முஷாரவ்வை பிரதமர் வாஜ்பாயீ காரசாரமாகக் கண்டித்துள்ளார்.

சாடுதல், கண்டித்தல் என்பவற்றின் இடத்தை விமர்சித்தல் விழுங்கும் விதத்தைப் பார்ப்போம்:

Criticize என்ற சொல்லை The Concise Oxford Dictionary இப்படி வரையறுத்துள்ளது:

Find fault with; censure (குறை காணு, கண்டி)

Discuss critically (விமர்சி, திறனாய்)

அதாவது criticism என்ற சொல் கண்டனம் என்றும் விமர்சனம் என்றும் பொருள்பட வல்லது. ஆனால் விமர்சனம் என்ற சொல் திறனாய்வு என்று பொருள்படுமே ஒழியக் கண்டனம் என்று பொருள்படாது. அதாவது விமர்சனம் என்று வரும் இடங்களில் எல்லாம் criticism பொருந்தக்கூடும். ஆனால் criticism என்று வரும் இடங்களில் எல்லாம் விமர்சனம் பொருந்தும் என்பதற்கில்லை. விமர்சனம் கண்டனமாகாது, கண்டனம் விமர்சனமாகாது. விமர்சனமும் கண்டனமும் ஒத்த சொற்கள் ஆகா.

இனி The Opposition criticized the ruling party severely என்ற வசனத்தை எடுத்துக்கொள்வோம். Oxford அகராதி முன்வைக்கும் மேற்படி 2 கருத்துகளுள் எது, அதாவது கண்டனமா, விமர்சனமா இங்கு உணர்த்தப்படுகிறது ? கண்டனம் (1) என்பதில் ஐயமில்லை. ஆகவே அதனை எதிர்க் கட்சிகள் ஆளும் கட்சியைக் கடுமையாகக் கண்டித்தன என்று கொள்வதே சரி. அதேவேளை Dr.K.Sivathamby criticizes works of literature என்பது கலாநிதி கா.சிவத்தம்பி இலக்கியப் படைப்புகளை விமர்சிப்பவர் என்று பொருள்படுமே அன்றி, அவற்றைக் கண்டிப்பவர் என்று பொருள்படாது. வேறு உதாரணங்கள்:

criticize violence வன்முறையைக் கண்டி

criticism of human rights abuses மனித உரிமை மீறல்கள் குறித்த கண்டனம்

critical of undemocratic policies குடியாட்சிநெறிக்கு மாறான கொள்கைகளைக் கண்டிக்கிற

critics of war போரைக் கண்டிப்பவர்கள்

criticize classics பேரிலக்கியங்களை விமர்சி

literary criticism இலக்கிய விமர்சனம்

critical study விமர்சன ஆய்வு

critics of modern poetry தற்காலக் கவிதை விமர்சகர்கள்

அண்மைக் காலம்வரை உடலும், உடலில் ஏற்படும் ஊறுமே காயம் என்று வழங்கி வந்தன. தற்பொழுது அதற்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. சொல்லையும் பொருளையும் கச்சிதமாகக் கையாளும் ஜெயகாந்தன் அவர்களே “எனது மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் உணர்ச்சிகளைக் காயப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சி தராது” என்று குறிப்பிட்டுள்ளார் (சபை நடுவே). அவருக்கு முன்னரும் பின்னரும் எண்ணிறந்தோர் உணர்ச்சிகளைக் காயப்படுத்துவது குறித்து எழுதி வைத்திருக்கிறார்கள்.

பழந்தமிழ் இலக்கியத்தில் புண்படுத்து என்ற சொல் பெரிதும் (உடலைக்) காயப்படுத்து என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. காயப்படுத்து, புண்படுத்து இரண்டும் ஒத்த சொற்கள் என்பதில் ஐயமில்லை. எனினும் ஒருவருடைய உடலுக்கு ஊறு விளைவிப்பதைக் காயப்படுத்துவது என்றும், அவரை மனம் நோகச் செய்வதைப் புண்படுத்துவது என்றும் கொள்வதே இற்றைவரை பெருவழக்கு, இன்றைய பொது வழக்கு.

காயப்படுத்து – உடலுக்கு ஊறு விளைவி

புண்படுத்து – மனம்நோகச் செய்

ஒருவரை இன்னொருவர் புண்படுத்திவிட்டார் என்றால் முன்னவரைப் பின்னவர் மனம்நோகச் செய்துவிட்டார், அடித்து உதைக்கவில்லை என்று துணிந்து கூறலாம். அண்மைக் காலம்வரை ஒருவரை இன்னொருவர் காயப்படுத்திவிட்டார் என்றால் முன்னவரின் உடலுக்குப் பின்னவர் ஊறு விளைவித்துவிட்டார் என்பதே கருத்து. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒருவரை இன்னொருவர் காயப்படுத்திவிட்டார் என்றால் முன்னவரைப் பின்னவர் அடித்து உதைத்தாரா, மனம்நோகச் செய்தாரா என்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. அறுதியிட்டுரைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியோர் அப்படிக் குறிப்பிடுவோரே. ஆதலால்தான் உள்ளத்தைக் காயப்படுத்து அல்லது உணர்ச்சிகளைக் காயப்படுத்து என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

இதுவும் ஒரு தவறான தமிழாக்கத்தின் விளைவே என்பதில் ஐயமில்லை. Hurt, wound, injure மூன்றும் உடலை அல்லது உள்ளத்தை ஊறுபடுத்து என்று பொருள்பட வல்லவை. ழுககநனெ உள்ளத்தை ஊறுபடுத்து என்று பொருள்பட வல்லது. தமிழைப் பொறுத்தவரை காயப்படுத்து என்று வரும் இடங்களில் எல்லாம் புண்படுத்து பொருந்தக்கூடும். ஆனால் புண்படுத்து என்று வரும் இடங்களில் எல்லாம் காயப்படுத்து பொருந்தாது. தேர்ந்து, தெளிந்து மொழிவோர் புண்படுத்து அல்லது மனம்நோகச் செய் என்று குறிப்பிடுவரே ஒழிய, உள்ளத்தைக் காயப்படுத்து அல்லது உணர்ச்சிகளைக் காயப்படுத்து என்று குறிப்பிடப் போவதில்லை.

பிற சொற்களைப் போலவே Identity என்ற சொல்லுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் உள்ளன:

அடையாளம் identification

தனித்துவம் individuality

ஒருமை sameness

இதனை எமக்கே உரிய சூத்திரத்தில் சொல்வதாயின்: அடையாளம் என்று வரும் இடங்களில் எல்லாம் Identity பொருந்தக்கூடும். ஆனால் Identity என்று வரும் இடங்களில் எல்லாம் அடையாளம் பொருந்தும் என்பதற்கில்லை. நாம் ஏற்கெனவே கண்டுகொண்டவாறு, Identity என்றால் அடையாளம் என்று பாடமாக்குவதும் பாவிப்பதும் அறவே பொருந்தாது. இனி The Concise Oxford Dictionary முன்வைக்கும் பாவனைகள் அனைத்தையும் பார்ப்போம்:

1. Identity card (அடையாள அடடை)

2. Identity element (அடையாளம் காட்டும் தனிமம்)

3. Identity parade (அடையாளம் காண் அணிவகுப்பு)

4. A case of mistaken identity(ஆளை மாறி அடையாளம் காட்டுதல்)

5. (He) felt he had lost his identity.

(தனது தனித்துவத்தை இழந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டது).

6. Identity crisis (தனித்துவம் காண் நெருக்கடி ஃ ஒருவர் சமூகத்துடன் பூணும்

உறவில் தனது தனித்துவத்தை நிலைநிறுத்த நேர்வதை உணரும் கட்டம்)

7. (There is) no identity of interests between them.

(அவர்கள் நாடிய நலன்கள் ஒருபடித்தானவை ஆகாஃஅவர்களுடைய நாட்டங்கள்

வேறுபட்டவை).

B-O-Y போய், போய் எண்ணா பையன்

G-I-R-L கேள், கேள் எண்ணா பொண்ணு

இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே!

M-A-D மாட், மாட் எண்ணா கிறுக்கு

H-E-A-D ஹெட், ஹெட் எண்ணா தலை

தலை கிறுக்குப் பிடிச்சு நீ ஏனோ திண்டாடுறே!

என்பது ஒரு திரைப்படப் பாடலின் தொடக்கம். நாங்கள் எவ்வாறு சொற்களை மட்டுக்கட்டி மனனம் செய்கிறோம் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வாறே P-L-A-N-T பிளான்ற், பிளான்ற் என்றால் செடி என்று பாடமாக்கிய ஒருவர் Cement Plant என்ற தொடரை சீமேந்துச் செடி என்று தமிழ்ப்படுத்திவிட்டார்!

ஒரு சொல்லுக்குப் பல பொருள்களும் ஒரு பொருளுக்குப் பல சொற்களும் வழங்குவதுண்டு. ஒரு சொல்லின் பொருள் அது பாவிக்கப்படும் சந்தர்ப்பத்ததை (context) பொறுத்து மாறுபடும். தாவரவியலுடன் சம்பந்தப்படும்பொழுது plant என்பது பயிர், செடி, கொடி, கன்று என்று பொருள்பட வல்லது. உற்பத்தியியலுடன் சம்பந்தப்படும்பொழுது அது பொறித்தொகுதி, தொழிற்சாலை என்று பொருள்பட வல்லது. Exotic plant என்பது பிறநாட்டுச் செடி என்றும், Cement Plant என்பது சீமேந்துப் பொறித்தொகுதி என்றும், Exotic dance என்பது துகிலுரி நடனம் என்றும் பொருள்படும். Plant என்பது வினைச் சொல்லாய் நிற்கும்பொழுது நடு, நாட்டு, பொருத்து, நிலைகொள், நிலைநிறுத்து என்றெல்லாம் பொருள்படும். ஆகவே P-L-A-N-T பிளான்ற், பிளான்ற் என்றால் செடி என்று பாடமாக்குவது எள்ளளவும் பொருந்தாது.

ஆரம்ப காலத்தில் நான்கூட இந்தத் தமிழாக்கச் சொற்களைக் கேட்டுச் சிரித்திருக்கிறேன். காலப் போக்கில் அவற்றில் சில பழக்கத்துக்கு வந்து, நான்கூட அச்சொற்களை உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன் (ஜெயகாந்தன், சபை நடுவே, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1997, ப.43).

பொருந்தா மொழிபெயர்ப்பு பொருந்தும் மொழிபெயர்ப்பு

general secretary பொதுச் செயலாளர்

பொதுச் செயலாளர் secretary-general செயலாளர் நாயகம்

observation post அவதானிப்பு மையம்

தூதரின் அவதானிப்புகள் envoy ‘s observations தூதரின் கருத்துரை

preparation of food உணவு தயாரிப்பு

போருக்கான தயாரிப்பு preparation for war போருக்கு ஆயத்தம்

candidate ‘s personality வேட்பாளரின் ஆளுமை

அரங்க ஆளுமை theatre personality அரங்கவாளர்

wild elephant காட்டு யானை

வெள்ளை யானை white elephant தண்டத் தீனி

Series Navigation

மணி வேலுப்பிள்ளை

மணி வேலுப்பிள்ளை