பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி…

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

கோசல்யா சொர்ணலிங்கம் (ேஐர்மனி)


ஜரோப்பாவில் மட்டுமல்லாது உலகளாவிய பார்வையில் இன்று பெண்ணியம் பேசப்பட்டு வருகின்றது. பெண்ணியம் சம்பந்தமாக அமைப்புகள் மகளிர் அமைப்புகள், ஊடகங்கள் மூலமாகவும் தத்தமது கருத்துக்களை தொிவிக்கின்றார்கள். பேசுகிறார்கள். ஒரு பத்திாிகையில், சஞ்சிகையில் இன்னும் வானொலியில் தொலைக்காட்சியில் பெண்கள் பக்கமிது, மகளிர் மட்டும் என்று நேரம் ஒதுக்கி விட்டு அதற்கென முக்கியம் தராது இறுதிப்பக்கத்தில் ஓர் மூலையிலும் நேரங்கெட்ட நேரங்களிலும் பிரசுாித்து ஒலிபரப்புவது பெண்ணியத்தில் பெண்களின் பிரச்சினைகளில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லையே.

அந்த வகையில் ஊடறுவை நான் கையில் எடுத்தபோது எனக்கு மிகவும் வித்தியாசமாகத் தொிந்தது. அண்மையில் முற்றிலும் பெண் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தாங்கி வெளிவந்தது ஊடறு. இந் நுாலை கையில் எடுத்தபோது புனித உணர்வேற்பட்டது. கனதியாகவும் பெண்களின் விழிப்புணர்வையும் ஊடறு உாிமைகோாி நிற்கிறது. பொருத்தமானதொரு அட்டைப்படத்துடன் ஏறக்குறைய முப்பதுற்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புகளாக, கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் நுால் விமர்சனங்கள் என ஊடறு உரைத்து நிற்கிறது பெண்ணியத்தை என்றால் அது மிகையாகாது.

ஊடறுவை கொண்டு வருவதற்கு பொறுப்பாக இருந்தவர்கள் றஞ்சி(சுவிஸ்), தேவா(ேஐர்மனி), விஐி(பிரான்ஸ்), நிருபா(ேஐர்மனி) ஆகியோராவார். இவர்கள் ஜரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள். பெண்ணியத்தில், பெண்கள் பிரச்சினைகளில் அக்கறை கொண்டவர்கள். ஜரோப்பிய ஆசிய நாடுகளில் வாழும் பெண் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் திரட்டி ஊடறுவை ஊடறுப்பாக்கியுள்ளனர். பெண்களின் உணர்வை இலக்கியங்களை அறியாமையை விழிப்புறச் செய்யும் நோக்கத்துடன் ஊடறுக்கப்பட்டுள்ளது ஊடறு என்றால் அது மிகையாகாது.

எல்லாவகையிலும் எந்த வடிவத்திலும் படைப்பிலக்கியங்கள் வந்தபோதும், பெண்கள் நிலை எடுத்துப் பேசி உலக அரங்கில் பொிதாக சாதிக்க முடியவில்லை. போர்க்கால சூழலில் பெண்ணை மானபங்கப்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் சுதந்திர வேட்கையை அந்தரமாக்கலாம், நலிவுறச் செய்யலாம் என்ற வக்கிரத்தை உண்மையாகவே ஊடறு கண்டிக்கிறது. ஒட்டுமொத்தமாக பெண்களின் மீதான சமூக அநீதிகளை அம்பலப்படுத்தியும் நாங்கள் புத்திஐீவிகள் பெண்கள் எங்களிடம்தான் புத்திபெற வேண்டியவர்கள் ஆண்களாகிய நாங்கள் பெண்களின் வழிகாட்டிகள் என்றதான ஆதிக்க உணர்வை கேள்வியாக்கி ஊடறுத்தும் உரைசூட்டியும் உள்ளது ஊடறு.

கவிதைக்கு என்ன இடம் சிறுகதைக்குாிய இடம் எது ? கட்டுரைக்கான இடமேது ? ஓவியத்திற்கான பாகமேது ? எதை எங்கெங்கு இணைக்கலாம் என்பதை அறிந்து அதற்கான தரங்கொடுத்து படைப்பாளிக்கு உற்சாகம் கொடுத்துள்ளனர்.

இடமில்லா இடத்தின் ஓர் மூலையில் கவிதையைச் செருகியும் கதை நீண்டுள்ளது என்பதற்காகவே சொற்களைத் துண்டாக்கி சுருக்கியும் அர்த்தம் வேறுபட ஆளுமை கொள்வது போன்ற தவறுகள் ஊடறவில் காணமுடியாது. கட்டுரைகள் மொழியாக்கம்பெற்றும் கனதியான மொழிநடையில் இருப்பதைக் காணலாம். இளைய தலைமுறையினாிடம் ஊடறவை கையளிக்க வேண்டும் என்பது என் கருத்து. நுாலினுள் சில இடங்களில் (மிக அாிதாகவே) எழுத்துப்பிழைகள் இருக்கவே செய்கின்றன. கவிதைகள் நீண்டதாகவும் சொன்னதையே திருப்பிச் சொல்வது போன்றும் சுருதியற்றும் இருக்கின்றது. மல்லிகாவனே¢ வெட்கம், அனாாின் நான் நானாக மட்டும், கலைமகளின் பால்யம், நளானியின் எனக்கான தேடலில், பாமதியின் தலைப்பில்லாத கவிதை, ெஐயந்தியின் தேடல்வலி, வாசுகியின் உாிமைகளின் கருவானவள் போன்ற கவிதைகள் சிந்திக்க வைக்கிறது. மிகச் சாதாராண விடயங்கள் என்று நாம் கருதினாலும் சிந்திக்கத்தக்க வகையில் இக் கவிதைகள் அமைந்துள்ளன. நிருபா புனிதவிழா பற்றி -தன்னையே முன்வைத்து யதார்த்தமாக பூப்புனித நீராட்டுவிழா பற்றி- அற்புதமாக எழுதியுள்ளார். சிறுகதைகளாக சந்திரவதனாவின் சத்தமில்லா யுத்தம், பாமாவின் ஒத்த ஆகிய கதைகளை குறிப்பிட்டுக் கூறலாம். ராேஐஸ்வாியின் முற்போக்குவாதி காதலிக்கிறான் என்ற சிறுகதை சாதாரணமாகவே உள்ளது.

அதைவிட தங்களின் துாாிகை மூலமாக ஓவியங்களை வரைந்துள்ளனர் அருந்ததி, வாசுகி, றஞ்சினி(பிராங்போர்ட்) ஆகியோாின் ஓவியங்கள் அனைவாினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் பெண்களின் வெளியீடுகளை விமர்சனம் செய்துள்ளார் றஞ்சி. அந்த வகையில் ஆழியாளின் உரத்துப்பேச, சல்மாவின் ஒருமாலையும் இன்னொருமாலையும், பாலரஞ்சனிசர்மாவின் மனசின் பிடிக்குள், சூாியா பெண்கள் அமைப்பின் வெளிப்படுதல், கோசல்யாவின் கோசல்யா கவிதைகள் இரண்டாம் பாகம் ஆகிய பெண்படைப்புக்களை ஊடறு ஊள்வாங்கியுள்ளது. எனவே இப்படி பல ஊடறுக்கள் பெண்கள் மத்தியில் வெளிவரவேண்டும் என்பது என் வேண்டுகோளாகும்.

(பிரான்ஸிலிருந்து ஒலிபரப்பாகும் ஏபிசி தமிழ்ஒலி வானொலியில் பெண்ணின் குரல் நிகழ்ச்சியில் ஊடறு பற்றிய எனது இவ் விமர்சனம் ஒலிபரப்பட்டது. -கோசல்யா சொர்ணலிங்கம்)

***

rran@bluewin.ch

Series Navigation

கோசல்யா சொர்ணலிங்கம் (ேஐர்மனி)

கோசல்யா சொர்ணலிங்கம் (ேஐர்மனி)