நான்கு வெகுஐனப் படங்கள்: ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ‘ : ‘வல்லரசு ‘ ‘உன்னை கொடு என்னை தருவேன ‘ : ‘குஷி ‘

This entry is part [part not set] of 11 in the series 20000618_Issue

-யமுனா ராேஐந்திரன்


மூன்று தேச பக்திப்படங்கள். ஜஸ்வர்யா ராய், அஐீத் குமார், தபு, சிம்ரன், மம்முட்டி, ரகுமான் இருக்கிறார்கள். அடிக்கடி பாப்லோ நெருடா பற்றி பிரஸ்தாபிக்கும் ராஜீவ்மேனன், ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் ‘ இனை இயக்கியிருக்கிறார். மகாராஐனின் தேசபக்தியுடன் ‘வல்லரசு ‘ இனை இயக்கியிருக்கிறார். இந்து பாசிசத்தைச் சிம்ரனுடன் கலந்து கொடுத்திருக்கிறார், ‘உன்னை கொடு என்னை தருவேன் ‘ இயக்குனர் கவி காளிதாஸ். (படத் தலைப்பில் ”க்” என்ன பாவம் செய்ததோ கொலை செய்கிறான்கள்).

க.கொ.க.கொ.னில் நாட்டுக்கோட்டை செட்டியார் வீடு இருக்கிறது. ‘சிட்பண்ட் ‘ நடத்துகிறவனும் கனவே நனவு போல் ராஐீவ் மேனன் ‘உல்ட்டா ‘ அடிக்கிற ஜஸ்வர்யா ராய் எனும் குணச்சித்திரமும் பாரதி பாரதிதாசன் கவிதைகள் பற்றி ‘பெட் ‘ பிடிக்கிறார்கள். சுஐாதாவின் துாரதரிசனக் கதை சகிக்கலை. அப்புறம் ஜ.பி.கே.எப் ‘சப் டெக்ஸ்ட் ‘ பற்றி சிலிர்தததுக் கொள்கிறார்கள் சுஐாதா மேனன் வகையறாக்கள். ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ‘ திரையிடலுக்கு வை.கோவும் போகிறார்; தியோடர் பாஸ்கரனும் போகிறார்; கமல்ஹாஸனும் போகிறார். வை.கோவுக்கோ ‘சிட்பண்ட் ‘ காரனுக்கு ராயைச் சேர்த்து வைக்காததில் ஆறுதல். பாஸ்கரன், ‘இஃது இன்னொரு கனவு ‘ என சரியாகச் சொல்லியிருக்கிறார்.

க.கொ.க.கொ. கதை என்ன ? அமெரிக்க திரைப்படங்களினால் ஆகர்கஷிக்கப்பட்ட இலட்சிய் இயக்குனர் அஐீத் தமிழ் சினிமாவை சும்மா தர்மத்துக்கு வாங்குகிறார். அவர் திரைக்குத் தரப்போகும் படத்துக்காக நாம் காத்திருக்கிறோம். ‘புல்ஷிட். ‘ மகாமட்டமான ஒரு பாட்டு ‘டைட்டானிக் ‘ கப்பல் முகப்பு பின்னணியில் வந்து பெயர்தெரியாத வடநாட்டு நடிகை குதித்துவிட்டுப் போகிறார். சார்! ராஜிவ் மேனன் சார்! சுஐாதா சார்! இந்த இலட்சியப் படைப்பைக் கொடுப்பதற்காக ஏழைத் திரைப்படத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிற மாதிரி வசனங்கள் வைத்திருக்கிறீர்களே, நியாயமா ? இது தான் ‘சப் டெக்ஸ்ட் ‘ போலும், ‘சிட்பண்டு ‘க்காரன் ஜஸின் கனவு நாயகன். கெட்ட ராசி கொண்ட தபுவுக்கு அஐீத் வாழ்வு தருகிறார். தபுவக்குக் கெட்ட ராசியென்று அந்தப் பால்முகத்தைப் பார்ததால் யாரும் நம்ப மாட்டார்கள், ராஐீவ். முழுப்படத்திலும் இருக்கிற ஒரே ஆறுதல் சிறிவித்யாவின் அந்த அழகான முகம் தான். ஸ்கட்லாந்து கோட்டையில் ஒரு பாட்டு; பிரமிடுகள் முன்னால் ஒரு பாட்டு; ராஐஸ்தானில் ஒரு பாட்டு; பாட்டை வைத்துப் படத்தை நகர்ததுவதுதான் ராஐீவ் மேனனின் திட்டம் என்று தெரிகிறது. பாப்லோ நெருடாவின் காதல் கவிதைகள் பற்றி அதிகம் பிரஸ்தாபிப்பதால் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘இல்போஸ்ட்டினோ ‘ [Il Postino (1994) http://us.imdb.com/Title ?0110877 ] என்று ஒரு இத்தாலியப்படம் (ராஐீவ் பார்த்திருக்கக்கூடும்). அதுவும் பாப்லோ நெருடாவின் கவிதைகளில் விளைந்த காதல் திரைப்படம்தான். எளிமையும் அன்பும் அழகும் காமமும் கலவியும் வீரமும் நிறைந்த அதிலிருந்து உங்களுக்குக் கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்கிறதா என்ன ? ஏனெனில், காதல் கவிதைகளை எழுதியவன் மட்டுமல்ல, பாஸிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட சமரசமற்ற வீரக் கவியும் பாப்லோ நெருடாதான்.

விஐயகாந்த்தின் அப்பா மதுரையில் காங்கிரஸ் கவுன்ஸிலராக இருந்தவராம். ‘சிம்மாசனம் ‘ படத் தயாரிப்பு குறிப்புகள் சொல்கிறது. விஐயகாந்த், மூப்பனார், கலைஞருக்கு நண்பர். இரண்டும் கலவையான தேசபக்தி எப்படி இருக்கும் ? கறுப்பு, சிவப்பு தீப்பந்தம் போட்ட சட்டைகள், அப்துல்கலாமின் முகம் திரையில் நிறைய தேசபக்தி பாட்டு, அணுகுண்டு வெடித்தபின்னான வாஜ்பாயின் உரை, எல்லாம் கலந்த வெறித்தனமான பகுத்தறிவுக்கு ஒவ்வாத தேசபக்திப்படம் ‘வல்லரசு. ‘ வாசிம் கான், கார்கில் யுத்தத்திற்குப்பின் இந்தியாவில் ஊடுருவி இந்திய நகரங்களில் வெடிகுண்டு வைத்து நாட்டைச் சூறையாடத் திட்டமிடுகின்றார். கடமை தவறாத பொலிஸ் அதிகாரி காட்டிக்கொடுக்கும் மாமனாரையும் சுட்டுக்கொன்று கடைசியில் வாசிம்கானையும் சுட்டுக்கொல்கின்றார். நீதி: எவன் நினைத்தாலும் இனி இந்தியா வல்லரசு ஆவதினினிறு தடுக்கமுடியாது.

இநதநிய வல்லரசுக் கனவு போலீஸ் அதிகாரியான வல்லரசெனப் பெயர் கொண்ட விஐயகாந்த் மூலம் நிறைவேறுகிறது. வாசிம் கான் ‘ரோஐா ‘ வில்லன். வல்லரசுவிலும் அவரே வில்லன். சினிமாக்கார்கள் கனவை நிஐமாகவே ஆக்கிவிட்டதற்கு இன்னுமொரு உதாரணம். அடிதடி, துப்பாக்கி, இரத்தம், முறுக்கேற்றும் தேசபக்தி வசனங்கள்; படம் பிய்த்துக் கொண்டு ஓடுகிறது. மணிரத்னம் முன்பு விஐயகாந்த்தை வைத்து ‘சத்திரியன் ‘ என்ற படம் தயாரித்தார். அந்த சத்திரியன் மணிரத்தினம் பட வில்லனை வல்லரசுவில் கொன்றே போட்டார். நிஐமான சத்திரியன். சரி சத்திரியன் யாருக்காகப் போராடுகிறான், எமது சரித்திர ஏடுகளில் ? பிராமண மேலாதிக்கத்தை ஏற்படுத்தப் போராடுகிறவன் சத்திரியன். ரண்வீர் சேனை வடக்கே கொல்கிறது. விஐயகாந்த் தெற்கே செய்கிறார்.

படுகேவலமான படம் உ.கொ.எ.த.; கிரிமினலான பார்த்திபனோடு படுத்து கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான சுகன்யா ஒரு ஆண்குழந்தையைப் பெற்று இந்திய இராணுவத்துக்கு அர்ப்பணிக்கிறாள். பிரிவினையின் போது பிரிந்து சென்றவர்கள் என்றாலும் கருணையேயில்லாமல் உடன்பிறந்தவர்களைக் கொல் என தனது மகனுக்கு ஆணையிடுகிறார் இந்திய முஸ்லீம் தகப்பன். சமையல்காரனாக மாறுவேடத்தில் சென்று பாகிஸ்தான் இராணுவத்தினரை விஷம் வைத்துக் கொன்ற தன் தேசபக்தியை நிலைநாட்டுவேன் என்கிறார் காமெடியனான ரமேஷ்– கண்ணா. ”இந்து இந்து என்று சொல் வெற்றி கொள் ” என்றொரு பாட்டும் வருகிறது. படமுதலாளி செளத்ரி கடைசியில் தனது மனிதவேட்டை வெறியைக் காண்பித்தேவிட்டார். ஆர்.எஸ்.எஸ். மேடைப்பேச்சுக்களைக் கேட்டவர்களுக்குத் தெரியும் : ”முஸ்லீம் பெண்களின், கிறிஸ்தவப் பெண்களின் கருப்பைகளில் இந்துக்களின் விந்தை விதைப்போம் ” என்பார்கள் அவர்கள். இன்று கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்கள். பாலியல் பலாத்காரவாதியின் வீராவேசமான பேட்டியையும் ‘இந்தியா டுடே ‘ பிரசுரிக்கிறது.

படத்தில் கன்னயாஸ்திரி, ‘கிரிமினல் ‘இன் விந்துவைக் கருப்பையில் தாங்கி குழந்தையை இந்திய இராணுவத்துககுத் தருகிறாள். இயக்குனருக்கு குறைந்த பட்ச அறிவுகூட இல்லை. பள்ளியிறுதி மாணவர்கள் ‘ஆஸ்டலி ‘ல் இருந்து சுவரேறிக் குதித்து சினிமாவுக்குப் போகிற பாணியில் இராணுவ முகாமிலிருந்து சுவரேறிக் குதித்துக் களியாட்டம் போடுகிறார்களாம். அப்புறம் இராணுவ சமையல்காரர்கள், நகைச்சுவையாளர்கள். தேவடியாளிடம் போகிறார்களாம். சார்லி, தாமு கும்பல், இராணுவ முகாமுக்குள் லுாட்டியடிக்கிறார்களாம். வுிந்துவை இராணுவ சேவைக்காக கருப்பையில் வைப்பது கடைசிக் காட்சிவரை படத்தில் வருகிறது. இராணுவத்துக்குப் போகும் முன்பு கதாநாயகன் மாண்டுவிட்டால் இந்திய இராணுவத்தக்குக் கொடுக்க வாரிசில்லாமல் போய்விடும் என்பதால் அஐீத்திடம் கர்ப்பதானம் தரும்படி ‘டயலாக் ‘ விடுகிறார் சிம்ரன். சிம்ரனின் தொலைந்த கொலுசை வைத்துக் கொண்டு நமக்கு ‘சென்டிமென்ட் ‘ பூ சுத்துகிறார் இயக்குனர். ஹே ராமில் ”ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் தானே ” என்கிற வசனத்தை வெட்டத் தெரிந்த சென்ஸாருக்கு படுகேவலமான இந்த இந்து ‘பாஸிஸ்ட் ‘ படத்தை அப் படியே வெளியிடத் தெரிந்திருப்பது அசிங்கம்.

‘வாலி ‘ மாதிரி ‘குஷிி ‘ இல்லை என்கிறார்கள். எல்லாவற்றிலும் காதல் என்றால் பாவம் இந்த இயக்குனர்ப் பையன்கள் தான் என்ன செய்வார்கள் ? மேற் கண்ட மூன்று படங்களையும் விட குஷி எனக்குப் பிடித்தது. சுின்னச் சின்ன மனத்தாங்கல்கள், கசப்புகள், இளமைத்திமிர், அகம்பாவம் போன்றவற்றை பாதிப்படம் எடுத்துக் கொள்கிறது. இந்தப் பாதிப்படம் எனக்குப் பிடித்திருந்தது. மீதிப்படத்தை விடுங்கள் குப்பை. மும்தாஜ் வரத் தொடங்கியவுடனேயே படம் செத்துப் போயிற்று. ஆனால் முன்பகுதிக் காட்சிகள் அழகு.

கதாநாயகன் சின்னப் பையன். அருகில் உட்கார்ந்திருக்கும் போது கருநீலப்புடவையில் இருக்கும் தான் விரும்பும் பெண்ணின் இடுப்புப் பிரதேசம் அவனுக்கு உறுத்துகிறது. திரும்பத் திரும்ப யதேச்சையாகப் பார்க்கிறான். பெண் பிள்ளைக்கு வந்தது கோபம் . அதிலிருந்து அவர்களுக்குட் சண்டை. இநதச் சண்டை மெலிதான் பாலியல் வேட்கை தொடர்பானது. பார்த்ததில், பையனுக்கு ஒன்றும் குற்ற உணர்வில்லை. காதலியின் உடல் மீது வேட்கை கொள்ளாமல் பிறகு யார் மீது கொள்வது ? கதாநாயகிக்கும் பெரிதாகப் பிரச்சினையில்லை. இருந்தாலும் இந்திய மரபில் காதல் ஆத்மீக ாீதியானதல்லவா ? இதெல்லாம் சும்மா கதை என்பதை இரண்டு பாத்திரங்களும் உணர்ந்து கொள்கிறார்கள். இது எனக்குப் பிடித்திருந்தது. எவ்வளவு அழகான மென்மையான சன்னமான விஷயம்.

இயக்குனர் இத்தோடு விட்டிருக்கலாம். பிற்பாடு ஏன் மும்தாைஐ கொண்டுவந்தாரோ தெரியாது. சில வேளை தயாரிப்பாளர் செளத்ரியின் கஐானாவுக்குத் தெரிந்திருக்கலாம். இன்னும் மென்மையான விஷயங்களிற் ‘திரில் ‘ இல்லையென்றும் நினைத்திருக்கலாம். எவ்வாறாயினும் குஷியின் முதல் பாதி, சந்தோஷமான அனுபவம். அந்தக்குழந்தை ேஐாதிகாவுக்கு நன்றாக கோபப்படவும் லேசாக அழவும் செல்லமாகக் கொஞ்சவும் கொஞ்சமாகக் காதலிக்கவும் தெரிந்திருக்கிறது. அந்த வயசிலிருந்து இதைப் பார்ப்பது சந்தோஷம்தானே ?

 

 

  Thinnai 2000 June 18

திண்ணை

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்