SlumDog Millionaire a must see film

This entry is part of 36 in the series 20090129_Issue

கோவிந்த்ம்ஹீம்…. மனது கேட்கவில்லை.
இது பற்றி எழுது என்றது…

மேற்கத்தியர்களின் வருகை பல மாற்றங்களை பல நூறு வருடங்களாக ஏற்படுத்திவருகிறது.

இதோ, நமது தேசத்து, ரஹ்மான், ஆஸ்கார் கனவை நனவாக்கும் தருணத்தில், அவனை கைபிடித்து
அங்கே அழைத்துச் செல்வது ஒரு வெள்ளைக்காரன் தான்.

காந்தி திரைப்படத்திற்கப்பறம் ஒரு சினிமா உலகில் ஒரு பரபரப்பு.

கதை சர்ரியலிசம் சார்ந்த ஒன்று.
வாழ்வியல் யதார்த்தம் பல புற சம்பவங்களால், சித்தாந்த மோதல்களால் சும்மா ரோடோரத்தில் வாழும் மனிதனை,
அதுவும்,
பிச்சை சோறும் , எச்சில் சோறும் ஒண்ட இடமும் கிடைத்தால் போதும் என்று வாழ்பவனின் வாழ்வை பந்தாடுகிறது.

அந்த வகை மனிதர்களும் வாழும் வாழ்வை போற போக்கில் வாழ்ந்து முடிக்கிறான்.

பல லட்சிய மனிதர்களின் வாழ்வு தான் இப்படி பட்ட சாமான்ய மனிதர்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

படத்தில் ஒரு காட்சி,
தான் நேசிப்பவன், கடைசி கேள்வி ஒன்றில் தத்தளிக்கிறான். பதில் அவனுக்கு 2 கோடி பெற்றுத்தரப் போகிறது.
அண்ணன் செல்பேசி காதலியிடம்.
அழைக்கிறான் அந்த நம்பரை…
இவள் எடுக்கிறாள்…..
கேள்விக்குப் பதில் தெரியவில்லை….
ஆனால், அவனிடம் , தான் பத்திரமாக இருக்கிறதைச் சொல்கிறாள்…
அவனது குரல் கேட்டு புளாங்கிதம் அடைகிறாள்..
முகம் பிரகாசிக்கிறது…
பணம் தாண்டி வாழ்வின் பிரதானம் பல உள்ளன என்ற ஒரு வாழ்வு நிலை……

இந்திய நாட்டு, மும்பை சேரி…
கதையை மையமாக முஸ்லீம் சிறார்கள்…
பெண்ணோ இந்து….
கண்ணோண்டி பிச்சையெடுத்தல் , விபச்சாரம், திருட்டு… என்ற நமக்கு அந்நியப்பட்ட…
பத்திரிக்கைகளிலும், blogகளிலும், நாம் நமக்கு பொழுது போகாத நேரத்தில் பொங்கியெழுந்து கண்டிக்கும் விஷயங்களில் அன்றாட வாழ்க்கை வாழும் ஒரு கூட்டம்……

இந்தக் கண்ணை நோண்டி பிச்சையெடுக்க வைக்கும் கொடூரம் நமது மாநிலத்திலும் உண்டு…
ஏதாவது இயக்கமோ, சினிமா மூலமோ.. நாம் வெளிக்கொண்டு வந்திருப்போமா…?

ஏன் நாம் ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொண்டு, இந்த மாதிரி படம் எடுப்பவர்களை கரிக்கனும்
இரு கை நீட்டி வரவேற்போம்….

அரசியல்வாதிகள் , போலீஸ் பற்றி தாக்கி படமெடுக்கிறேன் என்று தமாஷ் பண்ணி சொறிந்து கொள்ளும் கதை சொல்லும் யுக்தி தாண்டி,

பிரச்சார நெடியில்லாமல் ஒரு படம்.
இது கலைப்படமா-
இல்லை…
இது குத்தாட்டமுல்ல வெகுஜன படமா..?
இல்லை…
இது ஒரு நவின சினிமா…

கதை..?
கற்பனை கதைதான்…
பிரச்சார நெடியில்ல்லாமல்
போதனையில்லாமல்…..
ஒரு திரைப்படம்…..
இந்தியாவின் வாழ்வை பற்றி.
தனது பதிவை செய்திருக்கிறது….

மேற்கத்தியத்தில் இந்தியா என்றால்,
சத்யம்-ஆக இதுவும் உண்டு …என்று சொல்லும் படம்.

தாஜ்மஹால் காட்சி ஒரு எதிர்மறை நையாண்டி…
இது மாதிரி நாமே பல கைடுகளைப் பார்த்துள்ளோம்..

யமுனை கரை மதுரா போங்கள்..
இங்கு தான், கிருஷ்ணர்
ஒடி விளையாண்ட சந்து..
இங்கு தான் மூச்சா போனார்-
என்று காண்பித்து….
– அனுபவித்தவன் நான்…..


நடிகனிடம் ஆட்டோகிடா·ப் வாங்க மலக்குழியில் குதித்து ஓடி கையெழுத்து வாங்கி உற்சாகமாமும் அந்தச் சிறுவன்
சினிமா ரசிகன்…
அந்தக் காட்சி..
முகத்தில் அறைந்த ஒரு உண்மை நிலை……

இது தான் நமது தேசத்தின் நிலை…
ஒரு படத்திலாவது இதைப் பதிவு பண்ணுவோமா..? நாம்….

இதெல்லாம் தாண்டி,
அந்த சினிமா சொல்லும் யுத்தி இருக்கிறதே…
அது நாம் கற்றுக் கொள்ள வேண்டியது…..

கதை Google பண்ணிணால் கிடைக்கும்…

சின்ன சின்ன தவறுகள் பூதக்கண்ணாடி போட்டு பார்ப்பது தவிர்த்து,
பெரிய பெரிய உண்மைகளை
Just Like that… சொல்லியிருக்கிறார்களே-
அதற்கு ஒரு சல்யூட்…….

அவசியம் பாருங்கள்….. இந்தப் படத்தை…

<< கொவிந்த் >>>

Series Navigation