‘பயணி’ (The passenger – A film by Michelangelo Antonioni)

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

சேதுபதி அருணாசலம்


சகி(Saki) என்ற புனைபெயரில் எழுதிய H.H.மன்றோ (H.H.Munro) ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரெழுதிய ‘The lost Sanjak’ என்ற சிறுகதையில் வாழ்வின் ஒரு கண வெறுப்பில் எங்கேனும் கண் காணாமல் தொலைந்து போக விழையும் ஒரு மனிதன், வழியில் கிடக்கும் முகம் சிதைந்த ஒரு ராணுவ வீரரின் பிணத்துடன் தன் ஆடைகளையும், அடையாளங்களையும் பரிமாறிக் கொள்கிறான். தன்
அடையாளத்தை மறைத்து வேறொரு மனிதனாக வளையவரும் அவனுக்கு, தான் எதிர்பார்த்திராததொரு வலையில் சிக்கிக்கொண்டிருப்பது பிறகுதான் தெரியவருகிறது.

ஒரு அப்பாவியைக் கொலை செய்த ராணுவ வீரன் என்று குற்றம் சாட்டி சிறையில் தள்ளி விடுகிறது போலிஸ். எத்தனை முயற்சி செய்தும் கொலையானதுதான் ராணுவ வீரன்; உயிருடனிருக்கும் தன்ன¨ த்தான் கொலையாகிருப்பதாக போலிஸ் கைது
செய்திருக்கிறது என்று அவனால் நிரூபிக்கவே முடியாது. (கதைச்சுருக்கம் இவ்வளவு சீரியஸாக இருந்தாலும், சகி தன்னுடைய கைச்சுவை கலந்த எழுத்துக்களில் மிக சுவாரசியமாக இக்கதையை எழுதியிருப்பார்). நம் எல்லோரையுமே வாழ்க்கையின் ஏதேனும் ஒரு சமயத்தில் வெறுமை கவ்விப் பிடித்திருக்கும். வாழ்வின் வெறுமையும் (emptiness/ennui), அந்நியமாதலும் (alienation), அதிலிருந்து தப்பித்துக் கொள்ள மனிதர்கள் எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சியும், பெரும்பாலான ‘ ·ப்ரெஞ்சு புதிய அலை’ (French New Wave) திரைப்படங்களின் மைய இழைகளாக இருந்தன. அக்காலகட்டத்தின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான மைக்கேலேஞ்சலோ
ஆண்டனியோனியின் (Michelangelo Antonioni) படங்களின் மைய −ழையும் ‘வெறுமை’தான். கிட்டத்தட்ட ‘புதிய அலை’ காலகட்டத்தின் இறுதியில் 1970-இல் ஆண்டோனியோனி இயக்கிய திரைப்படம் ‘பயணி’ (The passenger). [இப்படத்தின் இத்தாலியப்
பெயர் – ‘நிருபர்’ என்ற அர்த்தம் வரும் “Professione: reporter”.] நான் மேற்சொன்ன சகி கதையின் கதைநாயகனை வெறுமையிலிருந்து தப்பித்து μடும் மனிதனாக மாற்றினால் அதுவே ‘பயணி’யின் கதை. அந்தச் சிறுகதையில் வருவது போலவே இந்தத் திரைப்பட நாயகனும், இறந்து போன ஒரு மனிதனுடன் தன் அடையாளங்களைப் பரிமாற்றம் செய்து கொள்கிறான்; அச்சிறுகதை நாயகன் போலவே இறந்த மனிதனின் விதியும், செய்கைகளும் ‘பயணி’யின் நாயகனையும் பின் தொடர்கின்றன.

−த்திரைப்படத்தின் நாயகனான டேவிட் லாக் ’ (David Locke) என்னும் நிருபராக நடித்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ஜாக் நிகல்ஸன் (Jack Nicholson). தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு உண்மைகளை மறைத்து செய்திப்படங்கள் எடுக்கும் பொய்யான வாழ்க்கையாலும், இன்ன பிற வெறுப்புகளாலும் வெறுமையின் உச்சத்துக்குத் தள்ளப்படும் கதாபாத்திரம் ஜாக் நிகல்ஸனுக்கு. −ப்படிப்பட்ட எந்த ஒரு ஹீரோத்தனங்களும் இல்லாத ஒரு கதாபாத்திரத்துக்கு ஜாக் நிகல்ஸன் போன்றதொரு ஹாலிவுட்டின் மிகை நடிப்பில் வார்க்கப்பட்ட பெரிய நடிகர் தேவையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அந்தக் கேள்வி படம் ஆரம்பித்து முதல் ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே மறைந்தும் விடுகிறது. நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஜாக் நிகல்ஸன் என்ற
நினைப்பு மறைந்து டேவிட் லாக் மட்டுமே நம் கண்களில் தெரிகிறார். இப்படத்தை எடுக்கும்போது ஆண்டனியோனி ஏற்கனவே ஒரு நல்ல பெயர் வாங்கிய, பிரபலமான இயக்குநர். அப்படிப்பட்ட ஒரு திறமையான இயக்குநருக்கு இருக்கவேண்டிய நிதானம் ‘பயணி’யின் ஒவ்வொரு காட்சியிலும், ·ப்ரேமிலும் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் மிக நிதானமாக, அனுபவித்து எடுத்திருக்கிறார் ஆண்டனியோனி. அடையாளங்களை ம ¡ற்றிக் கொண்டபின் போலிஸை எதிர்பார்த்து டேவிட் லாக் காத்திருக்கும் காட்சியில் கூட, சுற்றியுள்ள மரங்கள், பின்னாலிருக்கும் தோட்டம், எதிரிலிருக்கும் மைதானம் அத்தனையையும் மெதுவாக விழுங்குகிறது கேமரா. பொதுவாகவே ஆண்டனியோனி நீண்ட காட்சிகளுக்கும், நீண்ட நேரம் ந ¢லைத்திருக்கும் காமிரா கோணங்களுக்கும் அறியப்படுபவர். −தைப் பற்றி ‘சிட்டிசன் கேன்’ புகழ் ஆர்சன் வெல்ஸ் (Orson Welles) கூட குறையாகக் கூறியிருக்கிறார். (காமிராவை இயக்கிவிட்டு தேநீர் அருந்தப் போய்விடும் பெர்க்மனும் (Bergman) ஆண்டனியோனியின் மெதுவாக நகரும் காட்சியமைப்பைப் பற்றி குறை கூறியிருப்பது நல்ல வேடிக்கை!)

ஆனாலும் கருத்தாக்கத்திலும் சரி, படம் எடுத்த விதத்திலும் சரி, ‘பயணி’, ஆண்டனியோனியின் மற்ற புகழ்பெற்ற படங்களான, Blow-up, La’aventura படங்களை விட ஒரு படி மேல்தான்! டேவிட் லாக், இறந்து போன மனிதனுடன் தன்னுடைய அடையாளங்களை பரிமாறிக்கொள்ளும்போது பின்னணியில் கிராம·போனில் இறந்த மனிதன் தன் சுயசரிதையை சொல்வது போல் எடுக்கப்பட்டிருக்கும் திரைக்கதை அமைப்பு அதற்கு ஒரு சான்று. அதே போல், டேவிட் லாக், தன் வேலை மீது கொண்டிருக்கும் வெறுப்பையும், வாழ்வின் மன உளைச்சல¨ யும் நேரடியாகச் சொல்லாமல், துண்டு துண்டாக படம் நெடுக, லாக் எடுத்த செய்திப்படங்கள் வழியாகவே சொல்லியிருப்பது திரைக்கதையாசிரியர் மார்க் பெபோல் (Mark Pepole) போன்ற வல்லுநர்கள் ஒரு இயக்குநருக்கு எவ்வளவு பக்கபலமாக இருக்க முடியும் என்பதையும் காட்டுகிறது
இறந்த மனிதனுடன் அடையாளங்களை பரிமாறிக்கொள்ளுதல், போலிஸ் துரத்தல் போன்ற மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடிய காட்சிகளுக்குக் கூட பின்னணி இசை, அச்சுறுத்தும் ·பிஷ்-ஐ(Fish eye) கேமரா கோணங்கள் என்று எதுவும் இல்லாமல்,
திரைக்கதை, தன்னுடைய இயக்கம், கதா பாத்திரங்களின் நகர்வு ஆகியவற்றை மட்டுமே நம்பி திரைப்படத்தை வெகு சிறப்பாக நகர்த்தியிருக்கிறார் ஆண்டனியோனி.

படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில்தான் பின்னணி இசை வருகிறது. அதில் ஒன்று −றுதிக்காட்சி. −ன்னொரு காட்சி படத்தின் அற்புதமான கணங்களில் ஒன்று. படத்தின் மையக்கரு −ந்த ஒரு காட்சியிலேயே அடங்கி விடுகிறது. டேவிட் லாக், நாடோடியாக சுற்றிக் கொண்டிருக்கும் நாட்களில் அவனுக்கு ஒரு பெண் நண்பி கிடைக்கிறாள். −ருவரும் ஒரு திறந்தவெளி காரில் (Open Top SUV)
ஸ்பெயின் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்தப்பெண் ‘நீ எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? உன் இறுதி இலக்கு என்ன?’ என்று தொணதொணத்துக்கொண்டே இருக்கிறாள். எரிச்சலடையும் டேவிட் லாக், ‘பின்னால் திரும்பிப் பார்’ என்கிறான்.
திரும்பிப்பார்க்கும் அப்பெண்ணின் தலைக்கு மேல் ‘விர் விர்’ரென்று மரங்கள் நகர்க ¢ன்றன. காரிலிருந்து அவிழ்ந்து விழும் நூலிழை போல் நீள்கிறது பாதை. பாதையின் இருபுறமும் இருக்கும் மரங்கள் தூரத்தில் புள்ளியாகச் சேர்கின்றன. அற்புதமான அந்தக் காட்சியின் அழகில் அமிழ்ந்து போய் கண்களை விலக்க முடியாமல் நிலைத்து விடுகிறாள் நண்பி. தன்னைச் சுற்றி அழகான விஷயங்கள் −ருக்கின்றன என்று தெரிந்திருந்தாலும், அதை ரசிக்கும் அளவுக்கு அறிவு இருந்திருந்தாலும், ரசிக்கும் மனநிலையில் −ல்லாமல், ஒரு வெறித்த பார்வையுடன், காரை μட்டிச் செல்கிறான் டேவிட் லாக். இந்தக் காட்சியில் ஒலிக்கிறது இவான் வாண்டர் (Ivan Vandor) என்ற ஹங்கேரியரின் அற்புதமான பின்னணி இசை. ஒரு மனிதன் எளிதாக இன்னொரு மனிதனுடன் அடையாள பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்; நாடு விட்டு நாடு செல்ல முடியும்; சர்வதேச தீவிரவாதிகளுக்கு உதவி செய்ய முடியும்; −தையெல்லாம் செய்பவர் ஒரு பன்னாட்டு செய்தி நிறுவனத்தில் பணி புரியும் புத்திசாலியான நிருபர் என்ற μட்டையான, நம்ப முடியாத கதை, அதிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு பழங்காடி ஆகி விட்ட வெறுமையுணர்வு – போன்ற குறைகளைக் கொண்ட −ந்தத் திரைப்படத்தை முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் பார்க்கப்படும், விமர்சிக்கப்படும், முக்கியமான திரைப்படமாக்கியது, எது? சந்தேகமில்லாமல் மைக்கேலேஞ்சலோ ஆண்டனியோனியின் இயக்கம். திரைப்படத்தின் இறுதிக்காட்சிக்கு முந்தையகாட்சி. டேவிட் லாக் ஸ்பெயினின் ஒரு கிராமத்து விடுதி அறையில் படுத்திருக்கிறான். வெளியே விடுதிக்கு முன்னாலிருக்கும் மைதானத்தில் அவனால் விரட்டிவிடப்பட்ட அவன் நண்பி சோகம் ததும்ப நின்று கொண்டிருக்கிறாள். இந்த இருவரின் உணர்வுகளையும், அதன் பின்
நடக்கும் நிகழ்வுகளையும் காட்சியை ‘வெட்டாமல்’ ஒரே ஷாட்டில் படம் பிடிக்க நினைக்கிறார் ஆண்டனியோனி. காமிரா விடுதி அறையின் உள்ளே, குறைவான வெளிச்சத்திலிருந்து, மைதானத்தின் இயல்பான சூரிய வெளிச்சத்துக்கு சென்று, மீண்டும் உள்ளே வர வேண்டும். இப்படி பல்வேறு தளங்களில் இருக்கும் வெளிச்சத்தைப் படமெடுக்க மாலை நேரம்தான் உகந்தது. இப்படிப்பட்ட ஒளி வேறுபாடுகளை இப்போதெல்லாம் மிக எளிதாக டிஜிடல் முறையில் சரியாக்கிவிடலாம். அந்த காலங்களில் அது
முடியாது.

ஸ்பெயின் பருவநிலையும் அப்போது மிகவும் மோசமாக காற்றடித்து, புழுதி பறந்து கொண்டிருந்தது. கேமரா ஆடாமல், தூசி படியாமலிருக்க ஒரு உருண்டையான பாத்திரத்துக்குள் வைத்து அறைக்குள்ளிருந்து நகர்த்தப்பட்டது. கேமரா வெளியே வந்து மைதானக் காட்சிகளை எடுக்க வேண்டும். அப்போது ட்ராலியில் நகர்ந்து வந்த கேமராவை, விடுதிக்கு வெளியே இருக்கும் க்ரேன்
தூக்கிக்கொள்ளும். அப்படி தூக்கும்போது கேமரா அசைந்து காட்சிப்பதிவை பாழாக்காமல் இருக்க வேண்டும். அறைக்குள்ளிருந்து வெளி வரும் கேமரா, க்ரேனால் இயக்கப்பட்டு மைதானக்காட்சிகளைப் பதிவு செய்து, அறைக்குள் மீண்டும் நுழையும். இவ்வாறாக எடுக்கப்பட்ட அந்தக் காட்சியை ஆண்டனியோனி மைதானத்திலிருந்த ஒரு வேனில் அமர்ந்து கொண்டு, ஒலிபெருக்கியின் உதவியால்
இயக்கினார்.

“ஒரு காடசிக்கு இத்தனை மெனக்கெடல் தேவையா?” என்ற கேள்வி எழுகிறது இல்லையா? அந்த மெனக்கெடலும், ஈடுபாடும் ‘பயணி’யை இன்றும் நம் நினைவில் நிறுத்தி வைத்திருக்கின்றன. டேவிட் லாக் ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டுக் கலவரங்களையும், மக்கள் வாழ்சூழ்நிலைகளையும் படம் பிடிக்கிறான். அவ்வாறு அவன் எடுத்ததாகக் காட்டப்படும் ஒரு காட்சியில் ஒரு கலகக்காரர், அரசாங்கத்தின் ஆணைப்படி கொல்லப்படுகிறார். அதுவும் எப்படி? வெட்டவெளியில் கட்டி வைக்கப்பட்டு,
பொதுமக்கள் முன்னிலையில் சுடப்படுகிறார். இக்காட்சி உண்மையாலுமே நடந்த ஒரு நிகழ்வாம். ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாட்டில் எடுக்கப்பட்ட செய்திப்படமாம். (எந்த நாடு, இயக்கம் போன்ற மேல் விவரங்கள் தெரியவில்லை). ஆப்பிரிக்க நாடுகளின் உண்மை நிலை வேறாக இருக்க, டேவிட் லாக் தன்னுடைய நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு ஒரு சர்வாதிகார அரசுத்தலைவர் சொல்ல ¤ம் பொய்யான தகவல்களை பதிவு செய்வதாகக் காண்பிக்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் செய்தி சேகரிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய
நிறுவனங்கள், தங்கள் தேவைக்கேற்ப உண்மைகளை சொல்லலாம். சொல்லாமலும் விடலாம் என போகிற போக்கில் பின்மண்டையில் ஒரு தட்டு தட்டியிருக்கிறார் ஆணடனியோனி. ஆண்டனியோனியின் இந்த சமூகப்பிரக்ஞையும் ‘பயணி’யை இன்றும் நம் நினைவில் நிறுத்தி வைத்திருக்கிறது.

ஜாக் நிகல்ஸன், டேவிட் லாக்கின் நண்பியாக வரும் மரியா ஷ்னீடர் (Maria Schneider) ஆகியோரின் நடிப்பு, லூசியானோ டோவோலி(Luciano Tovoli)-யின் ஒளிப்பதிவு ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவை. ஐரோப்பாவின் மிக அழகான பகுதிகளுக்கு கதை பயணித்தாலும் நாயகனின் விரக்தி மனப்பாண்மையை பிரதானப்படுத்தும் படப்பிடிப்பு, மெதுவாக நகரும் காட்சிகள்−இவற்றுக்கிடையே போலிஸ் துரத்தல் காட்சிகளும், பெரும்பாலான ‘புதிய அலை’ திரைப்படங்களைப் போல் அந்தரத்தில் நிற்கும் முடிவாக −இல்லாமல், வெறுமையிலிருந்து மீள, அடையாளங்களைத் துறந்து தப்பித்து μடுதல் தீர்வாகாது என்னும் தெளிவான செய்தியுடனும் முடியும் ‘பயணி’, மைக்கேலேஞ்சலோ ஆண்டனியோனி என்ற திறமையான இயக்குநரின் முக்கியமான திரைப்படம்.

வெகுஜன திரைப்படங்கள் போல் இல்லாமல், ‘பயணி’, திரைப்படம் பார்ப்பவர்களிடமிருந்து நிறைய ஈடுபாடு மற்றும் புரிதலை எதிர்பார்க்கிறது. இக்காரணத்தினாலேயே இப்படம் வணிக ரீதியில் பெரும் தோல்வியைத் தழுவியது. நிலையற்ற இந்த உலகில் பணம் மட்டுமா பிரதானம்? 1970-இல் வந்த ¤ வணிக ரீதியாக வெற்றியைக் குவித்த எத்தனை திரைப்படங்கள் நம் நினைவில்
−ருக்கின்றன? கோடிகளில் குளித்த எத்தனை பணமுதலைகளை காலம் தன் குறிப்பேட்டில் பதித்துக் கொண்டிருக்கிறது?
அமெரிக்க எழுத்தாளர்கள் கர்ட் வானகட்டும், (Kurt Vonnegut), ஜோச·ப் ஹெல்லரும் (Joseph Heller) நெருங்கிய நண்பர்கள். ஹெல்லர் இறந்தவுடன் வானகட் எழுதிய இரங்கல் கவிதையை இங்கே பதிப்பது பொருத்தமாக இருக்கும்.

ஜோ ஹெல்லர்,
ஒரு முக்கியமான,
நகைச்சுவை எழுத்தாளர்
−ப்போது உயிருடன் −ல்லை.

நான் ஷெல்டர் தீவில்,
ஒரு பணக்காரர் கொடுத்த விருந்தில் இருந்தேன்.
நான் கேட்டேன்:
‘ஜோ,
உன் ‘காட்ச்-22’ நாவல்,
இதுவரை சம்பாதித்து இருக்கும்
அத்தனை பணத்தையும்,
நமக்கு விருந்தளிப்பவர்
நேற்று ஒரே நாளில்,
சம்பாதித்திருக்கலாம்!
அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
ஜோ சொன்னான்:
“அவரால் எப்போதுமே அடைய முடியாத ஒன்றை
நான் அடைந்திருக்கிறேன்”.
நான் கேட்டேன்:
“அப்படி என்னதான் உன்னிடம் இருக்கிறது?”
ஜோ சொன்னான்:
“நான் அடைந்திருக்கும் ஞானம்(Knowledge)
ஒன்று போதுமே!”
மோசமில்லை ஜோ!
Rest in peace!
******
சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரக் கணக்கின்படி, தம் தொழில் மேல் வெறுப்பும், சலிப்பும் கொண்டவர்களில் முதலிடம் மென்பொருள் வல்லுநர்களுக்காம். இரண்டாமிடம் பத்திரிகை நிருபர்களுக்கு. (மென்பொருள் மேலோங்காத எழுபதுகளில், ஒரு நிருபரை வாழ்வில் வெறுப்படைந்தவராக ஆண்டனியோனி சித்தரித்திருப்பது சரிதான் இல்லையா?) எனக்கு மிகவும் ஆப்தமான என் நண்பன் ஒருவன் திடீரென்று நான்கு நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ மறைந்து விட்டான். ஐந்தாம் நாள் காலை கரி படிந்த முகத்துடன் நேராக என் வீட்டுக்கு வந்தான். “எத்தனை நாளைக்குத்தான் ஒரு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, நான்கு சுவருக்குள், என்னைச் சிறிதும் உற்சாகப்படுத்தாத வேலையைச் செய்வதாம்? அதுதான் என் புல்லட்டில் மனம்போன போக்கில் ஊரெல்லாம் சுற்றிவிட்டு வந்தேன்!” என்றான். அவன் திரும்பி வந்ததிலும், அவன் இன்னும் தன்னைத் தன் உண்மையான பெயரிலேயே அழைத்துக்கொண்டிருப்பதிலும், எனக்கு சந்தோஷம்தான்.
*****
sethupathi.arunachalam@gmail.com
*****
இந்தக் கட்டுரை எழுத உதவியாக இருந்த வலைத்தளங்கள்:
1. http://en.wikipedia.org/wiki/The_Passenger_(film)
2. http://en.wikipedia.org/wiki/Michelangelo_Antonioni
3. http://www.cinema-scope.com/cs24/spo_koehler_passenger.htm
4. http://www.unlikelystories.org/schneider0407.shtml
5. http://www.boston.com/ae/movies/articles/2005/11/11/antonionis_passen…
6. நான் குறிப்பிட்டிருக்கும் அந்த சகியின் ‘The lost Sanjak’ கதையை இந்த
வலைத்தளத்தில் படிக்கலாம்: http://www.online-literature.com/hh-munro/1835/
7. வானகட் எழுதிய இரங்கல் கவிதையின் மூல வடிவம்:
Joe Heller
True story, Word of Honor:
Joseph Heller,
an important and funny writer
now dead,
and I were at a party given by a billionaire
on Shelter Island.
I said, “Joe, how does it make you feel
to know that our host only yesteray
may have made more money
than your novel ‘Catch-22’
has earned in its entire history?”
And Joe said, “I’ve got something he can never have.”
And I said, “What on earth could that be, Joe?”
And Joe said, “The knowledge that I’ve got enough.”
Not bad! Rest in peace!”

Series Navigation

சேதுபதி அருணாசலம்

சேதுபதி அருணாசலம்