மலாய் கோழி

This entry is part of 26 in the series 20050722_Issue

திண்ணை


தேவையான பொருட்கள்

1 கிலோ கோழிக்கறி

1 வெங்காயம் நறுக்கியது

1 கோப்பை தக்காளி சாறு

1/2 கோப்பை தயிர்

1/2 கோப்பை கிரீம்

1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

1 மேஜைக்கரண்டி இஞ்சி விழுது

1 மேஜைக்கரண்டி பூண்டு விழுது

2 கிராம்பு

2 ஏலக்காய்

1 பட்டை

1 பிரியாணி இலை

1 தேக்கரண்டி மல்லித்தூள்

1/2 தேக்கரண்டி சீரகத்தூள்

1 தேக்கரண்டி ஆல்ஸ்பைஸ் தூள்

2 மேஜைக்கரண்டி கொத்துமல்லி

2-3 பச்சை மிளகாய் நறுக்கியது

உப்பு ருசிக்கேற்ப

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சிவப்பு மிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை பிரியாணி இலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இதில் வெங்காயம் போட்டு இரண்டுநிமிடங்கள் வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு இன்னும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு அதில் கோழிக்கறி போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கவும். இதில் மிளகாய், மல்லித்தூள், சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்

ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி, மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும். இதில் தக்காளி சாறு சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும்.

கோழி ஏறத்தாழ முழுவதும் வெந்ததும், கிரீம் சேர்த்து இன்னும் இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். முழுவதும் வெந்ததும், ஆல்ஸ்பைஸ், கொத்துமல்லி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அடுப்பு தீயை குறைக்கவும். ஒரு நிமிடம். பிறகு பரிமாறலாம்.

Series Navigation