ப்ரான் கறி

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

ஃபரிதா அஷ்ரஃப் வாடிவாலா


தேவையான பொருட்கள்

1/2 கிலோ பிரான்

1 1/2 தேக்கரண்டி ஜீரகம்

1 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

5-6 கறிவேப்பிலை

1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது

1 மேஜைக்கரண்டி தக்காளி விழுது

2 வெங்காயம் வெட்டியது

1 கோப்பை எண்ணெய்

உப்பு ருசிக்கேற்ப

கொத்துமல்லி இலைகள் கைநிறைய

செய்முறை

ப்ராண்களை நன்றாகக் கழுவி ஓடெடுத்து உள்ளே இருக்கும் கறுப்பு குடலை எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ஒரு சிட்டிகை உப்பு போட்டு வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலை, மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் போட்டு எண்ணெய் பிரியும் வரைக்கும் வதக்கவும். இதில் பிராண்களைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். இதன் மீது கொத்துமல்லி இலைகளைப் போட்டு பறிமாறவும்.

Series Navigation

ஃபரிதா அஷ்ரஃப் வாடிவாலா

ஃபரிதா அஷ்ரஃப் வாடிவாலா