உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்

This entry is part of 33 in the series 20040205_Issue

ஹென்னா அர்ஷத்


தேவையான பொருட்கள்

250 கிராம் எலும்பில்லாத கோழித்துண்டுகள்

6-7 நடுத்தர உருளைக்கிழங்குகள்

1 1/2 மேஜைக்கரண்டி கருமிளகு

150 கிராம் காலிபிளவர்

1 கோப்பை பச்சை பட்டாணி

3 குடமிளகாய் நடுத்தர அளவு

3/4 கோப்பை காளான்கள்

4-5 மேஜைக்கரண்டி கொத்துமல்லி இலைகள்

5-6 பச்சை மிளகாய்கள்

1-2 பாலாடைக்கட்டிகள் (சீஸ் ஸ்லைஸ்கள் )

2 கோப்பை கடலை மாவு

எண்ணெய்

உப்பு ருசிக்கேற்ப

சிவப்பு மிளகாய்த்தூள் ருசிக்கேற்ப

செய்முறை

உருளைக்கிழங்குகளை மெதுவாகும்வரை வேகவைத்துக்கொள்ளவும். உரித்து அவற்றை மாவாகப் பிசைந்து கொள்ளவும். கோழித்துண்டுகளை வேகவைத்து, அவற்றை சிறுசிறுதுண்டங்களாக சீவிக்கொள்ளவும். காலிபிளவர், குடமிளகாய் ஆகியவற்றை மெல்லிய சிறுசிறுதுண்டங்களாக சீவிக்கொள்ளவும்.

கோழி, காலிபிளவர். பட்டாணி, குடமிளகாய், காளான், பாலாடைக்கட்டி, ஆகிய இதர பொருட்களை உருளைக்கிழங்கு மாவோடு சேர்த்து பிசைந்து கொள்ளவும். சிறுசிறு துண்டங்களாக உருட்டிக்கொள்ளவும். கடலைமாவை பஜ்ஜி மாவு போல ஆக்கிக்கொண்டுஅத்துடன் உப்பு, சிவப்புமிளகாய்த்தூள் சேர்த்து வைத்துக்கொண்டு, அந்த மாவில் இந்த உருண்டைகளை நனைத்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதனை தக்காளி சாஸ், அல்லது தயிர் ரைத்தாவுடன் சாப்பிடலாம்.

—————————-

Series Navigation