விர்ஜின் மேரி

This entry is part of 28 in the series 20020518_Issue


தேவையான பொருட்கள்

1 3/4 கோப்பை தக்காளி சாறு, குளிரவைத்து

2 தேக்கரண்டி ஒர்சஸ்டர்ஷைர் சாஸ்

தபாஸ்கோ சிட்டிகை அளவு

அரை எலுமிச்சை சாறு

சிட்டிகை உப்பு

மிளகுத்தூள் ருசிகேற்ப

கிளாஸ் நுனியில் ஒட்ட உப்பு

1 எலுமிச்சை துண்டு அழகுக்கு

செய்முறை

இரண்டு கிளாஸின் விளிம்பு மட்டும் நனையும்படி எலுமிச்சைச் சாற்றில் நனைக்கவும். பிறகு இந்த கிளாஸை உப்புத்தூளி பிரட்டி, உப்பு கிளாஸ் விளிம்புகளில் ஒட்டவைக்கவும். இதனை காயவிடவும்.

எல்லா பொருட்களையும் காக்டெயில் ஷேக்கர் (அல்லது மிக்ஸி)இல் அடித்து அதனை இரண்டு கிளாஸ்களில் ஊற்றவும்.

குளிரவைத்து பறிமாறவும். எலுமிச்சை துண்டை கிளாஸின் விளிம்பில் அழகாக வைக்கவும்.

Series Navigation