சீயம்

This entry is part of 26 in the series 20020421_Issue


தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 கோப்பை

உளுத்தம்பருப்பு 3/4 கோப்பை

வெல்லம் 1 கோப்பை

தேங்காய் 1 மூடி

ஏலக்காய் 4

பாசிப்பருப்பு 1 கோப்பை

கடலை எண்ணெய் 1/2 கிலோ

செய்முறை

அரிசி உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து ஒரு 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து மிக மிருதுவாக தண்ணீரை வடிகட்டி விட்டு அரைத்துக்கொள்ளவும்

பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்

தேங்காயை துருவி வதக்கி, வேக வைத்துள்ள பாசிப்பருப்புடன் கலந்து கொள்ளவும்

வெல்லத்தையும் ஏலக்காயையும் பொடி செய்து அதனையும் பாசிப்பருப்புடன் கலந்து கொள்ளவும்

இக்கலவையை அடுப்பில் வைத்து உருண்டை பண்ணும் பக்குவத்தில் கிளறி இறக்கவும்

இதை சிறு சிறு உருண்டைகளாகப் உருட்டி, அரைத்து வைத்துள்ள அரிசி உளூத்தம் மாவில் தோய்த்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன் வறுவலாக வறுத்து எடுக்கவும்.

Series Navigation