கோழி கறி சாண்ட்விச்

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue


தேவையான பொருட்கள்

2 நெஞ்சுக்கறி துண்டுகள்

1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி

1 தேக்கரண்டி மிளகாய் பொடி

2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது

உப்பு 1/2 தேக்கரண்டி (தேவைக்கேற்ப)

1 தக்காளி, சிப்ஸ் போல வட்டம் வட்டமாக சீவியது

4 ரொட்டித்துண்டுகள்

செய்முறை

நெஞ்சுக்கறி துண்டுகளை மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஒரு துண்டை எடுத்து, பிளாஸ்டிக் பையிலுள் போட்டு சுத்தியால் தட்டி தட்டையாக ஆக்கவும். ஒரு ரொட்டியின் நீள அகலத்துக்கு வரும் வரை செய்யலாம்.

பிறகு கவனமாக வெளியே எடுத்து, தோசைக்கல் போன்ற கல்லை சூடு செய்து அதில் போடவும். வேண்டுமென்றால், அதன் மீது, அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சுடலாம்.

ஒரு புறம் நன்றாக வெந்ததும், மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைக்கவும். நடுத்தர தீயில் நன்றாக வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.

இதே போல இரண்டாவது கறியையும் இப்படிச் சுட்டு எடுத்து வைக்கவும்.

**

ரொட்டி அடுக்கும் முறை

**

ரொட்டித்துண்டுகளை இருபுறமும் லேசாக வெண்ணெய் விட்டு சுட்டு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு ரொட்டி துண்டு மீது, வெந்த கோழிக்கறி, அதன் மீது தக்காளி வட்டங்கள், அதன் மீது தேவைப்பட்டால் தக்காளி சாஸ், மயோனீஸ் இருந்தால் மயோனீஸ், அதன் மீது இன்னொரு ரொட்டித்துண்டு என்று வைக்கலாம்.

**

இருவருக்கு.

Series Navigation