• Home »
  • »
  • பிஜி கேரட் சூப்

பிஜி கேரட் சூப்

This entry is part of 37 in the series 20020310_Issue


8 கோப்பை தண்ணீர்

6 கேரட் வெட்டியது

2 உருளைக்கிழங்கு, உரித்து சதுரமாக வெட்டியது

3 செலரித் தண்டு

1 பெரிய வெங்காயம்

1/4 கோப்பை சோய் ஸாஸ்

1/4 தேக்கரண்டி ஜீரகத்தூள்

1/2 தேக்கரண்டி கார மிளகாய்த்தூள்

1/4 தேக்கரண்டி பூண்டு தூள்

2 1/2 கோப்பை பால்

6 மேஜைக்கரண்டி காய்ந்த உருளைக்கிழங்கு தூள்

செய்முறை

பெரிய பாத்திரத்தில், தண்ணிரை கொதி வரவைத்து, அதில், கேரட், உருளைக்கிழங்கு, செலரி, வெங்காயம் ஆகியவற்றைப் போடவும். மீண்டும் கொதி வரவைக்கவும். சூட்டைக்குறைத்து, மூடி போட்டு குறைந்த தீயில் 30 நிமிடம் வைத்திருக்கவும், (அல்லது கேரட் நசுக்க ஏதுவாகும் வரை)

சூட்டிலிருந்து எடுத்து,குளிரவைத்து, இதனை ஒரு மிக்ஸியில் வைத்து அடித்துக்கொள்ளவும். இதனை மீண்டும் பாத்திரத்துக்கு மாற்றி சூட்டில் வைக்கவும் விடவும்.

இத்துடன், சோய் ஸாஸ், ஜீரகம், மிளகாய்த்தூள், பூண்டு தூள், மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். இதில் மெதுவாக பாலை சேர்த்து, கலந்து கொண்டே வரவும். இறுதியில் உருளைக்கிழங்கு தூளை சேர்க்கவும். மீண்டும் கொதி நிலைக்குக் கொண்டுவந்து , வெப்பத்தை குறைத்து 5 நிமிடம், மெதுவான சூட்டில் வைத்திருக்கவும். ருசிக்கேற்றபடி உப்போ, மிளகுத்தூளோ சேர்க்கலாம்

Series Navigation