நிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

கர்னாடகா சமையல்


நான்கு பேருக்கு

2 கோப்பை அரிசி

4 தேக்கரண்டி உடைத்த தோலெடுத்த கருப்பு உளுந்தம்பருப்பு

2 மேஜைக்கரண்டி வெண்ணெய்

1 மேஜைக்கரண்டி ஜீரகம்

8 கறி வேப்பிலை

1 மேஜைக்கரண்டி முந்திரிப்பருப்பு

1 மேஜைக்கரண்டி நிலக்கடலை உடைத்தது

2 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்

உப்பு ருசிக்கேற்றபடி

மெதுவாகுவரை மாவு பிசைய தேவையான அளவு தண்ணீர்

ஆழ்ந்து பொறிக்க எண்ணெய்

செய்முறை

1) அரிசியைக் கழுவி ஒரு துணியில் பரப்பிக்கொள்ளவும். அது சுத்தமாகக் காயும்வரை காத்திருக்கவும். பிறகு இதனை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் மாவாக அரைத்துக்கொள்ளவும். உளுந்தம்பருப்பை ஒரு வாணலியில் போட்டு எண்ணெய் எதுவும் ஊற்றாமல் வறுத்துக்கொள்ளவும். லேசான பழுப்பு நிறம் வரும் போது நல்ல மணம் வரும். இதனை ஆறவைத்து, மிக்ஸியில் மாவாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும்.

2) அரிசி மாவு, உளுந்தம்மாவு, ஜீரகம், கறிவேப்பிலை, முந்திரி, நிலக்கடலை, தேங்காய்தூள், வெண்ணெய், உப்பு போன்றவற்றை கலந்துகொள்ளவும். இவை முடிந்தவரை சிறு சிறு துண்டங்களாக இருப்பது நல்லது. இதனை சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். கையில் எடுத்து தட்டையாக தட்டிக்கொள்ளவும். ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் அளவுக்கு தட்டையாக தட்டிக்கொள்ளவும். இது போல நிறைய சிப்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும்.

3). எண்ணெயைக் காயவைத்து, புகை வருவதற்கு முன், இந்த சில்லுகளை ஜாக்கிரதையாக எண்ணெயில் போடவும். நெருப்பைக் குறைத்து மெதுவான தீயில் சில்லுகள் வறுபட வைத்து தங்கப்பழுப்பு நிறம் வரும் வரை வறுக்கவும். இவைகளை எண்ணெயிலிருந்து எடுத்து எண்ணெயை துடைத்து ஆறவைக்கவும். மீதமுள்ள சில்லுகளையும் இதே போல செய்யவும்.

இந்த சில்லுகளை, காற்றுபோகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்துக்கு மேல் இவைகளை வைத்திருந்து சாப்பிடலாம்.

தேநீர் காப்பி போன்றவற்றுடன் சாப்பிட சிறந்தது.

Series Navigation

கர்னாடகா சமையல்

கர்னாடகா சமையல்