அரைத்துவிட்ட முட்டைகுழம்பு

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue


முட்டை –5

சிறிய வெங்காயம் –100கிராம்

தக்காளிப்பழம் –150கிராம்

புளி –1கொட்டைப்பாக்களவு

இஞ்சி –1சிறுதுண்டு

பூண்டு –5பற்கள்

சோம்பு –1/2டாஸ்பூன்

சீரகம் –1/2டாஸ்பூன்

மிளகாய் வற்றல் –8

தனியா –2டாஸ்பூன்

தேங்காய் –1/2மூடி

தாளிப்பதற்கு கடுகு

கொத்துமல்லி, கருவேப்பிலை –தேவையான அளவு

முட்டைகளை வேகவைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு முதலில் தனியா, மிளகாய் வற்றலைப் போட்டு வறுக்கவும். வறுபட்டு வரும் சமயம் சோம்பு போட்டுப் பொரிந்ததும் சீரகம் சேர்த்து லேசாக வறுத்து இறக்கவும். அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டை வதக்கி இறக்கவேண்டும்.

வறுத்த எல்லாப் பொருட்களையும் மைப்போல் அரைக்கவேண்டும். தேங்காயைத் துருவி அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து 50கிராம் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதங்கியதும் அரைத்த மிளகாய் மசாலா சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், உப்பு, புளிநீர், திட்டமாக நீர்விட்டு கொதிக்கவைக்கவும். குழம்பு கொதித்து கெட்டிப்படும் சமயம் முட்டைகள், கொத்துமல்லித்தழை சேர்த்து பத்துநிமிடங்கள் கழித்து இறக்கவும்.

Series Navigation