ஒரிஸ்ஸா – தோஹி மச்சா (தயிர் மீன் குழம்பு)

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue


தேவையான பொருட்கள்

1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத) மீன்

1 கோப்பை கெட்டித் தயிர்

1 பட்டை துண்டு

1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

2-3 பச்சை மிளகாய்கள்

1 தேக்கரண்டி அரிசிமாவு

3 தேக்கரண்டி கடுகெண்ணெய் (இல்லையென்றால் நல்லெண்ணெய்)

14 பூண்டு பற்கள்

1 பெரிய இஞ்சித் துண்டு (பதிலாக 2 மேஜைக்கரண்டி இஞ்சிப் பூண்டு விழுது)

6 சிறிய வெங்காயங்கள்

2-3 சிவப்பு மிளகாய்கள்

உப்பு தேவையான அளவு

செய்முறை

மீனை சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் போட்டு தேய்க்கவும்.

பிறகு மீனை சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக வறுக்கவும். மீன் வெள்ளையாகவே இருக்க வேண்டும்.

5 வெங்காயம், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய் போன்றவற்றை கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் பசை போல அரைக்கவும்.

ஒரு சிறிய வெங்காயத்தையும், இரண்டு பூண்டு பற்களையும் மிகச்சிறிதாக தூளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு ஆழமான பாத்திரத்தில், ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயப்பசை, பட்டை போன்றவற்றைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதனை தனியாக எடுத்து ஆறவிடவும்.

ஒரு தனி பாத்திரத்தில், தயிர், வறுத்த வெங்காய மசாலா, பச்சை மிளகாய், மாவு, வெட்டிய வெங்காயம், பூண்டு போன்றவற்றை போட்டு கலக்கவும். இத்துடன் மீனையும், இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெயையும் விட்டு மெதுவான தீயில், நன்றாக வேகும்வரை வேகவிடவும்.

தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம்

குறிப்பு: வங்காளத்து ஹில்சா மீன் இந்த செய்முறைக்கு நன்றாக இருக்கும். முதலில் மீனை வறுக்கும் போது 3 அல்லது 4 நிமிடங்களுக்கு மேல் வறுக்கக்கூடாது. மீன் ருசி மாறிவிடலாம்.

அளவு : 4 பேர்

நேரம் : 30 நிமிடங்கள்

Series Navigation

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை